இனி ஒரு விதி செய்வோம்:ஆபிரகாம் வேளாங்கண்ணி- கவிதைமணி

ஊருக்கொரு பள்ளியை
கட்டிக் கொடுப்போம்
இலவசமாய் கல்வியை
கற்றிட வைப்போம்

மாநிலத்துக் கொரு
தொழில் சாலைகளை
அமைத்துக் கொடுப்போம்
வீட்டுக் கொரு வேலையை
போட்டுக் கொடுப்போம்

ஏரிக் குளங்களை வெட்டி
மழைநீரை சேமிப்போம்
விவசாயிகள் முகத்தில்
விழும் சுருக்கமெடுப்போம்

குடிசையை கோபுரமாய்
மாற்றிக் காட்டுவோம்
வறுமை வாய்க்க வந்தால்
இனிப் பிலமரும் ஈயென
விரட்டியடித்திடுவோம்

வீட்டுக் கொரு காற்றாடி
நட்டுக் கொடுப்போம்
தாமாக மின்சாரத்தை
பெற்றிட வைப்போம்

இல்லை என்ற சொல்லை
கிள்ளி எரிவோம் களைகள்
இல்லா பயிர் வளர்த்து
வெள்ளாமை குவிப்போம்

பஞ்சத்தை பஞ்சாக்கி
நூலாய் திரிப்போம்
ஆடை நெய்து பாமறர்க்கு
உடுத்தி அழகு பார்ப்போம்

நாடு காக்க இளைஞராய்
தேர்ந்து எடுப்போம் அவரை
ஆளவைத்து பார்த்து நாமும்
மீசையை முறுக்குவோம்

நாடு விட்டு நாடுப் போக
நாங்கள் மறுப்போம் அயல்
நாட்டவரை இங்கழைத்து
பிழைக்க சொல்வோம்

வாய் பிளந்து பார்ப்பார்
அயல் நாட்டார்கள் சதா
நம்மையன்றி வேறுப்
பேச்சை பேசமாட்டார்

முறுக்கிற்க்கு மாவு பிழிந்து
சட்ட முறுக்கு சுட்டெடுப்பர்
முறுக்கையே பிசைந்து
உடைத்து நொறுக்கி நல்ல
நடைமுறைக்குத்தக
சட்டம் தீட்டிடுவோம்

இன்னொரு கைகளை
எதிர்பார்க்காமலேயே
கையில் உள்ளதை வைத்தே
பல நல்லதை செய்வோம்

புதுப்புது பதுமைகளை
செய்து காட்டுவோம் உலகே
பிரம்மித்து போகும்படி
பெருமைச் சேர்ப்போம்

இதுவரை நடந்தது யாவும்
நண்மையோ தீமையோ
அதனை அடியோடு நாமும்
மறந்தொழிப்போம்

சோம்பாமல் சுயமாய்
சுதந்திரமாய் இங்கணம்
இனி ஒரு விதி செய்வோம்
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
மும்பை-மஹாராஷ்டிரா

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.