“அன்னம்மாள் சமையலறையிலிருந்து சரசரவென வாசலுக்கு ஓடினாள். ஏன் திடிரென ஓடுகின்றாள் என்று கணவன் நாராயணன் யோசித்தார்.

சற்று நிமிடத்தில் தெரிந்து விட்டது ஓடியதற்கான காரணம், அவளின் அண்ணன் மகள் சரண்யாதான் ஆட்டோவில் வந்திருக்கிறாள்.

“நான் நடுக்கூடத்தில் ஒட்கார்ந்திருக்கேன், நானே ஆட்டோ வரும் சத்த த்தை உணரமுடியாமல் பேப்பரை படித்துக்கொண்டிருந்தேன். அன்னம்மாள் இருந்த்தோ வீட்டின் கடைசியில் உள்ள சமையலறை. எப்படித்தான் தெரிந்த்தோ? அவளுக்கு, ரத்தபந்த்த்தின் வாசனையோ ? என்னவோ? என்று நினைத்து விட்டு மீண்டும் பத்திரிகையில் மூழ்கினார் “நாராயணன்.

“ வாடி செல்லம்! என்னமா வளர்ந்துட்டே!, என் கண்ணே பட்டுடும் போலிருக்குது, சாயங்காலம் நாலு வரமிளகாயும், உப்பும் சேர்த்து சுத்தி போடறேன்“ என்று சரண்யாவை அணைத்தவாறே உள்அறைக்கு கூட்டிப்போனாள்.

“எப்படிடி இருக்கான் ஒன் அப்பன் ?”

“ அவருக்கென்ன“ ?

“ நல்லாத்தான் இருக்காரு. நீங்கதான் எங்கள மறந்துட்டீங்க” .

”ஒன்னைய மறப்பேனா ? ”

“ என்னைய மறக்கலையே அத்தே, அப்போ இந்தாங்க இந்த பொம்மை”.

“ எப்பல்லாம் என்னை மறக்கறமாதிரி சூழ்நிலை இருக்கோ அப்போ இந்த பொம்மையை கையிலே எடுத்து பாசமா கொஞ்சுங்க, நான் கூடவே இருக்கிற மாதிரி நினைப்பு ஒங்களுக்கு தோணும். அப்படி இந்த பொம்மையும் நானும் இறுக்கமா, நெருக்கமாயிட்டோம். மாமாகிட்டே இல்லே..இல்லே… வெளியே யாருகிட்டேயும் சொல்லாதீங்க. அப்புறம் நல்லா முத்திபோச்சுன்னு கேலி பண்ணுவாங்க அத்தே, அப்படி செய்திடாதீங்க –ன்னு ” கழுத்தை சிறுபிள்ளைப் போல கட்டிக் கொண்டாள் சரண்யா.

பத்து நாட்களுக்கு பின்…. சரண்யா தன்னுடைய வீட்டுக்கு புறப்பட்டாள். புறப்படும்போது…. “ வரேன் அத்தே, அந்த பொம்மையைக் கொஞ்சம் குடுங்க-ன்னு கையில் வாங்கி அதன் காதில் கிசுகிசுவென ஏதோ சொன்னாள்.

“ஏண்டி சரண்யா, கிசுகிசுவென சொல்றீயே, அதுக்கு ஏதாச்சிலும் புரியுமா? வெறும் பிளாஸ்டிக் பொம்மை அதைப்போய் கொஞ்சிகிட்டு….குலாவிகிட்டு… இந்த காலத்து பசங்க இப்படித்தான் இருக்கீங்க…அது சரி அந்த பொம்மைக்கு பேர் ஏதாச்சிலும் வைச்சிருப்பியே. சொல்லேண்டி” என்றாள் அன்னம்மாள்.

“அது பேரு சரயு அத்தே” என்று சொல்லிவிட்டு“ ஸீயு சரயு“ முத்தமிட்டு ஊருக்கு கிளம்பினாள்.

சரண்யா ஊருக்கு போய் மூன்றுமாதம் ஆகியிருக்கும்……. “அலைபேசியில்,… அன்னம்மா, மச்சான் வீட்ல இருக்காரா,….. கேட்கும்போதே அண்ணனின் குரலுடைந்த்தை உணர்ந்தாள்.

ஏதோ விபரிதம் நடந்திருப்பதை உணர்ந்து” என்ன்ன்னா, தைரியமா சொல்லு, ஒன் தங்கை நான் இருக்கேன்“ என்றாள்.

