யாரோ அங்க இருகாங்க

விஜய் காருக்குள்ள யாராது இருக்க மாதிரி இருக்கா? என்றாள் அபர்ணா

இல்லையே டி!

அப்ப சரி என்ற படி
வேக வெகமாக தனது அண்ணனின் கையை பிடித்து காருக்குள்ளே இழுத்து வந்தாள்.

அபர்ணா! நீ தான் முன்னாடி இருந்தால் பய படுறல, பின்னாடி உட்காந்துக்கோ!
என்றான் விஜய்

என்னது பின்னாடியா! என வாய் பிளந்து பார்த்தவளை, ஏதோ போல் பார்த்து விட்டு காரை நகர்த்தினான்.

நான் பயபடலாம் மாட்டேன், முன்னாடிதான் உட்காருவேன் என்ற படி பின்னால் பார்த்தாள்.

யாரும் அங்கே இல்லை! பத்து நிமிடம் பயணித்திருக்கும், காரானது சாலையை கடந்து காட்டு வழிப்பாதையில் நுழைந்தது.

சிறிது தூரத்தில் விஜயின் வீடு வந்திட, காரை நிறுத்தி அபர்ணா இறங்கு என்றான்.

பாதி தூக்கத்தில் இருந்தவள், தட்டு தடுமாறி இறங்கினாள்,

பாதி தூரம் நடந்த பிறகுதான் கவனித்தான், ரொம்ப தூக்கம் வருதா? என்று தன் தங்கையை கைதாங்கலாக பிடித்து கூட்டி சென்றான்.

வீட்டை அடைந்ததும், சார் இப்பதான் வந்திங்களா! புதுசா இங்க வந்து இருக்கீங்க! ஏதாது உதவி தேவைப்படும் என்று வந்தேன் என்றான் கிஷோர்.

கொஞ்சம் வெளியே போய் இருந்தேன், என்று விஜய் பதில் சொன்னான்.


சரி சார், அப்போ நான் கிளம்புறேன் என்ற கிஷோரை, வெயிட் பண்ணு
சாப்பிட்டு போ என்று வீட்டிற்கு அழைத்தான்.

அபர்ணா,வீட்டிற்குள் வந்ததும் ஏதோ சுறுசுறுப்பு வந்தவளாய், விஜய் சமயலறை எங்கே என்றாள்.

வலதுபுறம் என்றான் பதில் கிடைத்ததும்

10 மினிட்ஸ் வெயிட் பண்ணு என்று
சமைக்க சென்றுவிட்டாள்.

சற்று நேர அமைதிக்கு பிறகு, கிஷோர் ஏதோ வேலக்கார பொண்ண கூட்டிட்டு வர போறேன்னு தான போனிங்க, இவளா அந்த பொண்ணு என்றவனை,

விஜய், மௌன சைகையால் வேண்டாம் என்றபடி எச்சரித்தான், புரிந்ததால் அமைதியானன் கிஷோர்

அவன் சொன்னது, அபர்ணாவுக்கு நன்றாக கேட்டது, இருந்தும் கேட்காததை போல் இருந்தாள், 

சமைத்ததும் சாப்பாடை போட்டு கொண்டுவந்தவள், முதலில் விஜய்க்கு கொடுத்தாள் பின் கிஷோரக்கு!!!!!

கிஷோர் அதை வாங்கியதும், உன் பெயர் என்ன என்றான்.

அபர்ணா என்றாள்!

அப்புறம் என்ன? தண்ணி கொண்டுவா என நக்கல் அடித்தான்.

சற்று முறைத்துவிட்டு தண்ணீர் எடுக்க சென்றவளை, விஜய் தடுத்து என்ன என் தங்கச்சியையே கலைக்குறீயா? என்று முறைத்தான்.

ஐயோ! உங்க தங்கச்சியா சாரி சார், என கண்களால் அவளிடம் மன்னிப்பு கேட்டான்.

அவள் ஏதோ வருத்தத்தோடு உள்ளே சென்றாள்.

அவள் அங்கு சென்று எதையோ நினைத்தாள் போல, கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது,

சற்று நேரத்தில் அறையில் மட்டும் கரண்ட் கட் ஆகி வந்தது,

அந்த நொடியில் அவளை யாரோ சன்னல் வழியே பார்பது போல் தோன்றியது!

சற்று வெளியே உத்து பார்த்தவளுக்கு, நான் உன் பின்னாடிதான் இருக்கேன் என்ற குரல் அவள் பின்னால் இருந்து வந்ததது.

சுதாகரித்து திரும்பிய அவளின் முகத்தில் சிவப்பு நிற புடவை ஒரு கணம் உரசி மறைந்தது.

உடல் நடுங்கி நின்றவள் வேகவேகமாக அண்ணணும் கிஷோரும் இருக்கும் இடத்தை அடைந்தாள்.

அங்கே கிஷோர் சாரி என்றான் அவளிடம்,

அவள் பரவாயில்லை, என்று உதட்டளவில் சொல்லிவிட்டு, விஜயை பார்த்தாள்

விஜய் சாப்பிட்டியா! என்றான்.

இல்லை பசிக்கவில்லை என்றாள்.

சாப்பிடி, லேட் ஆச்சில என்றான் இந்த முறை சற்று கண்டிப்பாக!

சமயல் அறைக்கு செல்ல பயம் இருந்ததால் முடியாது என்றாள்.

அவளை பார்த்து சிரித்துவிட்டு, சமயல் அறைக்கு எழுந்து சென்றான். அவளுக்கு சாப்பாடு போட்டு விட்டு வந்து கொஞ்சமா! சாப்பிடு என்றான்.

முடியாது என்றவளை! விஜய் ஒரு கையால் தூக்கி, டைனிங் டேபிளில் உட்கார வைத்து ஊட்டி விட்டான்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.