கவி....

மொபைலில் சார்ஜ் கம்மியாக இருக்க சார்ஜ் செய்ய சார்ஜர் எடுத்தேன்...சார்ஜ் போட்டுவிட்டு ஏறுகிறதா என பார்க்க மொபிலை ஆன் செய்தேன்.

“ஹாய் டா “... கவிதாவிடமிருந்து மெசேஜ் வாட்ஸ்அப்பில்.

சார்ஜ் மிகவும் கம்மியாக இருக்க சிறிது நேரம் கழித்து பதில் அனுப்பலாம் என தோன்றியது.டேபிளில் வைத்துவிட்டு குளிக்க சென்றேன்.திரும்பி வந்து மொபைலை எடுத்து பார்க்க “ த்த்ரி மிஸ்ஸிடு கால் பிரோம் கவிதா “ என நொட்டிபிகேசன் வந்தது .இதை பார்த்துக் கொண்டிருக்க கவிதா மீண்டும் அழைத்தாள்.

“ஹலோ”

“என்னடா ரொம்ப பிஸியா.... மெசேஜ் அனுப்புனா பதிலைக் காணோம் ...சரின்னு கால் பண்ணுனா எடுக்க இவ்ளோ நேரம் ..ம்ம்ம்..”

“இல்ல கவி..சார்ஜ் போட்டு குளிக்க போய்ட்டேன்..இப்பதான் பாக்குறேன் ..என்ன ரொம்ப முக்கியமான விஷயமா..”

“இல்ல சும்மாதான் ...ஸார் நாளைக்கு பிஸியா “

“இல்ல வெட்டிதான் ...”

“அப்போ ...என்ன .. நாளைக்கு வெளிய கூட்டிட்டு போறயா..”

“என்ன ஹாஸ்டல் பிரண்ட்ஸ் எல்லாம் வீட்டுக்கு எஸ்கேப் ஆகிட்டாங்களா..”

“இல்லடா..இருக்காங்க ...கூட்டிட்டு போடா..ப்ளீஸ்...உன்ட்ட நேர்ல பேசியும் ரொம்பநாள் ஆச்சு..”

கவிதாவின் இந்த திடீர் கெஞ்சலுக்கு காரணம் தெரியவில்லை ...இருந்தாலும் அந்த கெஞ்சல் பிடித்திருந்தது .

“ஹிம்ம் ஓகே கவி “ என்றேன் .

“ஓகே ...அப்போ ...மார்னிங் நைன் 'ஓ' கிளாக் சிவன் கோவில் கிட்ட வெயிட் பண்ணு “ என்றாள்.

“சரி கவி ..பாய்ய்”

“ஸி..யூ டா ..” என்றாள்

அதுசரி ..நான் உங்களுக்கு கவிதாவை இன்னும் அறிமுகம் செய்யவில்லையா .

கவி ..கவிதா என் கல்லூரித் தோழி .என் ஆண் நண்பர்களுக்கு இணையான ஒரு நட்பு எங்களுக்குள் .மதுரை மேலூர் தான் கவிதாவின் பூர்வீகம்.கல்லூரியில் அடுத்தடுத்த ரெஜிஸ்டர் நம்பர் .ஆரம்பத்தில் தயக்கத்துடன் பேச ஆரம்பித்து ...வாங்க போங்க என்று சொல்ல ஆரம்பித்து .வளர்ந்து ..வாடா ...போடா வரை ஆனது இன்றைக்கு .. கல்லூரி காலங்களில் என்னை முழுமையாக புரிந்து கொண்ட ஒருசிலரில் கவியும் ஒருத்தி ..எத்தனை கடினமான காலகட்டங்களிலும் என்னுடனே இருந்திருக்கிறாள் எனக்கு ஆதரவாக .என்றைக்கும் என் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவள் .யார் எங்களைப் பற்றி என்ன பேசினாலும் எதையும் சட்டை செய்யாது எங்கள் நட்பின் மீது அவ்வளவு நம்பிக்கையோடு இருப்பவள் .எனக்கே இந்த குணம் ஆச்சர்யமாக இருக்கும் .ஓரிருமுறை கேட்டும் இருக்கிறேன் .

