நூரு பாவாவும் -பைரோஸும்

பைரோஸ் எம் .பி .ஏ. முடித்த பட்டதாரி ...அவனுடைய நல்ல பழக்கங்கள் மற்றும் கடின உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்தவன் ..இப்போதைக்கு ஊரே மதிக்க கூடிய மிகப் பெரிய தொழிலதிபர் பைரோஸ் ...எப்போதும் பணம் ,பணம் என ஓடும் கம்பியூட்டர் உலகத்தில் தானும் ஒரு ரோபோவாய் மாற தொடங்கி விட்டான் ...சிறு வயதில் இருந்த அந்த வெள்ளந்தியான குழந்தைத் தனம் இப்போதைக்கு அவனிடம் சுத்தமாக இல்லை ..அவனை குறை சொல்லியும் பயனில்லை ..இங்கு கொஞ்சம் பல்லை காட்டினால் தலையில் மிளகாய் அரைக்கும் உலகமிது ....இங்கு பெரிய பொசிசனில் இருப்பவர்கள் கொஞ்சம் ரப் அண்ட் டப்பாக இருப்பது நல்லது ..என்னை பொறுத்தவரை அவன் பக்கத்திலிருந்து பார்த்தால் கொஞ்சம் நியாயமும் இருக்கிறது ...

உங்ககிட்ட உன்னொன்னு சொல்ல மறந்துட்டேன் ..மாலிக்காகிய நானும் பைரோஸும் ஸ்கூலிலிருந்து ஒன்றாக படித்தவர்கள் ...இப்போது வேண்டுமானால் அவன் பெரிய தவ்ஹீத் வாதியாக இருக்கலாம் (படைத்த கடவுளை தவிர அம்மா அப்பா -பெரியவர்களை கூட வணங்காதவர்கள் -எங்கள் மார்க்க கோட்பாட்டின் படி கடவுளை தவிர மற்றவர்களை வணங்குவது மிக பெரிய தவறான பாவம் )அப்போது எங்களுக்கு(சிறுவயதில் ) அந்த அளவு இஸ்லாமிய மார்க்க அறிவு கிடையாது ....எங்க தாத்தா பாட்டி எதை பின்பற்றினார்களோ அதை தான் பின்பற்றினோம், எங்க ஊரில் நூரு பாவா அந்திரி மிக பிரபலம் ...நூரு பாவாவுக்கு உரூஸ் நடக்கும் தினத்தன்று ஏகப்பட்ட நடைபாதை கடைகள் ,திண்பண்ட கடைகள் முளைத்திருக்கும் ...ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் கூட நடப்பதுண்டு ...சாதி மதம் பேதமின்றி எல்லா மதத்தினரும் அங்கு வருவார்கள் ..கூட்டம் அலைமோதும் ...அன்றைய நாள் பெரிய திருவிழாவாய் தோன்றும் ..அப்போது அந்த நாளை கொண்டாடுவது நல்லதா கெட்டதா என்பது தெரியாது ....சில பேர் பாவாவுக்கு பாத்திஹா ஓதுவார்கள் ...சில பேர் சீக்கிரம் கல்யாணம் ஆக வேண்டும் ,சீக்கிரம் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டுவார்கள் ..சில பேர் எண்ணெய் விளக்கும் ஏற்றுவார்கள் ..சில பேர் குழந்தை வரம் வேண்டி மாவு விளக்கும் சாப்பிடுவார்கள் ..ஒரு பெண் மாவு விளக்கு சாப்பிடுவதை பார்த்து தவ்ஹீத் வாதி ஜாஸிர் அண்ணன் கண்டபடி திட்டினார் ...மறுநாள் அந்த தர்காவில் எரிந்த விளக்குகளை தவ்ஹீத் வாதிகள் சிலர் யாரும் காணாத போது உடைத்து எறிந்தனர்..அந்த விளக்குகள் பொது மக்கள் வேண்டுதலுக்காக ஏற்றுவது அதனால் அந்த விளக்குகள் பற்றி பள்ளி நிர்வாகத்துக்கு தெரியாது ...விளக்குகளை தவ்ஹீத்வாதிகள் உடைக்கும் போது நிர்வாகத்தினர் யாரும் பார்க்க வில்லை எனவே அன்று பெரிதாய் ஏதும் பிரச்சனை ஏற்படவில்லை ...

