காதலும் காபியும்

அதிகாலை பொழுது, புதிதாய் உதித்த சூரியன் தன் கதிர்களை பரப்பி அந்த பழைய எலெக்ட்ரிக் Train station-ஐ அழகாய் மாற்றியது. மேகங்களை தாண்டி சூரியனும் தன்னை உற்று பார்ப்பதை உணர்ந்தான் ரகு.

சூரியன் மட்டுமல்ல, சில்லரை தரா விட்டால் அக்னியாய் கக்கும் ticket Counter ஊழியர் , சாப்பாடு விற்பவன், ஆங்காங்கே பேப்பர் படிக்கும் அரசு ஊழியர்களிலிருந்து கண் தெரியாத பிச்சைக்காரி வரை தன்னை கவனிப்பதாய் உணர்ந்தான். இருந்தும் வேறு வழியில்லை இன்று தன் காதலியிடம் லவ்-ஐ சொல்லியே தீர வேண்டும் இன்னும் காலம் கடத்தினால் அந்த புல்லெட்டில் வரும் வருணோ இல்லை ஜிம் வைத்திருக்கும் சுரேஷோ சொல்லி விடுவார்கள்.

"என்ன ஆனாலும், நாம First Applicationa போற்றனும் டா அப்போ தான் வேற எவன் ப்ரபோஸ் பன்னாலும் நம்ம மூஞ்சி தெரியும்" தனது நண்பனின் அறிவுரைகள் நினைவுக்கு வந்தது.
இனியும் லேட் செய்ய கூடாது என நினைத்து கொண்டான். சினிமா வசனங்களிருந்து தான் தேர்வு செய்த கவிதைகளை ஒருமுறை தனக்குள் சொல்லி பார்த்துக்கொண்டான்.

" நீ ரிஹர்ஸல் பாக்றத்துக்குள்ள train ஏ வந்துரும் " அவசரப்படுத்தினான் அவன் நண்பன்

அவனுக்கென்ன ஸக்ஸெஸ் ஆனாலும் ஃப்லாப் ஆனாலும் அவனுக்கு சரக்கு உறுதி இருந்தாலும் அவன் சொல்வதும் சரிதான் எப்போதும் 20 நிமிடம் தாமதமாக வரும் அந்த ரயில் sekiram வந்து இவன் காதலை தடம்புரள வைக்கவும் வாய்ப்பிருக்கிறது,

"ஹும்ம்ம்"

ஒரு பெருமூச்சு எடுத்து விட்டு சொல்ல தயாரானான்.

சற்று தொலைவில் இவன் மனதில் புயலடிக்க செய்தவள் அங்கே அமைதியின் உருவமாக நின்று கொண்டிருந்தாள், அவளை நோக்கி நடக்க தொடங்கினான். ஒவ்வொரு அடியிலும் நெருங்கும் அவள் முகம் அவன் செய்து வைத்த ஒத்திகையை நிர்மூலமாக்கி கொண்டிருந்தது.
பத்து அடி தொலைவு ஒரு மைல் ஆக நீள ஒரு வழியாய் அவளை அடைந்தான். அவளோ ரயில் வருமா என பாத்துக்கொண்டிருந்தாள்
அவளை அருகில் பார்த்ததில் தொலைந்து போன தைரியத்தில் மீதியை தேடி எடுத்து அவளிடம் பேச துணிந்தான்,

"Excuse Me"

சட்டென திரும்பிய அவள் இவனிடம் ஏதோ சொல்ல வந்தால், ஸ்லோ மோசனில் அவள் வாய் அசைவத்தை ரசித்தவன் அவள் சொல்லும் வார்த்தையை கவனிக்க தொடங்கினான்

"பீப்" என்றாள் அவள்.

பீப்பா ?? ... பயத்தில் காது போய் விட்டதோ

"ஸாரீ என்ன சொன்னீங்க" என்றான் ரகு.

"பீப்" மறுபடியும் அவள் அதையே சொன்னாள் இம்முறை சற்று சத்தமாக,
அவனுக்கு என்னவென்று புரியவில்லை
அவள் அருகில் இருந்தவர்களும் அதையே சொல்ல ஆரம்பித்தனர்

"பீப் பீப் பீப் பீப்............."

அப்படியே பதறிப்போய் தன் நண்பனை பார்த்தான் அவனும் அவர்களோடு சேர்ந்து பீப் என சொல்லிக்கொண்டிருந்தான்
இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை எங்கும்

பீப் பீப் பீப் பீப் என சத்தம்,

காதை பொத்ிக்கொண்டு அப்படியே கண்ணை இறுக்க மூடிக்கொண்டான் ஆனாலும் அந்த பீப் ஒலி அவனை விடவில்லை.

என்ன ஆனாலும் பார்த்துவிடுவோம் என கண்ணை திறந்து பார்த்தான் எல்லாம் மாறி போயிருந்தது, ரெயில்‌வே ஸ்டேசன் ஃபேன் ஆக மாறி இவன் மேலே சுற்றி கொண்டிருந்தது. சூரியனை காணவில்லை உத்திரதில் சுண்ணாம்பு தான் காய்ந்து போய் இருந்தது, ஆனால் அந்த பீப் ஒலி மட்டும் மாறவில்லை.

பீப் பீப் என இவன் கனவை குண்டு வைத்து தகர்த்த தீவிரவாதி அலார்ம் ஆக இவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தது அதன் தலையை தட்டி Encounter செய்தான்.

