இரை தேட சென்ற பறைவைகள் எல்லாம் இணை சேர திரும்பும் மாலை நேரம்....

கண்ணப்பன் கிணற்றின் அடியில் கண்ணீர் மல்க காத்திருந்தான் அவனது தேவியின் தரிசனத்திற்க்காக. ஒருவழியாக அந்த பெண் புறா வந்தது.

கொலுசின் சத்தம் காதை தாலாட்ட ..மல்லிகை பூவின் வாசம் மனதை மயக்க ..மஞ்சள் பூசிய முகமும் அதில் அக்கினி பிழம்பாய் குங்குமம் பார்ப்பதற்கு கருவறையில் இருந்து இறங்கி வந்த காமாச்சி போல் அவனுக்கு தரிசனம் அளித்தாள்.

"சும்மா எப்போ பாத்தாலும் அக்கம் பக்கத்து பொம்பளங்களோட வெட்டி நியாயம், கொழந்தைங்களோட விளையாட்டு..அது விட்டா கோவில்.இப்படியே இருந்தா யாரு உனக்கு சோறு போடுவா. இதுல நீயும் அந்தக் கண்ணப்பனும் அடிக்கடி பத்துக்குறதா பக்கத்து வீட்டு பாப்பா சொல்லுது. ஒழுங்கா ஊரு மேயமா போய் பாத்திரத்தை கழுவி சாப்பாடு செய் " என்று யாரோ அவளை திட்டிக்கொண்டு இருக்க கண்ணீரை தொடைத்துக் கொண்டு கிணத்துப்பக்கம் வந்தாள் தேவி.

"நல்லா இருக்கியா மைலு" கண்ணீர் ததும்ப ததும்ப கனத்த குரலில் கண்ணப்பன் கேட்டான்.

"ஐயோ இப்போ எதுக்கு இங்க வந்த. நம்ம விஷயம் வீட்டுக்கு தெரிஞ்சுருச்சு. இனிமே இங்கலாம் வராத .யாராச்சு பாத்துட்டா பிரச்சனை ஆயிரும். தயவு செஞ்சு போயிரு" பயத்துடன் கெஞ்சினாள் தேவி.

சிறிது நேரம் யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய் " இனி என்னால பொருமையா இருக்க முடியாது . நாளைக்கு காத்தால 5 மணிக்கு அம்மன் கோவில் கிட்ட வந்துரு.நாம ஊரை விட்டு ஓடிறலாம். உன்ன கடைசி வரைக்கும் ராணி மாறி பாத்துப்பேன் . நம்ம காதல் உண்மையா இருந்தா நாளைக்கு 5 மணிக்கு அம்மன் கோவிலுக்கு வா " சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.


இணை சேர்ந்த பறவைகள் எல்லாம் இறை தேட கிளம்பும் காலை நேரம் ....

அம்மன் கோவிலில் காத்திருந்தான் கண்ணப்பன்.தேவியும் வந்தாள்.இருவரும் பேருந்தில் ஏறி அவர்களது காதல் தேசத்தை தேடி சென்றனர்.


காலை 7 மணி...தேவியின் வீடு.......

"வாங்க அண்ணா...என்ன விஷயம். காலங்காத்தால விடிஞ்சதும் விடியாததுமா.."

"அது ஒன்னும் இல்ல தங்கச்சி .அப்பாவை காணோம்...நாமதா அப்பா'வ ஒரு வாரம் என் வீட்டுலயும், அம்மாவை ஒரு வாரம் உன் வீட்டுலையும் வெச்சுருக்கோம்ல....அதா அப்பா இங்க வந்தாரான்னு பாக்க வந்தேன்"என்று அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே வீட்டினுள் இருந்து சத்தம் கேட்டது "அம்மா தேவி பாட்டியை காணோம்"...........................................................................

"பெற்றோர் எதிர்ப்பை மீறி இணைந்த காதல் பறவைகள் இன்று தாம் பெற்றவர்களின் எதிர்ப்பை மீறி விண்ணில் சிறகடித்து பறந்தன "


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.