யார் ஜெயித்தவர்

பொன்னூஞ்சல் கிராமம். அதிகாலை அழகாக விடிந்து இருந்தது.

கஜானனம் பூத கணாதி சேவிதம்
கபித்தஜம்பு பலசார பக்‌ஷிதம்

மாதவ அய்யரின் கணீர் குரல் கோயிலில் இருந்து கேட்டது.

அக்ரஹாரமும், அதை ஒட்டிய கோயிலும், அதன் பின் குடியிருப்புமாக மொத்தமே 500 குடும்பங்கள். அனைவரும் அண்ணன் தம்பியாய்.

தாழ்ந்த ஜாதி உயர் ஜாதி பாகுபாடு இல்லாமல் ஒரே குடும்பமாய் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டது

மாரி பழைய பொருட்கள் வியாபாரி, தாழ்ந்த ஜாதி. மாதவனும் சரி, மாரியும் சரி இருவரும் நல்ல நண்பர்கள். மனைவிகளுக்கு தான் ஒத்துக்கொள்ளாது. அதிகம் பேச மாட்டார்கள். நான் வெஜ் சாப்பிட்றவா என ஒரேயடியாய் ஒதுக்கி விடுவாள்

ஆனந்தி, கலைவாணி முறையே மாதவய்யர், மாரியின் மகள்கள்.
ஆனந்தி , கலைவாணி நட்பு ஊரில் பிரசித்தம்.. ஜோடியாகவே திரிவார்கள் இருவரும்.
ஆனந்தி பாட்டில் முதலிடம். கலைவாணி விளையாட்டில் முதலிடம்

ப்ளஸ் டு பரிட்சை முடிந்தது. அரசு இஞ்சினியரிங் கல்லூரியில் அப்ளை செய்தாயிற்று. ஊரே இவர்களின் ரிசல்டை எதிர்பார்த்துக் கிடந்தது. அந்த நாளும் வந்தது. கலைவாணி 1175ம் ஆனந்தி 1195ம் வாங்கி இருந்தனர். மார்க்கை பற்றி இருவரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

இஞ்சினியரிங் காலேஜ் சென்று பார்த்தால் கட் ஆப் மார்க் 1196 தாழ்த்தப்பட்ட மக்கள் எனி 1170.கலைவாணி க்கு இடம் கிடைத்தது. உள்ளுக்குள் சிறு வருத்தம் இருந்தாலும், தோழியை மனமார பாராட்டினாள் ஆனந்தி.

வீட்டிற்க்கு போனதும் கலைவாணியின் தாய் வாடி என் ராசாத்தி என் குடும்பத்துல முதல் இஞ்சினியரு நீயி என உச்சி முகர்ந்தாள்.

மாரி ஓரமாக நின்று கண்ணில் நீர் தளும்ப ஆனந்தமாய் ரசித்துக்கொண்டிருந்தான். அப்போது கலையின் தாய்
" ஏண்டி அந்த ஐயர் வீட்டு பிள்ளைக்கு இடம் கிடைக்கலயாம்ல. அவளை நீ ஜெயிச்ச பாத்தியா அதான் எனக்கு வேணும். எங்கப்பாரு முந்தியே சொல்லுவாரு உயர்ந்த சாதிக்கு எல்லாத்திலயும் முதலிடம் நமக்கு கிடையாது நு. நீ அத மாத்தி அவள ஜெயிச்ச பார்த்தியா எம்பொண்ணுடி நீ "என நெட்டி முறித்தாள்.

மாரி கோபமாக அவள் மேல் பாய்ந்தான். சின்ன புள்ளைக்கு என்னடி சொல்லித்தாற என்று

என்னங்க சொல்லிட்டேன் நான் உண்மைய தானே சொன்னேன். ஒரு காலத்தில தாழ்ந்த ஜாதினு இழிவு படுத்துனவங்க தான் இவங்க என்றாள்

எல்லாமே ஒரு காலத்தில இருந்தது. இப்போ அப்படீல்ல எல்லா மாற்றமும் வந்தாச்சு. காலம் மாறிடுச்சு. சென்னை பெங்களூர் போய் பாரு எல்லாப்பிள்ளைகளும் ஒண்ணுமண்ணா தங்கி படிக்குதுக , நீ போய் கண்டத சொல்லி தூபம் போடாத பிள்ளைக்கு இனிப்பு செஞ்சு குடு என்றார் மாரி

அம்மா அப்படி பார்த்தா கூட ஆனந்தி தான் ஜெயிச்சா.
என்னடி சொல்ற?
என்னை விட அவள் என்னை விட மார்க் அதிகம். நீ சொல்றியே அந்த ஜாதி தான் அவளுக்கு சீட் இல்லாம பண்ணிச்சு.
ரெண்டு பேரும் ஒண்ணா தான் படிச்சோம். நைட் முழிச்சோம். மார்க்கும் அவ தான் கூட. ஆனா பலன் எனக்குமா!!! இப்போ சொல்லு அவளோட அம்மா இடத்தில நீ இருந்தா இப்டி தான் பேசியிருப்பியா?

ஆமாடி நான் அத யோசிக்கவே இல்ல. பாவம்டி அந்த புள்ள மனசு
என உன்மையை ஒத்துக்கொண்டாள் அம்மா

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.