இந்தக் கதையில் வரும் பெயர்கள் மற்றும் 99% கதை எல்லாம் கற்பனையே ..

என் வாழ்க்கை
பிறந்தேன் .. வளர்ந்தேன் செல்லமாக என்றார்கள்
ஏதோ பள்ளிக்குப் போனேன்
நான் முதலில் ஒரு கிறிஸ்டியன் கான்வென்ட் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன்
தோல்வியும் ஆகாமல் ரொம்ப மதிப்பெண்ணும் எடுக்காமல் ஒரு வகையில் என் வாழ்கை போய்க் கொண்டு தான் இருந்தது
ஆறாம் வகுப்பு ஒரு கிறிஸ்டியன் மெற்றிகுலேசன் பள்ளியில் படித்தேன்
எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு ஒன்பதில் ஒரு இந்துப் பள்ளி சென்ட்ரல் போர்டு சிலபசில் சேர்ந்து படித்தேன்
அதுவரை சாதாரணமாக போன வாழ்கை
நண்பர்களின் விளையாட்டை ரசித்தது.
நிறைய மனிதர்களை சந்தித்து உள்ளேன்.
எட்டாவது படிக்கும் போதே நிறைய நண்பர்கள் வித்தயாசமான சிந்தனை கொண்டுளார்கள்.
அது மீசை முளைக்கும் பருவம் அல்லவா.
ஒரு டீச்சர் அழகை வர்ணிப்பான் ஒருவன்
அவள் திமிர் பிடித்தாலும் அழகு என்பான்
அவள் கருப்பாய் இருந்தாலும் கலையாய் இருக்கிறாள் என்பான்
சுஜா ரொம்ப அழகுடா ..
கிளிப்பேச்சு .. நல்ல நிறம்
ஆனால் ஷீபா கருப்பானாலும் கலை டா
இப்படிப் போகும் அவர்கள் பேச்சு
ஒரு நாள் ஒருவன் சரஸ் படத்தை பார்த்துக் கொண்டே இருந்தான்
கருமம் முத்தமும் கொடுத்தான்
ஏன் இவர்கள் இப்படி பிஞ்சில் பழுத்து இருகிறார்கள் என நினைப்பதுண்டு
சிங்கப்பூர் டூர் போனேன் எனப் பணக்காரப் பையன் வந்து பீத்துவான்
ஆடை ஆசிரியையும் அச்சிரியடுடன் கேட்பாள்
அது ஒரு காலம் எட்டாம் வகுப்பில் நடந்தது
ஒரு மலையாள டீச்சர் எண்ட நாரி, எண்ட நாரி என்பாள்
இன்னொரு டீச்சர் எனக்கு ஜுரம் என்றவுடன் நான் கொண்டு வந்த வாழைப்பழத்தை வாங்கி கண்முனே சாப்பிட்டு விட்டாள். என்ன வடிச்சி அவள்
இதெல்லாம் என் வாழ்கையில் நடந்தது
பெண்கள் நன்றாக படித்தார்கள்
டீச்சர்களுக்கு சம்பளம் ஒழுங்காக கொடுக்காததால் அடிக்கடி அவர்கள் மாறிக் கொண்டு தான் இருந்தார்கள்
நிறைய பணம் வாங்கினார்கள் . சனியன்று எச்ஹிபிசன் என வாரவாரம் பணம்.
பணம் பணம் பணம்
ஒரு நாள் ஒரு பையனின் பெற்றோர் பணம் கட்டிவிட்டு போய் இருக்கிறார்கள்
அந்த பெண் அவர் பணம் கொடுக்கவில்லை என சாதித்துவிட்டாள்
பாவம் அவரே கடையில் வேலை செய்பவர்
அவரும் பாவம் மறுபடியும் பணத்தைக் கட்டிக் கொண்டார்
அன்று டியூஷன் படிக்கும்போது அந்த டீச்சர் அந்தப் பையனிடம் சொன்னாள் "என்னப்பா உன் அப்பா பணம் கட்டாமல் கட்டிவிட்டேன் எனக் கூறுகிராராமே என மிரட்டினாள்
அங்கே ஆபீசில் பணம் வந்குபவளுகும் இவளுக்கும் என்னையா சம்மந்தம் என நினைத்தேன்
அவள் சொன்னாள் அந்த ஆபீஸ் பெண்ணிடம் " நாம் ரெண்டுப் பேறும் ஒரு மாணவனின் பீசை பங்கு போட்டுக் கொண்டோம் என எல்லோரும் பேசிக் கொள்கிறார்களாமே பள்ளியில் . என சிரித்தாள்


பள்ளி வாழ்க்கை 2

இப்படியாக அந்த ஆசிரியை ஆட்டம் போட்டாள்
இத்தனைக்கும் அது எட்டாம் வகுப்பு தான்
ஒரு நாள் டியூஷன் படிக்கும் போது நான் கணக்கு பரிட்சைக்கு கணக்கு டவுட் கேட்டேன்
அவள் வரலாறு ஆசிரியை என்று நினைக்கிறேன்
நான் சரியாக போட்டாலும் அதைத் தவறு என்றாள்
திருப்பிக் திருப்பிக் கேட்டேன் அதைத் தவறு என்றாள். என் மேல் கோபப்பட்டாள் அந்த ராட்சசி
நானும் விட்டு விட்டேன்
அழுதேன் . என்ன செய்ய
ஒரு நாள் டிபன் பாக்ஸ் அவளால் திறக்க முடியவில்லை
திறக்கச் சொன்னாள். திறந்து கொடுத்தேன் .
அவள் என் சாப்பாடு என்வென்று ஏன் பார்த்தாய் என்றாள்
என்னையா இவள் என நினைத்தேன்.
அன்று வகுப்பில் ஒரு சீனியர் பையன் நான் எழுதியதை திருத்தினான்
15 க்கு 15 ம் சரி தான்
அவன் ஒன்றை bus என்பதை bas என திருத்தி விட்டு தவறு என்று ஒரு மதிப்பெண் குறைத்தான்
அதற்கு அவளும் உடந்தை
அப்பொழுது தான் நான் டியூஷன் வருவேன் என்ன நினைத்தார்களோ?
எல்லாம் நினைவு வருகிறது
வந்து அம்மாவிடம் அழுதுக் கொண்டே சொன்னேன். அவள் அவனைக் கூப்பிட்டு திட்டினாள்.
பள்ளியில் தேர்தல் நடந்தது.
சுதா அருணா என்னும் பலர் போட்டி போட்டார்கள் என நினைக்கிறேன்.
அவர்கள் பத்து படித்தார்கள். சுதாவுக்கு ஒட்டு போடேன் என நினைக்கிறேன்
சுதா என்பவள் டீச்சரிடம் கம்ப்ளைன்ட் செய்தாள்
என் வீட்டுக்கு தெரிந்தால் அவ்வுளவு தான் என்றாள்
மேடம் இவன் என்னக்கு லவ் லெட்டெர் குடுக்கிறான் மேடம் என்றாள்
அவளும் சிரித்தாள். அந்தப் பையனும் சிரித்தான்
இப்படியாக போனது
இந்திக்காரப் பையன் ஒருவன் பழைய எ பட பேப்பரை எடுத்து வந்து எல்லோருடைய பார்வையையும் இழுத்தான்
வரும் முறைவாசல் கழுவும் ஆயாவின் அழகையும் விட்டுவைகவில்லை அவன்
அவளையும் வர்ணித்தான்
அறியாத வயது
டியூஷன் படிக்கும்போது மொத்தமாக எதிர் வீட்டில் எட்டிப்பார்த்தது ஒரு கூட்டம்
என்ன என்று பார்த்தால் அசிங்கம்
ஒரு தாய் பிள்ளைக்கு பால் கொடுப்பதையும் விட்டு வைக்கவில்லை காமக்கூட்டம்
என்ன 14 வயசில் இப்படியா?
அப்பொழுது நாங்கள் ஒரு முடிவு எடுத்தோம்
ஆசிரியர்கள் மற்றும் இப்படி பெரியவர்கள் பற்றி யாரும் தவறாக பேசக்கூடாது என
இல்லையேல் நட்பு முறிந்து விடும் என்று
இந்த வயதைப் பாருங்கள் என்ன எல்லாம் செய்கிறது
நான் நிறைய படிக்கச் வேண்டும் என்று டியூஷன் டீச்சர் வீட்டுக்குப் வரச் சொனாள்
அங்கு எலேச்டின் டைம்
மாமியார் சேவலுக்கு ஒட்டு போடச் சொன்னால் .. நான் சூரியனுக்குப் போட்டேன் என்றாள் தோழியிடம்
சூரியன் வெற்றி பெற்றதும் அவள் சொன்னால்
நான் மாமியாரிடம் "என்ன சேவல் குழம்பா" என்றேன் எனச் சிரித்தாள்
ஒல்லியான உருவம்
கம்பீரமான பேச்சு
இருந்தாலும் நல்ல டீச்சர் தான் எனத் தோன்றியது
ஒரு பையன் கிருஷ்ணகுமார் வரவில்லை என நாங்கள் அவன் வீடு தேடித்போய் கூட்டி வந்தோம்
டீச்சர் எங்களை திட்டினாள்
நீங்கள் நேரத்தை இப்படி ஒட்டி விட்டீர்கள் என
அவனிடம் ஏன் உன் அம்மாவை ஒரு சின்னப் பொட்டு வைக்கச் சொல் என்றாள்
எனக்கு பெருமையாய் இருந்தது
ஒரு விதவைக்கு நல்ல உபதேசம் செய்கிறாள் என்று
என்னைச் சோம்பேறி என்று புத்தகத்தை பிரிக்க ஒரு ஆசிரியை அனுப்பினால்
அவள் நாங்கள் சோம்பேறி என்றுக் கூறி ராஜாவை அனுப்பி வை என்றாள்