“எல்லாரும் உன்னையும் என்னையும் சேர்த்து வச்சி பேசுறாங்க ..அப்பாவும் நீ என்ட்ட பழகுறயே “ என்றால் .

“நீ ..எந்நாளும் என் நிச்சயிக்கப்பட்ட நண்பன்..யார் என்ன பேசுனா நமக்கென்ன .. “ என்பாள் .

“நானே என்னைக்காவது உன்ன அப்படி நெனைக்க மாட்டேன்னு என்ன நிச்சயம் ?..“ என்றால்

“நான் உன்மேல நம்பிக்கை வச்சிருக்கேன் ..நீ அந்த நம்பிக்கைக்கு உண்மையா இருப்பன்னு நம்புறேன் “ என்பாள்.

நீங்களே சொல்லுங்கள் இந்த வார்த்தைக்குப் பின் எவனாவது வேறு யோசிப்பானா ....

குழந்தை பருவம் கடந்த பின்பும் அந்த குழந்தை மனத்துடனே இருப்பவர்கள் அதிபாக்யசாலிகள் .அப்படிப்பட்ட மனம் கொண்டவள் கவி ...அவளின் குழந்தைத்தனமான அணுகுமுறை என்றைக்கும் அழகுக்குரியது.அதே சமயம் “காலேஜ்ல என்ன வேணும்னாலும் செய் ..ஆனா படிக்கிறது மட்டும் அம்மா அப்பாக்காக படி “என தீர்க்கமாக அறிவுரை சொல்லி வியப்பூட்டுவாள் . கல்லூரி முடிந்ததும் அவளுக்கு ஒரு ஐ .டி கம்பெனியில் வேலை கிடைத்தது சென்னையில் .எனக்கும் சென்னையில் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் வேலை கிடைத்தது .இந்த ஒருவருடமும் கல்லூரி போல் தினமும் சந்திக்க வாய்ப்பில்லை என்றாலும் மாதமொருமுறை யாவது எங்கள் சந்திப்பு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது .அவள் அவளின் தோழிகளுடனும் ..சமயங்களில் தனியாகவும் வருவாள் ...மெரினாவிலோ ..இல்லை ஏதும் ஒரு பூங்காவிலோ எங்களின் சந்திப்பு நிகழும் .கடைசியாக சென்ற மாதம் என் பிறந்தநாளின் போது பிறந்தநாள் பரிசாக ஒரு டி –ஷர்ட் எடுத்துக் கொடுத்தாள் .அதற்கு பிறகு அவளை இன்னும் சந்திக்கவில்லை .நாளைக்குத்தான் சந்திக்க போகிறேன்.

சிவன் கோவில் உள்ள இடம் கொஞ்சம் துரம் என்பதால் காலை எட்டு மணிக்கே கெளம்பினேன் அறையிலிருந்து.

”நான் கெளம்பிட்டேன் “என்று ஒரு மெசேஜ் செய்தேன் .

“ஓகே டா ..டென் மினிட்ஸ் நானும் கேளம்பிருவேன் ...அங்கயே வெயிட் பண்ணு நானும் வந்துருவேன் ..” என்று பதில் வந்தது .

ரொம்ப நேரம் இல்லை .காத்திருந்த பத்து நிமிடத்தில் வந்துவிட்டாள்.சென்ற முறை அணிந்த அதே நீலக் கலர் சுடிதார் .தூரத்திலிருந்து ஒரு புன்னகை செய்தாள்.நானும் பதிலுக்கு உதட்டிலும் அனிச்சையாகவே ஒரு புன்னகை பதில் கொடுத்தது .தூரம் நெருங்கி கிட்ட வந்துவிட்டாள்.

“ஹாய் டா ...”

“ஹாய் கவி ...”

“எப்படி டா இருக்க ..வந்து ரொம்ப நேரம் ஆச்சா ..”

“இல்ல ...ஆமா நேரம் ஆச்சு ..உங்களுக்குதான் காக்க வைக்கிறதுல அவ்வளவு சந்தோசமே...”

