அத்தியாயம் 1

கை உதறல்..... "கமிஷனர் கேட்டா என்ன சொல்றது ? " மனதில் பயம்... டெலிபோன் மணி ஒலித்தது... எதிப்பார்த்த படியே கமிஷனர்தான் கூப்பிட்டார்....

" எஸ். சார்.... " அர்ஜுன் குரலில் சற்று கம்பீரம் குறைந்திருந்தது.....

" என்ன அர்ஜுன்? கேஸ் எப்படி போறது? இன்னும் 4 நாள்ல கிளோஸ் பண்ணனும். எனக்கு பிரஷர் அதிகமா இருக்கு..... மீடியா, பத்திரிகை, பாதிக்கப் பட்டவர்கள் என்று என்னை போட்டு தாக்கறாங்க.... அந்தக் கொலை நடந்து 15 நாள் ஆயிடுற்து..... இன்னும் ஒரு ஆக்ஷனும் எடுக்கலே... என்ன நடக்குது? உடனே ரிப்போர்ட் வேணும்.... " கமிஷனர் பேசிக்கொண்டே போய்க்கொண்டிருந்தார்....

" இன்னிக்கு சாயங்காலம் ரிப்போர்ட் அனுப்சுடறேன் சார்.... நானும் என் டீமும் மும்முரமா இறங்கி இருக்கோம்.... ஆனால் ஒரு துப்பும் இதுவரையில் கிடைக்கலே.... சாரி சார்... சீக்கிரம் கண்டு பிடித்துவிடுவோம்.... " முகத்தில் வழிந்த வேர்வையை கைக்குட்டையால் துடைத்தவாறே பேசிய அர்ஜுன் தன் முன் உட்கார்ந்திருந்த மந்திரியின் பார்வை முழுதும் தன்மேல் இருப்பதை கவனியாமல் இல்லை...


அத்தியாயம் 2

" என் பையன் எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டான். அவனுக்கு இந்தக் கதியா? இது கடைசி வருஷம். படிச்சு முடிச்சு ஒரு நல்ல வேலைக்குப் போனால் என் கஷ்டம் தீரும்னு பார்த்தேன் ! "கண்ணில் வழிந்த கண்ணீர் அவள் புடவையை நனைத்துக் கொண்டிருந்தது....

“விக்னேஷுக்கு பிரெண்ட்ஸ் யாருனு சொல்ல முடியுமா? " அர்ஜுன் கேட்டான்...

" சுதிர், கமலேஷ், பாலாஜி..இவங்க மூணு பேரும்தான் விக்னேஷோட இருப்பாங்க... ஒன்னா சின்ன வயசிலிருந்தே கூட படிக்கிறா . வேற யாரையும் தெரியாது.... என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்க... ப்ளீஸ்... " கை கூப்பிய பிரேமா விக்னேஷின் அம்மா...

"சரி... நான் தொந்தரவு படுத்தலே. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்களேன்..! " அர்ஜுன் கேட்க... "உம !" என்று வேண்டாவெறுப்பாய் பிரேமா சொல்ல " உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? "

"தெரியலே... யார் மேலே... அந்த பசங்க மேலயா? ஆனால் அவங்களையும் காணோமே...."

"அதான் ... ஒன்னும் புரியலே... சரி ... நான் அப்புறம் தேவை பட்டால் . வருவேன்.... " கூறிவிட்டு நகர்ந்தான் அர்ஜுன்.

"நீங்க?" கொஞ்சம் உரத்த குரலில் அர்ஜுன் கேட்க.... " சுதிரோட அப்பா... என் பையனுக்கு என்ன ஆச்சுன்னே தெரியலே.... ரொம்ப பயமா இருக்கு.... அவன் அம்மா பித்து பிடிச்சவ மாதிரி இருக்கா.... ஒரு தகவலும் தெரியலியே இன்ஸ்பெக்டர்." கலங்கிய கண்களோடு அவரைப் பார்க்க அருஜுனிற்கு பரிதாபமாக இருந்தது...அத்தியாயம் 3

" என்ன அர்ஜுன்... கொலையை தவிர மிஸ்ஸிங் கேஸ் வேற இருக்கு .3 பேருமா காணலே ? என்னய்யா இது? குழப்பமா இருக்கே... அவங்க இவனை கொலை செய்துட்டு ஓடிட்டாங்களா? இல்லை அவங்களையும் வேறு யாராவது கொன்னுட்டாங்களா? அட சே.. வீட்டிற்கு போய் ரெண்டுநாள் ஆச்சு யா... உடனே நீங்க ரெண்டு கான்ஸ்டபிளிஸ் கூட்டிண்டு வாங்க...ஏதாவது செய்தே ஆகணும்.... " கோபத்தோடு பேசிய கமிஷ்னருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறிய அர்ஜுன் " இதோ கிளம்பறோம் சார்.. " என்று கூறி போனை கீழே வைத்தான்.. அவன் உடல் முழுக்க வேர்வையில் நனைந்திருந்தது...

"இதோ பாருங்க... சும்மா பேசறதையே பேசிண்டு இருந்தீங்கன்னா உங்களுக்கு தான் ஆபத்து... ஒழுங்கா எங்க கல்லூரிக்கும் இந்தக் கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு நீங்களும், எங்க பசங்க காணாமல் போனதற்கு எந்த விதத்திலேயும் இந்தக் கல்லூரி பொறுப்பில்லைனு எழுதிக்கொடுங்க... " பிரின்சிபால் நால்வரின் பெற்றோரை மிரட்ட ஒருவர் பின் ஒருவராய் கையெழுத்திட்டனர் . சிரிப்புடன் மனிதத் தன்மையே இல்லாமல் நடந்து கொண்ட பிரின்சிபால் " சரி நீங்க கிளம்பலாம்... எல்லோருடைய டீ.சி.யும் உங்களுக்கு வந்து சேரும்..." முறைப்புடன் கூறினார்...