பள்ளி வாழ்க்கை 3

இப்படியே படித்தோம் எட்டாம் வகுப்பை
ஜூலியஸ் என்ற முதல் மதிப்பெண் எடுக்கும் பையன் உண்டு
பாலா ,பத்மநாபன் என்ற நண்பர்கள் கான்வென்டில் படித்ததுண்டு .
இன்றும் வருந்தும் சம்பவங்கள்
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது
ஒரு நண்பன் என்னக்கு பேனாவை கடன் கொடுத்தான்
அனால் நான் அதை தரையில் போட்டு உடைத்தேன்
ஏன் அப்படி செய்தேன் என்று தெரியவில்லை
வந்தனா மிஸ் , ராதா மிஸ் என்னுடைய பிடித்தமான டீச்சர்ஸ்
ஜுலிச் சீசர் நாடகத்தில் நடித்தேன்
அப்பொழுது வேறு பள்ளிக்கு நுழைவு எழுத வேண்டும் என்று நான் ஒரு பகுதியில் நடிக்க முடியாமல் போயிற்று
அப்பொழுது என் டீச்சர் நீ இல்லாமல் எங்களால் நாடகம் நடத்த முடியாதா என்றாள்...
பக்கத்து வீட்டுப் பையன் ஒரு நல்லப் பையன்
கமல் - நல்ல நண்பன் தான்
அன்று நான் பள்ளிக்கு விடுமறை என்பதால் அவனிடன் நோட் கேட்டேன்
அவன் 6 மணி மேல் ஆகிவிட்டது என வீட்டைப் பூட்டி விட்டார்கள்
நான் மணி அடித்தேன் . இருந்தும் திறக்கவில்லை
மனிதன் கருப்பு பக்கங்கள் சின்ன வயதில் பதியவில்லை
ரிக்சாவில் வரும்போது அவன் தங்கையிடம் விளையாடியதால் அவன் பாட்டி
நேற்று நீ அவளை குத்தினாய் அல்லவே .
அதனால் தான் அவள் வரவில்லை என்றாள் அவள் பாட்டி
எங்கோ மனிதனுக்குள் விஷம் உல்ளதை மனது அறிந்து வலித்தது
அவள் வேறு மதம் என்பதனால் இருக்குமோ என யோசிக்க அன்று எனக்கு படிப்பறிவு இல்லை
பகுத்தறிவு இருந்திருக்கும்
நடந்து வீட்டுக்கு வருவேன்
1ம் தேதியிலிருந்து ரிக்க்ஷா என்றார்கள்
நான் நடுவிலேயே ஏறி வந்தேன்
வீட்டில் திட்டும் கிடைத்தது
ஒரு நாள் சீக்கிரம் பீஸ் கட்டினால் பேனா தருவேன் என டீச்சர் சொல்ல வீட்டில் போய் அப்பாவிடமும் அம்மாவிடமும் கெஞ்சிநேன்.
அது எல்லாம் ஒருக் காலம்
நான் ஏன் அம்மா ஓலையில் எழுதிய ஜாதகத்தை கிழித்து பாப்பாவுக்கு ஆய் அள்ள வைத்துக் கொள்ளுங்கள் என விளையாடியது அந்தக் காலம் .
மூன்று கான்வென்ட்டும் எதிர் எதிரே மூன்று பள்ளியில் சுற்றி சுற்றி படித்தோம்.
வேறு வீடு மாறியதால் ஆறில் வேறு பள்ளியில் இடம் பெயர்ந்தோம்
அந்த மெட்ரிக்கூலேசன் பள்ளி கடையை போன பாகத்தில் படித்து இருந்தேன்.

நான் பள்ளியில் சுமாராக படிப்பதால்
நுழைவுத் தேர்வு எழுதி ஒரு வழியாக தேர்வு ஆகிவிட்டேன்
ஒன்பதில் ஒரு இந்துப்பள்ளி சென்ட்ரல் போர்டு சிலபசில் சேர்ந்து படித்தேன்
அங்கு நிறைய வித்யாசங்கள் படிப்பில் , விளையாட்டில் , படிக்கும் விதம் எல்லாம் புதிது
நன்றாகத்தான் இருந்தது
நான் காலை செய்த இட்லியை கொண்டுப் போக அவமானமாக நினைதேன்
ஆனால் முதல் நாள் மதிய இடைவேளையில் என் மலையாளி நண்பன் இட்லிப் பிரியன் நிறைய இட்லி வாங்கிச் சாப்பிட்டது எனக்கு பெருமையாக இருந்தது.
வகுப்பில் .. காதல் கிசுகிசுக்கள்
ஒருவன் ஒரு மாடர்ன் பெண்ணிடம் பிறந்த நாள் அன்று கிரீடிங் கார்டு கொடுத்தான்
உள்ளே ஜிகினா நிறையா
இன்னொருவன் ஜிகினாவை நண்பி மேல் முகத்தில் பூசினான்
எல்லாம் விளையாட்டு தான் . விபரீதம் அல்ல
ஒரு வகுப்பில் யாரோ விளக்கை உடைத்தார்கள்
அந்தப் பையனை யாருக்கும் பிடிக்காத போதிலும் எல்லோரும் சேர்ந்து முட்டிப்போட்ட காலமிது
ஒருவன் பான்பராக் போடுவான் இந்திக்காரப்பையன்
இப்படி ஒவ்வொருவரும் ஒரு விதம்.
பக்கத்துக்கு கிளாசில் லவ் லெட்டெர் கொடுத்தது
ஒரு பெண் ஒருவனை அவன் என் தம்பி போல சொன்னது
ஒருத்தி தொடபக்கட்டைக்கு பட்டு துஞ்சம் கேட்குதா எனத் திட்டியது ...
எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது
பிஞ்சு வாழ்க்கையை எப்படி எல்லாம் இருக்கிறது என்று நினைதேன்

