யாரைத்தான் நம்புவதோ?

தோழி வீட்டில் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கும்போதுதான் ,’’போனால் போகட்டும் போடா’’ ஒரு முதிர்ந்த குரல் கேட்டது. இன்னும் சிறிது நேரத்தில் ‘’சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் ‘’என்றபாடல் . ஒன்றும் புரியாமல் கங்காவிடம் கேட்டேன் .’’என்னடி யார் இது? உங்க வீட்டில் அமர்ந்து பாடுவது, காமெடியா இருக்கே’’

‘’ஏய் காமெடின்னு சிரிச்சு வைக்காதே அப்புறம் என் பாடுதான் ஆபத்து?’’

‘’என்னடி புதிர் போடுறே ?’’

புதிர் இல்லே உண்மையைத்தான் சொல்றேன் என்று கங்கா சொல்லிக்கொண்டிருக்கும்போதே ‘’அடி செருப்பாலே, நான் இந்த வீட்டிலே கூட்டினா உனக்கு வலிக்குதோ “அதே பெண்மணிபக்கத்து வீட்டில் சண்டைபோட்டவாறேப் கங்கா வீட்டு வாசலைபெருக்கிக்கொண்டிருந்தாள்

’’வீட்டையா பெருக்குறே ரோட்டையில்ல பெருக்கி புழுதிய கிளப்புறே ‘’

‘’உங்கொப்பன் தன்னாலே நான் தான் கூட்டறேன்னு தெரியுதில்லே நீ உள்ளேபோய் கதவை சாத்திக்க வேண்டியதுதானே.. ‘’என்று பதிலுக்கு அந்த பெண்மணி சண்டை போட்டது’.

’ ஏய் கங்கா இப்படி ஊர் வம்பு இழுக்கிறதை ஏண்டி வேலைக்கு வச்சிருக்கே”

அது ஒரு பெரிய சோக கதைடி .சின்னவயசிலிருந்து எங்கம்மா வீட்டில் அது இருக்கு,,எங்க அம்மா இறந்த பிறகு என் வீட்டில் இருக்கு. நாணயமான பொம்பளை அதைப்போல் வீட்டை யாரும் சுத்தமா வச்சுக்கமுடியாது அதேபோல் வீட்டுக்கு ஏன் தெருவிலேயே திருடன் கிருடன் வரமுடியாது அத்தனை தைரிய சாலி.என்ன வாய் கொஞ்சம் அதிகம் . வாய்க்கு ருசியா அம்மா சமைத்துபோட்டு சாப்பிட்டு பழக்கம் அதேமாதிரி நானும் சூடா ருசியா கொடுக்கணும் இல்லேண்ணா கோவிச்சுகிட்டு போயிடும் இரண்டு நாள் கழித்து வரும் அதற்கும் எங்களை விட்டால் யாருமில்லை ‘’

’’ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே ,ஏண்டி அதுக்கு கல்யாணம் ஆகலையா?’’

‘’கல்யாணம் எல்லாம் ஆனது ஆனால் வாழத்தான் இல்லே ‘’

‘’ஒண்ணுமே புரியலே முழுசா சொல்லுடி ‘’

சொல்றேன் முதலில் நீகாஃபி சாப்பிடு

கங்கா சொல்ல ஆரம்பித்தாள்

நான் படிக்கும் போது எங்க வீட்டுக்கு வழக்கமா காய்கறி கொண்டு வந்து

கொடுப்பார் காசியம்மா என்றபெண்மணி அவங்களுக்கு இரண்டு பெண்கள்மூத்தவள் சரோஜா இளையவள் பட்டம்மா ரொம்ப கஷ்டமானஜீவனம், கணவன் இல்லாம இந்த பெண்களை பத்திரமா வளர்க்கணுமே ,,காய்கறி தூக்கித்தான் அரை வயிற்றுக்கும் கால் வயிற்றுக்குமா ஜீவனம் ஓடிக்கொண்டிருந்தது,,வறுமையில் வாடினாலும்

பெண்களை ஒழுக்கத்தோடுதான் வளர்த்தார்களாம் காசியம்மா .