எத்தனை ஆசையா வந்து இங்க சேர்ந்தாங்க.... எல்லாம் நாசமாப்போச்சு... என்ன செய்யப்போறோம்... எப்படி இவங்களை கண்டு பிடிக்கப்போறோம்... " அழுது தீர்த்தாள் லக்ஷ்மி சுதீரின் அம்மா..

ஒரு ஓரத்தில் தன ஒரே மகள் வந்தனாவுடன் தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்த பிரேமாவை அப்பொழுதுதான் கவனித்தாள் லக்ஷ்மி

" பிரேமா... மனசை தேதிக்கோ... எங்க கவலையில் உன் நிலைமையை யோசிக்காமல் நான் பேசிண்டிருக்கேன்.. எங்க பசங்களாவது உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கு. பாவம் விக்னேஷ்... என்னதான் நடக்குது? யாருமே இல்லையா நமக்கு துணையா? ஒரு போன் கூடவா பண்ண முடியலே? " லட்சுமி பொருமினாள் .

"லக்ஷ்மி ... விஷணேஷ் சகாப்தம் முடிஞ்சுபோச்சு... இப்ப இவங்க 3 பேரையாவது காப்பாத்தணும்... அதுக்கு வழி தேடுங்க.... என்னைப் பற்றி யோசிக்க வேண்டாம்.... எல்லாம் என் தலை எழுத்துபோல் நடக்கட்டும்... இதோ இந்த வந்தனாவிற்காக நான் வாழத்தான் வேணும்.. இவங்க அப்பா என்னை 5 வருஷத்துக்குள்ளே விட்டுட்டுப் போனப்போ கலங்கினேன். ஆனால், இவங்க முகத்தைப் பார்த்து, பார்த்து வாழ ஆரம்பிச்சேன்.... இதோ திரும்ப ஒரு பெரும் இடி.... நடக்கட்டும்... நீங்க ஏதாவது பாருங்க... என்ன செய்யலாம்னு.... " இவ்வளவு தெளிவாய் பேசிய பிரேமாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் லக்ஷ்மி.

" கொஞ்சம் எல்லோரும் என் கூட பொறுமையா வாங்க.... எங்க குடும்ப நண்பர் ஒருத்தர் பிரைவேட் டிடெக்ட்டிவ் ஏஜென்சி வெச்சு நல்லா நடத்தறார்... அவர் கிட்டப்போய் சொல்லுவோம்... ஏதாவது தீர்வு கிடைக்கும். போலீசை மட்டும் நம்பி இருந்தால் பிரயோஜனம் இல்லைனு தோணறது..." பாலாஜியின் அப்பா குரு சொல்ல

" சரிதான்... பார்ப்போம் " என்று கிளம்பினர் .அத்தியாயம் 4

"அர்ஜுன்... இவர் மிஸ்டர். கௌதம். ஸ்பெஷல் க்ரைம்ப்ரான்ச் . இந்தக் கேஸ் விஷயமா உங்களுக்கு துணையா இருப்பார்....எனக்கு முழு ஒத்துழைப்பு தேவை.... அந்தப் பசங்க எங்கேன்னு முதல்ல தேடுங்க.... ஒரு கிளு கூட கிடைக்கலேனா என்ன செய்யப்போறீங்க? ஒரு மணி நேரம் டிஸ்கஸ் பண்ணுங்க... எப்படி செயல்படுத்தப் போறீங்கன்னு எனக்கு தெளிவாய் ரிப்போர்ட் வேணும்... " கண்டிப்பாய் பேசிய கமிஷனர் வெளியே சென்றார்..

அர்ஜுனும், கௌதமும் தீவிரமாக ஆலோசித்தனர்.... ஏதோ முடிவிற்கு வந்தவர்களாய் வெளியே நின்ற கான்ஸ்டபில்ஸை அழைத்தான் அர்ஜுன்... கமிஷனரிடம் போனில் பேசிவிட்டு நால்வரும் ஜீப்பில் சென்றனர்..

ரஞ்சித்..... பிரைவேட் டிடெக்ட்டிவ்.... வெகு சுறு சுறுப்பாய் லாப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டே காபியை உறிஞ்சு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்...

" ஹலோ ரஞ்சித்... எப்படி இருக்கீங்க? இது இன்ஸ்பெக்டர் அர்ஜுன்...! மிகவும் நேர்மையானவர்..... உழைப்பாளி.... இப்போ ஒரு சிக்கலான கேஸ் ஹேண்டில் பண்றார்... நானும் இப்ப இவர் டீம்லதான் இருக்கேன்... ஒரு கொலை, மூன்று மிஸ்ஸிங்.... 16 நாள் ஆயிடுற்து ... ஒரு கிளு கூட கிடைக்கலே.... 4 பசங்க... ஒண்ணா படிச்சவங்க....உங்க மூலமா போகலாம்னு யோசிச்சு வந்திருக்கோம்...."

"கெளதம் ..! ரொம்ப தாங்க்ஸ்.... கட்டாயமா பண்ணலாம்.... டீடெயில்ஸ் கொடுங்க முதல்ல.... அப்புறம்? இப்ப இந்த ப்ரொஜெக்டுக்கு 2 பேராவது வேணும்.... கிடைத்த உடனே ஆரம்பிச்சுடலாம்.... எங்க ஸ்டாப் எல்லோரும் வேற ப்ரொஜெக்ட்லே இருக்காங்க.... " ரஞ்சித் சொல்ல " கொஞ்சம் சீக்கிரம் ஆரம்பிச்சால் நல்லா இருக்கும்...."

" நிச்சயமா... " காபி சாப்பிட்டு விட்டு இவர்கள் புறப்பட்டனர்.அத்தியாயம் 5

"உன்னை தானே சொல்றேன்... உன் மரமண்டைக்கு ஏறலே ? தண்ட சோறு..... நல்ல உடம்பை வளர்த்து வெச்சுண்டிருக்கே... மூஞ்சியைப் பாரு எப்ப பார்த்தாலும் எண்ணெய் வழிஞ்சுண்டு.... அப்புறம் போதாக்குறைக்கு தாடி வேற ! போடா போ வெளியே நாலு இடத்திலே போய் ஒரு வேலையை வாங்கற வழியைப் பாரு..." அப்பாவின் சரமாரியான பேச்சுக்கள் காதில் விழுந்தாலும் அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை சரண்.

