காதல் சோதனை

"சக்தி இதுதான் உன் முடிவா?" என்று கெஞ்சலாய் கேட்டான் பிரதாப்

"ஆமா பிரதாப் நீ நான் சொன்னத செய்யற வரைக்கும் நான் உன்கிட்ட பேச மாட்டேன். நீ என்கிட்ட பேசக் கூடாது." என்று சொல்லி விட்டு சென்ற சக்தியை பார்த்தபடி நின்றான் பிரதாப். அவன் கண்களில் தான் செய்த முட்டாள் தனம் ஒடியது.

ஆம் சிலநிமிடங்களுக்கு முன்னர்தான் அது நடந்தது. பிரதாப் தான் வழக்கமாக சக்தியை சந்திக்கும் இடங்களில் எல்லாம் அவளை தேடிக் கொண்டிருந்தான். அவள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தான்

"ஏய் லட்சுமி நீ எங்காவது சக்திய பார்த்தியா?" என்று எதிர்பட்ட அவள் தோழியிடம் கேட்டான் பிரதாப்

"ஆமா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி லைப்ரரிகிட்ட அவள பாத்தேன்"

"ரொம்ப தேங்க்ஸ்" என்று லைப்ரரியை நோக்கிச் சென்றான் அவளைக் காண.

சக்தி அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.

"ஏய் சக்தி நான் கேள்விபட்டது உண்மையா? நேத்து உன்ன பொண்ணு பாக்க வந்தாங்களா?" என்றான் பதட்டத்துடன்.

"ஆமா வந்தாங்க. பாத்துட்டு பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போனாங்க." என்றாள் அலட்சியமாக.

"அப்படியே கல்யாணம் பண்ணிட்டு போக வேண்டியதுதானே" என்றான் கோபமாக.

"ஏன் போன வாரம் உன் வீட்டுக்கு கூட பொண்ணு வீட்டுகாரங்க வந்தாங்களே"

"வந்தாங்க நான் சரின்னு சொன்னேனா?

"இப்ப நான் மட்டும் சரின்னு சொல்லலை. என் படிப்பு முடியற வரைக்கும் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். அப்பா அம்மா சரின்னுட்டாங்க. மாப்பிள்ளை வீட்லயும் சொல்லிட்டாங்க" என்றாள் சக்தி.

"இதுக்குதான் அப்பவே சொன்னேன். நாம பேசாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் அப்புறம் நம்மள பிரிக்க முடியாதுன்னு நீதான் கேக்க மாட்டிக்கறா?"

"பிரதாப் நாம இன்னும் ஒரு வருசம் படிக்கனும் அப்புறம் நல்ல கம்பெனில நீ வேலைல சேரனும். நீ உன் கால்ல நிக்கனும் அப்புறம் கல்யாணம் எல்லாம்" என்றாள் பிடிவாதமாக சக்தி.

அப்ப நான் செட்டிலானதான் கல்யாணம் பண்ணிப்பே. நான் செட்டில் ஆகலைன்னா என்ன பண்ணுவ" என்றான் குதர்க்கமாக.

"பிரதாப் நான் காத்திருப்பேன்"

"எத்தனை வருசம்?" என்றான் அலட்சியமாக.

"உடனே ஆயுசு வரைன்னு சொல்ல மாட்டேன். பிரதாப் என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா நான் நல்லா வேலைல செட்டில் ஆயிடுவேன் உடனே நம்ம கல்யாணம்தான்"

"அப்ப நீ வேலைக்கு போயீ சம்பாதிப்ப நான் வீட்ல இரூந்து சாப்படனுமா?"

"உன்ன வேலைக்கு போக கூடாதுன்னு நான் சொல்லயே?"

"அப்ப நீ பேசுனதுக்கு என்ன அர்த்தம்?"

