முன்னால் காதலி


        அந்த ந(ல்)ள்ளிரவு 12 மணில தான், என்னோட வாழ்க்கையே இருக்கு.. அவ காதல சொல்லுவாளா? இல்லைனு சொல்லி கொல்லுவாளானு தெரில.. நான் எதிர்பார்த்த பதில் வரலைனா, அடுத்த நாள் வாழ்க்கை நான் யாருக்காக வாழப்போறேனு தெரில.. அவளோட phone, alaram tone, இரண்டுக்குமே ஒரே tune. அது போக கடிகாரத்துல alaram. நிறைய அவகிட்ட சொல்லனும்னு எதிர்பாத்தேன்.. ஆனா அந்த 12 மணி இவளோ சீக்கிரமா, ரொம்ப கொடூரமா முடிஞ்சுரும்னு எதிர் பாக்கல.. அவளோட பதில்ல என் வாழ்க்கை தொடங்க போகுதுனு நினைச்சேன்.. ஆனா அந்த 12 மணில என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு.. ரொமப நேரம் மெளனமா இருந்தா, எனக்கு பயமா இருந்துச்சு. அந்த மெளனத்துக்கு உள்ள என்ன ஒழிஞ்சுருக்குனு தெரியல.. ஆனா ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் தான் அதோட அர்த்தம் எனக்கு புரியப்போகுதுனும் அப்போ தெரியல..

        நமக்குள்ள எதுவும் சரி வராதுனு சொல்லி phone-ah வச்சுட்டா.. என்ன பேசக் கூட விடல. நான் எவ்வளவோ பேசனும்னு மனசுக்குள்ள நினைச்ச வார்தைகள, இனி மனசுக்குள்ளயே புதைச்சு வைக்கனும்.. அந்த வார்த்தைகளுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லப் போறேனோ?. அந்த வார்த்தைகள் இனி என்ன நிம்மதியா இருக்க விடாது.. எதாவது Accident நடந்து பழைய நினைவுகள் எல்லாத்தையும் மறந்துட்டா??  அந்த 12 மணி இனி என்ன சுத்தி சுத்தி வரப் போகுது.. தினமும் 12 மணிக்கு alaram அடிக்கும்.. அது alaram னு தெரிஞ்சும் அது அவளா இருக்க கூடாதானு, ஏங்குனேன். இனி அந்த 12 மணி என்ன தூங்க விடாது. நம்ம நிக்கனும்னு நினைச்சாலும், காலம் நிக்காது.. நம்மல இழுத்துட்டே போய்ரும்.. என் நிலைமை ரொம்ப மோசம். டயருல சிக்குன எண்ண , வண்டி நிறுத்தாம இழுத்துட்டே போகுது அவளோட கல்யாணத்த நோக்கி.. தாங்க முடியாத வலி.. அந்த மெளனத்துக்கு அர்த்தம் என்னனு யோசிச்சே 6 வருஷம் போச்சு.

       அந்த மெளனத்து பின்னாடி என்ன இருக்குனு ஒரு நாள் நிச்சயமா, தெரியதான் போகுது.. ஆனா அது எப்போ??

       அவளுக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு.. இப்போ எங்க இருக்கானு கூட தெரில. அவளோட இருக்கனும்னு நினைச்ச அந்த கனவு வீடு இடிஞ்சது, அவ பக்கதுல உட்காந்து போகனும்னு நினைச்ச அந்த கார் பயணம் பாதிலயே முடிஞ்சது..

       காலைல புடிக்காத வேலை, நைட் அந்த 12 மணி. இதான் என் வாழ்க்கை.. கொஞ்ச வருஷத்துல ஒரு கல்யாணம்.. முதல் நாளே சொல்லிட்டேன் என் காதல பத்தி மறைக்காம. அது தப்பானு கூட தெரில.. தப்புதான். அந்த 12 மணி alaram இப்பவும் அடிக்கும்.. எனக்கு முன்னாடியே என் மனைவி எழுந்து உட்கார்ந்திருப்பா. இனி அந்த 12 மணி என்னோடதுன்னு சொல்லுற மாதிரி இருக்கும்.. என்ன பார்த்து சிரிப்பா.. என்ன புரிஞ்சிகிட்ட மனைவி.

      அப்புறம் ஒரு குழந்தை. குழ்ந்தைக்கு அவளோட பேரு. நான் பேரு வைக்கல. என்னோட wife தான் வச்சா.. இப்படி ஒரு நல்ல wife எனக்கு கிடச்சா..

      சில வருஷம் போன பிறகு. ஒரு நாள், நான், என் wife, 6 வயசு குழந்தை beach-ல அவள பாத்தோம்.. அவளோட husband எங்கனு தெரியல.. அவளோட ஒரு குழந்தை பத்து வயசு இருக்கும். அவளப் பாத்து என் குழந்தைக்கு உன் பேருதானு கண்ணாலயே சொன்னேன்.. முகத்துல கலை இல்லாத ஒரு சிரிப்பு சிரிச்சா. அவ பக்கத்துல போகலாம்னு நினைச்சு என் wife ah பாத்தேன்.. அர்த்தம் புரியாத ஒரு சிரிப்பு.. சரி வேணாம். நான் கிளம்புரேனு அவளப் பார்த்தேன், அவளோட மெளனம் எதோ சொல்ல வருது.. ஆனா கேட்க்குற நிலமைல நான் இல்ல.. கண் கலங்கி, திரும்பி நடக்க, திடீருனு என் பேர சொல்லிக் கூப்பிட்டா.. அது அவ தான்.. அவ குரல் தான்.. என் மனைவிய பார்த்தேன்.. பின்னாடி திரும்பிபாக்காம போலாம்னு சொல்ற மாதிரி ஒரு பாவமான பார்வைய என் wife பார்த்தா. முதல் முறையா என் wife நினைச்ச மாதிரி நடந்துகிட்டேன். மறுபடியும் சத்தமா என் பேர சொன்னா. என் wife என் கைய இறுக புடிச்சா. ஆனா இந்த முறை திரும்பிட்டேன். என்ன அறியாமலே.. (Sorry, my dear wife) அவ கூப்டது என்ன இல்ல அவளோட குழந்தையனு அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது. மெளனம் பேசிருச்சு. என்ன பார்த்து எதையோ ஜெய்ச்சுட்ட மாதிரி, என் கிட்ட எதையோ சொல்லிட்ட மாதிரி, கண் கலங்க, அழகா, சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சா. அதான் அவ.. நான் சின்ன வயசுல பார்த்த அந்த அழகான அவ. நான் வாழ்க்கையையே ஜெய்ச்ச மாதிரி கண்கலங்க ஒரு பெரிய சிரிப்பு சிரிச்சேன். அவ வெளிப்படுத்துனது அவ பையனோட பெயரையா அல்லது மூடி வைத்து புதைந்து போன காதலையா? புரியவில்லை. புரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.


     ஆனால், அந்த மெளனத்திற்க்கு அர்த்தம் கிடைச்சுருச்சு.. என் குழந்தைய ஒரு பக்கம் தூக்கிட்டு, மறு பக்கம் என் மனைவி கைய இறுக புடிச்சுட்டு, அவளோட அந்த அழகான சிரிப்ப பார்த்துகிட்டே ,பெரிய புன்னகையோடு, சிறிய வலிகளோடு, அவளை கடந்து போனேன். காதலும் கடந்து போனது...!

#காதலும் கடந்து போகும், 

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.