" ஏன்டி ... நீ கொடுத்த செல்லம்தான்.... எவ்ளோ சொல்லியும் அப்படியே நிக்கறான் பாரு..." பூமிநாதனின் பேச்சு ஒன்றும் புதுசு இல்லை... அவன் மனைவி பல்லவிக்கு இது பழகிப் போன ஒன்றுதான்....

" எதுக்குமா அப்பா இப்படி கத்தறா ? நான் இந்த வீட்டிலே இருக்கட்டுமா வேண்டாமா? என்னமோ வேலை கிடைத்து நான் போகமாட்டேன்னு சொன்னா மாதிரி குதிக்கறா? ஒரு வேலையும் கிடைக்கலே.... 2 வருஷமா நான் தேடாத இடம் இல்லை... உனக்கு தெரியாது....?" கொஞ்சம் சத்தமாய் பேசிய சரண் " சே...! இங்க இருக்கறதுக்கு எங்கயாவது போலாம் " கையில் இருந்த தட்டை கீழே போட்டுவிட்டு பின்புறம் சென்று தோய்க்கும் கல் மீது உட்கார்ந்தான்....

"சரண்..! நான்தாண்டா மதன் பேசறேன்....ஹேய் ... ஒரு சின்ன ப்ராஜெக்ட்... எங்க மாமா ஒரு டிடெக்ட்டிவ் ஏஜென்சி வெச்சு நடத்தறார்... அவருக்கு இப்ப ஒரு ப்ராஜெக்ட் .வந்திருக்கு.. அஸ்சிஸ்ட் பண்ண ஆள் தேவையாம்... வரியா? நானும் நீயும் சேரலாம்... முடிஞ்சதும் வேற ப்ரொஜெக்ட்டுக்கு .கூப்பிடுவார்.. இதுக்கு ரூ. 20000/- அட்வான்ஸ் ரூ. 5000/- கொடுப்பார். யோசிச்சு இன்னிக்கு நைட் குள்ள சொல்லணும்.... என்ன? " அவன் பேசிக்கொண்டேப் போனான்.... சரணுக்கு நம்ப முடியவில்லை... சிறுவயது முதலே இந்த வேலை மிகவும் பிடிக்கும். கனவும் கூட...

அலறி அடித்துக் கொண்டு போய் அம்மாவிடம் விஷயத்தை சொன்னான்... அம்மா முகம் மலர்ந்தது.... அப்பா " அமாம். உன்னை நம்பி ஒருத்தன் இருக்கான் பாரு...! "

மனதிற்குள்... " நல்லபடியா முடியனும்..." என்று நினைத்துக் கொண்டார்..

விளக்கேற்றி பிரார்த்தனை செய்தாள் அம்மா... சரணுக்கு மனதில் ஒரு வித பலம் பிறந்தது... " மதன் நான் வரேண்டா..." உற்சாகமாய் சொன்ன சரணிடம் " குட்... நான் நைட் போன் பண்றேன்.." என்றான் .
அத்தியாயம் - 6

" யாரு நீங்களெல்லாம்..? எங்களை போட்டு ஏன் இப்படி சித்திரவதைப் பண்றீங்க? நாங்க என்ன தப்பு பண்ணோம்? ஒரு போன் கூட பண்ண விடாம? எங்க வீட்டிலே தேடமாட்டாங்க? மனுஷங்களா நீங்க? " சுதிர் ஆக்ரோஷமாக கத்த " ஏய்... வாயை மூடு.... இல்லை நாக்கிலே சூடி இழுத்திடுவேன்? என்னடா கேட்டே? என்ன தப்பு பண்ணோம்னா? வேண்டாம்... சாப்பாட்டை சாப்டுட்டு மரியாதையா ஓரத்திலே உட்காருங்க... " மிரட்டியவன் ஒரு ரௌடி போல் இருந்தான்...

" என்னதான்டா உங்க பிரச்சனை ? 2 வாரத்துக்கு மேலா இங்க எங்களை அடைத்து வெச்சு.... எங்க கூட வந்த பிரென்ட் விக்னேஷ்க்கு என்ன ஆச்சுன்னே தெரியலே... நாங்க எங்க இருக்கோம்னு ஒன்னும் புரியலே... எதையாவது சொல்லித் தொலைங்களேன்..." வெறி பிடித்தவன் போல் பேசிய பாலாஜியின் கன்னத்தில் ஒரு அறைவிட்டான் ஒரு முரடன்....

கோபத்தில் "தூ! " என்று துப்பிய கமலேஷை ஒரு முறை முறைத்தான் அங்கிருந்த ஒருவன். ஒரு பிரயோஜனமும் இல்லை... மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்....

" டேய்... என்னை அடையாளம் தெரியுதா? " என்று கேட்டுக் கொண்டே வந்தவனை மூவரும் பார்த்து அதிர்ந்தனர்....அத்தியாயம் - 7

"எப்படி இருக்கீங்க குரு? பாலாஜி என்ன பன்றான்? படிப்பு முடிச்சாச்சா? இவங்க எல்லோரும் யாரு ? " கேள்விகள் மேல் கேள்வி கேட்டார் ரஞ்சித் ... அதே டிடெக்ட்டிவ் ஏஜென்ட் ...

" உன்னை தொந்தரவு செய்யறதுக்கு மன்னிக்கவும்.... என் பையன் பாலாஜி மற்றும் ரெண்டுப் பேரைக் காணோம்... அவன் நண்பன் விக்னேஷை யாரோ கொலை பண்ணிட்டாங்க... அவன் பாடி கிடைச்சிருக்கு... இவங்க மூணு

பேரும் என்ன ஆனாங்கனு தெரியலே.... 2 வாரத்துக்கு மேலாகுது.... போலீஸ் விசாரிக்கறாங்க ஆனால் ஒரு துப்பும் கிடைக்கலே... ரொம்ப பயமா இருக்கு... அதான் நீ ஏதாவது உதவ முடியுமான்னு கேட்க வந்தோமபபா..."

