அன்புள்ள சுஜாதா டீச்சர் ...

இந்த உலகத்துல காதலிக்காத ஜீவ ராசிகளே இல்லைன்னு கூட சொல்லலாம் ..காதலை சொல்லாதவன் வேணா இருக்கலாம் ஆனா காதலிக்காதவன்னு எவனுமே இல்லை ...பொறந்த குழந்தை கூட முதன் முதலா பெத்த அம்மாவை காதலிச்சு இருக்கும்..காதல்ல சரி தப்புனு எதுவுமே இல்லை ..காமம் இல்லாத காதல் என்னை பொறுத்தவரை புனிதமானது ..

என் காதல் கதையை சொல்றதாலே நீங்க என்னை தப்பா நினைச்சீங்கன்னா I DONT CARE ....

என் பேரு கார்த்திக் ..கார்த்திக்னு பேரு வச்சவன் எல்லாம் அழகா இருப்பான்னு தப்பு கணக்கு போடாதீங்க ..நான் கொஞ்சம் சுமாரா தான் இருப்பேன் ..ஆனா என்கிட்டே யாரு பழகினாலும் என்னை ரொம்ப பிடிக்கும் ..அப்ப எனக்கு வயசு 19 இருக்கும் காலேஜ் பர்ஸ்ட் இயர் படிச்சிட்டு இருந்தேன் ....பன்னிரண்டாம் வகுப்பு வரை படிச்சது ஆண்கள் மேல்நிலை பள்ளி தான் ..பொண்ணுங்க கிட்ட பேசி அவ்வளவா பழக்கம் இல்லை ..என்னை பொறுத்த வரைக்கும் பொண்ணுங்க கிட்ட பேசுறதுக்கு ரொம்ப கூச்ச படுவேன்...ஆனா சுஜாதா டீச்சர் கிட்ட மட்டும் நல்லா பேசுவேன் ..கடைசி பீரியட் கடுப்பா இருந்தாலும் பாடம் எடுக்குறது அவங்க என்கிறதாலே கொஞ்சம் கலகலப்பா இருக்கும் ..பார்த்திபன் கனவு சினேகா மாதிரி ரொம்ப அடக்கம் ரொம்ப அழகு ...அவங்க முகம் நிலா மாதிரி வட்டமா ரொம்ப அழகா இருக்கும் ...அந்த அழகு முகத்தை பார்த்துகிட்டே இருக்கணும்னு போல தோணும் ...அவங்க குரல் கூட ரொம்ப இனிமையா இருக்கும் ..சத்தம் போட்டு இதுவரை பேசியது கூட இல்லை ..அவங்க பீரியட்ல யாராவது சேட்டை பண்ணுனது தெரிஞ்சா வெளியே அனுப்பிடுவாங்க ..பின் டிராப் சைலண்ட் கிளாஸ் ரூம்ல எதிர்பார்ப்பாங்க..பாடம் நடத்தும் போது யாரும் பேச கூடாது ..பேசுனாலும் பிடிக்காது ..சில பேரு வேணும்னே பேசிட்டு டீச்சர்கிட்ட திட்டும் வாங்கிட்டு வெளியே போய்டுவாங்க ...டீச்சர்கிட்ட திட்டு வாங்காம நல்ல புள்ளயா இருக்குறதுக்கு நான் முதல் பெஞ்சுல போய்டுவேன் ....நடத்துற பாடத்தை ஒழுங்கா கவனிச்சிடுவேன் ..சுமாரா படிக்கிற நான் என் டீச்சர்கிட்ட நல்ல பேரு வாங்குறதுக்காக நல்லா படிச்சேன் ...எக்ஸாம்- ல எல்லாம் நல்ல மார்க்கும் வாங்குனேன் ..

எனக்கு வாழ்க்கைல ஒரே ஒரு லட்சியம் இருந்துச்சு ...நல்லா படிச்சு ,நல்லா வேலைக்கு போய்,எங்க சுஜாதா டீச்சர் போல ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணனும் தோணுச்சு ...உங்ககிட்ட உன்னொன்னு சொல்ல தோணுதுங்க ..நான் வாய் இல்லா புள்ளப்பூச்சி ..எவன் அடிச்சாலும் திருப்பி எல்லாம் அடிக்க மாட்டான் ..சரியான பயந்தாங்கொள்ளி ஆனா என் முன்னாடி சுஜாதா டீச்சர் பத்தி எவனாவது தப்பா பேசுனா அவன் தொலைஞ்சான் ..எனக்கு எங்க சுஜாதா டீச்சர்னா ரொம்ப பிடிக்கும் ..ஏன் அவங்கள ரொம்ப லவ் பண்ணுறேன்னு கூட நினைச்சுக்கோங்களேன் ...மூன்றாம் ஆண்டு இறுதியில் சுஜாதா டீச்சருக்கு திருமணம் நடக்க இருந்தது ..டீச்சரிடம் எனக்கு நல்லா பெயர் இருப்பதால் எனக்கு தனியாக ஒரு பத்திரிக்கை தந்தார்கள்..கல்யாணத்துக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்றார்கள் ..டீச்சர் அந்த இடத்தை விட்டு போனதும் என்னையும் அறியாமல் அழுதேன் ..அது ஏன் என்றே இதுவரை தெரியவில்லை ...அந்த கல்யாணத்தோடு சுஜாதா டீச்சர் வேலையையும் ரிசைன் செய்து விட்டு சென்று விட்டனர் ...

காலங்கள் ஓடின ...நல்ல வேலை ,குடும்பம் என்று வாழ்க்கை ஓடி கொண்டிருந்தாலும் பழைய நினைவுகளை அசை போட்டு பார்ப்பதில் அலாதி சுகம் தான் ..என்னை பொறுத்த வரை என் சுஜாதா டீச்சர் நான் நேசித்த முதல் தேவதை தான் ..அவங்க எங்கே இருந்தாலும் கணவன் -குழந்தைகளோடு சந்தோசமா வாழணும்...எனக்கு காலேஜ் வயசுல வந்தது காதலா என்பது எனக்கு தெரியாது ஆனா கண்டிப்பா அது இனக்கவர்ச்சி இல்லை ..இனக்கவர்ச்சி காமம் சம்பந்த பட்டது ..காதல் மனசு சம்பந்தப்பட்டது ...நான் நேசித்த சுஜாதா டீச்சர் தேவதையாய் என்றென்றும் என் இதயத்தில் வாழ்வார் ஒரு அழகிய நினைவாக ....

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.