மனத்தூய்மை -எழுதியவர் ராஜலக்ஷ்மி கௌரிஷங்கர்

முதல் நாள் கொட்டிய மழையால் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. கொசுவிற்கு பயந்து பேன் போட்டு படுத்திருந்ததால் தொண்டை லேசாக வலித்தது. சூடாக ஹார்லிக்ஸ்ஸோ காபியோ குறைந்த பட்சம் வெந்நீர் பருகினாலாவது இதமாக இருக்கும் என்று தோன்றியது வசுமதிக்கு. அதனால் 'கோவிலுக்கு போய் வருகிறேன் இந்து' என்றபடி இருமினாள். 'தூய்மையான பாரதம் பற்றி ப்ராஜெக்ட் ஒர்க் நாளை கொடுத்தாகணும். இந்த ப்ராஜெக்ட் குழைந்தகளுக்க்கா எங்களுக்க்கா என்று தெரியலையே/ 'என்று அலுத்துக்கொண்ட இந்து 'எழுதுடா , தெருக்களில் குப்பைகளை சேரவிடாது அவ்வப்போது அகற்றி விட்டால் நோய்களின் ஆதிக்கத்தி லிருந்து மீளலாம். இது முதல் பாயிண்ட் 'என்று மகனின் முன் புஸ்தகத்தை போட்டாள். பாட்டியின் இருமல் மதனிடம் நெருடலை ஏற்படுத்தியது. 'பாட்டி நான் வேணா வெந்நீரை இண்டகஷன் ஸ்டவ்வில் போட்டு கொண்டு வரட்டுமா? 'என்றவனின் தலையில் நக்கென குட்டினாள் இந்து. 'பாடம் படிக்கும்போது கவனத்தை சிதற விட க்கூடாது என்று எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன்? 'இதற்கு மேல் இந்துவிடமிருந்து இரக்கத்தை வேண்டுவது இயலாத காரியம் என்று தெரிந்து கொண்ட வசுமதி மெதுவாக கோவிலை நோக்கி நடந்தாள்.

கணவனை இழந்து மகன் வீட்டில் தங்கநேர்ந்த இந்த மூன்று மாதங்களில் இந்துவின் இந்த அலட்சியம் பழகி போய் விட்டிருந்தது. காலம் தான் எத்தனை மாற்றங்களை செவிடு விடுகிறது? இதே இந்துவை பத்து வருடங்களுக்கு முன் எப்படி எல்லாம் ஆட்டி வைத்திருக்கிறாள்? இப்போது இந்துவின் கை ஒங்க வசுமதி அடங்க வேண்டி இருக்கிறது. இது தான் காலத்தின் கொடுமை. வசுமதி இயற்கையிலேயே அகம்பாவமும் கர்வமும் கொண்டிருந்தாள்.

இரண்டு பிள்ளைகளுக்கு பின் பிறந்த பெண் என்று பெற்றோர் கொண்டாடியதில் அவளது கர்வம் அதிகரித்தது. திருமணம் அவளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. புக்ககத்தினர்சாத்த்வீகமான சுபாவம் கொண்டவர்கள்.

அவளது குணத்தை புரிந்து கொண்டு ஒதுங்கி விட்டனர். கணவரும் அப்பிராணி undefined பிள்ளையோ அம்மா பேச்சை தாண்டாதவன். இதனால் பாதிப்படைந்தவள் இந்துமதி தான். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தமையனின் நிழலில் வளர்ந்த அவளுக்கு பிறந்தகத்தின் ஆதரவு இல்லை. இதனால் இந்துவை வசுமதி ஆட்டுவித்தாள். இந்தஆட்டத்தால் இந்து துவண்டு போனாள். அவளது நாத்தனாரும் தன் பங்கிற்கு இந்துவை கலங்கடித்தாள்.