என்னை பொறுத்தவரை நம்பிக்கைகள் ஆளுக்கு ஆளு மாறுபடும் ...என்னுடைய நம்பிக்கைகளை உங்கள் மீது திணிப்பதும் தவறு தான் ..பகுத்தறிவு பேசுகிறேன் என்று ஒரு மதத்தை புண்படுத்தினால் அதுவும் தவறுதான் ....

நம்ம இப்ப பைரோஸ் கதைக்கு வருவோம் ....தோப்பு ஸ்கூலில் படிக்கும் போது பைரோஸ் இருந்தாலே கலகலப்பாக தான் இருக்கும் ...என்ன ஒண்ணு அவன் கூட இருந்தாலே காமெடியா கமெண்ட் கொடுத்துக்கிட்டே இருப்பான் அதனாலே சிரிச்சு மாட்டிகிட்டு வாத்தியார்கிட்ட அடி வாங்குறது நானா தான் இருப்பேன் ...இதுபோல நிறைய தடவை நடந்திருக்கு ..நானும் பைரோஸும் நல்லா படிப்போம் ..அதனாலே ஒரு தடவை தேசிய கீதம் ஸ்டேஜ்ல எங்களை பட சொன்னாங்க அவன் சிரிப்பு காட்டினதுல நான் வேகமா சிரிச்சு வாத்தியார்கிட்ட மாட்டி சின்னா பிண்ணா ஆனது வேறு கதை ....நல்லா படிச்சும் கூட பைரோஸ் ஸ்கூல்ல எப்போதுமே மூணாவது ரேங்க் தான் வாங்குவான் ..நான் நாலாவது ரேங்க் ...முதல் ரேங்க் ஜெசிமா ,ரெண்டாவது ரேங்க் சரண்யா வாங்குவாங்க ..அவங்க முதல் ரெண்டு ரேங்க் வாங்குனது பிடிக்காம இந்த பைரோஸ் என்ன காரியம் செஞ்சான் தெரியுமாங்க ??

நேரா நூரு பாவா தர்காவுக்கு போனான் ..பாவா என்ன எப்படியாவது முதல் ரேங்க் வாங்க வச்சிடு அப்படி வாங்க வச்சிட்டே உனக்கு ஒரு ரூபாவும் சக்கரையை படைச்சு உனக்கு ஊதுபத்தி கொளுத்துறேன்னு வேண்டிகிட்டான் ..பக்கத்திலிருந்த பாவத்துக்காக பாவா போனா போது இவனையும் எனக்கு அடுத்து வர்ற மாதிரி ரேங்க் கொடுத்திடு என்றான் ..

என்ன ஒரு ஆச்சரியம் ..அந்த வேண்டுதலுக்கு அப்புறம் வந்த தேர்வில் பைரோஸ் முதல் ரேங்க்கும் நான் ரெண்டாவது ரேங்க்கும் வாங்கினோம் ..நாங்கள் படித்ததினால் தான் அதிக மார்க் வாங்கினோம் என்பது எங்களுக்கு அப்போது தெரியாது எல்லாம் நூரு பாவா செய்த அற்புதம் என நம்பினோம் ....

கால ஓட்டத்தில் எங்கள் குழந்தை தனம் ,நம்பிக்கை எல்லாமே மாறியது ..இப்போது அந்த ஊரின் தவ்ஹீத் கொள்கையின் பரப்புரை செயலாளராக பைரோஸ் இருக்கிறான்...ஒரு நாள் யதார்த்தமாய் அவனை சந்திக்கும் போது பழைய கதைகளை பற்றி பேசினோம் ..மாலிக் அந்த நூரு பாவா விஷயத்தை மறந்திடு ..ஷிர்க்கான அந்த விஷயத்தை வெளியே எல்லாம் இப்போ சொல்லாதே ..நம்ம இமேஜ் டேமேஜ் ஆகும் என்றான் ...I AM YOUR BEST FRIEND என்றேன் வடிவேலு பாணியில் !!!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.