தாயின் மணிக்கொடி பாரீர் அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்.

பல்லவி முடிந்து. *ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் மேல்* - என்று மாணவர் குரல் உச்சச்ஸ்தாயியைத் தொட்டவுடன் தமிழ் மாறனுக்கு தலைமுதல் கால்வரை அசுர வேகத்தில் ரத்தம் பாய்ந்து உடல் சிலிர்த்தது.

ஆம். கொடிப்பாட்டு எல்லோரையுமே சிலிர்க்கவைக்கும்தானே,1 சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் ஒன்றும் வகுப்பிலிருந்தே சுதந்திர தினத்தன்று ஆசை ஆசையாக சீருடை அல்லாத வேறு உடுப்புகளை அணிந்து . வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் கொடியேற்ற அதிலிருந்து பூக்கள் சொறிய அண்ணாந்து பார்க்கும் ஆவலில் கண்கள் மேல் நோக்க காலைச் சூயனின் பார்வை பட்டுக் கண்கள்கூச பள்ளியின் லீடர் *சல்யூட். ஆர்டர்* என்று சொல்ல எல்லோரும் அதற்கேற்றார்போல் செய்ய அழகோ அழகு, மு்வர்ணக் கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு சுதந்திரம் அடைந்த பெருமிதத்தை நினைத்துப் பார்க்கும் வகையில் வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களும் அதன் வரலாற்றையும் அதன் பின்னே மறைந்திருக்கும் மகோன்னதமான தியாகங்களையும் கூறும் பொழுதில் சிலிர்த்துப் போகும் பரவசத்திற்கு ஈடு இணை ஏது?

இப்படியெல்லாம் படம் ஓடியது தமிழ்மாறனின் நெஞ்சத்தில், இன்று அவர் இந்த மாவட்டத்தின் கலெக்டர், இதே மாநகராட்சிப் பள்ளியின் முன்னாள் மாணவர், 35 ஆண்டுகளுக்கு முன் தான் ஆறாவது படித்தபோது….அதற்குள்

'சார்...சார்... - தலைமை ஆசிரியர்தான் அழைத்தார். மாணவர்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும்...

*யெஸ்...யெஸ் என்று கூறி பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறப்பது போல மகிழ்ச்சி பொங்க வரிசையில் நிற்கும் மாணவர்களுக்கு இனிப்பை வழங்கி *ஆல் த பெஸ்ட்* என்று கூறி கைகுலுக்கினார். அதை வெட்கத்தோடும். புன்னகையோடும் வாங்கிக்கொண்டு சென்றனர் மாணவர்கள்.

அடுத்த கட்டமாக இப்பொழுது மாவட்டக் கலெக்டர் தமிழ்மாறன் சிறப்புரையாற்றுவார் என்று தலைமை ஆசிரியர் அறிவித்தார்.

பலத்த கரவொலிகளுக்கிடையில் கலெக்டர் தன் சிறப்புரையைத் துவங்கினார்.

மாணவச் செல்வங்களே! இந்த சுதந்திர நன்னாளில் நீங்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடும் பெருமிதத்தோடும் இங்கே அமர்ந்திருப்பது எனக்குப் பேருவகையைக் கொடுக்கிறது, இதே பள்ளியில் படித்த மாணவன் என்கிற சிறப்பும் எனக்குண்டு, ஆறாம் வகுப்பு வரை என்னுடன் படித்த என் நண்பன் முத்து வேலனையும்

(2)

அவன் அம்மாவையும் என் ஆயுள் உள்ளவரை மறக்க இயலாது. நானும் அவனும் ஆருயிர்த்தோழர்கள்.

அவனில்லாமல் நான் பள்ளியில் மதிய உணவு கூட உண்ணமாட்டேன் ஆனால் ஆறாம் வகுப்பு ரிசல்ட் வந்ததிலிருந்து அவன் பள்ளிக்கு வரவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை. சுதந்திர தினத்தன்று சிறப்புரையாற்ற வந்த கலெக்டர் ஏன் இதையெல்லாம் இங்கே பேசுகிறார் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் காரணம் இருக்கிறது,என்னை வளர்த்ததில் முத்துவேலனுடைய அம்மாவின் பங்களிப்பு மிக மிக உயர்ந்தது, ஒவ்வொரு நாளும் மாலையில் எங்கள் இருவரையும் ஒன்றாக அமரவைத்துக் கதைகள் சொல்லுவார்.

