வேண்டாமே மதுப்பழக்கம்.....

வேண்டாமே மதுப்பழக்கம்.....

அவன் தான் அவனே தான்..

முன்பொரு சமயத்தில்

நிறைந்து நின்ற

ஓர் நல்ல நாள் பார்த்து

டிப்டாப்பான ஆடை அலங்காரத்துடன்

உறவினர்கள் சகிதம்

நகைகளுக்குள் மாட்டிக்கொண்டிருந்த

என்னை பெண்பார்த்து

பூர்ண சம்மதம் தெரிவித்து

ஊர் சூழ உறவினர்கள் வாழ்த்த

புரியாத ஐயரின் மந்திரத்தில்

பல வாக்குகள் கொடுத்து

என் கரம் பற்றி

என் வாழ்க்கைக்கு என்றும் துணையாக

இருப்பதாய் சொல்லி என்னை

சொந்தமாக்கி கொண்டவன்......

அவனுக்குள் என்னை அர்ப்பணித்த

நிமிடங்களை தொடர்ந்த

நாட்கள் சுகமாக தான்

கடந்தது......புயலுக்கு முன்

அமைதியென்பதை மறந்துவிட்டு

குதூகளித்துவிட்டேன்....

புதிதில் என் காலை பதம் பார்த்த

கல்லை குற்றம் சுமர்த்தியவன்

போக போக பலரோடு என்

பெண்மையை குற்றம் சுமத்த

துணிந்துவிட்டான்.....

இருள தொடங்கியதும்

மருண்டு விழிக்கும் என் விழிகளைக்கூட

பொருள்படுத்தாது காமம்

கொண்டு என்னோடு தேக யுத்தத்தில்

அவன் வெல்லும்போதெல்லாம்

அவனோடு என் கரம் பிணைத்து வைத்த

அத்தனை பேரின் முயற்சியும்

தோற்றுகொண்டே போகிறது......

அந்த மூன்று நாட்கள்கூட

விடுமுறை இல்லாமல் கழியும்

என் இல்லற வாழ்க்கை

நிச்சயம் ஓர் கொடூர

சிறை வாழ்க்கையாக தான்

தண்டிக்கப்படவேண்டியவர்களுக்கு

இருந்திருக்குமோ என்றெல்லாம்

எண்ண தோன்றுகிறது....

காளையென்றும் சிங்கமென்றும்

வீரம் பீற்றிக்கொண்டு பேர் கொண்ட

அவன் அத்தனையையும் என்னை

விளாசி துவைப்பதிலேயே வெளிப்படுத்திக்கொண்டு

கர்வம் பட்டு கொள்கிறான்....

சாட்சி கூண்டுக்குள் ஏறி

அவன் எனக்குள் செய்தவைகளுக்கு

சாட்சி சொல்ல அவன்

சாயலிலேயே இரண்டு

பிஞ்சு கிள்ளைகள் மருண்டுகிடக்கிறது

என் முந்தானைக்குள் ஒளிந்துகொண்டு....

உப்பு சப்பில்லாத காரணம்

கூட என் தேகம் முழுவதும்

உப்பி எழ அவனுக்கு

போதுமானதாய் இருந்துவிடுகிறது....

இன்னும் ஓர் அடி கூட

தாங்கிக்கொள்ள இயலாத நிலையில்

பிறந்தகம் ஓடினாள்

மிஞ்சி மிஞ்சி பத்துநாட்களில்

சோற்றை போட்டு சமாதானம் பேசி

அனுப்பிவைக்கும் உறவுகளும்

"கல்லானாலும் கணவன்

புல்லானாலும் புருஷன்"என்ற

பாழாப்போன பழமொழியும்

சாதகமாய் போனது தினசரி

புல்லாக கள்ளை குடித்துவந்து

அட்டகாசம் செய்ய.....

ஒருவேளை குடிபோதை

என்ற இந்த மகாபாதகன்

அவர் வாயின்வழி இறங்கி

குடலுக்குள் புகுந்து

இரைப்பைக்குள் கரைந்து

மூளைக்குள் சதிசெய்யாமல்

இருந்திருந்தால் அவரும் என்

அன்பு கண்ணாளனாய்

இருந்திருப்பாரோ!!!!

அவ்வப்போது கானல் கனவுகளை

கண்ணுக்குள் கட்டிக்கொண்டு

கடந்துபோகிறேன்

நாட்களையும் இந்த நரகத்தையும்.....

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.