மழையில் கலையாமல், வெயிலில் உலராமல், சினத்தில் உதிராமல் சின்னச்சின்ன வடிவங்களில் கவர்ந்திழுக்கும் ... கருமையில் பளீரிட்டு சிரித்து அவாவூட்டும் ... கவனம் ஈர்க்கும், தனித்த அடையாளமிடும் .அம்மா அப்பாவினாலும் பெற்று விடும் சாத்தியமுண்டு பலருக்கு ...துல்லியமாக வரும் காலம் உணர்த்திடுமாம் சிலருக்கு ...
இன்னும் சிலருக்கோ இரகசிய நேசங்களையும் கூறுமாம்.
இல்லாத இதற்கு ஏங்காத நாளில்லை அன்று ....
மணநூல் பூட்டிய வருடங்கள் சிலவற்றுக்குள் பூத்து உட்கார்ந்தது பிடித்த இடையோரம், சாய்ந்த விழியோரம் ,மோதிர விரலோரம் மற்றும் மறைவிடங்கள் என இடம் பிடித்து மின்னத் தொடங்கின கரிய நட்சத்திரங்களாய்
இந்த மச்சங்கள்!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.