ஒருநாள் இரணியன் கதை சொன்னார்கள், அதில் இறை நம்பிக்கையின் மகத்துவம் போற்றப்படுவது பற்றிக் கூறினார்கள், அது மட்டுமல்லாமல் அன்றhட வாழ்வில் நாம் கொண்ட இலக்கை அடைய சாpயானதொரு அஹணுகு முறையும் இடைவிடாத முயற்சியும். கொண்ட கொள்கைகளிலிருந்து விலகாத உறுதிப்பாடும் வெளிப்படுவதை பிரகலாதன் பாத்திரம் மூலம் உணரவைத்தார். இது மட்டுமா’”? சுவாமி விவேகானந்தரைப் பற்றிச் சொல்லும் போது *உன்னை நம்பு எல்லா ஆற்றலும் உன்னிடம் இருக்கின்றன* சுவாமிஜி அன்று கண்மு்டி செய்த தியானத்தினால்தான் பாரத மாதாவின் கண் திறந்தது, உலகின் பார்வை பாரதத்தின் மீது விழுந்தது, இப்படி பலப்பல.

கதை சொல்வதோடு நிறுத்தி விட மாட்டார். அது சம்பந்தமாகச் சில கேள்விகளையும் கேட்டு நாங்கள் அக்கதைகளைப் பற்றி யோசிப்பதற்கான அறிவுத் திறமையையும் விரிவுபடுத்தினார், ஆனால் இக்கால அவசர யுகத்தில் பெரும்பாலும் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்வதால் உங்களோடு அதிக நேரம் செலவிடமுடியவில்லை, எனவே நீங்களும் அவர்களது சிரமங்களைப் புரிந்து கொண்டு நீங்களாகவே உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், அதுவும் வாசிக்கும் பழக்கத்தைக் கைக் கொள்ளவேண்டும், அது நமக்கு ஒரு நல்ல நண்பனும் கூட, நாட்டுக்குழைத்த நல்ல தலைவர்களைப் பற்றியும், சிகரம் தொட்ட சிறந்த சாதனையாளர்களைப் பற்றியும் நீங்களே படியுங்கள், தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்த்து படிக்கும் பழக்கத்தையும் மற்றவர்களோடு பழகுவதையும் செய்யத் தொடங்குங்கள், விரைவிலேயே வானம் தொட்டு விடும் தூரம்;தான் என்பது புரிந்து விடும், காந்தியையும் நேருவையும் காமராசரையும் நாம் நினைவு கூறுவது போல எதிர்காலத்தில் உங்கள் பெயரும் இங்கே பொறிக்கப்படும் அளவிற்கு சாதனை மனிதராகுங்கள், உங்கள் எல்லோருக்கும் என் சுதந்திர தின நல்வாழ்த்துகள், நன்றி, வணக்கம்.

தேசிய கீதத்துடன் விழா முடிந்து வீட்டிற்கு வந்த பின்னும் தமிழ்மாறனின் நினைப்பு முழுவதும் முத்துவேலனையும் அவன் அம்மாவைப் பற்றியுமே சுழன்றது, அவர்கள் எனக்குள் விதைத்த விதை இன்று 'தமிழ்மாறன் மாவட்டக்கலெக்டர்' என்ற விருட்சமாக

(3)


வளர்ந்திருக்கும் பொழுது முத்து வேலன் இன்னும் கொடுத்து வைத்தவனாக அல்லவா இருக்க வேண்டும்?

அவனைப் பற்றிய கற்பனைகளில் மிதக்க ஆரம்பித்தார் தமிழ்மாறன். கூடவே பல விதமான ஐயப்பாடுகள், எங்கள் இருவரின் ஆறாம் வகுப்பு ரிசல்ட் வந்த அன்று இரவோடிரவாக அவர்கள் வீட்டைக் காலி செய்தது ஏன்? சொல்லாமல் கொள்ளாமல் ஏன் போனார்கள்? எங்கு போனார்கள்? எனக்கு அவர்கள் சொன்ன இராமாயண மகாபாரதக் கதைகளும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் எழுச்சியும் வீரமும் நிறைந்த கதைகளும் என்னுள் ஏற்படுத்திய மாற்றமும் ஏற்றமும் சொல்லில் அடங்காதவை, அப்படியிருக்கும் பட்சத்தில் முத்துவேலன் இப்பொழுது எங்கு எப்படி இருப்பான்? அவனுக்குக் கிடைத்ததைப் போல் ஒவ்வொருவருக்கும் அம்மா கிடைத்தார்களென்றhல் ஆஉறh,,,, எல்லோருமே நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும்தான் இருப்பார்கள்.

