அந்த தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்துகளுக்கும் அதிவேக சரக்கு லாரிகளுக்கும் வழிகாட்டியாக மட்டுமல்லாது சுமார் ஆறடி பள்ளத்திற்கும் கீழே பூத்துக்குலுங்கும் வனத்திற்கும் பாதுகாப்பு அளித்துக்கொண்டிருந்தது இரு மருங்கிலும் உள்ள புளிய மரம். அங்கிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது பஞ்சாயத்து போர்டு ஆரம்பபள்ளி. குழந்தைகளின் பேச்சுக்குரலுக்கு எசப்பாட்டு பாடியது குக்கூ.. கட்டிடம் பற்றாக்குறையால் இலவசமா இயற்கைக்கும் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் தமிழ் ஆசிரியர். கரும்பலகையில் தேதியும் ஐந்தாம் வகுப்பின் வருகை பதிவேட்டின் குறிப்புகளும் காக்கையின் யச்சத்தால் பிரிக்கப்பட்டிருந்தது.

பாடம் நடத்திக்கொண்டிருக்கையில், நடுவில் ஒரு கட்டை குரலில் ஒரு ஆசாமி, ,

”ஐயா!” ! இங்க வேலுச்சாமின்னு..............

ஆமா! என்ன வேணும்?

நம்ம செல்லத்துரை ஐயா கூட்டிகிட்டு வரச்சொன்னாறு!

எதுக்கு? பள்ளிக்கூடம் விட்ட பிறகு அனுப்பவா?

கையோடு கூட்டிவரச்சொன்னாறு!

வேறுவழிஇல்லாமல் தலையசைத்து ஆமோதித்தார்.

செல்லத்துரை ஏட்டுக்கல்வி அறியாதவன். எட்டுப்பட்டி கிராமத்தையும் தன்வசம் வைத்திருந்தார். ஏக்கர் கணக்குல நிலபுலம். ஊருக்குள்ள ஐஞ்சாறு ஃபேக்டரி பட்டணத்துல ரெண்டு என ஏகப்பட்ட சொத்துக்கு சொந்தக்காரன் மட்டுமல்ல, அரசியல் செல்வாக்கு உள்ள பெரும்புள்ளி.

வந்த ஆசாமியுடன் சைக்கிளில் புத்தகப் பையுடன் சென்றான்.வேலுச்சாமிக்கு சொந்தம்னு சொல்லிக்க சிந்தாமணி பாட்டி மட்டும்தான். அது அங்கஇங்க வேலைசெஞ்சு வாயிற்கும், வயிற்றிற்கும் சரியாக இருந்தது.வெளிர்நீல நிற அரைக்கால் சட்டையும், மஞ்சள் நிற அரைக்கை சட்டையும் அணிந்திருந்தான்.

தலையை எண்ணைத் தடவி சீவி இருந்தான். கடந்த வாரம் நடந்த சுதந்திரதின விழாவில் தலைமை தாங்கி பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக பரிசு வழங்கினார். இப்போ எதற்காக கூப்பிட்டிருப்பார்? என எண்ணிக்கொண்டிருந்த வேளையில் செல்லதுரை பங்களா முன் இரண்டு அம்பாசிடர் கார் நின்றுக்கொண்டிருந்தது.

வெளியே போக ஆயத்தமாகிக்கொண்டிருந்த செல்லதுரை , வா வேலுச்சாமி ,

அடியாளிடம் ஏதோ கூறிவிட்டு சென்றுவிட்டார். வேலுவின் அருகில் வந்த அடியாள். இத பாரு நம்ம கட்சி தலைவர் ஏகாம்பரம் ஐயாவோட பிறந்தநாள் வருது. அதுக்கு நீதான் வாழ்த்துப்பா படிக்கணும். அங்க புக்ஸ் நிறைய இருக்கு, என கூறி மறைந்தான்.

அடுத்த சில மணித்துளிகளில் வாழ்த்துப்பா தயார் செய்துவிட்டான். விழாவில் வேலுச்சாமியின் பேச்சுதான் பிரதானமாக இருந்தது. அதற்கு வெகுமானமாக சில நோட்டுக்களை கொடுத்தார் செல்லத்துரை. முதலில் வாங்க மறுத்த வேலுச்சாமி,கட்டளையின் பேரில் வாங்கிக்கொண்டான்.