”ஒன் மருமக நம்மள விட்டுட்டு போய்ட்டா” என்றார்

அன்னம்மாளுக்கு அதிர்ச்சி……“தடுமாறியபடியே “ஏனுங்க, நம்ம மருமக சரண்யா தவறிட்டாளாம்” அழுதபடியே அலைபேசியை கணவன் கையில் கொடுக்க விவரம் கேட்டு ஊருக்கு சென்றார்கள்.

ஊரில்……“அண்ணனுக்கு ஆறுதல் சொல்லி உடனிருந்து எல்லாவற்றையும் முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார்கள்.

நல்ல ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அன்னம்மாளின் காதோரம்….“அத்தே…அத்தே…அத்தே” என்று குரல் கேட்டது.

அலறியடித்து கொண்டு எழந்து பார்த்தாள், யாருமில்லை..

“என்னங்க, “ அத்தே…அத்தே“ன்னு கூப்பிடறாமாதிரி இருக்குது” என்றாள்.

“அதுக்குத்தான் ஒருத்தர் மேல அளவுக்கதிகமா பிரியம் வைச்சா இப்படித்தான் தோணும், ஒனக்கு மனப்பிராந்தி, படுத்து தூங்கு சரியாய் போய்டும், காலைல பார்த்துக்கலாம்” என்று தேற்றி விட்டு படுத்து விட்டார் நாராயணன்.

மறுநாள் சமையலறையில்……சமையல் செய்யும்போது….. “அத்தே….அத்தே..அத்தே” மீண்டும் குரலொலித்தது. யாருமில்லை. கூடவே சமையலறை முழுவதும், பொறிகின்ற கடுகுவாசனையை மிஞ்சி, சரண்யா போடும் சென்ட் வாசம் தூக்கலாய் பரவி அன்னம்மாளின் மூக்கிற்குள் நுழைந்தது. அன்னம்மாளுக்கு வியர்த்து கொட்டியது.

“இந்த நேரத்துல அவர் பிரண்டை பார்க்க போயிட்டாரு. என்ன பண்றதுன்னு “மிரட்சியோடு… சமையலறை அலமாரியில் மஞ்சள் பொடி எடுக்க போன போது…. அங்கே…. சரண்யா கொடுத்த பொம்மை இருந்த து.

அன்னம்மாளுக்கு தூக்கி வாரிபோட்டது. உடம்பெல்லாம் வெலவெலத்து சப்தநாடியும் அடங்கியது போலிருந்தது.. தலைச்சுற்றுகிறா மாதிரியும் தோணியது.

தட்டுத்தடுமாறியபடியே தண்ணீர்குடத்திலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்து கொண்டு மீதியைக் குடித்தாள். இப்போது சற்று பரவாயில்லை என்பதாக இருந்த து.

“ இந்த பொம்மை பெட்ரூமிலுள்ள ஷோகேஸில் அல்லவா வைத்தோம். இங்கே எப்படி வந்த்து . அவர் வரட்டும் கேட்கலாம் ”என்று நினைத்து கொண்டாள்.

வாசலில் சத்தம் கேட்டு….“என்னங்க, அந்த பொம்மையை சமையல் ரூமில நீங்க வைச்சீங்களா ? ன்னு கேட்க. “ நான் ஏன் அதை அங்கே வைக்க போறேன்” மறுத்தார்.

சரண்யா இறந்த பிறகு ….. நம்ம வீட்ல விசித்திரமா இருக்குது…. யாரோ.கிசுகிசுவென பேசுவது மாதிரியே இருக்குதுங்க…எனக்கு பயமா இருக்குங்க” என்றாள்.

“ எதுக்கு பயப்படறே, பயம்தான் நம்ம நிம்மதியைக் கெடுத்துடும் தைரியத்தை கைவிடாதே….. அப்படியும் முடியலன்னா” கந்த சஷ்டி படி சரியா போய்டும்” என்று பயத்தை தெளிவிக்க உபாயத்தை சொல்லிவிட்டு அவர் வேலையைப் பார்க்கலானார்.

அன்றிரவு….தூங்குவதற்கே பயந்தாள் அன்னம்மாள். ஆனால் கண்கள் செருகி தூக்கத்தில் ஆழ்த்தியது.

நல்ல தூக்கம்….“நியாமா அத்தே ! ஒங்க பிள்ளை செய்தது? ” குரல் கிசுகிசுப்பாய் ஒலித்த து. திடுக்கிட்டு விழித்தாள்

. மீண்டும் தூக்கம், மீண்டும் கிசுகிசுவென குரலில்

“அத்தே, ஒண்ணும் அறியாத சின்ன வயசிலேயே…… நீதான் என் மருமக…. என் பிள்ளைக்கு நீதான் பொஞ்சாதி…. சொல்லி…சொல்லி என் மனசுல ஆழமா அவரையே…. ஆண்டாள் எப்படி கண்ணனை வரித்துக் கொண்டாளோ அப்படி நான் ஒங்க பிள்ளைய மனசில மானசீகமா வரித்து கொண்டேன்.