இப்படியே எண்ணிக்கொண்டிருந்தவர் தன்னை மறந்து கண்ணயர்ந்து விட்டார்.

'சார்...சார்...செகரட்டரி வந்து எழுப்பியதும்தான் அவருக்குத் தான் தூங்கியதே நினைவுக்கு வந்தது.

'யெஸ்...யெஸ் என்ன பரந்தாமன்...என்ன விக்ஷயம்?

'சார் மாலை ஆறுமணிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு நீங்கள் தலைமை ஏற்கிறீர்கள்.'

ஓ,கே, ஓ,கே, அது என்ன நிகழ்ச்சி?*

வடஇந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு ஆன்மிகச் சிந்தனையாளாpன் சொற்பொழிவிற்கு நீங்கள் தலைமை ஏற்று கருத்துரை வழங்குகிறீர்கள்.

சரி...சரி...அவர் பெயர் என்ன? பொருள் எதைப்பற்றியது?

அவர் பெயர் சுவாமி பிரகலாதானந்தா, பொருள்.**அத்தனைக்கும் ஆசைப்படு**.

சரி...நீங்கள் போகலாம்.

இப்படிக் கூட ஒரு ஆன்மிகவாதியின் சொற்பொழிவின் தலைப்பு இருக்க முடியுமா என்ன? ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றல்லலோ புத்தர் பெருமான் போதித்திருக்கிறார்கள், ஆசையைத் துறந்து அவர் கானகம் சென்றதால்தானே ஞானம் பெற்று அவர் போதித்த தத்துவங்கள் உலகெங்கும் பரவி அமைதியை நிலைநாட்ட முயற்சிக்கின்றன, ஏற்கனவே மக்கள் ஆசைக்கு அளவில்லாமல் பேராசையோடு அலைந்து கொண்டிருக்கிறhர்கள், இந்நிலையில் இப்படிப்பட்ட ஒரு தலைப்பில் என்ன சொற்பொழிவாற்ற முடியும்? பாமர ஜனங்கள் அவர்தம் வாழ்வாதாரங்களையே பெறமுடியாத நிலையில்

(4)


ஆசைப்பட்டதையெல்லாம் அடைய முடியுமா என்ன? வெகுவாகக் குழம்பித்தான்போனார் கலெக்டர்.

சரியாக மாலை ஆறு மணிக்கு விழா துவங்கியது, தாழம்பூ ஊதுபத்தியின் நறுமணம் அந்த மேடையெங்கும் பரவி எல்லோரது நாசியையும் நிறைத்தது.

சுவாமி பிரகலாதானந்தாவைப் பற்றிய கலெக்டரின் கணிப்பு சுக்கு நூறாக உடைந்தது. ஆம்...சாதாரண கதர் வெள்ளை வேட்டி சட்டை, படிய வாரிய தலை, நெற்றியில் பட்டையாய்த் திருநீறு, கழுத்தில் உத்ராட்ச மாலை ஒன்று, கால்களில் சாதாரண ரப்பர் செருப்பு, அருகே அமர்ந்ததும் அழகான புன்னகை ஒன்றை உதடுகளில் தவழ விட்டார். இரு கைகளையும் கூப்பி வணக்கம் என்றார். பதில் வணக்கம் கூறினார் மாவட்டக் கலெக்டர், வழக்கமான வாழ்த்துக்களுக்குப் பிறகு பிரகலாதானந்தர் தன் உரையைத் துவங்கினார், அன்பார்ந்த மக்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்ககங்கள், என் பேச்சைக் கேட்பதற்காக இங்கு வெட்ட வெளியை இட்டு நிரப்பி திரளாக வந்திருக்கும் அனைவரும் நிச்சயமாக வீட்டிற்குச் செல்லும்போது நெஞ்சு கொள்ளாமல் ஆசையை நிரப்பிக்கொண்டு செல்வீர்கள். இது உறுதி.

