பாதித்தூக்கத்தில் மனைவியை எழுப்பினான் சாரங். அந்தக்கணம் அவனது மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. ஆப்த நண்பன் ஆதித்யாவிடம் சொல்லலாம் என்றால் அவன் ஊரில் இல்லை 

சுமதியை விட்டால் இப்போது அவனுக்கு வேறுயாருமில்லை.சுமதிக்கு கண்டிப்பாய் சந்தோஷமாக இருக்குமென்று நம்பினான். பல நாட்களாக அவளும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறாள். ' எத்தனை நாளைக்கு இப்படி குறும்படம் வெறும்படம்னு எடுத்துட்டே இருப்பீங்க என்னதான் இதுல நீங்க அவார்ட் வாங்கினாலும் ஒரு பிசி ஸ்ரீராம் மாதிரி ஒரு பாலுமகேந்திரா மாதிரி சினிமாக்கு காமெராமேனாப் 
போயி பேர்வாங்கணும்..அதான் என் ஆசை ' 

'சுமதி..உன் ஆசை நிறைவேறப்போகுது! ' என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே திக்குமுக்காடினான் சாரங்.. 

அவன் எதிர்பாராத வகையில் சற்றுமுன் அந்த பிரபல இயக்குநர் அவனுக்கு'செல் 'லில் சொல்லிய 

வார்த்தைகள் இன்னமும் அவன் காதில் ஒலிக்கின்றன 

'சாரங்! என்னோட புதுப்படத்துக்கு நீங்கதான் காமெரா மேன்!. நீரஜ் ஹீரோ. !ஹீரோயினாக ஒரு புதுமுகம், பேரு ஸ்படிகா, பம்பாய் இறக்குமதி. அடுத்தவாரம் பூஜை . மற்றவை மெயில்ல மானேஜர் அனுப்புவார்..ஓக்கே ? ' 

'த்..த.. தாங்க்யூ டைரக்டர் சார்! ' 

அவ்வளவுதான், இயக்குநர் அதிகம் பேசமாட்டார் ஆனால் அவரது படம் பலரால் பேசப்பட்டுவருகின்றன 

அவரது இயக்கத்தில் பணிபுரிய எனக்கு ஒரு வாய்ப்பா ? 

சாரங்கால் இன்னமும் நம்பமுடியவில்லை. 

சுமதி சட்டென எழுந்து உட்கார்ந்தவள், ' என்னங்க...என் கசின் ரம்யாவோட குழந்தை ராகுலை நாம தத்து எடுக்கலாம்னு நான் சொன்னதை இப்போவாவது ஏத்துக்கிட்டாங்களா ? பதினெட்டு வருஷமா நான் தவிச்ச தவிப்பு போதுங்க...வயசு நாப்பது எனக்கும் ,உங்களுக்கு நாப்பத்திமூணும் ஆகுது....இனிமே குழந்தைபாக்கியமெல்லாம் கண்டிப்பா எனக்குக் கிடைக்கபோறதில்ல..கடவுள்மனசு கல்லுன்னு நல்லா தெரிஞ்சிபோச்சு. அதனால காதும் காதும் வச்ச மாதிரி வீட்டோட வச்சி தத்து எடுத்துக்கிடலாம்....சரிதானே ? ' என்று ஆவலும் அதட்டலுமாய் கேட்டாள்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.