காலமெனும் பெருவனத்தில்… - பா.சரவணன்

காலமெனும் பெருவனத்தில்… - பா.சரவணன்

*****************************************************************

வழக்கமாய்க் கிழக்கில் உதிக்கும் சூரியன்

இன்று ஏனோ

கூடுதலாய்ச் சிவந்திருக்கிறது

மேற்கில் கரு மேகங்கள்

பொழியவா போகவா

எனத் தயங்கி மிதக்கின்றன

மஞ்சள் பூக்கள் உதிர்ந்திருக்கும் சாலையில்

அவளைப் போலவே எதிர்ப்படுபவள்

மலர்ந்து சிரிக்கையில்

அவள் ஆகின்றாள்

அவள்

பூமிப்பந்தின் மறுபுறம்

டூலிப் பூக்களின் வண்ணங்கள் ஒளிர

சிவந்து சிரிக்கிறாள்

நான்

திருமண வரவேற்பில்

மலர் ஏந்தி நிற்கும் சிறுமிபோல்

இந்த நாளை ஏந்திக்

காத்திருக்கிறேன்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.