“சரி மொக்க போடாத ..போலாம் வா ..”

“எங்க ..”

“நீயே சொல்லு ..”

“என் நீதான கூப்பிட்ட ..நீயே சொல்லு ...”

“சரி மால் க்கு போலாம் ..கொஞ்சம் டைம் பாஸ் ஆகும் ..தென் டிசைடு பண்ணலாம்..ஓகே ?..”

“சரி..வா ..”

அருகிலிருந்த மால் க்கு நடந்தே சென்றோம் .

“அப்புறம் ..வொர்க் எல்லாம் எப்படி போது ..”

“இந்த மன்த் புரடக்சன் டல் ..ஸோ இப்போதைக்கு ப்ரீ தான் .நெக்ஸ்ட் மண்த் தொலைஞ்சேன்”

“உனக்கு .?.”

“எனக்கு என்ன எப்பவும் ஒரே தான் ..என்ன டைய்ளியும் டுவல் ஹவர்ஸ் ஆகுது ..அதன் கடுப்பு ..ஆபிஸ் ..ஆபிஸ் விட்டா ஹாஸ்டல் ..அவ்ளோதான் ..அடுத்து என்ன பண்ண போறேன்னு தெரியல”என்றாள். கடைசி வரியில் கொஞ்சம் அழுத்தம் குறைந்திருந்தது.

அமைதியாகவே வந்தாள்.நானும் அமைதியாகவே வந்தேன் .அப்போதைக்கு அதையே மனம் விரும்பியது மாதிரி இருந்தது .மால் வந்திருந்தது அதற்குள் .இல்லை நாங்கள் மால் க்கு வந்திருந்தோம்.எதையும் வாங்கும் எண்ணமில்லாமல் எல்லா கடைகளுக்குள்ளும் ஏறி இறங்கினோம் .கடைசியாக ஒரு கடையில் அவளுக்கு ஒரு சிறிய ஹேன்ட் பேக் வாங்கினாள்.

“உனக்கு என்ன டா வேணும் “

“எனக்குஒன்னும் வேணாம் ..”

“ஏண்டா ..ஏதாவது வாங்கிக்கோடா ..“ என்றாள்.

எப்போதும் என்னிடம்தான் அத வாங்கி கொடுடா ..இத வாங்கி கொடுடா ..என்று நச்சரிப்பாள்.இன்றைக்கு இதென்ன புதிதாய் ..அடம் தாங்காமல் சரியென்று “எனக்கு ஒரு ப்ரேஸ்லட்டும் வாங்கலாம்”என்றேன் .

“நானும் அதேதான் நெனச்சேன் என்றாள் ..”

ஒரு சில்வர் கலரில் நூத்தி ஐம்பது ருபாய் பெறுமானமுள்ள ஒரு ப்ரேஸ்லட் வாங்கினேன்

“இருடா நானே கொடுக்கிறேன் ..”என்றாள்

“இன்னைக்கு என்ன வழக்கத்துக்கு மாற இருக்கு ..என்ன என்னைவிட அதிகம் சம்பளம் வாங்குற ன்னு சீன் னா”.

“ஆமா ..அப்படித்தான்” என்றாள்ஒரு வகையான நகைப்புச்சிரிப்புடன் .

மால்-ஐ விட்டு வெளியே வந்தோம் .“அடுத்து எங்க போலாம்” என்ற கேள்வியை அவளே கேட்டாள்...”இன்னைக்கு சண்டே ..படத்துக்கு போலாமா” என அவளே கேட்டு “ச்சி..ச்சி..படத்துக்கெல்லாம் வேணாம் ..வேற எங்கையாவது போலாம் ..”என அவளே பதிலும் சொன்னாள்.ராஜாஜி பூங்காவிற்கு போவதாய் தீர்மானித்தோம் .இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழுநேரமும் திறந்திருக்கும் .ஷேர் ஆட்டோவில் ஏறி பூங்கா சென்றடைந்தோம் .வழக்கத்தைவிட கூட்டத்துடன் பூங்கா நிரம்பி குலுங்கிக்கொண்டிருந்தது மனிதர்களால். தேடிப்பிடித்து ஒரு காபி ஷாப் அருகில் இருந்த ஸ்டோன் பென்ச்சில் அமர்ந்தோம் .

