அழகு வாழ்வமையும் - பாவலர் கருமலைத்தமிழாழன்

விழிகள் மூடிப் படுத்திருந்தால் விடியல் விழிக்குத் தெரியாது விழித்த விழிக்கே இருள்விரட்டி விடிந்த ஒளியின் எழில்தெரியும் வழியா வியர்வை உடலிருந்தால் வாழ்க்கை இருளில் போய்முடியும் பொழியும் வியர்வை உடலுக்கே பொலியும் அழகு வாழ்வமையும் ! வெல்லும் முயற்சி இல்லாமல் வெற்றி உன்னில் விளையாது புல்லும் உனக்கு வில்லாகும் புதிய முயற்சி உனக்கிருந்தால் அல்லும் பகலும் சோராமல் ஆற்றும் உறுதி தளராமல் சொல்லும் செயலும் ஒன்றானால் சொர்ணம் போல வாழ்வொளிரும் ! மண்ணில் காலை ஊன்றுதற்கு மனத்தில் அச்சம் கொண்டிருந்தால் மண்ணில் நிற்க முடியாது மாற்றம் செய்ய இயலாது எண்ணம் செயலாய் உருபெறவே எழுச்சி நெஞ்சில் ஏற்றிவிட்டால் விண்ணும் கரத்தில் அடங்கிவிடும வியக்கும் உயர்வும் உனையடையும் !

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.