உள்ளூரிலேயே வாழ்க்கைப்பட்டிருந்ததால் அடிக்கடி பிறந்தகம் வந்துவிடும் அவள் மாலை டிபன் , இரவு சாப்பாடு என்று அனைத்தையும் முடித்துக்கொண்டு தான் திரும்புவாள். சமயங்களில் அவனுக்கும் சேர்த்து எடுத்து செல்வாள். அதுவும் சூலிப்பெண் ஆசைப்படுவதுபோல் 'மசால் தோசை பண்ணும்மா , பூரி கிழங்கு சாப்பிடணும் போல இருக்கம்மா , என்று பட்டியலிட்டு செய்ய சொல்வாள். இந்து சமயலறையில் அல்லாடிக்கொண்டிருக்க தாயும் மகளும் அரட்டை அடித்து கொண்டிருப்பார்கள். இரவு அம்பார பாத்திரங்கள் விழும். இவற்றை எல்லாம் எப்படியோ சமாளித்து விட்டாள். ஆனால் கருவுற்றபின்னாலும் தொடர் கதையாகிப்போனது.கர்ப்பிணி என்ற கருணையே இல்லாமல். இருவரும் வாட்டி எடுத்தார்கள். சில வருடங்களில் கணவனுக்கு சென்னைக்கு மாத்தலாக இந்த தொல்லைகளிலிருந்து விடுபட்டாள் இந்து. ஆனாலும் இந்த வடு அவள் மனதில் நெருடிக்கொண்டே இருந்தது. சில மாதங்களுக்கு முன் கணவனை இழந்த வசுமதி வேறு வழி இன்றி பிள்ளை வீட்டில் தங்கும்படி ஆயிற்று. இந்த சில ஆண்டுகளில் மகன் முற்றிலும் மாறி இருந்தான். இந்து வைத்ததே சட்டம் என்று புரிந்து கொண்ட வசுமதியும் அடங்கி போனாள் அனால் ஆறாத ரணம் காரணமாக இந்து எதிர் தாக்குதலை துவங்கினாள்

மாமியாரோடு பேசுவதென்பதே இல்லாத ஒன்றாக போயிற்று. ம் , சரி என்பதை தவிர வசுமதியோடு பேசுவதில்லை. வயதானவள் என்று உணர்த்தும் பாதி வேலைகளை அவள் தலையில் கட்டினாள். இரவு மாமியார் பால் குடிக்கும் வழக்கம் உள்ளவள் என்று தெரிந்தும் எட்டு மணிக்கே பாலை உரை குத்தி விடுவாள். பூனை வருகிறது என்ற சாக்கை சொல்லி இரவில் சமையலறையை பூட்டினால் ஏழு மணிக்குத்தான் திறப்பாள். ஐந்து மணிக்கே எழுந்து காபி சாப்பிடும் வழக்கம் கொண்ட வசுமதி திண்டாடித்தான் போனாள்.

'அம்மா வீடடு பாடம் முடித்து விட்டேனம்மா. விளையாடப்போகட்டுமா? 'என்று மகன் கேட்க அனுமதி அளித்தாள். அப்போது 'தாயீ , பூ 'என்றபடி வந்த பூக்கார கிழவி 'அப்பாடா' என்றபடி உட்கார்ந்து கொண்டாள். பின் 'தாயீ நேத்து பெஞ்ச மழையிலே வீட்டிற்கு போவதற்குள் நனைந்து போயிட்டேன். அதனாலே தொண்டை கரகரக்கிறது. சூடா கொஞ்சம் வெந்நீர் தரயா? என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் 'அதற்கென்ன 'என்றபடி உள்ளே போனவளுக்கு கிழவியின் களைப்பான முகம் தெரிய காபியை கொண்டு வந்து நீட்டினாள்.

என்றோ நடந்து முடிந்து போன சம்பவங்களை மனத்தில் இருத்திக்கொண்டு பழி வாங்குவதாக நினைத்து இது போல நடந்து கொண்டிருக்கணுமா? இத்தகைய செயல்கள் ஆறிப்போன ரணத்தை சொரிந்து புண்ணாக்கி கொள்வது போல இல்லையா? வேண்டாத குப்பைகளை வீட்டிலிருந்து அகற்றுவது போல் மனதிலிருந்தும் தேவை இல்லாத சம்பவங்களை அகற்றி விட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போனதே இதற்கெல்லாம் காரணம். தூயமையான இந்தியா திட்டம் நாட்டை தூய்மையாக்க வேண்டிய திட்டம் என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை மனதில் சேர்த்திருக்கும் பழைய கசப்பு உணர்வுகளை அகற்றிட வேண்டும் என்று புரிந்து கொண்டாள். அவள் புது உணர்வுடன் மாமியாரை வரவேற்க தயாரானாள்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.