சரி விக்ஷயத்திற்கு வருவோம், மனிதன் பிறக்கும் பொழுதே ஆசையோடுதான் பிறக்கிறான், முதலில் வயிற்றுப்பசியைப்போக்க உணவு, அது ஆசை மட்டுமா? இல்லை தேவையும் கூட, ஏனென்றால் அது இல்லாமல் அவனால் வாழ முடியாது, அதே போல் எவ்வளவுதான் கிடைத்தாலும் ஓரளவிற்கு மேல் அவனால் உட்கொள்ள முடியாது, எனவே தேவை என்றால் என்ன? ஆசை என்றhல் என்ன? என்பதிலுள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டாலே வாழ்க்கை இனிக்கும், என் சொந்த வாழ்க்கையைப் பற்றி ஒரு சில செய்திகளை இங்கே நான் கூற விரும்புகிறேன், என் அம்மாதான் எனக்கு எல்லாமே, எனக்கு தினந்தோறும் ஏதாவதொரு கதை சொல்வார், அதுவும் அவை எல்லாமே இலட்சியக் கதைகள் இலக்குநோக்கிப் பயணிக்கும் கதைகள்,பாரதியாரையும். விவேகானந்தரையும் உணவோடு சேர்த்து ஊட்டினார்கள், உங்களுக்கு இப்பொழுது ஒரு உண்மையைக் கூறப்போகிறேன், அதுதான் என் அம்மாவின் ஆசையும் கூட, என்னை அவர் ஒரு ஐ,ஏ,எஸ், ஆக்கிப் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டார், அதற்கு அவர் கூறிய காரணம்,*அதுதான் வேலா. மக்களுக்கு சேவை செய்வதற்கேற்ற பணி, படித்த அதிகாரிகள் மக்களின் பிரச்சினைகளை எளிதில் புரிந்து கொண்டு விரைவில் தீர்வும் காண இயலும், வேலா நான் கருவுற்றிருக்கும் போதிலிருந்தே இதுதாம்ப்பா என் ஆசை* என்பார்.

என்னுடைய போதாத நேரம் அவரை என் 12 வது வயதிலேயே இழந்து விட்டேன், அவர் அடிக்கடி என்னிடம் கூறுவது இதுதான், *ஒரு பிள்ளையை எந்தப் பள்ளியில் படிக்க வைக்கிறோம் என்பது முக்கியமில்லை, அது அந்த ஊhpன் மிகப் பெரிய பள்ளியாக

(5)


இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை, அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் படித்தால்தான் குழந்தைகள் பிற்காலத்தில் உயர்அதிகாரிகளாகவும் மருத்துவர்களாகவும் வரமுடியும் என்பதெல்லாம் மிகப் போலியான நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற பலகீனம்தான், பள்ளியில் ஆசிhpயரும் வீட்டில் பெற்றோரும்

பிள்ளைகளை எப்படி வழிநடத்துகிறார்கள் என்பதைக் கொண்டே அவர்களின் எதிர்காலம் நிச்சயிக்கப்படுகிறது,*

*அத்தனைக்கும் ஆசைப்படு* என்று பேச வந்த இவன் எதற்குத் தன் வரலாறு கூறுகிறhன் என்று நீங்கள் நினைப்பதும் எனக்குப் புரியாமல் இல்லை, என் அம்மா ஆசைப்பட்டபடி நான் ஒரு ஐ,ஏ,எஸ், ஆகவில்லைதான்’, ஆனால் இன்று நான் என் சொற்பொழிவுகளின் மு்லமும் நான் எழுதுகின்ற புத்தகங்கள் மு்லமாகவும் இந்த சமுதாயம் ஏற்றமுற வேண்டும், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கில் பொதுஜன சேவைதான் செய்து வருகிறேன், அதுமட்டுமல்லாமல் இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும் கலெக்டரே என் உரையைக் கேட்க அமைந்திருக்கிறாரே இதுவே என் தாயாhpன் ஆசை நிறைவேறிவிட்டதற்கான அடையாளம் தானே!

ஒவ்வொரு பெற்றோரும் முக்கியமாகத் தாயானவள் தன் குழந்தையின் மேல் அதிகமாகப் பற்று வைக்கிறாள், தன் கனவுகள் அனைத்தையும் அக்குழந்தையின் மேல் ஏற்றித் தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளத் துடிக்கிறhள், அது தவறென்று ஒருபோதும் நான் சொல்லமாட்டேன், நம்மால் செய்ய இயலாததை நம் குழந்தைகளைக் கொண்டு செய்வித்தலில் தவறோன்றும் இல்லை, அதற்காக நம் குழந்தைகளை நம் ஆசைக்கு இணங்கும் *ரோபோ* வாகப் பயன்படுத்தக் கூடாது, அந்தந்தப் பருவத்தில் அவர்களுக்கான தேடல்களையும் ஆசைகளையும் புரிந்து அதை நெறிப்படுத்தி அவர்களை இலட்சிய மனிதர்களாக உருவாக்கவேண்டும்.

