சுடும் நினைவுகள் ":ஆபிரகாம் வேளாங்கண்ணிகவிதைமணி


என்னிதய வானத்திலே
வெண்மேகம் நுழைந்தது
வந்த இடம் தெறியாது எங்கோ ஓடி மறைந்தது

கார்மேகம் நுழைந்தது
காய்ந்து கிடந்த இதயத்தில்
மாரி பொழிந்தது என்றன்
உள்ளமோ குளிர்ந்தது

நானாக விரும்பினதுதே
அமையுமென்று நம்பி
தானாக வந்ததற்கு நான்
அடிமையாகி விடவில்லை

கலக்கம் நெஞ்சிலில்லை
நிலைக்கும் என்கின்ற
நம்பகம் உள்ள வரையில்
பொருப்பேன் பூமியாள

இதழ்கள் இருக்கும்வரை
அதற்குப் பெயர் மலர்கள்
இதழ்கள் உதிர்ந்துப் போக
அதற்குப் பெயர் சருகுகள்

ஊட்டியது எனக்கு தெம்பு
வேண்டாம் வேறொரு வம்பு
துடிக்கிறது நரம்பு எனினும்
இருக்கிறது ஒரு வரம்பு

வண்ணங்களால் சேரும்
கண்களுக்கு விருந்து
இன்பம் கொள்ளும் போது
இதயத்திற்கு மருந்து

தேராக இருந்தால்
பவணி வரவேண்டும்
மலராக இருந்தால்
மாலை சூட வேண்டும்

நிலவாக இருந்தால்
ஒளி தரவேண்டும்
கிளியாக இருந்தால்
கொஞ்சி பேச வேண்டும்

உளியாக இருந்தால்
சிற்பம் செதுக்க வேண்டும்
நீர் துளியாக இருந்தால்
தாகம் தீர்க்க வேண்டும்

நினைவு இருந்தால் வந்து
என்னை சேர வேண்டும்
தனியாக வாடுமென்னை
வாரி தழுவ வேண்டும்

உரைக்கின்றேன் என்
உள்ளத்தைத் திறந்து
உரிமைக் கொண்டாட
உலகத்தை மறந்து

காத்திருப்பேன் நானும்
காலங்கள் உள்ளவரை
காத்திருப்பதிலுமொரு
சுகம் இல்லாமலில்லை

நீங்காத நினைவுகள்
நெஞ்சிலே உள்ளவரை
தூங்காது என்றும் அந்த
சுடும் நினைவுகள்
••
ஆ• வேளாங்கண்ணி,
மும்பை / மஹாராஷ்டிரா

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.