"உம...! இந்த கேஸை இன்ஸ்பெக்டர் அர்ஜுன் டீல் பன்றாரே அதுவா? " ஆச்சரியத்துடன் கேட்டார் ரஞ்சித்..

" ஆமாம்..! உனக்கு எப்படி ? " ஒன்றும் புரியாமல் குரு கேட்க

"இப்பதான் 1 மணி நேரம் முன்னாடி இங்க வந்து இந்தக் கேஸை என்னை பார்க்க சொல்லிருக்காங்க.... ஒ.. அப்ப அதிலே மிஸ்ஸிங் ஆனது நம்ம பாலாஜி! ரொம்ப வருத்தமா இருக்கு....

"உங்களுக்கு யார் பேரிலாவது சந்தேகம் இருக்கா? " ரஞ்சித் கேட்க..

" ரஞ்சித்... நான் உண்மையை சொல்றேன்... ஒரு ஆபத்தும் இல்லாமல் நீதான் காப்பாத்தணும்.."

"தயங்காம சொல்லு குரு... ஏதாவது சொன்னால் தான் நான் விசாரிக்க முடியும்... "

" பிரின்சிபால் எங்க எல்லாரையும் கூப்பிட்டு இந்தக் கொலை , மிஸ்ஸிங் இதற்கு அவரோட கல்லூரி எந்த வகையிலும் பொறுப்பு இல்லைனு எழுதி தர சொல்லி மிரட்டி எங்களை கையெழுத்து போட்டு வாங்கிட்டார்.... வேறு வழி இல்லை... " கலங்கிய கண்களோடு குரு கூற அவரை அன்போடு அணைத்து " அழாதே குரு... நான் பார்த்துக்கறேன்... " ஆதரவாக கூறினார் ரஞ்சித்...

ஒன்னும் கவலைப் படாதீங்க.... கண்டு பிடித்திடலாம்... நீங்க போய் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க . நாளைக்கு ஒரு தெளிவான தகவலோடு உங்களை பார்க்கிறேன்..." தெளிவாகவும் அழுத்தமாகவும் பேசினார் ரஞ்சித்...


அத்தியாயம் - 8

"உண்மையை சொல்லுங்க ப்ரின்ஸிப்பால் சார்... இந்த 4 பேருமே உங்க கல்லோரிலேதான் படிக்கறாங்க...அதிலே ஒருத்தன் கொடூரமா கொலை செய்யப் பட்டிருக்கான்...மிச்ச 3 பேரும் காணலே . எங்கே இருக்காங்க... உயிரோடு இருக்காங்களா ? ஒரு தகவலும் இல்லை.... நீங்க இந்த கேஸ்ல உதவி செய்தே ஆகணும்..." ரஞ்சித் சற்று கடுமையாகப் பேசினார்.

" என்ன மிரட்டறீங்க? நீங்க ஒன்னும் போலீஸ் இல்லை…. என்னமோ இந்தக் கல்லூரிக்குள்ளே கொலை நடந்தா மாதிரி பேசறீங்க? இது புனிதமான இடம்... மாணவ மாணவிகள் படிக்கும் இடம்... இந்த மாதிரி விசாரணை, அது இதுன்னு சொல்லி எங்க பெயரை கெடுக்க பார்க்காதீங்க... இப்ப அட்மிஷன் டைம் ... நாங்க ரொம்ப பிசி..." அலட்சியமாகப் பேசிய பிரின்சிபால் அங்கிருந்து நகர முயற்சிக்க....

" கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.... நான் ஒன்னும் சும்மா வரலே... போலீஸ் ஆர்டர் பேரிலே வந்திருக்கேன்... இந்தக் கேஸ் இப்ப என் கையிலே... இப்ப என் உதவியாளர்கள் ரெண்டுப் பேரு வருவாங்க .... மதன், சரண் ... அவங்க உங்க ஸ்டுடென்ட்ஸ் அதுவும் அந்தப் பசங்க கூட படிச்சவங்களோட பேச அனுமதிக்கணும்... புரியுதா... ? இந்தாங்க போலீஸ் ஆர்டர்.... " ரஞ்சித் கண்டிப்பாய் பேசியது சற்று பயத்தை வரவழைத்தது ப்ரின்சிபாலுக்கு ..!

"எதுக்குயா பயப்படறே? நான்தான் பார்த்துக்கறேன்னு சொல்றேன்ல? நீ வாயை மூடிண்டு சும்மா இருந்தால் போதும்..." மினிஸ்டர் மிரட்ட பிரின்சிபால் " அட போங்க... அந்த ஆளு 6 அடி 2 அங்குலம்... குரல் பயங்கரமா இருக்கு... ஒரு நிமிஷம் ஆடியே போய்ட்டேன்... போலீஸ் ஆர்டர் கையிலே கொடுத்திட்டு போயிட்டார்..... இப்ப கொஞ்ச நேரத்திலே 2 பசுங்கவேற வருவார்களாம்... என்ன நடக்கப் போகுதோ? தலையை சுத்தறது.... இந்த ஸ்டுடென்ட்ஸ் வேற எதையாவது உளறிட்டா? " பயத்தோடு பேசினார்.

" நீங்க சும்மா இருந்தால் போதும்... " மினிஸ்டர் சொல்லிவிட்டு போனை கீழே வைத்தார்...

"உங்களுக்கு இந்த நாலு போரையும் தெரியும் இல்லையா? என்ன நடந்ததுன்னு சொல்லுங்க... ..உங்க கூட படிச்சவங்க...அதிலே ஒருத்தன் கொலை செய்யப்பட்டிருக்கான்... மத்த 3 பேருக்கு என்ன ஆச்சுன்னே தெரியலே.... நீங்க வாயைத் திறந்தால்தான் அவங்களை கண்டுபிடிக்க முடியும்..." மதன் பேச சரண் அங்கு இருந்த மற்றவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்...

யாரும் வாயைத் திறக்கவில்லை.... " எங்களுக்கு ஒன்னும் தெரியாது " என்கிற பதிலளித்ததை தவிர வேறொன்றும் கிடைக்கவில்லை... 1 மணிநேரம் விசாரித்து விட்டு ப்ரயோஜனமின்றி வெளிவந்தனர் இருவரும்...

