இந்திரா நகர் பகுதியை கடந்து செல்பவர்கள் ஒரு முறையேனும் அந்த வீட்டை நின்று பார்த்து விட்டு தான் செல்வார்கள். மெலிதான அலங்காரத்தோடு வீட்டினரின் அதிரடியான சலசலப்போடும் கம்பிரமாய் நின்று கொண்டிருந்தது அந்த வீடு . நாமும் சற்று உள்ளே சென்று பார்த்தால் வீட்டினர் அனைவரிடமும் ஒரே பரபரப்பு மற்றும் சந்தோசம். ஊஞ்சலில் அமர்ந்திருந்த பத்மா பாட்டி ''ஏண்டி நா சொன்ன தாம்பூல சீர் எல்லாம் எடுத்து வச்சுட்டீங்களா .... ரொம்ப முக்கியம் டீ '' என்று கட்டளையிட ''சரிங்க அத்தை '' என்று தனக்கே உரிய நிதானமான பாணியில் வீடு தலைவி மல்லிகை பதில் கூற ''ராகவ் ராகவ் வந்தவங்க எல்லாத்தையும் கரெக்ட் ஆஹ் ஹோட்டல் ல செட்டில் பண்ணிட்டியா '' என்று குடும்பத்தலைவர் அசோக் கேட்க ''எஸ் பா ''என்று கூறி கொண்டே தன் பைக் ஐ ஸ்டார்ட் செய்தான் ராகவ் .இப்படி வீட்டின் ஒவ்வொரு உறவும் தங்கள் வேலையை செய்து கொண்டு இருக்க இவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் .....அதாங்க நம்ம ஹீரோயின் யாயினி தன்னோட தூக்கத்துல மூழ்கி முத்து எடுத்துக்கிட்டு இருக்கா .இந்த வீட்ல அதாங்க நம்ம ஹீரோயினிக்கு தாங்க நிச்சயதார்த்தம் .

பெருசா ஹீரோயின் பத்தி சொல்ற அளவுக்கு லாம் ஒன்னும் இல்ல.சிம்பிள் ஆஹ் சொன்னா சோம்பேறி அவ்ளோதான் . பட் ஆக்சுவல்லி ஸ்பிக் கிங் ஒரு கதைக்கு ஹீரோயின் பத்தி கொஞ்சம் ஆவது பில்ட் அப் குடுத்தே ஆகணும்.அதனால கொஞ்சமா சொல்றேன்'' வெள்ளரி நிறம் காந்தக் கண்கள் ஆரஞ்சு சுளை உதடுகள் பாத்த உடனே டக்குனு பிடிச்சுடும். ரொம்ப ஜாலி டைப்.எத பத்தியும் யோசிக்கவே மாட்டா.நிறைய பிரண்ட்ஸ்.மேடம் டாக்டர்.நைட் டூட்டி பாத்த டயர்டு தூங்கிட்டு இருக்கா.ஸ்லீப்பிங் பியூட்டி னு மனசுல நெனப்பு.'' சாயங்காலம் பங்ஷன் வச்சுட்டு தூங்குறத பாரு'' என்று தனக்கே உரிய கவலை உடன் மல்லிகா அவளை எழுப்பி'' சீக்கிரம் பார்லர் போய்ட்டு வா'' பாட்டி திட்ட போறாங்க என்று பரபரக்க...தன்னுடைய சிறு வயது நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு தயார் ஆகினாள்.எப்படியோ தோழிகளின் கிண்டல் மற்றும் கேலிகளை சமாளித்து கொண்டு மஹாலை சென்று அடைய அவள் மனதில் ஒரு இனம் புரியாத படபடப்பு.தன் வாழ்க்கையில் நிகழ போகும் மிகப்பெரிய மாற்றத்தை எண்ணி பார்க்கையில் மனதில் பயம் குடி கொண்டது.அதை கண்ட சௌமியா'' ஹே ஜஸ்ட் ரிங் தானே டி மத போறீங்க இதுக்கு ஏன் டி இப்படி நடுங்குற. டோன்ட் ஒர்ரி டி. ''என்று கூற சமாதானமடைய மறுத்த மனதை என்ன செய்வதென்று அறியாமல் முழித்து கொண்டிருந்தாள். பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் தான்.புது டிரஸ் புது நகை எல்லாம் வாங்கி தருவார்கள் என்று தலையை ஆட்டி விட்டால் ஆனால் அதை பற்றி யோசிக்கும் பொழுது தன்னை அறியாமல் கை நடுங்கி விடும்.மாப்பிள்ளை போட்டோ பாத்த உடனே ஏதோ ஒரு ஈர்ப்பு.எல்லாரும் மாப்பிள்ளை யை பத்தி பயங்கர பில்ட் அப் குடுத்த உடனே வேகமா ஓகே சொல்லிட்டா .நேர்ல கூட பாக்கல. இப்போ தான் முதல் முறை பார்க்க போறா.