ஆதி weds அனிதா – பாகம் - 3


The Conclusion

எனக்கு இப்போ.. 5 நிமிஷம் முன்னாடி ஒரு call வந்தது .. அதுல பேசுனவன்.. உன் wife, 2 வயசு பையன் ரெண்டு பேரையும் kidnap பண்ணி இருக்கோம் .. தப்பித்தவறி police கிட்ட போனா .. ரெண்டு பேரும் உனக்கு பிணமா தான் கிடைப்பாங்க .. அவங்க ரெண்டு பேர் photo whats app பண்றேன் .. எனக்கு என்ன வேணும்னு அடுத்த call 'ல சொல்றேன் .. சொல்லிட்டு call cut பண்ணிட்டான் ..

whats app image வந்தது .. என் wife ,பையன் ரெண்டு பேரும் chair 'ல கட்டி போட்ட மாதிரி இருந்தது ..

என் பெயரு ஆதி .. என் wife பெயரு அனிதா .. என் பையன் பெயரு தரணி ..

எனக்கு இப்ப என்ன பண்றதுனு தெரியல .. அனிதா mobile 'க்கு call பண்ணேன் .. switch - off 'னு வந்தது .. சரி எங்க ஏரியா police station போலாம்னு முடிவு பண்ணி car 'ல கிளம்புனேன் .. police station வாசல்ல car நிப்பாட்டும் போது திரும்ப call வந்தது .. அதே voice .. நான் இவ்வளவு சொல்லியும் .. நீ கேட்காம police station வந்து இருக்க .. ஒரு 5 நிமிஷம் wait பண்ணு.. car கண்ணாடி திறந்து வை ..

CALL cut ஆயிடுச்சு ..

car கண்ணாடி திறந்து வச்சேன் .. யாரோ ஒருத்தன் ஒரு parcel 'ல car’குள்ள போட்டுட்டு bike 'ல வேகமா போயிட்டான் .. parcel திறந்து பார்த்த போது அதுல என் wife காலைல போட்டு இருந்த சுடிதார் இருந்தது .. திரும்ப whatsapp ஒரு image வந்து இருந்தது .. அதுல என் wife அரை நிர்வாணமாக இருந்தா..

CALL வந்தது ..

"என்ன ஆதி இன்னும் police station போகலையா .. "

"இல்ல நான் police 'க்கு போகல .. உனக்கு என்ன வேணும் .."

"அப்படி சொல்லு .. சீக்கிரம் கிளம்பி உனக்கு marriage நடந்த மண்டபத்துக்கு வா.. ஆனா ஆதி .. உன் பொண்டாட்டி ரொம்ப அழகா இருக்கா.. "

CALL cut ஆகிடுச்சு ...

மண்டபத்துக்கு போனேன் ..

திரும்ப CALL வந்தது ..

"ஆதி இப்ப என்ன பண்ற .. முட்டி போட்டு இந்த மண்டபத்தை 5 தடவை சுத்தி வர்ற .. சுத்தும் போது .. நான் பண்ணது தப்புனு சொல்லிட்டே சுத்துற .."

"ஏய் எதுக்கு "

"இப்ப பண்ண போறியா.. இல்லையா .. உன் பையன் வேற கத்திகிட்டே இருந்தான் .. இரும்பு கம்பி எடுத்து ஒரு அடி அடிச்சேன் .. மயக்கம் போட்டு விழுந்துட்டான்.. blood வேற போயிட்டே இருக்கு .. அதுனால இப்படி கேள்வி கேட்டு time waste பண்ணாத .. போய் சொன்னதை செய் .. திரும்ப call பண்றேன் .. ”

அவன் சொன்ன மாதிரி பண்ணேன் ..

CALL வந்தது ..

"இப்போ என்ன பண்ற .. கிளம்பி luxe cinemas வா "

luxe cinemas போனேன் ..

"ஆதி இப்போ .. screen 4 and 3 முன்னாடி அதே மாதிரி முட்டி போட்டு .. நான் செஞ்சது தப்புனு 10 தடவை கத்து.. உன் wife பக்கத்துல அமைதியா என்னால ரொம்ப நேரம் நிக்க முடியுமான்னு தெரியல ஆதி .."

"அவன் சொன்ன மாதிரியே பண்ணேன் "

திரும்ப CALL வந்தது ..

"ஆதி இப்போ .. கிளம்பி skywalk வா"

skywalk போனேன் ..

"ஆதி என்ன பண்ற .. அங்க இருக்குற junior kuppanna hotel போயிட்டு .. table no 5 முன்னாடி .. அதே மாதிரி முட்டி போட்டு .. நான் செஞ்சது தப்புனு .. ஒரு 30 தடவை கத்து .. உன் wife க்கு அந்த இடத்துல இருக்குற மச்சம் ரொம்ப அழகா இருக்கு .."

"டேய்"

"அவன் சொன்ன மாதிரி பண்ணேன் .."

திரும்ப CALL வந்தது ..