பள்ளி வாழ்க்கை - 5

ஆம் இப்படி கலகலப்பாய் போனது எங்கள் ஒன்பதாம் வகுப்பு பள்ளி வாழ்க்கை
ஒரு நாள் , இறைவன் வாழ்த்து படிக்கச் எங்கள் கணக்கு வாத்தியார் தமிழ் வழி பாடல் நாம் பாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்
அங்கு பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் சமஸ்க்ரிதம் மொழியில் தான் பாடுவார்கள்
அன்று தமிழில் பாடினார்கள்
சீக்கிரம் முடிந்து விட்டதால் சமஸ்க்ரிதம் பாட்டும் பாடுங்கள் என்று
மிஸ் சொல்ல இவருக்கு கோபம்
தமிழ் வாத்தியார் திட்டேரென்று பரீட்சை வைத்தார்
நாங்கள் ஒன்றும் படிக்கவில்லை
அவர் நல்லவர் தான்
பெண்களை அடிக்க மாட்டார். திட்டி அனுப்பி விடுவார்
ஆனால் ஆண்களை பிரம்பால் அடிப்பார்
கணக்கு வாத்தியார் ஒரு நாள் எல்லோரையும் பெஞ்ச் மேல் எழுந்து நிற்கச்சொன்னார்
முதல் மதிப்பெண் பெரும் நண்பன் அழுதான் . என்னக்கு இன்றும் நியாபகம் வருகிறது
ஒருத்திக்கு பிறந்த நாள் என்று ஆர்ட்டின் கார்டு கொடுத்தான் ஒரு நண்பன்
அவள் வேறு பிரிவில் படித்தாள்
கடைசி பெஞ்சில் இருக்கும் இரு நண்பர்கள்
ஒரு இந்திக்காரன் ஒரு தமிழ் பையன்
இந்திக்காரன் தமிழ் பையனுக்கு ஓரளவு படிப்பு சொலிக் கொடுத்து அவனை எப்படியாவது பாஸ் செய்ய வைப்பான்.
ஏன் என்றால் அவனுக்கு கணக்கு சரியாக வராது
ஒரு நாள் இரு வேறு நண்பர்கள் சண்டை போட்டுக் கொண்டதை பிரித்து விடும்போது பிரதவர்களுக்குள் சண்டை
இரண்டு வீடு பெற்றோர்களும் வந்து கம்ப்ளைன்ட் செய்தார்கள்
ஊட்டி டூர் சென்றோம் என நினைக்கிறேன்
அதில் நல்ல விளையாட்டு
ஒரு வாத்தியார் டீச்சரை கலைஞ்சரும் அம்மாவும் வைத்து விளையாட்டை
விளையாடினோம்
நான் சொல்லாமல் லீவு போட்டுவிட்டு ஊருக்கு சென்று விட்டேன்
ஜிகினாவையும் பூசிவிட்டான் ஏப்ரல் ஒன்று அன்று
காதல் வரவில்லை என்று சிகரட்டே குடித்து புகையால் வாழ்க்கையை ஒரு வாரம் ஓட்டினான்
நிறைய கலாட்டா செய்ததால்
வாத்தியார்கள் பத்தாம் வகுப்பை அப்படியே எலோரையும் மாற்றிப் போட்டார்கள்
நண்பர்கள் பிரிந்து விட்டோம்
குழப்பம் தான் அதிகம் ஆனது

பள்ளி வாழ்க்கை - 6

ஒரு அழகான தேவதையை எங்கள் பள்ளி கண்டது .
அவள் அமைதியாக பேசியதால் எல்லோருக்கும் பிடித்தது
அழகாகவும் இருந்தாள்
எல்லோரையும் நலம் விசாரிப்பாள்
அவள் தான் எங்களுக்கு வந்த அழகான ஆசிரியை
ஒரு நாள் உங்களிடம் உங்க குடும்பத்தில் ஒரு அக்கா, தங்கை இது அதை படிக்கிறாள் என்று நீங்கள் அவளிடம் கூறிவிட்டால்
அவள் அதை நியாபகம் வைத்துக் கொண்டு எப்பொழுது உங்களைப் பார்த்தாலும் கேட்பாள்
அவ்வுளவு நல்ல குணம்
பொறுமையின் கடல் அவள்
அதனால் அவளை பெண்களும் விரும்பினார்கள்
பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தோம் .
நண்பர்கள் மாறி விட்டார்கள் அழுதோம்
அடம்பிடித்தோம் .. ஒன்றும் ஆகவில்லை
புது வாத்தியார்கள்
புது கூட்டாளிகள்
என்னை யாரும் மதிக்கவில்லை
ஒரு ரௌடிக்கூடம் போல உள்ளது
போகப் போக அவர்களின் நல்ல குணம் எனன்குப் புரியத் தோன்றியது
ராபின் ஒரு நல்லப் பையன்
அவன் பண்ணும் அட்டகாசம் எண்ணிகையில் அடங்காது
ஒரு நாள் அவன் கண்டக்டர் பை போல் ஒரு பையைத் தான் கொண்டு வருவான்
அவனியும் அவன் சுருட்டை முடியையும் கிண்டல் செய்வோம்
அவன் பேசும் தமிழும் அழகாக இருக்கும்
அவன் எப்படியும் என்னை படிப்பில் தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிவான்
ஆனால் அவன் என்னிடம் தானே படிப்பு கற்றுக் கொள்ள வேண்டும்
நானும் நன்றாகத் தான் சொல்லிக் கொடுப்பேன்
இன்னொரு நண்பன் நரேஷும் உண்டு
இவர்கள் தான் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள்
ராபின் வீட்டுக்கு நான் அடிக்கடி படிக்கப்போவது உண்டு
ஒரு இந்திக்காரப் பையனும் இடையினில் உண்டு
அவனும் முருகனும் நல்ல நண்பர்கள்
நான் ராபின் முருகன் அஜய் நால்வரும் ஒன்றாக தான் நடந்து வீட்டுக்குப் போவோம்
நல்ல தோழர்கள் ஒன்பதாவது படிப்பதில் இருந்து
கிண்டலும் கேலியும் எங்கள் வாழ்க்கை
நாங்கள் நால்வரும் எல்லோர் வீட்டிலும் சென்று படிப்போம்
எங்கள் வகுப்பில் ஒரு நாள்
கணக்கு வாத்தியார் வேறு ஆசிரியை வரவில்லை என்று அவரது வகுப்பை நடத்த வந்தார்
எல்லோரும் சார் போர் என்றார்கள்
உடனே அவர் சொன்னார்
கொண்டு வந்த சாக்பீசை யாரவது சாப்பிட வேண்டும் என்றார்
எல்லோரும் சிரித்தோம்
ஒரு மாணவி கிடு கிடு என ஓடி வந்து வாங்கி சாப்பிட்டு விட்டாள்
எல்லோருக்கும் சந்தோசம்
ஒரு இரண்டாம் ரேங்க் எடுக்கும் பையன் பரிட்சையில் தனுடைய தாளை யாருக்கோ காண்பித்து விட்டான் போல
அவனுக்கு தண்டனையாக அவன் பெயில் பண்ணச் சொல்லி உத்தரவு
சிரித்தோம் சிரித்தோம் கொண்டாடினோம்
நாங்கள் டியூஷன் சென்றோம் நின்றோம்
நாமளே படிப்போம் என கூட்டு படிப்பு படித்தோம்
ஒரு 65 இல் இருந்து 80 மதிப்பெண் தான் எப்பொழுதும் வரும்
அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட்டது இல்லை
ரொம்பக் கடினமான படிப்பிலும் அவ்வுளவு தான் நான் மதிப்பெண் எடுப்பேன்
ஒரு நாள் தாளாளர் ஒருவனைக் கூப்பிட்டு
நீ இப்பொழுது ஒழுங்காக படிப்பது இல்லை
அவர்களோடு சேராதே என்று சொலி இருக்கிறார் போல
அவனும் பாவமாக வந்து சொன்னான்