போன் ல கூட ரெண்டு தடவை தான் பேசியிருக்க. அவ ஒன்னும் டைனோசர் காலத்துலலாம் இல்லை, மாப்பிள்ளை அமெரிக்கால பெரிய மருத்துவ ஆராய்ச்சி குழுவின் தலைவர்.புதுசா ஆரம்பிச்சு இருந்த ப்ராஜெக்ட் ல மாப்பிள்ளை ரொம்ப பிஸி. அதனால தான் போன் கூட பேசல.இருந்தாலும் அவரு ரெண்டு முறை அவளுக்கு அனுப்பி இருந்த பரிசுகள் அவரோட மனச பிரதிபலிப்பது போல் இருந்தது.இப்போ கரண்ட் சீன் '' மாப்பிள்ளை வந்தாச்சு'' இந்த குரலை கேட்ட உடன் யாயினியின் இதயம் நூறு குதிரை வேகத்தோடு துடிக்க ஆரம்பித்தது.ஏதோ தன்னை சுற்றி காற்றோடு கரைவது போல் தோன்றியது. தூரத்துல அளவா வடிச்ச கிரேக்க சிலை மாதிரி ஒரு உருவம் அவளை நோக்கி நடந்து வருவது மட்டும் தெரிந்தது.ஏதோ வானத்தில் பறப்பது போன்ற உணர்வு. அவளோட கண்ணு அந்த உருவத்தை மட்டும் கூர்மையா பார்க்க ஆரம்பிச்சது அவரோட பாதாம் நிறத்துக்கு அந்த கருப்பு சூட் ரொம்பவே பொருத்தமா இருந்த மாதிரி இருந்தது.அடர் புருவங்களுக்கு கீழ் இருந்த அந்த காந்த கண்களின் ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது மதி மயங்கி கொண்டு இருந்தால்.இப்படி ஒவ்வொன்றும் தன்னை திணறடிக்க அதை சமாளிக்க தெரியாது தன் மையிட்ட கருவிழிகளை கிழே அலையவிட்டால்.தான் பார்த்த காட்சிகள் அனைத்தும் அனலாய் பறக்க அவளை நோக்கி வந்த அந்த கம்பிர நடை அந்தக் கால்களில் மிகப் பொருத்தமாய் இருந்த ஷுக்கள் அவள் கண்ணில் நின்றன.அதன் பளபளப்பு அவள் கண்களின் பளபளப்போடு போட்டி போடு மின்னி கொண்டு இருந்தன. இதயம் படபடத்து மூளை வேலை செய்ய மறுத்தது.அந்த கால்கள் இன்னும் தன்னை நோக்கி வேகமாக வருவதை உணர்ந்தாள்.வியர்வை துளிகள் அரும்ப ஆரம்பித்தன. அவை இன்னும் இன்னும் அருகில் அவளை நோக்கி வந்தன..... இதயம் படபடத்தது ........முடியவில்லை... கண்களை இருக்க மூடிக்கொண்டாள்..........''யாயினி...யாயினி... சீக்கிரமா எழுந்திரு டி அப்படி என்னதான் தூக்கமோ ஈவினிங் உன்ன பொண்ணு பாக்க வராங்க ஆனா நீ இன்னும் தூங்கிகிட்டு இருக்க'' என்று மல்லிகா கத்த தன கனவில் இருந்து வெளிவந்தால் யாயினி.நெற்றியில் இருந்த வியர்வை துளிகளை துடைத்து விட்டு அலைபேசியை எடுத்து சௌமியாவிற்கு போன் செய்து'' ஹே அதே கனவு டி''என்று கூற மறுபக்கத்தில் இருந்து ''அவ அவளுக்கு எப்படி எப்படிலாம் கனவு வருது .....நீ இப்போ தான் ஷு செருப்பு னு சொல்லிட்டு இருக்க. போ போய் சீக்கிரமா ரெடி ஆகு'' என்று கூறி போனை ஆப் செய்தாள்.வேறு வழி இல்லது போக அலங்காரத்தை முடித்து கொண்டு யோசனையுடன் கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள் .அவளின் யோசனையை கலைக்கும் வண்ணம் அவள் வீட்டின் முன்பு ஒரு கார் வந்து நின்றது .தன்னை அறியாமல் ஓடிச்சென்று அவள் ஜன்னல் வழியே கிழே பார்க்க அந்த கார் கதவின் பின்பு இருந்து வெளிப்பட்ட கால்கள் ...அவள் தன்னை அறியாமல் ''தட் சேம் ஷுஸ்'' என்று முணுமுணுத்து தன் உதட்டோர சிறு வளைவுடன் அக்காட்சியை தன் மனதில் படம் பிடித்து கொண்டாள்.

.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.