என்னவளும் நானும்

பத்து வருடங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வரும்போது சாலையின் ஓரத்தில் மழை சாரலில் கண்ட என்னவளுடன் இன்று பெண் பார்க்கும் நாள். எனது அத்தையின் பக்கத்து வீட்டு பெண் அவள்.

அன்று கண்டேன் பின் ஒருமுறை என் மாமா கல்யாணத்தில் பேசினாள். ஆனால்
எனது குடும்பத்திற்கு தெரிந்தவள் என்பதால் பயந்துபோய் அவளிடம் காதலை சொல்ல முயலவில்லை.

அப்ப அப்ப எங்க அத்தை அவளைபத்தி சொல்வாங்க அப்பறம் பேஸ்புக்ளையும் அவளைபத்தி பார்ப்பேன். எப்படியோ இன்று என் ஒருதலைக்காதல் முக்கிய கட்டத்தை எட்டியது.

எனது தகுதி நல்ல வேலை கை நிறைய சம்பளம். இதைவைத்து அவள் வீட்டு பெரியவர்கள் சம்மதித்து விட்டார்கள். ஆனால் அவள்?

எப்படியோ பெரியவர்களிடம் இருந்து அவளிடம் தனியாக பேச அனுமதி வாங்கி மொட்டை மாடியில் காத்திருந்தேன். அவள் வந்துவிட்டா ள் அவளிடம் எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் முழித்தேன் அவளே ஆரம்பித்தாள்.

அவள் : நீங்க ரொம்ப கூச்சப்படுங்கன்னு எனக்கு தெரியும் நானே ஆரம்பிக்கிறேன் உங்களை பத்தி சொல்லுங்க உங்க வேலை எப்படி எத்தனை நண்பர்கள் முக்கியமா எத்தனை காதலிகள்.

அவள் படபடவென ஏதோ பலவருடம் பழகியது போல் கேட்டாள். எதிர்பாக்காத இந்த கேள்விகளில் திகைத்து போனேன் பின் அவளே அரம்பித்ததால் சிறுது பதட்டம் தணிந்து சாதாரணமாக பதில் கூறினேன்.

நான் : எத்தனை காதலிகளா ஒண்ணுக்கே வழி இல்லை.

அவள் : ஒருதலை காதலவது.

நான் : ஒரு தலை காதல் நெறய இருக்கு ஒன்னவது வகுப்பு மல்லிகா டீச்சர்ல இருந்து மலர் டீச்சர் வரைக்கும்.

உன்னையும் தான்னு சொல்லனும் னு ஆசை அனா என்னவோ சொல்ல தைரியம் இல்லை.

அவளிடம் கேட்டேன் உனக்கு எத்தனை. அவள் யோசிக்காமல் சொன்னால் ஒண்ணே ஒண்ணுதான் அதுவும் ஒருதலை காதல் தான்.

நான் : யார் அஜித்தா விஜயா .

அவள் : இல்ல நீங்க தான்.

நான் : என்ன காமெடியா.

அவள் : இல்லைங்க உன்மைதான்.

நான் : இது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.

அவள் : நம்பலானாலும் அதான் உண்மை.

நான் : ஓகே என்ன எப்பொழுத்துலிருந்து காதலிக்கிறே.

அவள் : ஒரு பத்து வருசமா .

நான் : பத்து வருசத்துக்கு முன்னாடி என்ன உனக்கு தெரியுமா.

அவள் : தெரியும் ஒரு நாள் மழை பெய்யும் போது, நான் ஸ்கூல் விட்டு வரும்போது உங்க அப்பாவோட நீங்க நின்னுகிட்டு இருந்திங்க அப்ப தான் உங்களை முதல் முறை பார்த்தேன்.

அவளை கண்டவுடன் எனக்கு காதல் வந்தது அவ்வளவு ஆச்சர்யம் இல்லை. ஏன்னா அவ அவ்வளவு அழகு ஆனால் நம்மல பார்த்த உடனே காதல் வராதே. நம்ம personality அப்புடி.

அவளிடம் கேட்டேன் பார்த்த உடன் எப்படி காதல் வரும் அதுவும் என்ன பார்த்து.

அவள் : பார்த்த உடனெல்லாம் வரல.

நான் : அப்புறம்,

அவள் : கொஞ்ச நாள் கழிச்சு உங்க அப்பாவும் எங்க அப்பாவும் எங்க வீட்ல வச்சு உங்க பெருமை எல்லாம் சொல்லி நம்ம ரெண்டு பேருக்கும் விளையாட்டா கல்யாணம் பேசினாங்க. எப்புடியும் எங்கவீட்ல வேற யாரையும் காதலிக்க ஒத்துக்க மாட்டாங்க அதான் உங்களையே லவ் பண்ணலாம்னு உங்க மாமா கல்யாணத்துல உங்க கிட்ட பேசணும்னு முயற்சி பண்ணேன் நீங்க ரொம்ப நல்லவரா என் கிட்டகூட ஒருவார்த்தக்கு மேல பேசல. அப்புறம் பேஸ்புக்ல ஒரு fake பெண் ஐடி ல இருந்து ரியூஸ்ட் கொடுத்தேன் அதையும் நீங்க அக்ஸ்ப்ட் பண்ணல. இப்புடி இருந்தா எப்புடியம் உங்களுக்கு காதல் அமையாதுன்னு எனக்கு தெரியும் அதான் என்னக்கு இருந்தாலும் உங்களையே கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். அப்ப அப்ப உங்க அத்தை சொல்வாங்க உங்களபத்தி அப்பறம் பேஸ்புக்ளையும் உங்கள பத்தி பார்ப்பேன் அவ்வளவுதான். போதுமா.

எனக்கோ வானத்தில் பறப்பது போல் இருந்தது. நல்லவனாய் இருந்ததால் என்னவள் இன்று என்னுடன். ஆனாலும் நல்லவனாய் இருக்கிறேன் என்ற பெயரில் என்னவளின் காதலைக் கூட உணராமல் பத்து வருடம் தனிமையில் கழித்து விட்டதை நினைத்து என் மீது கோபம் கொண்டேன். ஆனால் என்ன இப்போது காதலிக்கிறேன் என மொட்டை மாடியில் இருந்த ரோஜா செடியில் இருந்த பூவை கொடுத்து எனது என் காதலை தெரிவித்தேன். அவளும் வெட்கத்துடன் கலந்த புன்னகையுடன் ஏற்றுக்கொண்டாள்.

அன்று சாலையில் சாரல் மழையில் முகம் காட்டி சென்ற என்னவள் தான் என் வாழ்க்கை முழுவதும் வழிகாட்ட போகிறாள் இன்று முதல்.

கோபி நாத்தின் ஒரு கவிதை நினைவில் வருகிறது.

என்னை ரசிக்க ஒருத்தி இருக்கிறாள் என்பதை தவிர வேறென்ன வேண்டும் நான் இந்த உலகை ரசிப்பதற்கு.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.