“உனக்கென்ன வேணும்..டீயா ? காபி யா?”

“காபி”...இரண்டு பேருக்கும் காபி ஆர்டர் செய்தாள்

“இனி எப்ப பார்க்கப் போறோம் ன்னு தெரியலா ..” என்றாள் .குரல் சற்று தணிந்திருந்தது .

“அப்படி எங்க மேடம் ..போறீங்க ..” என்றேன் .

“வேலைய ரிசைன் பண்ணிட்டேன்” என்றாள்.

“என்ன வேலைய ரிசைன் பண்ணிட்டியா ?.நெஜமாவா?.”

“ஆமா .வீட்டுல மாப்ள பார்த்துட்டு இருந்தாங்கல்ல ..இப்போ பிக்ஸ் ஆகிடுச்சு ..அதன் வீட்டுல ரிசைன் பண்ணிட சொல்லிட்டாங்க..ரெண்டுநாள் முன்னாடிதான் பண்ணுனேன் ..நாளைக்கு ஹாஸ்டல வெக்கேட் பண்ணிட்டு கெளம்புறேன் ..” என்றதும் அவள் குரல் கம்மியிருந்தது .

“ஓ...”என்றேன் அர்த்தமில்லாமல் .வேறு வார்த்தைகள் இல்லை கைவசம்.மனம் கொஞ்சம் விழுமியது.எச்சில் விழுங்கியது தொண்டை .மனம் வேறு வார்த்தைகளை தேடவில்லை .அவள் சொன்ன பதிலிலேயே வியாபித்திருந்தது .ஆர்டர் செய்த காபி வந்திருந்தது டேபிளுக்கு .

“அதன் உன்ன பார்த்து சொல்லிட்டு போலாம் ன்னு வந்தேன் .இன்னும் பத்து நாள்ல எங்கேஜ்மென்ட் இருக்கும் .சொல்றேண்டா” என்றாள் .

“இனியெல்லாம் நாமா மீட் பண்ண முடியாது..அவ்ளோதான் .இதுதான் கடைசி மீட்டிங்” என்றேன் .

பதிலேதும் பேசாமல் “காபி குடி” என்றாள் மெல்லிய விசும்பலுடன் .விருப்பமே இல்லாதவனாய் கோப்பையை கையில் எடுத்தேன் .

கோப்பையில் காபி ஆறியிருந்தது .அவள் முகம் பார்த்தேன் . அவள் கண்களில் கண்ணிர் ததும்பியிருந்தது .

நிமிர்ந்து பாராமல் கைக்குட்டையால் கண்ணீரை துடைத்துவிட்டு “போலாமா” என்றாள் . “ஹ்ம்ம்”என்றேன் நானும் .பேருந்தில் ஏறி வார்த்தைகள் அற்றவர்களாய் பேசமலிருந்தோம்.அவள் அதே சிவன் கோவில் அருகே இறங்கிக் கொண்டவள் .எதுவும் சொல்லாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.நான் அதே பேருந்தில் சென்று என் நிறுத்தத்தில் இறங்கினேன் .அத்தனை வாகனச் சத்தங்களுக்கு இடையிலும் ஏதும் சலனமற்றவனாய் நடந்து அறைக்கு சென்றேன் .

மொபைலை எடுத்து நெட் ஆன் செய்தேன் . “ஐ மிஸ் யூ டா..” என கவிதாவிடமிருந்து வந்த குருஞ்ச்செய்தியை பார்த்ததும் கண்களில் இருந்து அறியாமலே விழிகளின் ஓரம் கண்ணீர் கசிந்தது .

கல்லூரியில் படிக்கும்போது கவிதா சொன்ன அதே வார்த்தைதான் மனதிற்குள் ஓடியது .

....“நீ ..எந்நாளும் என் நிச்சயிக்கப்பட்ட நண்பன்..யார் என்ன பேசுனா நமக்கென்ன ..”..

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.