“மூணு நாளில் ஏழு கொலை? எப்படி பாஸ் கண்டு பிடிப்பது? “என்றான் அருண்.

“அதுக்குத்தான் நம்மை கூப்பிட்டு இருக்காங்க! முதல்ல டைலனால் பேக்டரிய சுத்தி பாக்கனும். தப்பு அங்கிருந்து கூட ஆரம்பித்திருக்கலாம்! “என்றான் வினோத்.

“டைலனால் மாத்திரைதான் அதிகமா விக்குது.அதுல போய் பொட்டாசியம் சயனைடை தடவியிருக்கானுக.அதை யூஸ் பண்ணிய ஏழு பேர் மூணு நாளில் செத்துருக்காங்க! முன்ன பின்ன தெரியாதவங்க எல்லாம் சாகராங்க! மோடிவ் இல்லையே? “

“ஏன் இல்லை? டைலனாலை தயாரிக்கும் J&J கம்பெனியை முடக்குவதுதான் மோட்டீவ்.”

அவர்கள் டைலனாலை தயாரிக்கும் ஜெ அன்ட் ஜெ வின் கம்பெனியை அடைந்த போது கம்பெனி சுடுகாட்டு அமைதியில் இருந்தது.கார் நிறுத்தும் ஓசையை கேட்டு வெளியே வந்த ராமஜெயம் “வாங்க!“ என்று வரவேற்றார்.

“கம்பெனி ரன்னாகலையா? “என்றான் அருண்.

“கம்பெனி பேரு நாறிட்டு இருக்கு! அதான் லீவு விட்டுட்டேன்! “என்றார் ராமஜெயம்.

அவர்கள் ஏஸி ரூமில் அமர்ந்த பின் தொண்டையை செருமிக் கொண்டு ஆரம்பித்தார் ராமஜெயம். “பாருங்க வினோத்! ஜெஅன்ட்ஜெ பெரிய மருந்து கம்பெனி.பலதரப்பட்ட மெடிசனை தயாரிக்கிறோம். அதுல டைலனால் சளி, இருமலுக்கு, காய்ச்சலுக்கு பேமஸ்.வருசத்துல 500 கோடி பிராபிட் அதுலதான் வருது.கம்பெனியோட நெட் பிராபிட்ல 30பர்செண்ட் டைலனாலதான் வருது.எந்த தேவடியா பையனோ வெவ்வேற டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்ல இருந்த மாத்திரையை பொட்டாசியம் சயனைடை தடவி மாத்தி வைச்சிட்டான்.மூணு நாளில் ஏழு பேரு செத்து போயிட்டாங்க.பேப்பர்ல கம்பெனி பேர் நாறிப் போச்சு.கம்பெனிக்கு சீல் வைக்கனும்னு பேச்சு ஓடிட்டு இருக்கு. டைலனால்னு சொன்னாவே பப்ளிக் அலறுது.என்ன பண்றதுன்னு தெரியலை.!”

டேபிளின் மீது இருந்த டைலனால் டப்பாவை எடுத்து திறந்த வினோத் “என்னங்க இது? பஞ்சாமிர்த டப்பா மாதிரி திறந்திருச்சு.?மேல சில்வர் பாயில் பேப்பர் வைச்சு சீல் வைக்கலையா? “

“மாத்திரைக்கு எதுக்குன்னு விட்டுட்டோம்! “

“மிட்டாய் டப்பா மாதிரி டிசைன் பண்ணியிருக்கீங்களே? பவுடர் டப்பா கூட சேப்டியா டிசைன் பண்ணி இல்ல வருது? “

ராமஜெயம் பதில் சொல்ல எத்தனிக்கும் போது காலிங்பெல் அடித்தது.“இருங்க வர்ரேன்”என்று போய்விட்டு கவருடன் வந்தவர் “கூரியர் வந்துருக்கு! “என்று பிரித்து படித்தவர் முகம் மாறினார்.“இதை படிச்சு பாருங்க! “என்று கடிதத்தை நீட்டினார்.

வினோத்தும், அருணும் அதை பார்த்த போது “டைலனால் மீதான தாக்குதலை நிறுத்த 20 கோடி தரனும்.இல்லைன்னா விளைவுகள் விபரீதம்! “என்றது வாசகம்.

“கொடுக்க போறீங்களா? “என்றான் அருண்.

“தலை சுத்துது.பார்ட்னர் வேற பங்கை பிரிச்சு கொடு.இல்லைன்னா பணத்தை வாங்கிட்டு வெளிய போங்கிறான்.இதுல இவனுக வேற.!மொத்தமா கம்பெனிய திவாலாக்காம ஓய மாட்டானுக போல தெரியுது.!”

“கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே? “

“கொடுத்து தொலையரேன்.வேற வழி? “

“மறுபடியும் இதே மாதிரி செய்து பணம் கேட்க மாட்டான்னு என்ன உத்தரவாதம்? “

“அதுவும் சரிதான்! என்ன பண்ணலாம்னு சொல்லுங்க? “

“ஒரே வழிதான் இருக்கு! கடைக்கு அனுப்புன அத்தனை மாத்திரைகளையும் ரிட்டர்ன் எடுங்க! பாட்டிலோட டிசைனை சேப்டியா மாத்துங்க! டைலனால் இன்னும் மூணு மாசத்துக்கு விற்பனை கிடையாதுன்னு பான் பண்ணுங்க! “

“நஷ்டமாகாதே? “

“சயனைடு இல்லாத மாத்திரைகளை கண்டு பிடிச்சு சேப்டி பாட்டிலுக்கு மாத்துங்க.பாட்டில் செலவு மட்டும்தானே ஆகும்.!”

“இதை யாரு பண்ணியிருப்பாங்க வினோத்.!”

“உங்ககிட்டருந்து மிரட்டி பணம் பறிக்கனும்னு நினைச்ச யாரோ ஒரு புத்திசாலி இதை பண்ணியிருக்கலாம். இல்லைன்னா உங்க பார்ட்னரே இதை பண்ணியிருக்கலாம்.ப்ளாக்மெயிலில் வரும் 20 கோடி கூடுதல் லாபம்னு நினைச்சிருக்கலாம்.அதுவும் இல்லைன்னா உங்க போட்டி கம்பெனியில் இருக்கும் யாராவது உங்களோட மார்க்கெட்டை பிடிக்க கிரிமினல்தனமாக யோசிச்சிருக்கலாம்.!”

“வேற யாரும் இல்லையா? “

“நீங்களாக கூட இருக்கலாம்! “

“நானா? நான் எதற்கு செய்யனும்? “

“உங்க பாட்னருக்கு குறைவான தொகைய கொடுத்து கழட்டிவிட நீங்க பண்ணிய பிளானா கூட இருக்கலாம்! “

“ரெண்டு பேரூம் கிளம்புங்கப்பா! உங்க செக் ஆபிஸ் தேடி வரும்! “

“இந்த கோபம் எதையோ ப்ரூப் பண்ணுதே?”

“யோவ்! நம்புங்கய்யா! நான் நல்லவன்! “

வினோத்தும் அருணும் புன்னகையுடன் கிளம்பினர்.

#ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனியில் நடந்த உண்மை சம்பவம்.சற்றே கற்பனை கலந்து.!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.