நண்பேன்டா


கிருஷ்ணாவும் –அருணும் இணை பிரியாத நண்பர்கள் ….இவனுங்க தனியா இருந்ததுன்னா அவங்க அம்மா கருவறையில் மட்டும் தான் ….பக்கத்து பக்கத்து வீடு திண்ணையை பிடிச்சு நடக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்தே ரெண்டு பேரும் திக் பிரெண்ட்ஸ். ஸ்கூல்ல இருந்து ,காலேஜ் வரைக்கும் ஏன் இப்ப ஒண்ணா வேலை பார்க்கிறது கூட ஒரே ஆபீஸ்ல தான் ….மாமா மச்சானை போல ஒற்றுமையா இருந்தானுங்க ….மணிரத்னம் இவனுங்களை பார்த்து தான் தளபதி படத்தை டைரக்ட் பண்ணாருன்னு கூட தோணும் ….இவன் இல்லாம அவன் இருக்க மாட்டான் ,அவன் இல்லாம இவன் இருக்க மாட்டான் ….ஊரே கண்ணு வைக்குற மாதிரி அவ்வளவு ஒற்றுமையா ரெண்டு பேரும் இருந்தாங்க ,கூட பொறந்த அண்ணன் தம்பிக்கிட்டே கூட இவ்வளவு ஒற்றுமையை பார்க்க முடியாது …நட்பின் அகராதியாய் ,நட்பின் அர்த்தமாய் இரண்டு பேரும் அன்பின் வடிவமாய் வாழ்ந்தனர் ….

ஒரு நாள் கிருஷ்ணா தன் அப்பாவின் பக்கவாதத்தை சரி செய்ய கேரளா செல்ல வேண்டியதாயிற்று .அருணும் கிருஷ்ணாவோடு செல்ல வேண்டி முற்பட்டான் .திடீரெனெ மானேஜர் அருணை ஆஃபீஸ்க்கு கண்டிப்பா வரணும் என்றார் …ஒரு பெரிய ப்ராஜெக்ட் இது மிஸ் ஆச்சுன்னா கம்பெனியோட வளர்ச்சியே போச்சு …..சந்தர்ப்ப சூழ்நிலையால் அருணால் கிருஷ்ணாவோடு செல்ல முடிய வில்லை ..நோ ப்ராப்பளம் டா மச்சான் …நீ நல்ல படியா ப்ராஜெக்ட் அட்டெண்ட் பண்ணு உன்னை நம்பி தான் நம்ம ஆபீஸ் இருக்கு நான் அப்பாவை தனியா கூட்டிட்டு போயிட்டு பத்திரமா வந்திடுவேன் என்றான் கிருஷ்ணா ….

கிருஷ்ணாவிடம் விடை பெற்று கொண்டு அருண் பைக்கில் ஆபீஸ்க்கு வேகமாக பறந்தான் ….மறுநாள் இரயிலில் தன் அப்பாவை கேரளாவிற்கு கூட்டி சென்றான் …திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சித்த வைத்திய சாலையில் தன் தந்தையை சேர்த்தான் ….

வைத்தியம் இரண்டு நாள் செய்யணும்மா அதனால் அவன் இரண்டு நாள் அங்கே தங்க வேண்டியதாயிற்று …அருணுக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆப் என்று பதில் வருகிறது …சித்த வைத்திய சாலையில் அப்பாவுக்கு வேறு வைத்தியம் நடந்து கொண்டிருந்தது ..இதுவரை அருண் இல்லாமல் கிருஷ்ணா தனியா இருந்ததே இல்லை ,அவன் இல்லாத தருணம் வெறுமை நிறைந்திருந்தது ,நிறம் இல்லாத வானவில் போல அவன் வாழ்க்கை இருந்தது …

