எண்ணைக் குளியல்
 

சனிக்கிழமை காலையிலேயே எண்ணைக் குளியலுக்காகன ஆயத்தங்களை ஆரம்பித்து விடுவார் ராமசாமி.

இளஞ்சூட்டில் இருக்கும் நல்லெண்ணையை கரகரவென சூடுபறக்க தலை உடம்பெல்லாம் வழிய வழிய தடவிக் கொள்வார்.

தலையிலிருந்து வழியும் எண்ணை கண்களுக்குள் இறங்கி கண்கள் எரிய ஆரம்பித்தவுடன்தான் குளியலறைக்குள் செல்வார். அதுவரை துண்டுமட்டும் அணிந்த வெற்று 
உடலோடு சைக்கிள் துடைப்பது போன்ற வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்.

குளியலறைக்குள் காய்ந்த செம்பருத்தி இலைகலந்த சிகைக்காய்துள் தயாராக இருக்கும் தலையில் இருந்த கடைசிச் சொட்டு எண்ணையும்போய் முடி காற்றைப்போல் லேசாகும்வரை குளியலறையை விட்டுவெளியே வரமாட்டார். ஒருமுறையாவது குற்றாலத்துக்குபோய் ஆயில்மசாஜ் செய்து நாள் முழுவதும் குளிப்பதென்பது அவரது வருடாந்திர நியதிகளுள் ஒன்று.

எண்ணைக்குளியலால் உடலுக்கு எந்த நன்மையும் இல்லையென்று விஞ்ஞானபூர்வமாக நிருபிக்கட்டுள்ளதென்று ராமானுஜம்சார் ஒருமுறை சொல்லி சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.

உமது விஞ்ஞானத்த உடப்பில போடுமய்யா நாளைக்கு ரெண்டு வாரத்துக்கு ரெண்டு மாசத்துக்கு ரெண்டு வருஷத்துக்கு ரெண்டுன்னு கணக்கு சொல்லி வைச்சவனெல்லாம் பைத்தியக்காரனா?

ஏங்க அடுத்தது நீங்கபோங்க. ஏன்டி சட்டுபுட்ன்னு குளிச்சுட்டு வரமாட்டியா எல்லாரும் குளிக்கனுமில்ல, தீபாவளிக்குக்கூட ஒழுங்கா தண்ணிவிட மாட்டானுங்க. தண்ணிய அளவா குளிங்க ,இன்னும் ரெண்டுநாளைக்கு தண்ணி வராது என்ற மனைவியின் குரலைக்கேட்டு

சாமிபடத்திற்கு முன்னாலிருந்த கிண்ணத்திலிருந்த நல்லெண்ணை ஒருகை எடுத்து சாங்கியத்துக்கு உச்சந்தலையில் வைத்துக்கொண்டு கங்காஸ்நானத்திற்கு கிளம்பினார் ராமசாமி.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.