மீண்டும் திடுக்கிடல்….. எழுந்து…..“என்னங்க..என்னங்க” கணவனை எழுப்ப, என்ன மறுபடியும் மருமக தொல்லையா, நீயும் அவளை மறக்க மாட்டே போலிருக்கே. நாளைக்கு ஒன்னயை டாக்டர்கிட்டே கூட்டிட்டுதான் போகணும்…இப்ப படு “என்று சொல்லிவிட்டு குறட்டை விட்டார் நாராயணன்.

மீண்டும் உறக்கம்…ஆனால்…… ஜன்னல் வழியாக சூரியன் எட்டிப்பார்த்து அன்னம்மாளை எழுப்பி விட்டது

மறுபடியும் வீட்டுக்காரரிடம்…”ஏனுங்க” என்று அரம்பிக்கும்போதே….மறுபடியும் மருமக புராணமா அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம். எனக்கு வெளியில கொஞ்ச்ம் வேலையிருக்குன்னு புறப்பட்டார்

மதியம் சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது…..“பின்னால் அவளின் கழுத்தை யாரோ பிடித்து கொள்வது போல இருந்த து. அந்த பிடி இறுக்கமாக அல்லாமல் செல்லமா கொஞ்சும் பிள்ளைகளின் பிடிபோலிருந்த து.

அன்னம்மாளுக்கு… திகிலாகிவிட்டது. இது மருமக சரண்யாவோட வேலைதான் போலிருக்குது. என்று நினைத்து கொண்டாள். சமையலறை அலமாரியில். பயந்தவாறே கண்களை நோட்டமிட்டாள். அங்கு அந்த பொம்மையில்லை. அப்பாடா, பொம்மையில்லை என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

மீண்டும் கணவனிடம் புகார்… கணவன் நாராயணனோ…. அதே பல்லவி என்று முடித்து கொண்டார்.

…. அன்னம்மாளுக்கு இராத்திரி என்றாலே பயமாகி போய்விட்டது.

அன்னம்மாளுக்காக இராத்திரி வராமலா போய்விடும். காலம் அதன் கடமையைக் கச்சிதமாக செய் த்து.

நல்ல தூக்கம்,…… “எனக்கு பயமா இருக்கு…ஒங்க குறட்டைச் சத்தம் கூட பராவாயில்லை….இங்ஙனயே பக்கத்து கட்டில்ல படுத்துக்கோங்க” என்று கணவனை துணைக்கு அழைத்து கொண்டாள்.

அன்றிரவு……. நல்ல தூக்கம்….. மறுநாள் காலைப்பொழுதின் அடையாளமாக பறவைகளின் கீச்…கீச் சத்தம் கேட்டது.

அன்றைய பொழுது ஒன்றும் நடை பெறாமல் அமைதியாயிருந்த து.

“அப்பாடா, இன்னைக்கு எதுவும் பிரச்சினையில்லை” கோயிலுக்கு போய் துர்க்கையம்மனுக்கு விளக்கு போட்டு வேண்டிக்கணும்” மனதிற்குள் திட்டம் போட்டாள்.

திட்டம் தவிடுபொடியாவது போல்……. பக்கத்து வீட்டில்…… ஒரு துக்க செய்தி… அதை வைத்து கொண்டு கோவிலுக்கு போக கூடாது என்று நிறுத்தி விட்டாள்.

அன்றிரவு கணவன் குறட்டைச் சத்த த்தோடு…நல்ல தூக்கத்தில் …அன்னம்மா….“அத்தே…அத்தே. என் ஆசை அத்தே” ஒங்க பிள்ளை செய்தது நியாமா? அவருக்காக நா காத்திருக்கும்போது, வெளிநாட்டுக்கு படிக்க போய்ட்டு வரும்போதே,.. வெளிநாட்டுக்காரிய கையோடு கூட்டிட்டு வந்து நின்னா…. நீங்களும் சும்மாவாச்சும் கண்ணைக் கசக்கிகிட்டு….. ஆரத்தி எடுத்து வரவேற்றீங்களோ, ஒங்க பிள்ளையும், நீங்க செய்ததும் நியாமா? குரல் காதோரம் கிசுகிசுத்த்து.