"என்ன அர்ஜுன்...? கேஸ் ரொம்ப தீவிரமா போகுது... டிடெக்ட்டிவ் ஏஜென்சி எல்லாம் இறங்கி இருக்காங்க... நீயே காண்பிச்சு கொடுத்திடுவே போல இருக்கே... சொன்னது ஞாபகம் இருக்குல்ல? குழந்தை உயிர் என்கையில்... மறக்காதே.... ! " மந்திரி மிரட்ட " இது அக்கிரமம்... இன்ஸ்பெக்டரையே மிரட்டறீங்க... என்னையா இது சோதனை? " என்ன செய்வதென்று புரியாமல் தவித்தான் அர்ஜுன்...

20 நிமிடங்கள் கண்களை மூடி தீவிரமாய் யோசித்தான்... ஒரு முடிவிற்கு வந்தவனாய் கிளம்பினான்... அர்ஜுன்

வெளியேறுமுன் ரஞ்சித் நுழைய " வாங்க ரஞ்சித்...! உங்களை பார்க்கத்தான் கிளம்பினேன்..." என்று வரவேற்றான்.

" என்ன விஷயம் அர்ஜுன்? ""கேஸ் விஷயமாத்தான்... " என்று இழுத்தான்.


அத்தியாயம் - 9


"ரஞ்சித் ... நான் மனம் திறந்து பேச விரும்பறேன் ஆனால் சுருக்கமாக... பயங்கர டென்ஷன்ல இருக்கேன் நான்.... என் 5 வயசு பையன் உயிர் இப்ப அந்த மினிஸ்டர் லிங்கம் கையிலே... விக்னேஷ் பாடி கிடைத்து அந்த கேஸை நான் டீல் செய்யறேன்னு தெரிஞ்ச உடனேயே அந்த மினிஸ்டர் என்னைக் கூப்பிட்டார்.... மிரட்டினார்... "கேஸை ஏதாவது செய்து கிளோஸ் பண்ணு . இல்லைனா உன் குழந்தையை உயிரோடு பார்க்க முடியாது.." எனக்கு ஒன்னும் புரியலே.... ஸ்கூலுக்கு அனுப்பிலே குழந்தையை... வீட்டிலே சொன்னால் ரொம்ப பயந்திடுவாங்க.... தப்புதான்.... கமிஷ்னர் கிட்ட சொல்லி இருக்கணும்... ஆனால் அவன் திரும்ப கூப்பிட்டு " ஏய்... அர்ஜுன்... இதை கமிஷ்னர் கிட்ட சொன்னே அவ்வளவுதான்.... புரியுதா?" என்றான்... 4 நாள் முன்னாடி ஒரு லெட்டர் எங்க வீட்டு லெட்டர் பாக்ஸ்ல " இந்த கேஸ்லேர்ந்து விலகிக்கோ.." அப்படினு....

எனக்கு ஒவ்வொரு முறையும் அந்தப் பசங்க பெத்தவங்களைப் பார்க்கும் பொழுது ரொம்ப கஷ்டமாக .. இருக்கும்... இவ்வளவு கோழையா இருக்கேனேனு வருத்தப் பட்டேன்... உங்ககிட்ட கேஸ் கொடுத்ததிலே ஒரு திருப்தி .

இந்தக் கொலை, மிஸ்ஸிங் கேஸ்லே அந்த மினிஸ்டர் சம்மந்தப் பட்டிருப்பார்னு தோணித்து... அதை கமிஷ்னர் கிட்ட சொல்லிடலாம்னு முடிவு பண்ணி உங்களை பார்க்க புறப்பட்டேன் ..என் குழந்தைக்கு ஆபத்துதான்... ஆனால்? நான் பயப்படறது முட்டாள்தனம்... “

ஒரு நிமிடம் மூச்சு விட்டான் ...

"உம்ம்ம்..! அர்ஜுன்.... நானும் ஒரு விஷயம் சொல்லணும்... பேரெண்ட்ஸ் எல்லோரையும் மிரட்டி அந்த பிரின்சிபால் கல்லூரிக்கும் இந்த கேஸிற்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு எழுதி கையெழுத்து வாங்கி இருக்கார்... அவர் மேலே தப்பு இல்லைனாலும், உண்மை எதுவும் தெரியாது என்றாலும் ஏன் இப்படி செய்யணும்? அப்போ ? மினிஸ்டருக்கும் , ப்ரின்சிபாலுக்கும் லிங்க் இருக்கு... ரெண்டு பேருக்குமே ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்கு.. அப்படித்தானே?

"கரெக்ட்... நீங்க காலேஜ் போனீங்களே...? என்ன அச்சு? ஒரு விஷயமும் தெரியலியே? " அர்ஜுன் வினவ...

" ஆமாம்... ஆனால் இப்ப திரும்ப போவோம்.... இப்ப விசாரிப்பு வேறு மாதிரி இருக்கும். கமிஷ்னர் கிட்ட இன்போர்ம் பண்ணுங்க... நாம கிளம்பலாம்..." ரஞ்சித் கூற புறப்பட்டனர்...


அத்தியாயம் - 10

கமிஷனரிடம் தெளிவாகவும், உறுதியாகவும் பேசினான் அர்ஜுன்... தான் செய்த தவறையும் சொல்லி மன்னிப்புக் கோரினான்...

" இப்ப அதுக்கெல்லாம் நேரம் இல்லை அர்ஜுன்.... நடக்கப் போவதைப் பாருங்க.... உங்க வீட்டிற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு கொடுங்க... பயப்பட வேண்டாம்.... நான் உடனே காலேஜ் வரேன்... " சொல்லிவிட்டு புறப்பட்டார்.

