ஒரு நாள் இரவு

நான் வேலை பார்க்கும் அருகில் ஒரு வாடகை வீட்டில் குடி இருந்தேன். ஒரு புதிய வீடு வாங்கினால் சந்தோசமாக இருக்கும் என்று வீடு பார்த்து வந்தேன். என் பட்ஜெட் கு ஏத்த மாரி எந்த வீடும் அமையவில்லை. வெகு நாளாக தேடி திரிந்து ஒரு வீடு கிடைத்தது. அனால் கொஞ்சம் காட்டு பகுதியில் அமைந்து இருந்தது. பரவ இல்லை என்று வாங்கிவிட்டேன்.

அன்று நான் என் புது வீட்டிற்கு செல்கிறேன் என்ற ஒரு குதூகலிபோடு என் கார் எடுத்துட்டு புறப்பட்டேன். பாட்டு பாடி கொண்டே ஓட்டினேன். சிறிது தூரம் சென்றதும் ஷாப்பிங் பண்ண காரை நிறுத்தி தேவையானவற்றை வாங்கி கொண்டு கிளம்பினேன்.

அந்த கட்டை அடைந்தேன். வானம் இருண்டு காண பட்டது. நான் என் காரின் ஹெடிலைட்டை on செய்தேன். அந்த கம்பி கதவில் headlight ஒளி பட்டது. பார்க்க கொஞ்சம் திகிலான கதவு போல இருந்தது. நான் அந்த கதவை நெருங்கினேன். என் காரை நிறுத்தி விட்டு மெதுவாக இறங்கி அந்த கதவை நோக்கி நடந்தேன். கதவில் சங்கிலியை வைத்து கட்ட பட்டு இருந்தது. அந்த சங்கிலியை அவிழ்த்தேன். சங்கிலி கதவு கம்பிகளிலிருந்து நழுவி கிழ விழுந்தது. அதை எடுக்க குனிந்தேன், "பாம் பாம்" என்றது என் காரின் ஹார்ன். நடுங்கி எழுந்து காரை பார்த்தேன். என் கார் அமைதியாக நின்று கொண்டிருந்தது. வேகமாக கதவை தள்ளி திறந்து விட்டு ஓடி சென்று காரில் அமர்ந்தேன். காரை ஸ்டார்ட் செய்து உள்ளே நுழைந்தேன். கொஞ்ச தூரத்தில் கார்ஷேட் தெரிந்தது. உள்ளே சென்று காரை நிறுத்தி என்ஜின் off செய்தேன். ஒரே இருள் சூழ பட்டு இருந்ததால் நான் டார்ச் லைட்டை தேடினேன் என் கைப்பையில் எடுத்து கொண்டு on செய்தேன். சாவியை ஒரு கையில் எடுத்து கொண்டு, மற்றையோரு கையில் டார்ச்சை பிடித்து கொண்டு வீட்டு கதவை நோக்கி நடந்தேன். நான்கு படிகள் ஏறி வீட்டை திறக்க முற்பட்டேன். எதோ என் கையில் விழுந்தது மேலே இருந்து பதற்றத்தில் டார்ச் மற்றும் சாவியை கீழே போட்டு அலறினேன். டார்ச் கீழே விழுந்ததில் பழுதானது. என் செல் போனில் பிளாஷ் லைட் on செய்தேன். பின்பு சாவியை எடுத்து கொண்டு சாவி துவாரத்தில் செலுத்தி திருகினேன்."டக்" திறந்து கதவை தள்ளினேன். வீடே இருண்டு காண பட்டது. என் செல் போனெனின் பிளஷ்லைட்டை சுவரில் அடித்து சுவிட்ச் போர்டு தேடினேன். பின்பு ஒரு ஒரு ஸ்விட்ச்சாக on செய்து பார்த்து லைட்டை on செய்தேன். லைட் on ஆனதும் அங்கு ஒரு பொம்மை மட்டும் என் கண்ணில் பட்டது. அது கொஞ்சம் அழுக்கு பட்டு இருந்தது. அதை எடுத்து தூசி தட்டி அலமாரியில் வைத்து விட்டு luggage ஐ எடுத்து வர சென்றேன்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.