பள்ளி வாழ்க்கை - 7

ஒரு நாள்
மதியப்பொழுதில்
அரிதாரம் பூசாத அழகு தேவதை எங்கள் வகுப்புக்கு வரும் வாத்தியார்
விடுமுறை என்பதால் வந்தாள்
படிக்காத மாணவன் எல்லாம் அவிளிடம் டவுட் கேட்கும் சாக்கில் போய் பேசினான்
அதில் அவனுக்கு ஒரு சந்தோசம் போல
காலை இடைவெளியில்
முட்டையை குபுக் என்று அமுக்கையில் கணக்கு வாத்தியார் கண்டுவிட்டார்
என்னப்பா அவ்வுளவு அவசரமா எனக் கேட்டார்?
அவருக்கு என்ன தெரியும்
மதிய நேரத்திற்குள் முட்டை வடிவம் மட்டும் தான் இருக்கும் என்று ?
வகுப்பிலும் சில சேட்டை மாணவன் மாணவிகள் உண்டு
செந்தில் ஒரு மாணவியை காதலிக்க ஆரம்பித்தான் ..
வெறித்தனமாக ..
படிப்பு பாஸ் கூட ஆகா மாட்டான் ..
அவனுக்கு நெருங்கிய நண்பன்
கமலக்கண்ணன்
அவன் உசுபேத்தி விட
சினிமாவைப் போல்
காம்பஸ் எடுத்து பெண்ணின் பெயரை வரலக்ஷ்மி என்பதை "வரா" என கிழித்துக் கொள்வான்
அவள் நல்லாப் படிக்கும் பெண்
இவனை ஒரு நாள் திட்டினேன்
உன்னால் முதலில் பாஸ் செய்ய முடியுமா என்று ..
அவள் சொன்னால் கண்டிப்பாக முதல் ரேங்க் எடுப்பேன் என்றான்
அதைப் போல் அடுத்த நாள் செமிஸ்ட்ரீ டெஸ்டில் பாஸ் ஆனான்
ஆச்சிரியம்
16 வயதில் மனது எவுளவு விஷமானது பாருங்கள்
நான் சொல்வது 1991 - 1993 படித்த கதையை
அவன் இப்படியே வாழ்க்கையை சோகமாக ஓட்டினான்..
அவள் வீட்டை தேடுவது
ஒரு நல்ல பையன் பொறுக்கி எனப் பெயர் எடுத்தான்
தவறான நண்பன் கூட்டணியால்

பள்ளி வாழ்க்கை - 8

இப்படி 16 வயதில் பழுத்த பிஞ்சுகள் ஏராளம்
டீச்சர் தன் பையை தூக்கி வெளியே போட்டபோது
ஏன் என் புத்தகப் பையை தூக்கி வெளியே போடுகிறீர்கள்
என்னை வேண்டுமானாலும் அடியுங்கள் என்று ஒருவன்
அடிக்க வரும்போது கையை பிடித்த பையன் ஒருவன்
கோபப்பட்ட டீச்சர்
உடனே முதல்வரிடம் சொல்ல
அவர் அவர்களை டிஸ்மிஸ் செய்த கையோடு உங்கள் பெற்றோர்களையும் கூட்டி வா
எனக் கூறினார்
இப்படி ஒரு புறம் போக
பான்பராக் போட்டுத் திரியும் இந்திக்காரப் பையன் ஒருவன்
ஒரு பெற்றோர் மீட்டிங் நாடாகும் வேளையில்
ஒருநாள் சிகரட்டும் பிடித்தான் பள்ளியில்
கழிப்பறையில்
அதை ஒரு பெற்றோர் பார்த்து முதல்வரிடம் கம்ப்ளைன்ட் செய்துவிட்டார்
அது ஒரு பெரிய பிரச்சனை ஆனது
அவனது பெற்றோரை கூப்பிட
அவனும் கோபித்துக் கொள்ள
அவன் மாத்திரையை சாப்பிட
அய்யோக் கடவுளே
அவனுக்கு சப்போர்ட் செய்ய வாத்திச்சிகள் சில
எதிர்த்த வாதியர்கள் பல
ஒரு காணினி இல்லை
ஒரு கைபேசி இல்லை
ஒரு தொலைபேசி இல்லை
அந்தக் காலத்தில் பிள்ளை படும் பாடிப் பாருங்கள் ..
இதே இந்தக் காலத்தில்
பள்ளியில் மாணவனை தண்டித்தால் பெற்றோர்கள் கொடிப்பிடிக்கிறார்கள்
அன்று தண்டிக்கப்பட்ட என் நண்பர்கள்
இன்று நல்ல போற்றக் கூடிய நிலைமையில் உள்ளார்கள்

பள்ளி வாழ்க்கை - 9

எப்பொழுதும் எல்லாக் கதைகள் போல
இங்கில்லை....... எங்கும்
நம் வகுப்பில் சாதாரணமாக தான் பெண்கள் இருப்பார்கள்
பக்கத்துக்கு வகுப்பில் அழகான பெண்கள் உண்டு
அது சரி தான்
எங்களுக்கே வாத்தியாரும் சிடுமூஞ்சி
கூட படிக்கும் பிள்ளைகளும் சிடுமூஞ்சி தான்
சில மின்மின்னிக்கூடத்தில் அழகு தான்
சுடிதாரில் அலையும் மின்மினிபூச்சுகள்
அழகு மிகுதியான அழகுதான்
அதை ரசிக்க ஒரு அழகு வேண்டும் உங்கள் மனதுக்கு
அதில் வண்ணங்கள் பரவட்டும்
வடக்கும் தெற்கும் கலந்த குவியல் தான் எங்கள் பள்ளி
கிப்பி வைத்தும் ஜடை வைத்தும் பெண் கூட்டம்
தோழிகளோடு சுற்றும்போதும்
ஓரக் கண்ணால் பேசும்போதும்
ஓராயிரம் அழகு தான்