" உண்மையை சொல்லப் போறீங்களா இல்லையா? " ரஞ்சித் கேட்க...." இனி தப்பிக்க முடியாது சார்... கொலைக்கு துணை போனதா உங்களை அரெஸ்ட் பண்ண என்னால முடியும்.... உங்களை போன்ற ஒருத்தர் இப்படி இருந்தால் எப்படி நம்ம சமுதாயம் உருப்படும்? " கமிஷ்னர் சொல்லிக்கொண்டே தன் துப்பாக்கி முனையில் ப்ரின்சிபாலை விசாரணைக்காக கூட்டிச் சென்றார்...

"சொல்லுங்க... உங்களுக்கும் மினிஸ்டருக்கும் என்ன சம்மந்தம்? எதுக்கு பேரெண்ட்ஸ் கிட்ட மிரட்டி கையெழுத்து வாங்கினீங்க? உண்மையை ஒத்துண்டா தப்பிச்சீங்க. இல்லை? அட்மிஷன் டைம் . என்ன ஆகும்னு தெரியுமா? " ரஞ்சித் மிரட்ட

2 மணி நேர விசாரணைக்குப் பிறகு

"சொல்லிடறேன்.... என்னை அடிக்காதீங்க... அந்த 3 போரையும் என்னோட துறையூர் பங்களால தான் அடைச்சு வெச்சிருக்கான் நரேன்.... ! .மினிஸ்டர் பையன்... மினிஸ்டர் என்னை மிரட்டி இதை பண்ணாரு... இல்லைனா என்னோட காலேஜ் லைசென்ஸ் கான்செல் பண்ணிடுவேன்னு மிரட்டினார்... என்ன செய்யச் சொல்றீங்க? அதான் இடம் கொடுத்தேன்.... காலேஜுக்காக 10 லட்சம் கொடுத்தார்..." அழாதைக் குறையாக சொன்னார் பிரின்சிபால்..

" சீ... என்னய்யா இது? ஒரு கல்லூரி நிர்வாகி செய்யற வேலையா இது? யாரு அந்த நரேன்? அவனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம்? அப்போ விக்னேஷ் கொலை? " வெறித்தனமாய் கேட்ட ரஞ்சித் திரும்புவதற்கும் அங்கு கமிஷனர் வருவதற்கும் சரியாக இருந்தது...

"என்ன ரஞ்சித்... என்ன சொல்றாரு ப்ரினிப்பால்...? " கமிஷ்னர் கேட்க... " முதல்லே இவரோட துறையூர் பங்களாவில் அடைத்து வெச்சிருக்கிற அந்த 3 போரையும் காப்பாத்தணும்.... சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க... ! விஷயம் தெரிஞ்சு எங்கயாவது திரும்ப கடத்திடப் போறாங்க.... " ரஞ்சித் அவசரப் படுத்த....

" எஸ்.. நான் பண்றேன் " என்று கூறி போனில் பேசினார் கமிஷ்னர்...

"உம் ..! சார் அப்புறம் அந்த லிங்கம் மினிஸ்டர் அவரை விசாரணைக்கு கூப்பிடனும்...அவர் எங்கேயும் தப்பிக்காமல் பாருங்க...." ரஞ்சித் சொல்ல " நான் கிளம்பறேன் " அர்ஜுன் கான்ஸ்டபிள் கூட கிளம்பினான்...

" சொல்லுங்க.... கொலை பற்றி என்ன தெரியும் ? நரேனிற்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்? " மிரட்டினார் கமிஷ்னர்...

" அவனும் எங்க காலேஜிலே படிக்கிறான்... கொலை பற்றி எனக்கு தெரியாது.... 3 பேருதான் அங்க இருப்பாங்கன்னு சொன்னார் மினிஸ்டர்... வேற ஒண்ணுமே தெரியாது.... " பயத்தில் அவர் முகம் மாறுவது தெரிந்தது ரஞ்சித்திற்கு....

"மாமா... நான் மதன்... இங்க ஸ்டுடென்ட்ஸ் கிட்ட விசாரிச்சப்ப நரேனுக்கும் விக்னேஷிற்கும் ஏதோ தகராறு இருந்திருக்குன்னு தெரியறது... நீங்க கொஞ்சம் ப்ரின்சிபாலை விசாரியுங்க விஷயம் தெரியும்..."

போனை வைத்துவிட்டு ரஞ்சித் " ஐயா... உங்க பசங்க காலேஜிலே எல்லா உண்மையையும் சொல்லிட்டாங்க.... நீங்க உங்க வாயைத்திறந்து எங்க விசாரணைக்கு ஒத்துழைத்தால் தப்பிச்சீங்க... இல்லைனா? கொலைக்கும், ஆள் கடத்தல் கேஸ்ல உங்களுக்கும் சம்மந்தம் இருக்குன்னு அர்ரெஸ்ட் பண்ண சொல்லிடட்டுமா? "

"சும்மா மிரட்டாதீங்க..! " பிரின்சிபால் கத்த

"அப்போ எதுக்கு 10 லட்சம்? உங்க பங்களாலே அந்த 3 போரையும் தங்க இடம் கொடுத்தீங்க?" கமிஷ்னர் கேட்க

"அதான் சொன்னேனே? என்னை மிரட்டினாருன்னு?

"நரேனுக்கும், விக்னேஷிற்கும் என்ன தகராறு? " ரஞ்சித் கேட்க

"ஒன்னும் இல்லையே ! " மறுத்தார் பிரின்சிபால்

லத்தியை கமிஷ்னர் கையில் எடுப்பதைப் பார்த்து பயந்த பிரின்சிபால் " சொல்லிடறேன்... " என்று கத்தினார்..

"எங்கள் கல்லூரியில் படிக்கும் நரேன்...மந்திரியோட பையன்..... எல்லா வம்பு தும்புகளுக்கும் முதலில் நிற்பான்....

