அவனை நினைத்து

அவனை மறந்து வீட்டு வேலையை பார்க்கலாம் என்று சொன்னது அவள் மனம். ஆனால் அடித்த காற்றில்  கொடியில் காய்ந்த அவன் துணியை தீண்டி அவன் வாசமாய் அவளிடம் சரணாடைந்த போது கண்ணில் கண்ணிருடன் பார்த்த பார்வை நினைவிற்கு வர  என்ன செய்யேன் ! என்று திகைத்தாள். நேரம் ரணமாய் ஓடுகிறது. பார்க்கும் இடமேல்லாம் அவன் நினைவுகள். கேட்கும் ஒலியெல்லாம் அவன் சிரிப்போலி. எல்லாம் சில காலம்தான் எல்லாம் அவன் நன்மைக்குதான என்ற உண்மை மூளைக்கு எட்டினாலும். மனம் நாள்முழுவதும் அவனுடனே செலவிட்ட நேரம் திரும்ப வராதா என்று ஏங்குகிறது.அந்த ஏக்கத்திலே கண் அசந்து அப்படியே தூங்கிவிட்டாள்.

மணி ஒன்றிக்கு கடிகாரம் அடித்த உடன் சடார் என்று எழுந்து அவனுக்கு உணவு செய்ய வேண்டுமே என்று எழுந்தாள்.அதன்பின் அவனில்லை என்பதை உணர்ந்து சொங்கினாள்.அவன் சாப்பிட்ானா சாப்பிடலைய, பசிதாங்கமாட்டானே.அதுதா  பாத்துக்க இருக்கங்கல அவங்க பாத்துபாங்க என்று ஒரு மனம் சொன்னாலும்.அவனால் நானில்லாம் சாப்பிட முடியாதே என்ன செய்வான்..? என் என்னவன் !!என்ற ஏக்கத்திலே வாடுகிறது மறுமனம்.மணி எப்போது மூன்றாகும்  என்று சூரியனுக்க காத்திருக்கும் இரவு போல் காத்து கிடந்தாள். மணி மூன்று அடித்தவுடன் சந்தோஷமுடன் வாசலில் போய் நின்றாள். ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தை பார்த்து நேரமாயிருச்சே ஏன் இன்னும் வரல என்று கைகளில் இருந்த நிகத்தை கொறித்தெறிந்தாள். தெரு முனையில் அவன் வரும் பேருந்து வந்தது. அவள் இதயதுடிப்பு வேகமானது. அவள் முன் வந்து நின்றது., கதவை திறந்து இறங்கி வந்த அவனை அள்ளி அனைத்துக்கொண்டாள்.

"போமா,.ஏமா என்ன ஸ்கூல விட்டுட்டு போய்யிட்ட எப்படி அழுதேன் தெறியுமா" என்று வாயை பிதுக்கி அழுத அவனிடம் எப்படி விவரிப்பாளோ அவன் பிரிவால் அவள் பட்ட பாடை......!!??

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.