சரோஜாவும் பட்டம்மாவும் நல்ல கலர் தாயைப்போலவே அதனால அக்கம் பக்கம் இருந்து பாதுகாக்க ரொம்ப சிரமப்பட்டாங்களாம்,அப்பதான் சரோஜாவை பக்கத்து ஊரிலிருந்து பெண் கேட்டு வந்தான் ஆறுமுகம்

காசியம்மாவும் விசாரித்து பங்கு,வீடு எல்லாம் இருக்குன்னு அவளாவது

பசியில்லாம மூணு வேளையும் சாப்பிடட்டுமேன்னு ஒப்புதல் கொடுத்துட்டாள் அங்கே இங்கே கடனை வாங்கி திருமணம் செய்து கொடுத்து விட்டாள்,அக்கா போனபிறகு பட்டம்மாவை தனியா வீடில விடாம தன்னோடையே காய்கறி விற்க அழைத்துப் போனபோது

பட்டம்மாவின் சூட்டிகையைப்பார்த்து எங்க வீட்டிலேயே வச்சுக்க எங்க அம்மா கேட்டதும் பாதுகாப்பு கருதி காசியம்மாவும் சரின்னு சொல்லிட்டாங்க தன், வீட்டிலே வேலை செஞ்சு பழக்கமானதால் எங்க வீட்டிலேயும் எங்க அம்மாவிற்கு ஒத்தாசையா பட்டம்மா இருந்தாள் . மூணு வேளை சாப்பாடு துணி சம்பளமுன்னு கொஞ்சம் கொடுப்பாங்க எங்க அம்மா இன்றைய காலமா இருந்தா குழந்தை தொழிலாளரை வேலைக்கு வச்சுக்கமுடியுமா? எங்ககுடும்பத்தொடேயே ஒன்றி விட்டாள்

ஏன் அவள் வயதுக்கு வந்தும் கூட எங்க வீட்டிலேதான் இருந்தாள் .பட்டம்மா நிம்மதியாக ஆனால் அவள் வாழ்க்கையில் விதி விளையாடியது .ஒரு நாள் காசியம்மா வந்து அம்மாவிடம் ஏதோ சொல்லிச்சென்றாள், அவள் மகள் அவள் முடிவு என்று அம்மாவும் பட்டம்மாவை அனுப்பி விட்டார்கள், பட்டம்மாவிற்கு கல்யாணம்ஆகி விட்டதாம் . காசியம்மாவும் மகளுக்கு திருமணம் ஆன மகிழ்ச்சியில்

ஒரு நாள்போய் சேர்ந்தாள் . நானும் கல்யாணம் ஆகி போயிட்டேன்

திடீர்னு எங்க் அம்மா கீழே விழுந்திட்டாங்கன்னு செய்தி கிடைத்து வந்தா அம்மாவின் அருகில் பட்டம்மா நின்று அம்மாவிற்கு உதவியா இருந்தாள்

அவள் கழுத்தில் தாலி இல்லை , கணவன் இறந்து போய்விட்டதால் மறுபடி இங்கே வந்து விட்டதாக சொன்னார்கள் ’ பிறகுதான் அம்மா அந்த விவரத்தை சொன்னார்கள், சரோஜாவுக்கு குழந்தை பிறக்காததால் நாளை தங்கை வேறு யாரையாவது அவளுக்கு குழந்தை பிறந்தால் தன் நிலை சங்கடமாகிவிடும் என்றுஎண்ணி தன் அம்மாவிடம் வந்து தன் மாமியார் அவள் கணவனுக்கு இரண்டாம் கல்யாணம் பண்ணப்போவதாக சொல்லி அழுவ காசியம்மாள் மனம் உடைந்து போக அம்மா இதற்கு ஒரேஒரு வழிதான் இருக்கு நம்ம பட்டாம்மாளை இரண்டாம் தாரமா பண்னி வச்சா சொத்தும் போகாது நானும் அவளும் ஒற்றுமையா வாழலாம் என்று சொல்ல,காசியம்மா தயங்கினாளாம் ஆனால் சரோஜா விடவில்லையாம் வேற கல்யாணம் பண்ணினால் என்னை வீட்டை விட்டு விரட்டி விடுவார்கள் நான் உனக்கு பாரமா இங்கே வந்து உட்கார வேண்டியதுதான் என்று சொல்ல,,அப்ப நீயே பட்டம்மாவிடம் பேசு என்று காசியம்மா சொல்ல .சரோஜா உருக்கமாபேசி விவரத்தை சொல்லி அழ