"பிரதாப் நான் சொல்றத கேட்கற மனோ நிலையில் நீ இல்லை. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ என் மேல இருக்கற காதல் உண்மைன்னா நீ இந்த ஒரு வருசத்துல நல்ல படிச்சு அரியர்ஸ் கிளியர் பண்ணனும் அதுவரைக்கும் நான் உன் கூட பேச மாட்டேன் நீ என் கூட பேச வேணாம்" என்று கிளம்பி விட்டாள்

"இந்த பொண்ணுங்களே இப்படித்தான் மச்சான் அவங்களுக்கு செட்டிலான ஆளுகதான் வேணும் காதல் எல்லாம் டைம் பாஸ்தான்" என்று பிரதாப்பை உசுப்பி விட்டபடி அவன் வாங்கி தந்த பீரை பருகினான் அசோக்

"ஆமாண்டா மச்சான் நம்ம நண்பன் பிரதாப் எப்படி எல்லாம் காதலீச்சான். ஆனா அவ என்னடான்னா வேலைக்கு போனாதான் கல்யாணமாம் அதுவரைக்கு பேசமாட்டாளாம் என்ன நியாயம் இது" என்றான் ரவி.

"நம்ம மாப்ளக்கு படிப்பு வரலன்னா என்ன அவன் யாரு தொழிலதிபர் சண்முகநாதன் சன். அவன் கண் அசைச்சா ஆயிரம் பொண்ணுக மடியும்." என்றான் போதையின் உச்சத்தில் அசோக்.

"ஆமாண்டா இன்னியோட அந்த சக்தியொட காதலுக்கு முழுக்கு போட்டறேன். அவ என்ன என் கூட பேசமாட்டா நான் இனி அவ முகத்தில முழிக்க மாட்டேன்" என்றபடி மட்டையாகினான்

மறுநாள் காலை அவன் வீட்டுக்குள் நுழைந்தான். பிரதாப்பை பார்த்தவுடன்
"எங்கடா போயிருந்தே உனக்கு எத்தனை முறை போன் அடிக்கிறது?" என்றாள் அவள் தாய்

"ஏம்மா என்ன ஆச்சு?" என்றான் பதட்டமாக

"உன் அத்தை பையன் ராகவ் தன் கூட படிச்ச ஒரு பொண்ண ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டு ஒடிட்டானாம். அதனால நம்ம அருணாவ வேணாம்னு சொல்லி மாப்பிள்ளை வீட்டுகாரங்க கல்யாணத்த நிறுத்திட்டாங்களாம். மாமா பாவம் அதிர்ச்சியில ஹார்ட் அட்டாக் வந்து படுத்துட்டாரு. அத சொல்லலாம்னா நீ போன எடுக்க மாட்டிங்கறா" என்றாள் தாய்

"நான் இப்ப ஆஸ்பத்திரிக்கு போறேன். நீயும் வந்தின்னா அவங்களுக்கு ஆறுதலா இருக்கும்"


சரிம்மா நான் குளிச்சிட்டு வர்றேன் என்று செல்லும் போது "தம்பியே நைட் புல்லா முழிச்சு படிச்சிட்டு வருது அத ஏம்மா தொந்தரவு பண்ற பிரதாப் நீ குளிச்சிட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு மதியம் வா" என்றாள் அடுத்த மாதம் கல்யாணம் ஆகப் போகும் அவள் அக்கா அபிராமி.

அக்காவின் சிரித்த முகத்தைப் பார்த்த பிரதாபுக்கு சக்தியின் வார்த்தைகள் வந்தன.

சாரி சக்தி என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட பிரதாப் இனி அவள் சொன்னபடி நடந்துக்கனும் என்று நினைக்கும் போது "அண்ணா சக்தி உங்கிட்ட பேசனுமாம்" என்றபடி போனை தந்தாள் அனிதா

"ஹலோ மாமா நான் சக்தி பேசறேன்." என்றாள் அத்தை பெண் சக்திபிரியா

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.