சென்ற வருடம் ஒரு தகராறில் மாதுரி என்கிற மாணவி கிட்ட தவறாக நடந்து கொள்ள முயற்சித்து தோற்று மறுநாள் அவ முகத்தில் ஆசிட் வீச முற்படும் பொழுது விக்னேஷ் ஹீரோ போல் இவனை அடித்து தடுக்க அன்றே சபதமிட்டான் நரேன் " உன்னை என்ன செய்யறேன் பாரு... ! நான் யாருன்னு தெரியும்ல? ஒரு வார்த்தை எங்க அப்பாகிட்ட சொன்னால் போதும் ! " வீராப்பாய் பேசியவன் ஒன்றும் சும்மா இல்லை... போலீஸில் புகார் செய்தான்.... ஆனால் நான்தான் கல்லூரி பெயர் கெட்டுவிடும் என்று கூறி கேஸை முடித்து விட்டேன்

விக்னேஷை கூப்பிட்டு கண்டிப்பாக " உனக்கென்ன பெரிய ஹீரோன்னு நினைப்பா? அவனை எல்லாம் பகைச்சிண்டு? போடா... போய் படிக்கிற வேலையைப் பாரு... " என்று கூறி அனுப்பினேன்...

சுதிர், பாலாஜி, கமலேஷ் மூவரும் என்னிடம் விக்னேஷ் தவறு செய்யவில்லை என்று எவ்வளவோ எடுத்துக் கூறினர்.... ஆனால் நான் " இது கடைசி எச்சரிக்கை... அடுத்த தடவை இது போல நடந்தது, உங்க அப்பா, அம்மாவை கூப்பிட்டு உடனே டீ.சி. கொடுத்து அனுப்பிச்சிடுவேன்... போங்க...! "

அப்புறம் பல முறை இவர்களுக்கு தொந்தரவு கொடுத்தான் நரேன்... மாதுரி பயந்து அவ அப்பா ட்ரான்ஸபெர் வாங்கி ஹைதெராபாத் சென்று விடடா 4 மாசம் முன்னாடி......

.அதன் பிறகு கொஞ்சம் அமைதியாகத்தான் சென்றது நாட்கள்...


அத்தியாயம் - 11

இரண்டு மாதங்கள் முன் போதை மருந்துகளை கொண்டு வந்து கல்லூரியில் சக மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் விற்பனை செய்ய ஆரம்பித்தான் நரேன்.... இதைக் கண்டிக்கப் போன விக்னேஷை கீழே தள்ளி அவன் காலில் ஓங்கி அடித்தான்... வலி தாங்க முடியாமல் தவித்த அவனை இவர்கள் மூவரும்தான் உதவி செய்து கூட்டிச் சென்றனர்...

விஷயம் பரவலாக வலைத்தளங்களிலும் மீடியாவும் பரவ நான் வேறு வழி இன்றி நரேனை கூப்பிட்டு கண்டித்தேன்.... மினிஸ்டரைப் பார்த்து விவரத்தை சொன்னேன்... மினிஸ்டர் மகனிடம் பேசி இனி இது போல் காரியத்தில் ஈடுபடாத என்று கூறினார்... என் கண் முன்னாலேயே கொதித்தான் நரேன்... " என்னப்பா.. அந்த பிரின்சிபால் பேச்சைக் கேட்டு இப்படி சொல்றே? உனக்கு பவர் இல்லையா? " என்றான் கோபமாக...

" டேய் ... நிறுத்துடா...ஏன்டா ? போதைப் பொருள் எல்லாம் காலேஜிலே ? வெளியே வெச்சுக்கோ... சிக்கலாயிடும்... "

" சரி.. சரி... " ஒப்புக்கு சொல்லிவிட்டு நகர்ந்தான்...

நரேனின் கோபம் இன்னும் அதிகமானது.... விக்னேஷைக் கண்டால் சுட்டுவிடுபவன் போலவே பார்ப்பான்... சிறு வயது முதலே தான் நினைத்ததை செய்யும் குணம் இருந்த நரேனுக்கு இது ஒரு சவுக்கடிபோல் இருந்ததை அவனால் தாங்க முடியவில்லை...10 நாட்கள் கழித்து ஒரு நாள்

கேன்டீனில் விக்னேஷ் சாப்பிடும் காபியில் போதை மருந்து கலந்து வைத்து அதை அவன் சாப்பிட ... கேன்டீனில் பெரும் ரகளை ஆனது...

இதை செய்தது நரேன் என்று தெரிந்தவுடன் அவனை அடித்து விட்டான் விக்னேஷ்...

பாலாஜி, கமலேஷ் மற்றும் சுதிரும் கூட அடித்தனர்... தன் தோழர்கள் முன் தன்னை அடித்த இவர்களை பழிவாங்க துடித்தான்..."

திடீர்னு அன்னிக்கு ராத்திரி 10 மணிக்கு மினிஸ்டர் கிட்டேர்ந்து போன் வந்தது... " என் பையன் விக்னேஷை கொன்னுட்டான்... ஆத்திரம் அவனுக்கு.. எவ்வளவோ நான் புத்தி சொன்னேன்...பண்ணிட்டான்... அந்த 4 பசங்க ஏதோ படம் பார்த்துட்டு வந்தார்களாம். இவனைத் தனியாக கூட்டிட்டுப் போய் கொன்னுட்டான்... இப்ப அந்த 3 போரையும் கண்ணை கட்டி கார்லே கூட்டி போயிருக்கான்... அவங்களை அடைக்க ஒரு இடம் வேணும்... 2 வருஷம் முன்னாடி உனக்கு துறையூரிலே பங்களா வாங்கித்தந்தேன்ல அது இப்போ இவங்களை அடைச்சு வைக்க வேணும்.... ஏற்பாடு பண்ணு .. ஏதாவது எக்கு தப்பா பண்ணே ? முடிஞ்சிடும்... " மிரட்டுவது போல் பேசினார்... எனக்கு வேறு வழி இல்லை... என் தம்பியை அனுப்பி திறந்து விட்டேன்... " நெஞ்சு பட படைக்க பேசிய பிரின்சிபால் தண்ணீர் கேட்டார்...

