ஹார்மோன்ஸ்...

டாக்டர் ...இந்த நாய் நான் சொன்னா கேட்க மாட்டேங்குறான் ...குடும்ப மானத்தை கெடுக்குற மாதிரியே நடந்துக்குறான் நீங்களாவது புத்திமதி சொல்லுங்க இல்லைனா ஏதாவது இவனுக்கு டிரீட்மெண்ட் பண்ணி சரி செய்ங்க என்றார் சபாபதி ...

தன்னுடைய 16 வயது பையன் விஷ்ணு பெண்களை மாதிரி நடந்துக்குறான்..வீட்ல யாருமில்லாத போது அவங்க அம்மா லிப்ஸ்டிக் போட்டுக்குறான் ,புடவை,உள்ளாடை எல்லாத்தையும் பயன்படுத்துறான் ,தலையில பூ வச்சுக்குறான் ..தலைமுடி வெட்ட மாட்டுறான் பெண்கள் மாதிரி நீளமா முடி வளர்க்க ஆசை படுறான் ..மொத்தத்துல அவன் நடை ,உடை பாவனை எல்லாம் வர வர பொண்ணு மாதிரியே மாறுது ..இவனாலே வெளியே தலை காட்டவே பயமா இருக்குது டாக்டர் என்றார் சபாபதி ...

மனநல மருத்துவர் விஷ்ணுவை மனரீதியாகவும் ,உடல் ரீதியாகவும் பரிசோதனை செய்தார் ....அவருக்கு இயற்கையின் உண்மை புரிந்து விட்டது ...விஷ்ணுவை வெளியே அனுப்பி விட்டு உள்ளே சபாபதியை அழைத்தார் ...சார் உங்க பையனுக்கு ஹார்மோன்ஸ் பிரச்சனை ..இது அவனோட தப்பு இல்லை ...இயற்கையோட தப்பு , இதுமாதிரி படைச்ச கடவுளோட தப்பு ..அவனை திட்டாதீங்க .. உங்க பையன் உங்க விந்தணு மூலம் தான் உருவானான் அவனுடைய குறை உங்களாலே கூட வந்திருக்கலாம் ...அவனை அவனா இருக்க விடுங்க ..அவன் எப்படி இருக்க விரும்புறானோ அப்படி இருக்க விடுங்க ..நீங்க அடிச்சி ஒடுக்கி வைக்கிறதாலே அவன் ஊரை விட்டு ஓடி எங்கேயாவது போய் ஏதாவது தப்பா பாலியல் அறுவை சிகிச்சை செஞ்சு வாழ வழியில்லாம ஒரு விலைமாதுவா இந்த சமூகம் தீண்டத்தகாதவங்கள நினைக்குற ஒரு அரவாணியா உங்க மகன் இருக்கணுமா சார் ...இல்லை அவன் விருப்பப்படியே உங்க வீட்ல இருந்து நல்லா படிச்சு நல்ல வேலையில சேர்ந்து திருநங்கைகளும் நம்மளோட ஒருத்தங்க தான் இந்த சமூகம் உணருற வகையில உங்க விஷ்ணுக்கு துணையா இருங்க என்றார் மனநல மருத்துவர் ...சபாபதி தன் மகனின் பிரச்சனையை அறிந்து அவனை அவன் இயல்பிலேயே முழுமையாய் ஏற்று கொண்டார் ..

சில வருடங்களுக்கு பிறகு

விஷ்ணு பாலியல் அறுவைசிகிச்சை செய்து கொண்டு தனக்கு பிடித்த மருத்துவ படிப்பை தன் அம்மா அப்பா ஆதரவோடு முடித்தான் ... விஷ்ணு மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் ஒரு பெண்ணாய் உணர்ந்தான் ..விஷ்ணு விஷ்ணு பிரியாவாக ஊர் போற்றும் ஒரு மருத்துவராக ,சமுதாயத்தில் திருநங்கைகளும் ஒருவர் என்பதை அப்பா சபாபதி துணையோடு நிரூபித்து காட்டினாள் ..தனக்கு பிடித்த சக மருத்துவர் ஆதியை காதலித்து திருமணமும் செய்து கொண்டாள்..திருமணத்திற்கு பிறகு அனாதை ஆசிரமத்தில் இரு குழந்தைகளும் தத்தெடுத்து வளர்க்கிறாள்.... விஷ்ணு பிரியாவின் திருணமான வாழ்க்கை சந்தோசமாக சென்று கொண்டிருக்கிறது ...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.