படுத்திருந்தவனை காணவில்லை. கைபந்து கட்டிலில் அங்கும் இங்குமாக மிதந்துகொண்டிருந்தது. பதட்டத்தில் உடல் நடுக்கம்கொள்ள அவசரமாக வெளி அறைக்கு வந்தேன். தினமும் பழகிய இருட்டாக இருந்தபோதும் பழக்கமற்ற இருட்டாகி, காலை எதிலோ இடிக்கச் செய்தது. வலியை மென்று விழுங்கியபடியே திறந்திருந்த குளியலறையைப் பார்க்க, மேலும் அதிர்ந்தேன். அவசர அவசரமாக கதவைத் திறந்து வீதிக்கு வந்தேன். தூக்கத்தில் நடக்கும் வியாதி வந்திருக்கக் கூடுமோவென அங்கிமிங்குமாக நடந்து பார்த்தேன். நாய்களைத் தவிர வேறு எதுவும் தட்டுப்படாதிருக்க கதவை திறந்து வந்தது நினைவில் உறைத்தது. எனை நொந்தபடியே மீண்டும் வீடு நோக்கி நடந்தேன். படுக்கையறை விளக்கைப் போட்டுப் பார்க்க வெளிச்சத்திற்கு கண்களை இறுக மூடி எதையோ முனகியவாறு திரும்பிப் படுத்தான். நல்லாதானே பார்த்தோம் எப்படி இது, நான் பார்த்த பந்து எங்கே போனதென மீண்டும் பந்தை துழாவியபடி இருக்க இணையாளின் எரிச்சலுக்கு விளக்கோடு நானும் அணைந்தேன்.

அடுத்த நாளின் நள்ளிரவில் விழிப்புதட்ட கண்களை கசக்கிவிட்டு படுக்கையை பார்த்தேன். பந்து மிதந்தபடி இருந்தது. அடுத்தவாரம் மாநில அளவிலான போட்டி இருப்பதாகக் கூறினானே, அதற்குத்தான் படுத்தவாறு பயிற்சி எடுக்கிறானோவென விளக்கைப் போட்டுப் பார்த்தேன். வெளிச்சத்தில் பந்து காணவில்லை. அவன் உறங்கிக்கொண்டிருந்தான்.


-ந.பெரியசாமி

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.