பள்ளி வாழ்க்கை - 10

சும்மா இருக்குமா இளவயதுக்காரன் குசும்பு
அடுத்த வகுப்பில் இருக்கும் பெண்ணுக்கு தூது விடுவது
அதற்கு ஒரு வகுப்பு தோழியை தேர்ந்து எடுப்பது
அப்படி ஒருத்தியை நெருங்கிய தோழியை மாமி என்று செல்லமாக அழைத்தார்கள்
அவள் எட்டாம் வகுப்பு பெண்ணிடம் தூது செல்வாள்
அவளுக்கு லஞ்சமாக ரஸ்னா வாங்கித்தர வேண்டும்
இப்படியே போனது அந்த அழகு வாழ்க்கை
அரிதாரம் பூசாத அழகிய பெண்களின் ஊர்வலம்
காலை பாட்டுப்பாடும் இறைவணக்கமும் அழகு தான்
வகுப்பை கட்அடுத்துவிட்டு பீ டி சார் கூப்டார் என விளையாடச் செல்வதும் அழகுதான்
படிப்பில் கவனம் இல்லை என்று அறிவியல் வாத்தியார் திட்டும்போது
திருதிருவென முழிக்கும்போதும் அழகுதான்
ஒரு பெண்ணுக்காக இரு பையன்கள் சண்டை போடுவதும் அழகுதான்
சின்னச் சின்ன கோபமும் சண்டையும் அழகுதான்
ஆசிரியையின் அழகை வர்ணித்தப்பின்
அய்யய்யோ தப்புடா .. அவங்க நம்ம டீச்சர் டா..
என கன்னத்தில் போட்டுக் கொள்வதும் அழகு தான்

பள்ளி வாழ்க்கை - 11

ஒரு விசித்திரமான கதையை கேள்விப்பட்டேன் அப்பொழுது
குட்டை முடியோடு
வேக நடையோடு
எப்பொழுதும் விளையாட்டாய்
சிரித்த முகத்தோடு காட்சியளிக்கும் ஸ்வாதி ..
மலையாளதேசத்து அழகியவள்
மேல்உதட்டில் ஆங்கிலத்தை அழகாக ஒட்டி வைத்திருப்பாள்
கரப்பந்தாட்டம் ஆடுவாள்
பந்தை வீசுதல் விளையாடுவாள்
கோகோ விளையாடுவாள்
வட்டம் வைத்து விளையாடுவாள்
இருந்தும்
நல்லப் படிப்பாளி
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தாள்
அவளைச் சுற்றி இந்தக் பள்ளிக் ஆண்களின் குவலயம் உருளும்
அவள் பிறந்த நாளைக்கு அவளுக்கு
வாழ்த்து அட்டை கொடுக்க அவ்வுளவு கூட்டம்
கோதிய கூந்தலில்
மோதியது மாணவக் கூட்டம்

பள்ளி வாழ்க்கை 12

மெல்லப்பூக்கும் பூவைப் போல அவள்
இமைகள் ..
நொடியில் அடிக்கும் மின்னல் போல அவள்
சிரிப்பு ..
இந்த 11 ஆம் வகுப்பில் இருந்து தான் ....

பள்ளி வாழ்க்கை - 13

இது தான் எல்லோரும் அவளைப் பார்த்த மாத்திரத்திலயே சொல்வது
அவள் ஒரு மெல்ல நடக்கும் தேர்
குட்டைப் பாவாடையில் (கௌன்) வலம் வரும் அழகு
மெல்லியப் புன்னகையுடன் சிரிப்பதும் அழகு
பதிநொன்று படிக்கையில் எஅழகுத் தென்றல்
விரிந்த முடியழகு
சுருட்டையாக வளைதல் அழகு
குவிந்த இமையழகு
அவளை விடு வைக்குமா வாண்டுகள் கூட்டம்
பெண் என்றால் படிப்பாள்
அழகுப் பெண் என்றால் ரொம்பப் படிப்பாள்
இவள் ரொம்ப ரொம்ப நல்லா படிப்பாள்
அழகான உடையுடுத்தி
அழகாக அமைதிக்குணம்
நண்பிகள் கூட்டிலும் அழகாக தனித்து தெரிவாள்
ஆசிரியைகள் இவளை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்

14
அவ அழகு டா..

அவளுக்கு நகை அழகா?
இல்லை
நகைக்கு அவ அழகு ..

பள்ளி வாழ்க்கை - 15

இவளிடம் வேறு வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன்
லவ் லெட்டெர் கொடுத்து விட்டான்
பாவி பயல் முந்திக்கொண்டான் என எலோரும் நினைத்தார்கள்
பாவம் அதைப்பார்த்து அழுதே விட்டாள்
அவளருகில் அவள் தோழி ஒருத்தி இவளைக் குழப்பிக் கொண்டு இருந்தாள்
அவள் கண்கள் கண்ணீரால் நணைகப்பட்டன
அவன் ஓடியே விட்டான்
அமைதியாக இருந்தாள்
என்ன செய்தாள்
அதற்கு அப்புறமாக
சற்று மறந்துவிட்டது இப்போது
நல்ல செக்கச்செவேல் என்று தான் இருந்தாள் .. இருப்பாள்
அழகான ராட்சசி அவள்
அவனும் அழகன் தான்
நல்ல படிப்பாளி
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் கம்ப்யூட்டர் குரூப் படித்தான் என நினைக்கிறேன்.
அன்று அவளைப் பார்க்க எனக்கு பாவமாய் தான் இருந்தது .....

பள்ளி வாழ்க்கை - 16

இதோ அவளை துரத்த ஆரம்பித்துவிட்டான்
அவள் பின்னால்
அவளுக்கு ஒரு சம்பளம் வாங்காத வாட்ச்மனாக
பேருந்தில் பின்னலையே நிற்கிறான்
வீடு வரை நாயாக வருகிறான்
கலையில் வந்து கூட்டிப்போகிறான்
அவள் அண்ணன் வந்தால் ஓடிபோகிறான்
இதில் அவன் நண்பன்கள் கூட அவனை உசுபேத்த..
அவளும் வெட்கப்பட்டுவிட்டாள்
போகப்போக ..
பழம் நழுவி பாலில் விழுந்தது
உளி விழுந்து காதலில் சிலையாவது போல
அடிக்க அடிக்க அம்மி நகர்ந்தது ..

பள்ளி வாழ்க்கை - 17

அவள் சில நேரம் சிடுமூஞ்சி ஆனாள்.
பட்டபடட்பாக பல நாள் சுற்றித் திரிந்தாள்
கவலைப்பட்டாள்
எழுதமுடியவில்லை
படிக்கமுடியவில்லை
தூங்கமுடியவில்லை
ஏங்க மட்டும் தான் முடிகிறது
எதற்காக அவளைத் தேடி கடல் கடிதம் கொடுத்தான் என இன்று வரை
அவளுக்குப் புரியவில்லை

பள்ளி வாழ்க்கை - 18

யோசித்தாள்.. யோசித்தாள்..
கடலின் எல்லை வரை யோசித்தாள்
வானின் நீளம் வரை யோசித்தாள்
சூரியன் எழுமுன் வரை யோசித்தாள்
தேதித்தாள் கிழிய கிழிய யோசித்தாள்

பள்ளி வாழ்க்கை - 19

கடைசியில் தோழியோடு கலந்து உரையாடினாள்
அவளுக்குள் ஒரு இன்பம்
ஒரு இனம் புரியாத இன்பம்
அதை வெளிக்காட்டத் தெரியவில்லை
விழிவாசல் மொழியாக
இருஇமை வழியாக
கண்கள் ஒளியாக
வெளிப்பட்டது
இதழோர சிரிப்பில் ..

