அப்ப இதில கையெழுத்து போட மாட்டிங்க…அப்படித்தானே!

ஆமா மாப்பிள்ளை……நம்ம படிச்சதே அதற்குத்தானே! அந்தக்காலத்துல பிராக்ரஸ்கார்டில் அப்பாதானே கையெழுத்து போடுவார். மீதி யாரும் கையெழுத்து போடமாட்டார்கள்.

ஆனால் நீ அப்போதே அப்பாமாதிரி உன் கையெழுத்தைப்போட்டு மிஸ்சிடம் அடி வாங்கினாய். நினைவில் இருக்கிறதா?

டேய்! இந்த வேலைக்கு உன் கையெழுத்து ரொம்ப தேவைடா…..இல்லாத பையன் ஒருவன் கஷ்டப்படறான்டா! இந்த வேலைக்கு 15 இலட்சம் இலஞ்சம் கேட்கிறாங்கடா…நீ சைலண்டா வேலையை முடிச்சா 5 இலட்சம் வங்கியில் விழும். ஏண்டா மாட்டேன்னு சொல்றே!

அன்னைக்கு தப்பு செய்யாதேன்னு ஸ்கேல்ல அந்த மிஸ் அடிச்ச அடி இன்னும் என் கைல தழும்பா இருக்குடா!

உன் போஸ்டிங் அந்தமாதிரி இல்லையேடா!

திருட்டுக் கையெழுத்து வாழ்க்கையை சூன்யமாக்கிடும். வேணாம்டா!

சரி! வா ……..டீ சாப்பிட்டுட்டு பேசுவோம்.

அலுவலகத்தில் கேண்டீன் இல்லாததால் பக்கத்தில் இருந்த டீக்கடைக்குச் சென்றனர்.

டீக்கடையில் டேபிள் துடைத்துக் கொண்டிருக்கும் அழுக்குச் சட்டை வாலிபன் வேகமாக இவர்களைக் கண்டதும் அருகில் வந்தான்.

இவனுக்காகத்தாண்டா வேலை கேட்டேன். யார் தெரியுமா இந்த பையன்? நீ எந்த மிஸ் அடிச்சாங்கன்னு சொன்னியோ அதே மிஸ் பையன்தான். யாரோ அரசியல்வாதி பையன் எக்சாம் ஹால்ல காப்பியடிச்சானாம். எல்லா டீச்சரை மாதிரி இவங்களும் சரின்னு போகாம நீதி, நேர்மைன்னு பார்த்து அவன் கத்தியை எடுத்து செருகிட்டான். ஸ்பாட்லயே காலி. அதுலதான் இத்தனை இலட்சம் வந்துச்சாம். வாழ்க்கை நெளிவு சுளிவை இனி கத்துக்குவேன்னுதான் சொன்னேன் என்றான் மெல்லிய குரலில் இராதாகிருஷ்ணன்.

பொன்.இராம்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.