இன்னைக்கு அது வேண்டாங்க ....

நண்பர்களுடன் சேர்ந்து வயிறு முட்ட குடித்தது மட்டுமின்றி முனியாண்டி விலாஸில் எல்லா அசைவ பட்சிகளையும் தொண்டை குழி வர திண்ணு விட்டு அந்த பலான படம் ஓடும் திரையரங்கில் தன் காம போதையையும் ஏற்றி கொண்டு இருந்தான் ...பாதி படத்திலேயே அங்கிருந்து கிளம்பினான் சண்முகம் ..தன்னுடைய டிவிஎஸ் -50 -யை எடுத்து கொண்டு நேராக வீட்டிற்கு வந்தான் ...வந்ததும் வராததுமாக கை-கால் கழுவாமல் கூட தன்னுடைய மனைவி வடிவுவை அறைக்கு கூப்பிட்டான் ...

எனக்கு உடம்பு சரியில்லைங்க ..நான் அத்தை கூட படுத்துகிறேன் ..இன்னைக்கு அது வேண்டாங்க ப்ளீஸ் கை ,கால் கழுவிட்டு ரூம்ல போய் நீங்க தூங்குங்க என்றாள்...அவள் சொன்னதும் தான் தாமதம் வெறிபிடித்தவனாய் அவளுடைய தலை முடியை பிடித்து தர ,தர வென அறைக்குள் இழுத்து சென்று தன்னுடைய காம வெறியை மிருகத் தனமாய் தீர்த்து கொண்டான் .

அவனுடைய போதையும் -காமவெறியும் கட்டின பொண்டாட்டிக்கிட்ட கூட மிருகத்தனமாய் நடக்க வச்சது ..மறுநாள் சண்முகத்துக்கு வாந்தியும் -பேதியும் ஒரு சேர வந்தது ...காய்ச்சல் வேறு தீவிரமாய் இருந்தது ....அவனுடைய உடல் நிலை மோசமானதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் ..ஒரு வார சிகிச்சையில் நார்மல் நிலைக்கு வந்தான் ..இந்த ஒரு வாரம் முழுவதும் ஒரு தாயை போல அவனருகே இருந்து வேளா வேலைக்கு மருந்து மாத்திரை எடுத்து கொடுத்தது எல்லாமே வடிவு தான் ....மீண்டும் அவன் உடல் நிலை சரியானதும் வீட்டிற்கு அழைத்து வந்தனர் ...

வந்ததும் வராதுமாக தன்னுடைய மனைவி வடிவுவை அறைக்கு அழைத்தான் பயந்து கொண்டே சென்றாள்..கதவை தாழிட்டு யாரும் எதிர் பாராத விதமாக அவள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் ...இனிமே உன் விருப்பம் இல்லாம என் நிழல் கூட உன் மேலே படாது என்றான் ..வடிவு அன்போடு அவன் தோள் சாய்ந்தாள் ...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.