பள்ளி வாழ்க்கை - 20


இதோ ஆதான் ஏவாள்
சேர்ந்து விட்டார்கள்
அவன் பத்தாவது நன்றாக படித்து அறிவியல் பாடப்பிரிவில் இருக்கும் மாணவன்.
இவள் கம்மி மதிப்பெண் எடுத்து சாதா பாடப்பிரிவில் இருக்கும் மாணவி
இருவரும் சினிமா போல்
பார்க்
பீச்
சினிமா
சுற்ற ஆரம்பித்து விட்டார்கள்.
இதற்கு அவன் நண்பர்கள் உடந்தை வேறு
காதல் ரோஜா பூக்க ஆரம்பித்து விட்டது

பள்ளி வாழ்க்கை - 21

கடலோர கவிதையாய் விளையாடினால்
பீச், பார்க் , பார்ட்டி தான்
படிப்பைத் தவிர எல்லா ஆட்டமும்
அவள் பன்னீரில் செய்த கேக் போல இருப்பாள்
வெள்ளை வெளீரென்று
கொஞ்சம் குஷ்பூ போல
கொஞ்சம் ஜோதிகா போல
சிரிக்கும் பூச்செண்டு
நல்ல குணம்
எல்லோரிடனும் நன்றாக பழகுவாள்
ஆனால் இந்த பாலாய்ப் போன காதல் கடலில் சிக்கிக் கொண்டாளே !

இவள் வாழ்க்கை இப்படி செல்ல
இன்னும் பல பேர் வாழ்கை பல வழியில்
இன்னொருத்தி கடையை பார்ப்போம்
அவள் ஆள் கொஞ்சம் சுமார் தான்
இவள் செய்த வேலையைப் பாருங்கள்
இவளும் ஒழுங்காக படிப்பதில்லை
அவன் பத்தாம் வகுப்பில் சுமாராக படித்தான்
இவளும் அவனும் ஒரே வகுப்பில் படித்ததால் நட்பு என எலோரும் நினைத்தார்கள்
இவள் அவனுடன் சுற்றி அவன் வாழ்கையை கெடுத்தாள்
அவனும் ஒரு குடிகாரனாய்
ஊதாரிதனமாய் சுற்ற வைத்தாள்
இவளும் சுற்றினாள்
அவனை ஊரார் தூற்றியதால்
பள்ளி திட்டியதால்
அவன் இன்னும் மோசமாகப் போனான்
மனிதன்
உருவாகுவதும் பெண்ணாளே
அலைவதும் பெண்ணாளே
அழிவதும் பெண்ணாளே

நட்புகாதல்இயற்கைவா

பள்ளி வாழ்க்கை - 23

தன்னைப் பார்த்து எல்லோரும் ரசிக்க வேண்டும் என நினைப்பது
சாப்ட்வேர் பெண்கள் மட்டுமல்ல
பள்ளிப்பிள்ளைகளும் தான்
ஆம் பள்ளியிலே ஒரு சானியா மிர்சாவும்
ஐஸ்வர்யாராயும் ஆகா வேண்டும்
எல்லோரும் நம்மைத்தான் பார்க்க வேண்டும் என பேராசை
மார்டன் பெற்றோர் இருக்கும் வீட்டில் நல்ல மாடர்ன் உடையும்
அலையும் அழகு தேவதைகள் தான் மாணவர்களின் உயிர் நாடி
அவர்கள் படிப்பில் நன்றாக படிப்பார்களோ இல்லையோ
விளையாட்டில் முன்னணியில் இருப்பார்கள்
கிளாசை கட் அடிக்கவே விளையாட்டில் சேருவார்கள்
எப்பொழுதும் பீ டி விளையாட்டு
மைதானம் தான் பள்ளிக்கூடம்
அவர்களை பார்பதற்கே ஒர சீட்டில் உட்காரும் ஆண்கள் கூட்டம்

பள்ளி வாழ்க்கை - 24

எங்களுக்கு நிறைய வித்தாயசமான வாத்தியார்கள் உண்டு
அழகாக படம் நடத்தும் வித்துவான்கள்
எங்களுக்கு ஒரு வாத்தியார் ஜப்பானில் இருந்து வந்தவர் போல் இருப்பார்
ஒரு நாள் பள்ளியில்
அவர் பாடம் நடத்திக் கொண்டு இருக்கையில் மாணவர்கள் கவனிக்கவில்லை
என் அருகில் ஈலோரும் சுமார் படிப்பு ரகம்
திடீரென்று ராபியையும் நரேஷ்யும் அழைத்து திட்டினார்
மதிப்பெண் ரொம்பக் கம்மி என்று
அதற்கு அவர் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வா என்றார்
உடனே அருகில் இருக்கும் பையன் கையெழுத்து பொதுக் கொடுத்தான்.
உடனே அவரிடம் காண்பித்தாச்சு
அவரும் அப்பா என்ன சொன்னார்னு கேட்டாரு
இவனும் நல்லாப் படிக்கச் சொனாறு சொன்னான்.
ஹா ஹா ஹா
இதெப்படி இருக்கு

பள்ளி வாழ்க்கை - 25

ஒரு வாத்தியார் மாணவன் மேலுள்ள வெறுப்பினால்
உன்னை கொலை பண்ணிட்டு ஜெயில் போனாலும் பரவாயில்லை என சொன்னார்
அந்த அளவுக்கு வெறுப்பு அவன் மேல்
அவனைத் திட்டி தீர்ப்பார்
ஒரு நாள் தெர்மோமீட்டர் கொடுத்து மொட்டை மாடியில் போய் அளவு எடுத்து வாருங்கள் என சொனார்
நாங்களும் போனோம்
எங்களுக்கு வெப்பமானி எப்படி வேலை செய்யும் எனத் தெரியாது முதலில்
எல்லா மாணவர்களும் மொட்டை மாடிக்கு போனோம்
அதனால் ஒருவன் 36, 37,38,39.6,40 என எழுதினான்
நான் உடனே காபி அடிக்கக் கூடாது என 36,35,34.5,34,33 என எழுதினேன்
நண்பர் ராபின் எழுதவே இல்லாததால் அவன் அங்கேயே முதுகில் அடியும் தலையில் குட்டும் வாங்கினான்
நாங்கள் அசைஞ்மென்ட் கொடுத்தோம்
உடனே அவர் என்னுடையதை பார்த்துவிட்டு "where there is rain outside" என எழுதிவிட்டு வெளியே பார்த்தார்
என்னை பார்த்து காப்பி அடித்தவரையும் சேர்த்து அடித்தார்அது ஒரு மாறாக முடியாத சம்பவம்

பள்ளி வாழ்க்கை - 26

பின்பு உன்னை கொலை செய்வேன் என வாத்தியாரே நண்பனை அழைத்து வீட்டில் விருந்து வைத்து இருக்கிறார்
நல்ல மனிதர்
அவள் தன் முதல் வகுப்பிலேயே என் சிலபஸ் முடிந்துவிட்டது எனச் சொன்னார்
அவர் தீவிரமாக சிரிப்பாக காமெடி செய்தார்
அவ்வளவு வேகமான ஆள்
அவர் வேகமாக செயல்படுவதால் அவரை ஜப்பான் என்றே அழைப்பார்கள்
"internal combursion என்ஜின்" இது தான் அவருடைய மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் வார்த்தை
இவர் எடுத்த வகுப்பை கவனிக்காமல் எல்லோரும் அரட்டை அடிப்பதுண்டு
ஆள் கொஞ்சம் குள்ளம் . வேகமாக கோபம் வரும்
நல்ல மனிதர்
இவருக்கு நிறைய கெட்டப் பேர் போல
ஆனாலும் அந்த துறைக்கு வேறு ஒரு ஆசிரியரை தேடிக் கொண்டு இருந்தார்கள்
நிறையப் பேர் வந்தார்கள் போனார்கள்
நிலையாக எந்த ஆசிரியரும் இருந்தது இல்லை

