அனு....... ராதிகா.......... சாவித்ரி......... மூணு பேரும் ஸ்கூலுக்கு
கிளம்பாம என்ன பண்ணுறீங்க? என்றபடியே மாடிக்குச் சென்றாள். ஏங்க
நீங்களும் இன்னும் அன்பான கணவர் ராம், தமிழ்நாடு மின்சார வாரியத்தில்
உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார். மூன்று பிள்ளைகளுக்கும் அம்மா, அப்பா
என்றால் அவ்வளவு பிரியம்.
ராதாவிற்கோ வெளிப் பழக்க வழக்கமே தெரியாது. ஏதாவது வாங்க வேண்டும்
என்றாலும் அவளது கணவர் வாங்கி கொடுத்துவிடுவார். சந்தோஷமாக இருந்த
குடும்பத்தில் ஒரு நாள் பூகம்பம் வந்தது போல் ஒரு செய்தி வந்தது.
வழக்கம் போல் ராதாவின் கணவர் ராம் 9 மணிக்கு அலுவலகத்திற்குச் சென்றார்.
பிள்ளைகளும் பள்ளிகளுக்குச் சென்று விட்டார்கள். ராதாவும் வீட்டு
வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். திடீரென்று டெலிபோன் மணி அடித்தது.
போனை எடுத்த ராதாவிற்கு பேரதிர்ச்சி ஒர்று காத்திருந்தது.
அம்மா...நாங்கள் உங்கள் கணவர் வேலைப் பார்க்கும் அலுவலகத்திலிருந்து
பேசுறோம்....!!! நாங்கள் சொல்வதை கொஞ்சம் பதட்டப்படாமல் பொறுமையாக மனதை
திடப்படுத்திக் கொண்டு கேளுங்கள். உங்கள் கணவருக்கு திடீரென்று மாரடைப்பு
வந்துவிட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் எதிர்பாராத
விதமாக இறந்து விட்டார்.கொஞ்சம் மருத்துவமனைக்கு வந்து உங்கள் கணவரின்
உடலை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். ராதாவிற்கு என்ன செய்வதென்றே
தெரியாமல் திகைத்து நின்றாள்/ பிறகு ராதாவின் மாமியார் கோமதிக்கு தகவலைத்
தெரிவித்து விட்டு உடனே மூனறு பிள்ளைகளையும் பள்ளியிலிருந்து அழைத்துக்
கொண்டு மருத்துவமனைக்குச் சென்றாள். கணவரின் உடலைப் பார்த்து கதறி கதறி
அழுதாள். என்னை தனியாக விட்டு விட்டு சென்றுவிட்டீர்களே! இந்த மூன்று
பிள்ளைகளை வைத்து நான் என்ன செய்வேன் என்று அழுதாள். அவளது அழுகை
அனைவரின் மனதையும் கரைய வைத்தது.
ராதாவின் மாமியார் கோமதி, அவளுக்கு ஆறுதல் சொன்னார். இங்கப்பாரும்மா
ராதா... அழுகறதனால உன்னும் ஆகப் போறதல்ல, தன்னம்பிக்கையா இருந்து இந்த
மூன்று பிள்ளைகளையும் நல்ல படியாக வள்ர்த்து ஆளாக்கணும். அதை மட்டும்
மனசுல் நினைச்சுகிட்டு வாழும்மா என்று சொல்லி ஊருக்குச் சென்று
விட்டார்.அவளது மாமியாரின் வார்த்தைகள் அவளைத் தேற்றியது. ஏதோ மனதிற்குள்
ஒரு தெம்பு வந்தது போல் இருந்தது.
ராதாவின் உறவுக்காரர்கள் அனைவரும் சொந்த வீட்டை விற்று விட்டு தங்களுடன்
இருக்குமாறு வற்புறுத்தினார்கள். ராதா அதற்கு உடன்படவில்லை. யார் என்ன
சொன்னாலும் பரவாயில்லை , நாங்கள் அவர் ஆசை ஆசையாய் கட்டின வீட்டில தான்
இருப்போம் என்றாள்.அவளுடைய உறவுக்காரர்கள் அதனால் கோபமாக இருந்தார்கள்.
எப்படி மூன்று பிள்ளைகளையும் வைத்து ஒரு பொம்பளையா தனியா எப்படி
வாழப்போகிறாள். என்பதையும் பார்ப்போம் என்று ஏளனமாக பேசி விட்டு
சென்றார்கள். அவர்கள்: பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளது மனதை
புண்படுத்தவில்லை, மாறாக, தன்னம்பிக்கையை தான் அதிகமாக தந்தது.
ஓர் ஆண் துணை இல்லையென்றால் ஒரு பெண்ணால் பிள்ளைகளை வைத்து தனியாக
வளர்த்து ஆளாக்க முடியாதா? என்ற கேள்வியும் பயமும் ஒவ்வொரு நாளும்
இருந்துக் கொண்டே இருந்தது. இருந்தாலும், எப்படியாவது என் பிள்ளைகளை நல்ல
முறையில் வளர்த்து ஆளாக்கி உறவினர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் என்ற
வைராக்கியம் மட்டும் தான் அவளுக்கு இருந்தது.
அனு பத்தாம் வகுப்பு வரை தான் படித்தாள். ராதிகாவும், சாவித்ரியும் 8-ம்
வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள்.
ராதாவின் மகள் அனுவிற்கு வேலை வாங்கித் தரலாம் என்று முடிவெடுத்தாள்.