இரக்க சுபாவத்தாலும்,அக்கா வாழ்க்கையை நினைத்தும் பட்டம்மா ஒத்துக்கொண்டாளும் அவளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை கேட்டாளாம்

அக்கா எனக்கும் குழந்தை பிறக்கலைன்னா அத்தானுக்கு வேற கல்யாணம் பண்ணி வைப்பாளாமா உன் அத்தைக்காரி .என்று கேட்க திடுக்கிட்டசரோஜா இதோ பாரு பட்டுகண்ணுஎனக்குத்தானே பிள்லை பிறக்காதுன்னு டாக்டர் சொன்னார் அத்தானுக்கில்லையே உனக்கு பிறக்கும்ண்டா நீ கவலைப்படாதே அம்மா நிலைமை நினைச்சு பாருன்னு சொன்னதும் ஒத்துக்கொண்டாளாம் ,,ஆனால் திருமணம் ஆகிவந்தபிறகு

கணவனிடம் பட்டம்மாவை நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டாளாம் வீட்டு வேலைக்கு ஒரு ஆள் கிடைத்த சந்தோஷத்தில் பட்டாம்மாவை படுத்தி எடுத்தாளாம் இதையெல்லாம் தெரிந்துதான் காசியம்மா மனம் உடைந்து இறந்துபோனாளாம் ஒரு அப்பாவிக்கு தனக்குத்தெரியாமலேயே துரோகம் நடந்திருக்குன்னு தெரிஞ்சதும் சரோஜாவின் கணவனும் பட்டம்மாவிடம் தனிமையில் இதெல்லாம் உங்க அக்கா ஆடிய நாடகம் இதில் என் பங்கு எதுவுமே இல்லை எனக்கூறி மன்னிப்பு கேட்டானாம் சிறிது நாளில் மர்மா இறந்து போய் விட்டானாம்,,அவன் இறந்ததும் சொத்து எதுவும் கொடுக்காமல் பட்டம்மாவை விரட்டி விட்டாளாம்

தனியாக விடப்பட்ட பட்டம்மா உடன் பிறந்தே கொன்ற வியாதியால் மனம் வெறுத்து மறுபடி எங்க வீட்டுக்கே வந்து விட்டாள்..அவளுக்கும் கனவெல்லாம் இருந்திருக்கும்ல,பாவம் அதனாலதான் அவள் அப்பப்ப

விரக்தியில் எல்லோரையும் திட்டுவாள் அழுவாள் பழைய சினிமா பாட்டுப்பாடி தன் கவலையை மறப்பாள்,,இந்த காலமா இருந்தா பட்டம்மாவும் அக்காவின் துரோகம் தெரிந்து தப்பித்திருப்பாள்,..பாவம்டி அவள் ..அதனால்தான் நானும் அவளை ஒன்றுமே சொல்வதில்லை இந்தகதையை அம்மா என்னிடம் சொல்லி அவளை உன் வீட்டிலேயே வேலைக்கு வைத்துக்கொள் என்று சொல்லிப்போனார்கள், இப்ப சொல்லு அவள் பாவம்தானே ,,

சே கூடப்பிறந்தவளே ...கேட்கிற எனக்கேகஷ்டமா இருக்கு இதுதான் விதி என்பதோ’’ ? நான் கதையை கேட்டு மனம் வருந்த மறுபடி பட்டம்மா பாடுவது கேட்டது ‘’யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம் ‘’ இப்போது எனக்குஅழுகைவந்தது .

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.