"ஆதி super performance .. i am impressed ... உன் wife , பையன் மேல இவ்வளவு பாசமா? .. கிளம்பி நான் சொல்ற address 'கு வா .. அழகுரில் பூத்தவளே அனிதா .. என்னை அடியோடு சாய்த்தவளை அனிதா ... "

CALL cut ஆகிடுச்சு ..

அவன் சொன்ன address 'க்கு போனேன் .. mayajaal தாண்டி 5 km .. தனியா ஒரு வீடு.. வீட்டுக்குள்ள போனேன் .. கதவை திறந்து பார்த்த போது.. என் wife அரை நிர்வாணமா .. ஒரு chair 'ல கையும் , வாயும் .. கட்டி வச்சி இருந்தான் .. என் பையனையும் அதை மாதிரி வச்சி இருந்தான் .. ரெண்டு பேரும் மயக்கமா இருந்தாங்க .. அப்போ என் மண்டையில ஓங்கி ஒரு அடி விழுந்தது .. நான் மயக்கமாகிட்டேன் ..

கண் முழிச்சி பார்த்த போது என்னை ஒரு chair 'ல கட்டி வச்சு இருந்தான் .. என் wife ,பையன் பக்கத்துல ..

என்ன ஆதி எப்படி இருக்க .. பாத்து ரொம்ப நாள் ஆச்சு .. ஒரு பொண்ணு முகத்துல mask போட்டுக்கிட்டு ..

"ஏய் நீ யாரு ..எதுக்கு இதெல்லாம் பண்ற .. என்கூட phone 'ல பேசுனது ஒரு ஆம்பள voice .."

"எல்லாம் நான் தான் .. எல்லாம் technology ..."

"ஏய் நீ யாரு .. உனக்கு என்ன வேணும் "

"என் voice கூட மறந்துடுச்சி ... "

அவ mask கழட்டுனா ...

"ஏய் நீயா ... அனிதா ஏன் இப்படி பண்ற .."

"oh பெயரு நியாபகம் இருக்கா ... yes நானே தான் .. அனிதா செல்வராஜ்

என் இப்படி பன்றேன்னு உனக்கு தெரியாது? .. ஏன்டா நான் பாட்டுக்கு சிவனேனு இருந்தவள.. எனக்கு love failure .. இனி எல்லாம் நீதான் சொல்லிட்டு .. கல்யாணம் மண்டபம் வரைக்கு கூட்டிட்டு வந்து .. அப்புறம் என்ன சொன்ன .. ஆம் என் lover மனசு மாறிட்டா .. என்னை தேடி வந்துட்டா .. என்னாலை உன்னை கல்யாணம் பண்ண முடியாது'னு.. கல்யாணத்த நிறுத்தி .. அதே மண்டபத்துல இந்த சனியனை .. அதாவது அனிதா ராதாகிருஷ்ணன கல்யாணம் பண்ணிகிட்ட .. நான் இப்படி பண்ண இந்த reason போதும்னு நினைக்குறேன் "

"sorry அனிதா "

" sorry... oh sorry ... யாருக்குடா வேணும் உன் sorry ..

அதுக்கு அப்புறம் என் சித்தப்பா என்னை வீட்டை விட்டு துரத்தி .. நடு ரோட்டுக்கு வந்து .. ladies hostel ... வேலை தேடி ... சரி நமக்கு கொடுத்து வச்சது அவ்வளுவுதான் நினைச்சேன் .. ஆனா முடியல .. நீ எனக்கு பண்ண தோரகம் .. என்னால தூங்க முடியல ... இப்போ recent-ஆ ஒரு படம் பார்த்தேன் .. அதுல ஒரு dialogue .. "நல்லதே செய் .. நல்லதே நடக்கும் .. இந்த ஊரே உன்ன புகழும் ... எல்லாம் சுத்த பொய்.. " ரொம்ப ரொம்ப correct -ஆன dialogue ..

யாருக்குமே கெட்டது நினைக்காத எனக்கு நல்லதே நடக்கல .. படம் முடிச்சிட்டு வெளிய வர்றேன் .. நீ உன் wife , பையன் கூட ஜாலியா car 'ல போறே .. எனக்கு கெட்டது பண்ணவங்களுக்கு .. நான் கெட்டது பண்ண முடிவு பண்ணேன் .. அத உன்கிட்ட இருந்து ஆரம்பிக்க போறேன் ஆதி ... because you are very special person to my life ..."

"extremely sorry .. அனிதா .. நான் பண்ணது தப்புதான் "

"ஆதி நான் உன்னை மன்னிச்சிட்டேன் .. நீயும் என்ன மன்னிச்சிரு "னு சொல்லிகிட்டே ..

என் பையன் , wife கழுத்தை கைல இருந்த கத்திய வச்சி அறுத்துட்டா ...

"அது எப்படி ஆதி .. ஆன் .. extremely sorry ஆதி .."

"அனிதா.." கத்திட்டு அழ ஆரம்பிச்சேன் ..

"நல்லா சத்தமா அழு ஆதி ... இன்னும் சத்தமா .. நான் மனசு குளிர கேட்கணும் " னு சொல்லிட்டே ..