சிந்தாமணிப் பாட்டியிடம் விஷயத்தை கூற,உச்சி முகர்ந்து பாராட்டினாள். நீ நல்லாபடிக்கணும் ராசா! ஆனா செல்லத்துரை சகவாசம் வேண்டாம்! என அழுத்தமாக கூறியது. அடுத்த சில மாதங்களிலே கண் மூடியது சிந்தாமணி பாட்டி.


இப்பொழுதெல்லாம் பள்ளிக்கூடம் போவதையே நிறுத்திக்கொண்டான் வேலுச்சாமி.

செல்லத்துரை வீட்டிலேயே வேலைசெய்து தங்கிக்கொண்டான். காலை முதல் மாலை வரை மாடாய் உழைத்தான். ஒரு வேலை சாப்பாடு மட்டும்தான். சில நாட்கள் மில்லில் வேலை. சில நாட்கள் தோல் பதனிடும் தொழிற்சாலையில் வேலை.அதிகாரிகள் வரும் நாளில் வீட்டினிலேயே வேலை. சில சமயம் போதை மருந்து விற்பனையிலும் வேலுச்சாமியை ஈடுபடுத்தினார்கள். வேலுச்சாமி அறியாமையால் அறிந்திடவில்லை. வருடங்கள் உருண்டோடியது. உடை அழுக்கேரியிருந்தது. தலை எண்ணெய் இல்லாமல் பரட்டை தலையாய் இருந்தது. அவனது கண்கள் தூக்கம் இன்மையால் சொர்வடைந்திருந்தது. மணி நள்ளிரவு ஒன்று. அந்த வீட்டின் திண்ணையில் தான் உறக்கம்.


வேலு! வேலு! எழுந்திரு! என தட்டி, வா போஸ்டர் ரெடி! வா ஒட்டனும்!எழுப்பும் குரல். அது செல்வக்குமார். வெறுட்டென எழுந்தான் வேலு. வேலுவை விட நான்கு வருடங்கள் சீனியர்! கொஞ்சம் படித்தவன் . தைரிய சாலி. உழைப்புக்கேற்ற ஊதியத்தை போராடியாவது பெற்றிடுவான். வேலுக்கு மனம் உவந்து உதவும் நண்பன். செல்வக்குமாருக்கு கட்சி அலுவலகத்தில்தான் அதிகம் வேலை. கீழ்மட்டம் முதல் மேல் வரை அதிகம் அறிந்தவன்.

பண்டில் பண்டில் சுருளாய் போஸ்டர்கள். கையில் பசையுடன் வீதி வீதியாக ஒட்டினார்கள் வேலுவும் செல்வக்குமாரும். சுமார் நான்கு மணி நேரம் முடிக்கும் தருவாயில்! போஸ்டரில் “ தமிழின பாதுகாப்புப் போராட்டம்” வருக அணி திரள்க!

என கொட்டை எழுத்தில் எழுதி செல்லத்துரை படமும்” கட்சி தலைவர் படமும் பெரிதாக. தங்களுக்காக ஒதுக்கப்பட்ட சுவர் என கிழிக்க எதி கட்சி ஆளுங்க முற்பட செல்வக்குமார் சமாதானப் படுத்தி சுமுகமாக முடித்தான்.


போராடுவோம்! போராடுவோம் ! என கூட்டம் கூட்டமாக கோஷம் போட மக்கள் வெள்ளம் அணி திரண்டனர். சற்றே யாரும் எதிர்பாராத வேளையில் செல்வக்குமார் மீது செல்லத்துரை ஆட்களே மண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைத்து விட்டு தீக்குளிப்பு என அலற கூட்டம் அலை மோதியது. அங்கு அரசியல் வித்தை அரங்கேறியது. காலங்களும் உருமாறியது. உருண்டோடியது! வேலுச்சாமி. ஆம்! தன் உயிர் நண்பனை கொலை செய்த செல்லத்துரையை மண்ணோடு மண்ணாக வெட்டி சாய்த்தான்.

தம்பி வேலு ! வேலு !என சிறை அதிகாரிகள் கூப்பிட நினைவுகளில் இருந்து நிஜத்திற்கு வந்தான் வேலுச்சாமி! அந்த பெரிய மதிர்ச்சுவற்றை கொண்ட சிறைச்சாலையிலிருந்து தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்தான். இப்போது அவனிடம் நிறைய தைரியம்!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.