" அந்தப் படுபாவி கொலை செய்யற வரைக்கும் போவான்னு நிஜமா எனக்கு தெரியாது.... எனக்கு பயம் வந்தது.... பதட்டத்தில் என்ன செய்யறதுன்னு தெரியலே.... அப்ப திரும்பவும் லிங்கத்துக்கிட்டேர்ந்து போன் வந்தது... " நான் சொன்ன விஷயம் நமக்கு மட்டும் தான் ... மூச்சு விட்டே? அவ்வளவுதான்... முதல்ல உன் காலேஜ் லைசென்ஸ் போயிடும்... அப்புறம் உன் பையன் படிக்கறான்ல... அவனை என்ன செய்வேன்னு தெரியாது... மரியாதையா நான் கொடுக்கிற 10 லட்சத்தை வாங்கிண்டு ஒழுங்கா வாயை மூடிண்டு இரு.. அது போறும்... போலீஸ் , பேரெண்ட்ஸ் யார் வந்து கேட்டாலும் ஒன்னும் சொல்லாதே.... நான் பார்த்துக்கறேன்..."

நானும் அதுபடி நடந்துண்டேன்...


அத்தியாயம் - 12

கெளதம் , மதன், சரண் மற்றும் 4 கான்ஸ்டபிள்ஸ் விரைந்தனர் துறையூருக்கு.... இவர்கள் வருவது அறிந்து அங்கிருந்து தப்பித்தான் நரேனும் அவன் கூட்டாளிகளும்... பத்திரமாக மூவரையும் மீட்டனர்... அவர்களை மிகவும் கடுமையாக தாக்கியுள்ளனர்....

விக்னேஷின் விஷயம் அறிந்து மூவருக்கும் அதிர்ச்சி... கதறி, கதறி அழுதனர்....

" சே....! நரேன் கிட்ட மோதாதேனு அடிச்சுண்டேன்... கேட்டானா இந்த விக்னேஷ்... அநியாயமா போய்ட்டானே ? "நரேனை விடாதீங்க.... ப்ளீஸ்... எங்களையும் எப்படி கொடுமை படுத்தினான்.... இதோ பாலாஜிக்கு தலையிலே பலத்த அடி . என் காலிலே வெட்டு.... என்ன இவங்களெல்லாம்? படிக்கவா வராங்க காலேஜுக்கு? பவர், பவர்... என்ன இது நாடு ? " பொருமினான் கமலேஷ்...

"முதல்லே இவங்களை ஹோச்பிடல்லே சேருங்க " என்றார் கெளதம் ...

"வேணாம் சார்... எங்களுக்கு மனசு சரியில்லை... முதல்லே அவன் அம்மாவை பார்க்கணும்... எத்தனை ஆசையா இருந்தாங்க தெரியுமா? பாவம்.. அவ்ளோ கஷ்டப்பட்டு இவனை படிக்க வெச்சாங்க.... " அழுதுகொண்டே சொன்னான் சுதிர்...

"இல்லை இல்லை... முதல்ல ஹாஸ்பிடல் போயிட்டு அப்புறம் போலாம்.. இந்த நிலைமையில் உங்க அப்பா , அம்மா பார்த்தாங்கனா ரொம்ப வருத்தப் பாடுவாங்க..." கெளதம் நிர்பந்தப் படுத்தி ஹாஸ்பிடல் அனுப்பி வைத்தான்...

செக்போஸ்டில் அர்ஜுன் கையில் மாட்டிக் கொண்டார் மினிஸ்டர் லிங்கம்....

நரேன் , மற்றும் அவன் கூட்டாளிகள் தப்பித்து ஒரு ரெசார்ட்டில் தங்கி இருந்தனர்.... அவன் புகைப்படம் எல்லா மீடியா, டீ.வி யில் கொடுக்கப் படவே ரெசார்ட்டிலிருந்து போலீஸிற்கு தகவல் சென்று அங்கு வந்து அவர்களை கைதி செய்து கூட்டி சென்றனர்...

" என்னடா பாலாஜி இந்த மாதிரி? ஏண்டா காலேஜில் ஏண்டா தகராறு? " ரஞ்சித் கேட்க

"அங்கிள்... ஒரு தப்பு நடக்கும் பொழுது பார்த்துண்டு இருக்க முடியலே.... விக்னேஷ் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டான்... அதுக்காக இப்படியா? அவனை அநியாயமா கொன்னுட்டாங்களே...? கேவி , கேவி அழுத அவனை கட்டி அணைத்து "டேய்... இதோ பாருடா.... நடந்தது நடந்துறது... இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம் ... திரும்ப ஒழுங்கா படிச்சு கடைசி வருஷம் முடிச்சுட்டு நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையிலே முன்னுக்கு வாங்க... " தைரியம் கொடுத்து அனுப்பினார் ரஞ்சித்..

விஷயம் கேள்விப்பட்டு மாதுரி அப்பாவோடு வந்தாள் ... தன் வருத்தத்தை தெரிவித்தாள் .

"என்னாலதானே விக்னேஷிற்கு இந்த கதி...? ஆண்டவா? " ஓ ! என்று அழுதவளை விக்னேஷின் அம்மா ஆறுதல் தந்தாள்..

ஒரு மாதம் கழித்து...

"ஜாக்கிரதையாக போய்ட்டு வாடா ! " சுதிர் அம்மா சொல்ல " சரிமா

" கமலேஷ், பாலாஜி ரெண்டு பேரும் கூட வறாங்களா ? "

"ஆமாம்.... வரேன்..." மீண்டும் புறப்பட்டான் கல்லூரிக்கு ...

"கிளம்புடா நேரம் ஆறது ..! டேய் ... சரண்... சீக்கிரம்..." அப்பாவின் குரல் கேட்க

"இதோ வரேன்பா...... நீ ஒழுங்கா மாத்திரை எல்லாம் சாப்பிடு... "

"சும்மா அவனை திட்டிண்டு இருந்தீங்க... இப்ப பாருங்க... என்ன பொறுப்பாக இருக்கான் " அம்மா பெறுமைப் பட...." அவன் என் பிள்ளைடீ.." அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார்...

"என்ன டிடெக்ட்டிவ் வேலை பிடிச்சிருக்கா?" அப்பா கேட்க.... " ரொம்ப பிடிச்சிருக்குப்பா...

உற்சாகமாய் சொன்ன சரணை பெருமிதத்தோடு பார்த்தார் அப்பா..


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.