அலறியடித்து கொண்டு படுக்கையிலிருந்து எழந்த அன்னத்தின் பக்கத்தில்…அந்த பொம்மை…. படுத்துக்கொண்டிருந்த்து. ”எப்படி? எப்படி? என்று அலறினாள்.

அந்த அலறல் சத்த த்தில் குறட்டையிலிருந்து எழுந்த நாராயணன். ” என்னம்மா ஆச்சு…ஏன் இப்படி அலறல் ன்னு கேட்க. ……“ எல்லாம் இந்த பொம்மைதாங்க…… நானும் …நம்ம மருமகதானே ஆசையா பொம்மைய ஞாபகதார்த்த்தமா கொடுத்தாளேன்னு வாங்கி வைச்சேன்“ அதுதாங்க இந்த பாடுபடுத்துது…நல்லா தெரிஞ்சு போச்சுங்க….இதை எங்கோயாச்சிலும் கண்காணாத இடத்துல போட்டுட்டு வந்துடங்க” என்றாள்.

“ மறுநாள் காலை….. நாராயணன் அந்த பொம்மையை எடுத்துக் கொண்டு….ஊருக்கு அப்பால் உள்ள பெரிய ஆற்றில் வீசி விட்டு திரும்பி பார்க்காமல் நடந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

வீட்டுக்கு வந்த ஒருமணி நேரம் கழித்து…. அலைபேசியில்” அப்பா .அப்பா…ஒரு சந்தோஷமான சேதி… போனை அம்மாகிட்டே கொடு” என்று மகனின் குரல்

“என்னடா சேதி,.. எங்கிட்டே சொல்லக்கூடாதா… இல்லே முதல்ல அம்மாவுக்கு அப்புறம் அம்மாவே ஒங்களுக்கு சொல்வாங்க“ அப்பா-மகன் விளையாட்டை அந்த நேரத்திலும் நிகழ்த்தினான் மகன்.

”நீயாச்சு, ஒன் மகனாச்சு இந்தா போன்” என்று அலைபேசியை கொடுத்தார்.

“அம்மா…அம்மா …..ஜாக்குலின் பெண் குழந்தை பெத்துருக்காம்மா….இப்பத்தான் ஆஸ்பித்திரி பெட்ல கொண்டுவந்து போட்டுருக்காங்கம்மா” அங்க நம்ம சொந்த காரங்களுக்கு சொல்லிடும்மா” சந்தோஷத்தில் துள்ளினான். மகன்.

“அப்பாடி, எல்லாம் அந்த சரண்யா கொடுத்த பொம்மை போன நேரம்…நல்ல சேதி வந்திருக்கு“ என்று மனதிற்குள் நினைத்து கொண்டு சமைலறைக்கு போனாள்.

சற்று நேரத்தில்….மீண்டும்…… அலைபேசி ஒலிக்க….“அம்மா…அம்மா…இப்பத்தான் ஆபிஸ் பிரண்ட் ஒருத்தர் கிப்ட் கொடுத்துட்டு போனாரு… அதைப் பிரிச்சு பார்த்தா….. நம்ம சரண்யா வைச்சிருப்பாளே ஒரு பொம்மை…அது போலவே இருக்குதும்மா“ என்றான் மகன்.

அன்னம்மாளுக்கு அடிவயிற்றைக் கலக்கியது….. அந்த கலக்கலிலேயே…ஆறுமாதங்கள் கடந்து விட்டன. மீண்டும் அலைபேசி செய்தி…

“அம்மா….அம்மா…நானும்…ஜாக்குலினும் குழந்தையோட ஊருக்கு வர்றோம்.இப்பத்தான் லீவு கிடைச்சுது“ என்று தகவல் சொல்லி ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்தார்கள்.

வாசலில்…”.மகன்…மருமகள் கையில் பேத்தியிருக்க ” ஆரத்தியெடுத்தாள். அந்த பேத்தி கையில்…. பொம்மை….. திடுக்கிட்டு பின் சுதாரித்து கொண்டு ஆரத்தியின் பொட்டினை அந்த பொம்மை நெற்றியில் திலகமிட்டு விட்டு…பின் மருமகளுக்கும்…பேத்திக்கும் …கடைசியில் மகனுக்கும் திலகமிட்டாள்.

“என்னம்மா…. அந்த பொம்மைக்கு ….இழுக்க ..எல்லாம் காரணமாத்தான்ட” சரண்யா கொடுத்த பொம்மையும் நம்ம வீட்டு குழந்தை தானடா“ என்றாள் அன்னம்மா.

அன்னம்மா அன்றிரவு அமைதியாக தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.