ஏன் இப்படி திடுதிடுப்பென்று டிசி கேட்கிறீர்கள்?

என் அம்மாவிற்கு உடல்நலம் சரி கிடையாது. வயதாகிவிட்டது. அருகில் இருந்து பார்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். எனது கணவர் வெளிநாட்டில் பணி புரிவது உங்களுக்குத்தான் தெரியுமே! இருந்தாலும் வீட்டு செலவுகளைச் சமாளிப்பது சற்று கடினம்தான். அதனால்தான் டிசி கேட்கிறேன் அருகில் அரசு பள்ளியில் இரண்டு வருடங்கள் படிக்கட்டும். அதன்பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றாள் வந்தனா. வீட்டில் இயந்திர ரோபாட் இருந்தாலும் மனிதன் வேண்டும் அல்லவா!

இது உங்கள் குழந்தைகளுக்குச் சம்மதமா? எனக் கேட்டார் பள்ளியின் முதல்வர்.

எனது குழந்தைகளுக்கு நான் சொல்லித் தருகிறேன். முதலில் சமூக நன் மதிப்புகளை அவர்கள் கற்றுக் கொள்ளவேண்டும். அது தாய்,தந்தையிடம் இருந்துதானே வரவேண்டும். நானே முன்னுதாரணமாக இல்லாதபோது அவர்கள் எப்படி கற்க இயலும்?

புரியாதவற்றை இணையத்திலும் பார்த்துத் தெளிவு பெறட்டும். முதியோரைப் பார்ப்பது ஒரு கடமைதானே! நாளை நானும் ஒரு முதியோர்தானே! படிப்பிற்காகவும், பணிக்காகவும், பணத்திற்காகவும் பெற்ற தாய்,தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்க்க இயலுமா? பணம், பொருள், புகழ், பணி அனைத்தையும் என்றாவது ஒருநாள் திரும்பப் பெற முடியும். ஆனால் தாய்,தந்தையரைப் பெற இயலுமா?

அப்ப சமுதாயத்தில் உங்கள் குடும்பநிலை கீழே போய்விடுமே!

எது சார் கீழ்நிலை? ஆங்கிலவழிக் கல்வியில் படித்து பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு வெளிநாட்டில் சம்பாதித்து பத்து கார் வாங்குகிறவனா சார் சமுதாயத்தில் முதல்நிலை? சமுதாயம் அதைத்தானா எடை போடுகிறது!? எனக்கு அப்பேர்ப்பட்ட பெயர் வேண்டாம். அன்பால் இணைந்த பாசப் பிணைப்புகள் கூழுடன் இருந்தாலும் அதுபோதும். நாம படிக்கிற படிப்பும் அதைத்தானே சொல்லியது. பணம் சம்பாதிக்கின்ற இயந்திர ரோபாட் பெற்றோராக நாங்க இருக்க விரும்பலை.

கீதா! இவர்களுக்கு உடனே டிசி கொடுக்க ஏற்பாடு செய்யுங்க! ஓய்வு நேரத்தில் உங்கள் ஊரிலேயே எங்கள் பள்ளி இருக்கிறது. ஏதாவது பணி செய்ய முடிந்தால் வர இயலுமா மேடம்?என்றார் மௌனமாக.

தாராளமாக வருகிறேன் எனச் சொன்னபடி சென்றவரைப் பெருமையுடன் அவளது குழந்தைகள் பார்த்தபடி இருந்தனர்.

பொன்.இராம்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.