சுவாரசிய சினிமா - SULLY

எத்தனை சிறந்த கதையாக இருந்தாலும் அதற்க்கு திரைவடிவம் கொடுக்க திரைக்கதை அத்தியவசியம் .அதுவும் Biography Genre படம் எடுக்க வேண்டுமென்றால் அதிக மெனக்கெடல் வேண்டும் .நடந்த சம்பவத்தை அப்படியே எடுக்க முடியாது .

நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இலக்கிய மொழியிலிருந்து திரை மொழி முற்றிலும் வேறானது .காகிதத்தில் நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் ,அதை காட்சிப்படுத்த முடியாது .திரைக்கதை தான் உங்களை காப்பாற்றும் .


இந்திய சினிமாவில் எடுத்த அத்தனை Biography Genre எடுத்துக்கொள்ளுங்கள்.நம்மால் எத்தனை சினிமாவை நினைவுக் கூற முடியும் .சமீபத்தில் வெளி வந்த Dhoni ,Sachin திரைப்படத்தை நம்மால் எத்தனை முறை பார்க்க முடியும் ?காரணம் நமக்கு தெரிந்த கதையை பார்க்கும் பொழுது தானாக prejudge செய்து விடுவோம் .

SULLY அமெரிக்கா மட்டும் அல்ல உலகம் முழுக்க அறிந்த கதையே .ஹட்சன் நதியில் 155 பயணிகளுடன் தரை இறக்கி அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்றிய Capt.Chesle "Sully" Sullenberger எழுதிய Highest Duty: My Search for What Really Matters புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட திரைப்படம் .

ஒரே நாளில் நதியில் விமானத்தை இறக்கியது ,155 பயணிகளின் உயிரை காப்பாற்றியது போன்ற சாதனைகளின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றாலும் ,அதை மட்டுமே கொண்டு படம் எடுக்க முடியாது .

திரைக்கதையில் Dramatic Tension இருந்துக் கொண்டே இருக்க வேண்டும் . தெரிந்த கதையாகவே இருந்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை நீங்கள் யூகிக்க கூடாது .அதற்க்கு வலுவான திரைக்கதை பின்புலம் வேண்டும் .

கதையில் வில்லன் கிடையாது .கதாநாயகி கிடையாது .சண்டைக்காட்சிகள் கிடையாது .ஆனாலும் உங்களை ரசிக்க வைக்க கூடிய திரைக்கதை அமைப்பு இருக்கும் .

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.