சித்தவைத்திய சாலையில் கிருஷ்ணா அப்பாவுக்கு பலமணி நேரமாய் வைத்தியம் நடந்து கொண்டு இருந்தது ….இப்படியே தனிமையில் இருந்தால் ஏதேதோ எண்ணம் தோணும் அதனால் மனதை ரிலாக்ஸ் செய்ய அருகே உள்ள காட்டிற்கு கால் போன போக்கில் சென்றான் …காட்டில் தடை செய்ய பட்ட பகுதிக்கு எதிர் பாராத விதமாக அறிவிப்பு பலகையை படிக்காமல் தெரியாத் தனமாக சென்று விட்டான் ….ஒரு இடத்தில் கால் தவறி புதை குழி உள்ள இடத்தில் விழுந்தான் …கத்தினான் ,கதறினான் …அவன் உடல் கொஞ்சம் கொஞ்சமாக உள் இறங்கியது ,அந்த காடே அலறும் படியும் கத்தியும் ஒருவரும் வர வில்லை ….ஏன் எனில் அது ஆள் அரவமற்ற காடு ,ஆங்காங்கே நிறைய புதைகுழி உண்டு அதனால் யாரும் அந்த பகுதிக்கு செல்ல மாட்டார்கள் …அந்த புதைகுழி சேறு அவன் கழுத்து வரை நெருங்கியது ,இன்னும் சில நிமிஷங்களில் கிருஷ்ணா செத்து விடுவான் , என்பது ஊர்ஜிதம் ஆகி விட்டது ,கிருஷ்ணா கண்களில் இருந்து கண்ணீர் வர தொடங்கியது ,கண் இமைக்கும் நேரத்தில் ஒரு மரக்கிளையை ஒடித்து கிருஷ்ணா கரங்களை நோக்கி நீட்டினான் அருண் ,அதை பற்றி கொண்டு மேல வந்தான் கிருஷ்ணா ,வந்த வேகத்தில் அருணை கட்டி பிடித்து அழுதான் ,நீ வரலைன்னா என் வாழ்க்கையே போயிருக்கும் மாப்ள ,

என் நண்பேன்டா –நீ என்றான் … ஆமாம் எப்படி நீ இங்கே வந்த ???


ப்ராஜெக்ட் விஷயமா மானேஜர் கேரளா தான் அனுப்புனாரு,ப்ராஜக்ட்டை முடிச்சிட்டு நேரா சித்த வைத்தியசாலைக்கு தான் வந்தேன் நீ அங்கே இல்லாததாலே நீ இங்கே தான் வந்திருப்பேன்னு ஒரு ஊர்ஜிதத்துல வந்தேன் அது மாதிரியே நீ இங்கே தான் வந்து இருந்த ,நான் வந்ததும் ஒரு வகையில நல்லதா போச்சு ,சரிடா மாப்ள பத்திரமா நீ சித்த வைத்தியசாலைக்கு போ ,எனக்கு ப்ராஜெக்ட் வேலை கொஞ்சம் பாக்கி இருக்கு, நாளைக்கு நம்ம ஊர்ல சந்திப்போம் என்று சொல்லி விட்டு அருண் சென்று விட்டான் ….

ஒரு நாள் கழித்து கிருஷ்ணா தன் அப்பாவை அழைத்து கொண்டு ஊருக்கு சென்றான் அங்கு அருண் வீட்டில் சொந்த காரங்க நிறைய பேர் கூடி இருந்தாங்க ,என்னமோ ஏதோ என்று பயந்து போய் கிருஷ்ணா அருண் வீட்டுக்கு ஓடினான் .வாடா ராசா வா எப்ப பார்த்தாலும் ஒண்ணாவே சுத்துவீங்களடா ,ஊரு கண்ணே உங்க மேலதானடா ,எப்ப பார்த்தாலும் கிருஷ்ணா ,கிருஷ்ணான்னு தானடா சொல்லுவான் நம்ம அருண்..இப்ப பார்த்தியாடா கிருஷ்ணா நம்ம அருண் நம்மளை ஏமாத்திட்டு ஆண்டவன்கிட்டே போயிட்டான் என்று அருண் அம்மா ஒப்பாரி வைத்தாள் …அங்கே சுவற்றில் அருண் புகைப்படத்திற்கு மாலை இடப்பட்டு இருந்தது ….

நல்லா இருந்த புள்ளைங்க ,இந்த படு பாவி மேனேஜர் ப்ராஜக்ட்ன்னு சொல்லி நடு ஜாமத்துல கூப்பிட்டான் ,பைக்ல வேகமா போன புள்ளைய லாரிக் காரன் காவு வாங்கிட்டான் ,ஸ்பாட்ல புள்ள உசுரு போயிடிச்சு ,போலீஸ் ,போஸ்ட் மார்ட்டம் னு ரெண்டு நாளா அலைய விட்டு நேத்து தான் உடல்ல கொடுத்தானுங்க என்று சில சொந்தக்காரர்கள் பேசி கொண்டு இருந்தனர் ….அந்த வார்த்தைகள் கிருஷ்ணாவின் காதுகளுக்குள் வேகமாக ஒலித்தது ,அருண் மூன்று நாளைக்கு முன்பே செத்துட்டான் ,அப்ப என்னை நேத்து காட்டுல காப்பாத்தினது யாரு …..????அருணா ???ஆவியா ????

அப்போது சுவற்றில் மாட்டிருந்த அருணின் புகைப்படம் கிருஷ்ணாவை பார்த்து புன்னகைத்தது....

கிருஷ்ணா மௌனமாய் பேயறைந்தது போல் சிலையாய் நின்றான் ….


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.