பள்ளி வாழ்க்கை - 27

இன்னொரு டமார் வாத்தியார் உண்டு
அப்பப்பா அடி என்றால் அப்படி ஒரு அடி
பின்னி எடுப்பார்
பள்ளியில் கொட்டாவி விட்டால் அடிப்பார்
பள்ளியில் குறிப்புகள் எடுக்காவிட்டால் அடிப்பார்
அடி அடி என்று அடிப்பார்
ஒரு முறை குனிய வைத்து முதுகில் அடித்தார்
ஒருவன் காதில் அடித்தார்
அவன் அப்பா வந்து புகார் அளித்து விட்டார்
பின்பு ஒருவரையாக கேட்டார் யார் என்று கண்டுப் பிடிக்க
ப்ரின்சி கேட்டால் உங்களுக்கு அவள் அடித்தால் தான் உங்கள் கண்கள் சுத்தமாகும் என்பார்
அவரை ரெண்டு பொண்ட்டிக்காரர் என கோவத்தில் எல்லோரும் கிண்டல் செய்வதுண்டு
அவர் ஒரு முரட்டு போலீஸ் போலக் காட்சி அளிப்பார்
கோபக்காரர்

பள்ளி வாழ்க்கை - 28

எங்களுக்கு அறிவியலில் டோண்டி என்று செல்லமாக அழைக்கும் வாத்தியார் உண்டு
அவரைப் போல் திரைமைசாளியை யாரும் பார்த்திருக்க முடியாது
நீங்கள் ஒரு கணக்கை அவர் சொல்லிக்குடுக்கும் விதம் தவிர வேறு விதத்தில் போட்டாலும்
அவர் அந்த இடத்தில இருந்தே உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்
பொறுமையாக கையாள்வார்
எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும்
சிரித்துக் கொண்டே அழகாக படம் எடுப்பார்
அவர் ஒரு நாள் கீழே நின்று பேசும்போது ஏதோ கேட்டார்
யாரோ அவரிடம் வாய் தவறி டோண்டி எனக் கிண்டல் செய்து விட்டார்கள்
ஷாக் ஆகி விட்டோம்
யார் மனதையும் புண்படுத்த மாட்டார்
அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பார்

பள்ளி வாழ்க்கை - 29

நிறைய அறிவுரை சொல்லும் ஆசிரியைகளும் உண்டு
ஒருவர் கண்டிப்பானவர்
ஆண்களும் பெண்களும் பேசக்கூடாது
ஆண்கள் புத்தகத்தை பெண்களும் பெண்கள் புத்தகத்தை ஆண்களும் தொட கூட அனுமதிக்க மாட்டார்
ஸ்ட்ரிக்ட் டீச்சர் அவர்கள்
நன்றாக சொலிக் கொடுப்பார்
காலையும் மாலையும் தங்கி படிச்சச்சொல்வார்
ஸ்பெஷல் கிளாஸ் வைப்பார்
மாணவர்கள் எல்லாம் அவர் மேல் எரிந்து விழுவார்கள்
அதற்கு நான் அன்றே ஒரு பொங்கல் வாழ்த்து எழுதும்போது அழகாக எழுதினேன்
1994 ம் வருடம் எழுதியது ..
புத்தாண்டில்
" காற்றாடி நினைத்தது இந்தக் கயிறால் தான் வழகியைல் மென்மேலும் உயராமல் இருக்கிறோம் என்று ,
ஆனால் அனைத் கயிர் தான் அடங உயிர் என்று அதற்கு தெரியாது .
தரையில் அறுந்து விழும்பொழுது தான்
அதன் நிலைமை மோசமாகி விட்டது என உணரும் "
நீ சரியாய் எழுதி இருகபா என்றார்கள்
பிறகு அவரை பேருந்தில் க படிக்கும் பொழுது பார்த்தேன்
அதன் பிறகு அவர் எங்கள் பள்ளியில் இல்லை
என்றாவது பார்த்து அவர்களால்
வாழ்க்கையில்..
நான் அமெரிக்காவையும் உலகையும் சுற்றிக் கொண்டிருக்கிறேன் என சொல்லதேவையில்லை
நான் நிறைய பணம் சம்பதிக்கிறேன் என பெருமையாக சொல்லதேவையில்லை
என் மகனை சர்வதேச பள்ளியில் செலவு செய்து படிக்கச் வைக்கிறேன் என பெருமையாக சொல்லதேவையில்லை
நான் சொந்தமாக வீடு வாகனம் வாங்கி விட்டேன் என பெருமையாக சொல்லதேவையில்லை
நான் நிறைய பணத்தை அன்னதானமாக கொடுக்கிறேன் என பெருமையாக சொல்லதேவையில்லை
உங்கள் வகுப்பில் சரியான வயதில் படித்ததால் தான் கெட்டுப் போகாமல் ஒழுக்கத்தோடு உங்கள் மாணவர்கள் நலமாக வாழ்கிறோம் என உண்மையைச் சொல்வேன்.
அவர் நிச்சயம் மகிழ்ச்சி கொள்வார் என நம்புகிறேன்.

பள்ளி வாழ்க்கை - 30

நான் முதலில் படினொன்ரு படிப்பு சேர போகும் பொழுது நடந்த விஷயங்கள்
நான் எந்த குரூப் தேர்ந்து எடுக்க வேண்டும் என பல பேரிடம் கேட்கும்பொழுது
கணினி அறிவியல் பிரிவு எடுத்தால் நல்ல வேலை கிடைக்கும் எனச் சொனார்கள்
என் வீட்டில் எனக்கு டியூஷன் எடுத்த ஆபீசில் வேலை செய்யும் ஆசிரியையை கேட்டேன்
அவரும்
கணினி அறிவியல் பிரிவு எடுத்தால் நல்ல வேலை கிடைக்கும் எனச் சொனார்
வெயிலில் நடந்து பள்ளிக்கு செல்லும்பொழுது ஒரு நண்பனை பார்த்தேன்
நான் CBSE படிப்பு என்பதால் தமிழ் அல்லது கணக்கு எதாவது ஒன்று தான் படிக்க வேண்டும்
எனக்கு தமிழ் பிடிக்கும் என்பதால் தமிழ் எடுக்கலாம் என நினைத்து நடந்து கொண்டிருந்தேன்
அப்போது என் நண்பன் குமரனை வழியில் கண்டேன்
அவன் அவ்வளவாக பேச மாட்டான்
அவன் அறிவுரையில் கணக்கு பாடம் எடுக்காமல் நீ எதுவும் செய்ய முடியாது என்றான்
அவன் நலதே சொன்னான்
என் பள்ளி முதல்வரைப் பார்த்தேன்
அவர் நீ சுமாரான மதிப்பெண் எடுத்திருக்கிறாய்
அதனால் நீ அறிவியல் ஆசிரியையை அழைத்து வா என்றார்
நானும் அழைத்துப் போனேன்
அவரும் இவன் நன்றாக படிப்பான் என முதல்வரிடம் சொல்லவே
அவரும் இடம் கொடுத்தார்
குறிகிய காலத்தில்
என் ஆசிரியை மெடிக்கல் எடுத்தால்
ரெண்டும் படிக்கலாம் அல்லவா என்றார்
உடனே ஆசை வந்துவிட்டது
நானும் மாற்றிக் கேட்டேன்
ஒரு ஆசிரியை நீ குறைந்த மதிப்பெண் .கிடைப்பது கஷ்டம் என்றார்
எப்படியோ தட்டுத்தடுமாறி
முதல் குரூப் கிடைத்தது
ஒரு பையன் முதல்வர் காலில் எல்லாம் உழுந்துப்பார்த்தான்
அவனுக்கு வாணிகத்தொடர்பு கிடைத்தது
நானும் ஒரு மாதம் படித்து பார்த்தேன்
கஷ்டமாக இருந்தது
ஒன்றும் புரியவில்லை
மாறிவிட்டேன் 2 மாதம்கழித்து..
அதற்காக எவ்வுளவு திட்டு வாங்கினேன் தெரியுமா?
ஆனால் பிற்காலத்தில் இது தான் என்னைக் காப்பற்றியது