ஏனென்றால் தான் வேலைக்கு சென்று விட்டால் தன் பிள்ளைகளை கவனிக்க முடியாது
என்று நினைத்து இந்த முடிவை எடுத்தாள். ராதாவிற்கு பென்ஷன் வருவதால் இது
போதும் என்று நினைத்தாள்.குறை கூறுவதற்கே உறவினர்களும் வந்தார்கள்.
இங்கப்பாரு ராத... நீ வேலைக்குப் போகாம ஏன் அனுவுக்கு வேலை வாங்கித் தரப்
போற? என்?று கோபமாக கேட்டார்கள்.
அதற்கு ராதாவோ, அனுவோட எதிர்காலம் தான் எனக்கு முக்கியம் என்று சட்டென்று
சொல்லிவிட்டு உள்ளாஎ சென்று விட்டாள்.
ராதிகாவுக்கும் சவித்ரிக்கும் மெற்றிக்குலேசன் பள்ளியிலிருந்து மாற்றுச்
சான்றிதழ் வாங்க பணாம் வேண்டும். என்ன சய்வது என்று தெரியாமல் ராதா
முழித்தாள். மாற்றுச் சான்றிதழ் வாங்க பணம் தேவை. அவளுடைய கணவருக்கு வர
வேண்டிய பணம் வருவதற்கு தாமதம் ஆனது. அவளுக்கு என்ன செய்வதென்றே
தெரியவில்லை. பிறகு அவளுடைய கணாவரின் பைக்கை விற்று வந்த பணத்தில்
மாற்றுச் சான்றிதழை வாங்கினாள். ராதாவோ தனது 2 பிள்ளைகளையும் தொடர்ந்து
மெற்றிக்குலேசன் பள்ளியில் படிக்க வைக்க முடியவில்லை. அதனால் தமிழ்
மீடியத்தில் சேர்த்து விடலாம் என நினைத்தாள். ஏதாவது ஒரு விஷயத்தில்
முடிவெடுக்கலாம் என நினைத்தாலும் அப்ப உறவினர்கள் தடை சொல்லவே வந்து
விடுவார்கள். எதற்கு தமிழ் மீடியத்தில் படிக்க வைக்கணும்னு
நினைக்கிறீங்க. நாங்க எங்க ஊருக்கு அழைத்துக் கொண்டு போய்
மெற்றிக்குலேசன் பள்ளியில் படிக்க வைக்கிறோம் என்றார்கள். முதலில்
தயங்கிய ராதா, பிறகு ஒத்துக்கொண்டாள். ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியது.
படிக்க வைக்கிறாஎன் என்று சொல்லி பள்ளியிலும் சேர்க்காமல் வீட்டிலே
ள்ளாஅர்கள். பிறகு ம்படியோ இந்த விஷயம் எப்படியோ ராதாவுக்கு தெரிய வர, 2
பிள்ளைகளையும் அழைத்து வந்து தமிழ் மீடியத்தில் சேர்த்தனர்.
ராதாவின் பிள்ளைகளுக்கு அப்பா இல்லையென்ற ஒரே ஒரு கவலை தான். ராதவும்,
பிள்ளைகளுக்கு பார்த்து பார்த்து எல்லாத்தையும் செய்தாள். ஏனென்றால்
அப்பா இருந்தால் இதை வாங்கித் தந்திருப்பார்களாஎ என்ற ஏக்கம்
வந்துவிடக்கூடாது என்று நினைத்தே ஒவ்வொன்றையும் செய்வாள். அவளது
பிள்ளைகளும் அதற்கு ஏற்றாற் போல் நடந்துக் கொள்வார்கள்.
காலங்கள் ஓடியது.... ராதிகாவும், சாவித்ரியும் தற்சமயம் 3 டிகிரிக்கு
சொந்தக்காரர்கள். என்ன ஆச்சர்யம்! இருவருக்கும் ஒரே கல்லூரியில் உதவிப்
பேராசிரியையாக பணியாற்றா வாய்ப்பு கிடைத்தது. மாதம் 25,000 ரூபாய்
சம்பளாம்.
அனுவிற்கு வேலை கிடைத்து 12 வருடம் ஆகிறது, தற்போது தமிழநாடு மின்சார
வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.அவளுக்கு நல்ல முறையில்
திருமணத்தை நடத்தி வைத்தாள். அவளுடைய கணவரின் வீட்டிலும் அவளாய்
அன்பாகவும் பாசமாகவும் பார்த்துக் கொண்டார்கள். அனுவிற்கும் அவளுடைய
அம்மாவின் வீட்டில் இருப்பது போலவே இருந்தது.
பிறகு ராதிகாவிற்கும் சாவித்ரிக்கும் கல்யாண ஏற்பாடு நடந்தது.
அவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார்கள்.
அவளுடைய அம்மாவின் கனவு நனவானது. மூன்று பிள்ளாய்களாய்யும்நல்ல முறையில்
வளர்த்து ஆளாஅக்கி நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டாள். அம்மாவின்
சந்தோஷத்தை பார்த்த பிள்ளைகளுக்கு ஆனந்த கண்ணீர் தான் வந்தது.
ராதாவுக்கு அன்று உறவினர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. எப்படி ஒரு
பொம்பளையா இருந்து பிள்ளாய்களாய் வளர்க்க முடியும் என்று சிரித்த
உறவினர்கள் மத்தியில் இன்று தலைநிமிர்ந்து நினறாள் தன்னம்பிக்கைப்
பெண்ணான் ராதா..

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.