எனவே அன்பர்;களே. மனிதர்கள் எல்லாவற்றிற்கும் ஆசைப்படலாம், அது அடுத்தவனின் தேவைகளை பாதிக்காதவரை, சுயநலத்தில் பொதுநலபாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், உதாரணதிற்கு வாமனாவதாரத்தில் தன்னையே நம்பியுள்ள அடியவர்களைக் காக்கும் பொருட்டும் மகாபலியின் கர்வத்தை அடக்கும் விதமாகவும் மு்ன்றடியில் உலகை அளந்த கதை எதைக் காட்டுகிறது? இறையருளை தன் சுயநலத்திற்குப் பயன்படுத்தினால் அதன் விளைவு எப்படியிருக்கும் என்பதையல்லவா?

உங்களுக்கெல்லாம் ஒரு ஆச்சர்யமான உண்மை ஒன்றை சொல்லப்போகிறேன், என் அம்மாவின் கனவு பற்றி சற்று முன் சொன்னேனே அது பலித்திருக்கிறது…,கேட்ட அனைவாpன் முகத்திலும் குழப்ப ரேகைகள், புன்னகையுடன் தொடர்ந்தார் அவர், அதற்கு அடையாளமாக இதோ இங்கே இந்த மேடையில் அமர்ந்திருக்கும் மாவட்டக் கலெக்டர்

(6)


தமிழ்மாறன்தான், என்ன பிரமித்துப்போய்விட்டீர்களா? நிஜம்தான், ஆறhம் வகுப்புவரை என் பள்ளித்தோழன், என் அம்மா இவனுக்கும் சேர்த்துதான் கதை சொன்னார்கள், *நீயும் வேலனைப் போலவே சமர்த்தாக இருக்கிறhயே1 நான் பெறாத பிள்ளைடா நீ* என்பார்கள், இப்பொழுது சொல்லுங்கள் என் அம்மாவின் கனவு நிறைவேறிவிட்டதல்லவா?

நிறைவாக இங்கு கூடியிருக்கும் எல்லோருக்கும் ஒரு விக்ஷயத்தைக் கூறி விடைபெற விரும்புகிறேன், எந்தக் குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும் பொழுது நல்ல குழந்தையாகத்தான் பிறக்கிறது, பின்பு வளர்ப்பு முறையிலும் அதனிடம் நாம் காட்டும் உண்மையான அக்கரையிலும்தான் அது புடம் போட்ட தங்கமாக ஜொலிக்கிறது, எனவே இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அனைவருமே உங்கள் குழந்தைகளின் விருப்பங்களையும் ரசனைகளையும் தொpந்து கொள்ள முயற்சியுங்கள், பின்பு அவைகளை நிறைவேற்றுவதற்கான சாpயான இலக்குகளையும் இலட்சியங்களையும் விதைகளாகத் தூவுங்கள், வளரும் பொழுது தீய பழக்கங்கள் தீய சேர்க்கைகள் இவை போன்ற களைகள் முளைக்கும் போது அதை வேரோடு பிடுங்கி விடுங்கள், அது பூத்துக் குலுங்கி காய்கனிகள் தரும்போது அதைத் தேவையில்லாமல் தாய் மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி அயல்நாட்டில் நடுவதற்கு முயற்சி செய்யாதீர்கள், அது உங்களை மட்டும் பாதிக்காது, தலை முறை தலைமுறையாகத் தொடர்ந்து ஒரு காலகட்டத்தில் நாம் இங்கு வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல்செய்து விடும், எனவே நீங்கள் ஆசைப்படுகின்ற அத்தனையும் பெறவேண்டுமானால் நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு *ரோல் மாடல்* ஆகவேண்டும், என்றைக்கு உங்கள் குழந்தைகள் தன் பெற்றோரை *ரோல் மாடல்* என்று கூறுகிறதோ அன்றைக்கு நீங்கள் ஆசைப்பட்ட அனைத்தையும் அடைந்துவிட்டதாகக் கொள்ளலாம், நான் பிறந்த இந்த மண்ணில் என் கருத்துக்களைப் பதிவு செய்;ய அனுமதித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியைக் கூறி அமைகிறேன். நன்றி வணக்கம்.

பலத்த கரவொலிகளுக்கிடையில் தமிழ்மாறன் முத்துவேலன் என்கிற பிரகலாதானந்தாவைத் திரும்பிப்பார்த்தார், அவர் உள்ளம் உணர்ச்சிக் குவியல்களால் நெகிழ்ந்திருந்தது. அந்நேரம் முத்துவேலனின் அம்மா தங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பதைப் போலுணர்ந்தார்.


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.