வீட்டுக்குள்ளே குழந்தையை அடைக்காதே..!
வெளியுலகம் தெரியாமல் போகும் மறவாதே..!
கிணற்று தவளை கடலின் நீளம் அறியாதே..!
நாற்சுவற்றுக்குள்ளே உலகமில்லை மறவாதே..!
இயற்கை காற்றை சுவாசிக்கட்டும் இளம் வயதில்
ஓடி ஆடி விளையாடட்டும் தெருக்களில்
சொந்தங்களை வாயார அழைக்கட்டும் பிஞ்சு மொழிகளில்
நெஞ்சங்களில் வஞ்சமில்லாமல் வளரட்டும் வளர்கையில்
வர்ணத்தை பற்றி விதைத்திடாதே வாழ்க்கையில்
மர்மமாய் இருந்திடட்டும் உயிர் பிரியும் வரையில்
உழவை செய்திட சொல் யோசிக்காமல்
கருணையுடன் இருந்திட சொல் நடிக்காமல்
உண்மையை பேசிட சொல் மறைக்காமல்
உலகமே ஒரு மாயையென சொல் தயங்காமல்
கவிஞர்
அ.ஜோதிமணி
திண்டுக்கல்.