என் பக்கத்துல வந்து என் கழுத்தையும் .. அறுத்துட்டா ..

"ஐயோ அனிதா ..." கத்துனேன் ……….

……

..

"யாருங்க இப்படி கத்துறது .."

"oh அதுவா .. நீங்க இன்னைக்குதானே duty 'ல join பண்ணி இருக்கீங்க sister .. போக.. போக .. பழகிடும் .. அநேகமா அந்த patient .. நீங்கதான் attend பண்ணுவீங்க ..

patient room 7th floor "

"வாங்க பார்க்க போலாம் .. patient detail சொல்லுங்க "

"patient பெயரு ஆதி .. ரெண்டு வருஷம் நம்ம hospital 'லதான் treatment .. "

"என் என்னாச்சு .. எப்புடி இப்படி..? "

"எல்லாம் love matter தான் . அனிதா ராதாகிருஷ்ணனு .. ஒரு பொண்ண love பண்ணி இருக்கான் .. வழக்கம்போல ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க .. அந்த பொண்ணு இவன விட்டுட்டு US போயி settle ஆயிட்டா .. அந்த பாதிப்புல.. பையன் புத்தி பேதலிச்சிடுச்சு .."

"Mental disorder”

"ஆமாம்.. இதுவே அவனை அடிக்கடி பாக்க வர்ற அவுங்க அம்மா சொல்லித்தான் தெரிஞ்சது .. இதான் அந்த patient ஆதி’யோட room .. கத்துனால .. அதான் injection போட்டுஇருப்பாங்க .. ஆதி தூங்கிட்டு இருக்கான் .."

"அது என்ன சுவத்துல மூணு உருவம் வரைஞ்சி வச்சிருக்கான் "

"oh அதுவா .. இந்த hospital வந்த புதுசுல .. ஆதி ஒரு பொண்ணு உருவத்தை வரைஞ்சு .. அதுக்கு மேல அனிதா ராதாகிருஷ்ணன் எழுதி வச்சான் .. அப்புறம் 6 மாசம் கழிச்சி இன்னொரு பொண்ணு உருவத்தை வரைஞ்சி அதுக்கு மேல அனிதா செல்வராஜ் எழுதுனான்.. அப்புறம் ஒரு வருஷம் கழிச்சி ஒரு சின்ன பையன் உருவத்தை வரைஞ்சி அதுக்கு மேல தரணி .. எழுதுனான் .."

"இதுல இந்த அனிதா ராதாகிருஷ்ணன் .. இவன் love பண்ண பொண்ணு .. மத்த ரெண்டு பேரு?"

"அது ஆதியோட கற்பனை characters "

"அப்பப்போ இதுக்கு முன்னாடி உட்கார்ந்து பேசுவான் ... அப்புறம் ஐயோ அனிதா'னு கத்துவான்.. ஒரு நாள் ஆதி அப்படி என்ன பேசுறானு கவனிச்சேன் .. அப்போ அவன் .. trustpuram ground .. அனிதா ராதாகிருஷ்ணன் .. red color saree .... அனிதா செல்வராஜ் .. சாயர்புரம் .. clean shave .. wife ,பையன் kidnap .. skywalk .. முட்டி போட்டு .. நான் தப்பு பண்ணிட்டேன் .. அப்புறம் ஏதேதோ சொல்லுவான் ஒன்னும் புரியாது .. கடைசியா ஐயோ அனிதான்னு கத்துவான் ... நாங்க injection போட்டு தூங்க வச்சிருவோம்"

"முதல் நாளே இப்படி ஒரு case detail .. பாவும் ஆதி .. வாங்க sister .. lunch time ஆயிடுச்சு"

"இன்னைக்கு உங்களுக்கு முதல் நாள் .. so இன்னைக்கு உங்க treat .. ஆமாம் உங்க பேரு என்ன sister? "

"அனிதா .. அனிதா கணேஷ் "

"உங்களுக்கு marriage ஆயிடுச்சா "

"இன்னும் இல்ல .."

ரெண்டு nurses room விட்டு கிளம்புனாங்க ..

அப்போ ஆதி கண் முழிச்சி .. அந்த room கதவு வழியா .. அனிதா கணேஷ்’ ஐ பார்த்தான் .. அவங்களும் ஆதி'ய பார்த்தாங்க ..

அன்னைக்கு night .. ஆதி சுவத்துல .. இன்னொரு பொண்ணு உருவத்தை வரைஞ்சி.. அதுக்கு மேல அனிதா கணேஷ்'னு எழுதுனான் ..

ஆதி அந்த உருவங்களுக்குமுன்னாடி உட்கார்ந்து.. பேச ஆரம்பிச்சான் ..

“இன்னைக்கு எனக்கு reception .. நாளைக்கு எனக்கு marriage ..

இப்போ கல்யாண மண்டபத்துல.. மணமகன் அறையில wait பண்ணிட்டு இருக்கேன் ..

மண்டபத்துக்கு வெளியில welcome board பாத்துருப்பிங்கனு நினைக்குறேன் ..


Its..

ஆதி weds அனிதா

(… தொடரும் ....???...)

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.