கனவை நினைத்து பார்த்து பெருமூச்சு விட்டான் "ச்சே கடைசி வரை லவ்வ சொல்ல முடியவில்லையே"
அதனாலென்ன கனவில் இல்லை என்றாலும் , நிஜத்தில் அதே காதலியை கல்யாணம் செய்து நான்கு வருடமும் ஆச்சே எப்போது வேனாலும்
ஐ லவ் யூ சொல்லலாம் என நினைத்து மனதை தேத்தி கொண்டான்.

ஐந்து வருடம் ஆனாலும் அவளிடம் காதலை சொன்ன அந்த நொடி எப்போதும் சுவாராஷ்யம் தான். பழைய நினைவுகளுக்குள் பிணைந்து கிடந்த அவனை அவனது காதல் மனைவி குரல் நிஜ உலகுக்குள் இழுத்தது,

"எவ்ளோ நேரமா அலார்ம் அடிக்குது இன்னும் படுத்திருக்க, இனி ஒரு தடவை அலார்ம் அடிச்சதுனா நான் தான் உன்ன வந்து அடிப்பேன்"

பஞ்ச் டைலாக் ஆக பொழிந்தால் காதல் மனைவி
தன் பாட்டி காலத்தில் புருசன் பேரை கூட சொல்ல மாட்டாங்க இவ நம்மள இப்டி மரியாதை இல்லாம பேசுராலே என்று பொங்கி வந்த கோவம் அவுட் ஆஃப் சிட்டி-இல் வாங்கியிருக்கும் வீட்டுக்கு இஎம்ஐ சேர் அவள் தானே தர வேண்டும் என நினைத்ததும் ஸம்மர் டைம் வைகையை போல் காணாமல் போனது.

கண்ணை கசக்கி விட்டு அவளை பார்த்தான் ஐந்து வருடங்களில் ரொம்பவே மாறி போய் இருந்தாள். கொஞ்சம் வெயிட் போட்டிருந்தது, முகத்தில் முன்னாடி இருந்த பொலிவு கவலையுடன் கலந்து பொறுப்பாக மாறி இருந்தது. பேச நேரமில்லாமல் போன காலம் மாறி பேசுவதற்கு லோன் உம் இஎம்ஐ உம் தவிர வேறு ஏதுமில்லை என ஆகிப்போனது. கடைசியாக அவளிடம் ஐ லவ் யூ சொன்னது எப்போது என்று கூட தெரியவில்லை. ஆஃபீஸ் வொர்கிர்க்கும், பியுட்சர் கனவுகள்கும் இடையில் காதல் ஸம்மர் நேர கரண்ட் ஆக அவ்வப்போது வந்து கொண்டிருந்தது.

சரி இன்று எப்படியாச்சு ஐ லவ் யூ சொல்லி காதலை புதுப்பித்து விட வேண்டும் என்று நினைத்தவனுக்கு அவள் 6 மணி பேருந்தை பிடிக்க அவசர அவசரமாக செருப்பு மாட்டும் காட்சியே காண கிடைத்தது,

பாய் கூட சொல்ல நேரம் இல்லாமல் கிளம்பி போனால் புயலாக,
இன்றும் காதலிக்க நேரமில்லை என்று நினைத்து விட்டு சோம்பலை முறித்ான். தட்டு தடுமாறி கிட்செணை நோக்கி நடந்தான்.
பிரிட்ஜை திறந்து தண்ணீர் குடிக்க போனவன் ஃப்ரிட்ஜ் Door-இல் காதலி ஒட்டி வைத்திருந்த காதல் ஓலையை பார்த்தான்.

"காபி உன் கப்ல இருக்கு, மறக்காமல் குடிச்சிறு"
காஃபீ ஆச்சும் கிடச்சுத்ே என நினைத்து தன் காஃபீ கப் -ஐ எடுத்து வாயில் வைத்தவன், பக்கத்தில் இன்னொரு காஃபீ கப் -ஐ பார்த்தான்.
மீன் படம் போட்டிருந்த அந்த கப் அவன் மனைவியுடயது அதை கையில் எடுத்து பார்த்தான் கப் நிறைய அவளுக்கு பிடித்த டீ இருந்தது.

இவனது ஃபேவ் காஃபீ போட்டு விட்டு இவனுக்கு நினைவூட்டிவிட்டு சென்றவள் அவளுக்கு போட்டு வைத்த டீ -ஐ மறந்து விட்டு சென்றிருந்தால்.
தன் மனைவி மறந்தது டீ -ஐ மட்டும் தான் தன்னுடைய காதலை இல்லை என்ற சந்தோசத்ில் முகம் மலர்ந்தான்.

சட்டென அங்கிருந்து பால்கனி நோக்கி சென்றவன் திரும்பி வந்து அவள் காஃபீ கப் இல் கிறுக்கி கொண்டிருந்தான் அவன் முடித்தபோது அந்த கப் இன் மீன் படம் மறைந்து கொண்டு ஒரு சீட்டு ஒட்டி இருந்தது

"என் காதலை போலவே டீ உம் மறந்து விடாதே."

தனது முதல் கவிதையை ரசித்து பார்த்தவன் தன் பால்கனியில் இருந்து பறித்து வந்த ரோஜாவை அதில் ஃபுல் ஸ்டாப் ஆக ஒட்டி வைத்தான்.
காதல் மலையில் நனைந்து கொண்டிருந்தவனுக்கு அவனது 8 மணி பேருந்து டிப்போவை தாண்டி இருக்கும் என்ற நினைப்பு ஸாக் ஆக அடித்தது, நேற்று காலை மெலிந்து இருந்த டூத் பேஸ்ட் -ஐ மனைவி அறுவை சிகிச்சை செய்திருப்பாளோ என்று நினைத்தவாறு
பாத் ரூமுக்குள் புகுந்தான் அன்றைய நாளை தொடங்க.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.