அன்று .....

அன்று .....

அம்மா மடியில் தான் படுத்திருந்தேன்.

அம்மா நீ சொல் , உனக்கு நான் என்ன செய்தால்

பிடிக்கும் என்று கேட்டதற்கு

நீ சொன்னாய்

பொய் சொல்லாமல் இரு.

சரி என்றேன்.

என் காதலி கேட்டாள் ,

நான்தானே ரொம்ப அழகு...?

நான் உண்மை சொன்னேன்,

நீ அப்படி ஒன்றும் அழகில்லை ,

அவளும் அன்றே என்னை விட்டுச்சென்றாள்.

என் மனைவி கேட்டாள்,

யாரையாவது காதலித்தது உண்டா.....?

நான் உண்மை சொன்னேன்,

காதல் ஒன்று இறந்து இன்று மறுபடியும் துளிர் விட்டதாக ,

அவளும் அன்றிலிருந்து என்னை பார்க்கிறாள்

தீண்டத்தகாதவனாக.

நண்பன் பெருமையுடன் கேட்டான் ,

நம் நட்பு எது வரை என்று ,

நான் உண்மை சொன்னேன்,

நீ வாங்கித் திருப்பித்தராத கை மாத்து அளவு வரை,

அவனும் அன்று முதல் என்னைப்பார்கிறான் ஜன்ம விரோதியாக.

மகளும் கேட்டாள்,

அப்பா, உனக்கு என்னைத்தானே அதிகம் பிடிக்கும்,

நான் உண்மை சொன்னேன்,

எனக்கு என்னையே கூட பிடிக்காது என்று,

அவளும் அம்மா பெண் ஆகிவிட்டாள் .

இன்று

அம்மா மடியில் நான் படுத்திருக்கிறேன்,

அம்மா நீ சொல் நான் எவ்வளவு நாள் உயிரோடு
இருப்பேன்,

கண்ணீருடன் நீ சொல்கிறாய் ,

இன்னும் ஒரு நூறாண்டு .

அம்மா

நீ மட்டும் பொய் சொல்லலாமா?


லதா ரகுநாதன்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.