பள்ளி வாழ்க்கை - 31

ஆம் நான் வணிகம் படிக்கிறேன் என்றவுடன்
என் தந்தை கஷ்டப்பட்டு ஏன் உன் படிப்பில் கம்ப்யூட்டர் வராதா எனக் கவலைப்பட்டார்
எல்லோரிடமும் நல்ல குரூப் எடுக்காமல் வாழ்க்கையை வீணாக்கி விட்டான்
எனக் கவலைப்பட்டார்கள்
ஏதோ ஒன்று என புலம்பினார்கள்
அப்படியே நானும் படித்தேன்
இரண்டு மாதம் கழித்து சேர்ந்ததால் முதலில் கணக்கில் 37 மதிப்பெண் எடுத்தேன்.
பிபு அதுவே 93 மதிப்பெண்ணாக மாறியது 12 பொதுத்தேர்வில்
அப்படியும் நல்ல மதிப்பெண் எடுத்தேன்
என் தந்தை 12 முடிந்ததும் நீ பாலிடெக்னிக் படி என்றார்
அப்படி என்றால் நான் என் 2 வருடம் வீண் என நினைத்தேன்
பின்பு பி.காம் சேர்ந்தேன் மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில்
பின்பு மேற்படிப்பு படித்து இப்பொழுது கணினி துறையில் தான் உள்ளேன் என் தந்தை மற்றும் எல்லோரும் ஆசைப்பட்டது போல

பள்ளி வாழ்க்கை - 32

எங்கள் வாழ்கை விளையாட்டாக அப்படியே போனது
ஆட்டம் பாடம் கொண்டாடம்
காதலித்தவர்கள் நன்றாக ஊர் சுற்றிக்கொண்டு திரிந்தார்கள்
வழக்கம் போல் பையன் 35 மதிப்பெண் பெண் 80 மதிப்பெண்
இருவரும் சுற்றினார்கள்
மற்றவர்கள் திருந்தினார்கள்
நல்ல மதிப்பெண்
சந்தோசம்
10 இல் அதிகம் எடுத்தவன் 12 இல் ஒன்றும் இல்லை
காலம் மாறிப்போனது
12இல் டூர் சென்றோம்
எல்லோரும் போகலாம் என எண்ணியதில் சிலர் சென்றோம்
நன்றாக தான் இருந்தது
பள்ளியிலும் ஐந்து நாள் கேம்ப் இருந்தது
நண்பர்கள் ஆடம் பாடம் கொண்டாட்டம்
வாழ்க்கை வேறாக மாறப் போனது

பள்ளி வாழ்க்கை - 33

பள்ளியில் ஒரு முகாம் நடந்தது
5 நாள் என நினைக்கிறேன்
4 குழுக்களாக பிரித்து பொடிகள் நடந்தன
நல்ல விளையாட்டு
நல்ல பேச்சாளர்கள் பேசி நன்றாக நடைபெற்றது
ஒரு பையனின் பெற்றோர் தான் எலோருக்கும் அரிசி இலவசமாக கொடுத்தார்கள்
அவன் சாப்பாடு சரியில்லை என்றான்
உடனே வாத்தியார் அது அரிசியின் குறைபாடு எனக் கிண்டல் அடித்தார்
நெறைய விளையாட்டுகள்
ஒரு பெண் அணி மற்றும் மூன்று ஆண்கள் அணி தலைவர்கள்
நிறைய விதமான விளையாட்டுகள்
நல்ல கொண்டாட்டம்
முதலில் வர மாட்டேன் என சொன்னவனை என் ஆசிரியை கண்டிப்பாக வரச் சொனார்கள்
வந்தேன்
கண்டேன்
விழா அருமை
நிறைய பெரிய தலைவர்களின் சொற்பொழிவு கேட்டோம்
நல்ல மன நிறைவு

உழவாரப்பணி என கோவில் சென்று சுத்தம் செய்யும் பணிகளும் எங்கள் பள்ளியில் உண்டு
வாரவாரம் வெளியன்று காலை நேராக கோவில் வருவோம்
அங்கு ஆசிரியர்கள் கோவில் வருவார்கள்
நாங்கள் அங்கு பொய் புல்களையும்
குப்பைகளையும்
ஒடுக்கி தந்தால்
கோவில் நிர்வாகம் அதை எரித்து விடும்
நாங்கள் அதை ஒரு தொண்டாக நினைத்து செய்ய வேண்டும்
இது எங்கள் பள்ளியின் நோக்கம்
மாணவரும்
மாணவியரும் நன்றாக வேலை செய்து
பிறகு பள்ளி செல்வோம்
நல்ல பள்ளியில் படித்தோம் என பெருமை கொண்டோம்
காஞ்சிபுரம் அழைத்து சென்றார்கள்
அங்கு கோவில் சென்று சுத்தம் செய்தோம்
நல்ல சாப்பாடு
நல்ல சுற்றுலா
பள்ளி எங்கள் வாழ்க்கையை சிறப்படைய செய்தது
வாழ்கையில் எல்லோருக்கும் நன்றாக உதவ சொல்லிக் கொடுத்தது

பள்ளி வாழ்க்கை - 35

உருபடாதவர்கள் உருப்படவர்கள் எல்லோரும் இப்பொழுது நல்ல நிலைமையில் உள்ளனர்
அமெரிக்காவிலும் லண்டனிலும் ஆஸ்திரேலியாவிலும்
சிங்கப்பூர் மலேசியா
ரஷ்யா பனாமா வெனிசுலா என நல்ல வேளையில் உள்ளனர்
நல்ல தொழில் செய்கின்றனர்
ஆசிரியர்களை திரும்பிப் போய் பார்த்து நலம் விசாரிக்கின்றோம்
நல்ல பள்ளி
நல்ல வாழ்க்கை
நல்ல பெயர்
நல்ல நண்பர்கள்
நல்ல குடும்பம்
நல்ல சம்பளம்
நல்ல சமுதாயம்
நல்ல பிள்ளைகள்
நல்ல முன்னேற்றம்

ஆம் பள்ளியில் படித்தோம்
வெற்றிக் கொண்டோம்
வாழ வாய்த்த பள்ளியையும்
வணங்க வாய்த்த ஆசிரியரும்
எங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்தார்கள்
அலைந்தோம்
சுற்றித்திரிந்தோம்
கூட்டில் அடைகப்ப்டோம் என கஷ்டப்பட்டோம்
ஆனால் கூட்டினில் அடைத்து எங்களை பள்ளியும்
ஆசிரியரும்
பாதுகாத்தனர் என நினைத்து இப்பொழுது பெருமை கொள்கிறோம்
பாதைகள் மாறின
கெட்டவைகள் அழிந்தன
கேட்டவர்கள் மாறினார்கள்
நல்லவர்கள் வெற்றிக்கொண்டனர்
வாழ்வில் செல்லிப்படைந்தோம்
இறைவனுக்கு நன்றி சொல்வோம்
நல்ல பள்ளி அமைந்த்தற்கும்
நல்ல ஆசிரியர் அமைந்ததற்கும்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.