யாருமற்ற பகல்

.............................

யாருமற்ற பகல்

பெளர்ணமி இரவென தகித்திருக்கிறது இமைகளுக்குள் ஈமச்சடங்கொன்றுக்காக அயித்தையும் மாமனும் விடுமுறை கொண்டாட நாத்தனார் வீடு சென்றன பிள்ளைகள் கூடவே ஜிம்மியும் எப்போதும் இருந்த அதே அறையென்னவோ தேம்ஸ் நதிக்கரை கூடாரமாகவும் மகிழம்பூக்கள் சிதறிய நிலமாகவும் பஜாரில் கடைக்காரனிடம் பேரம் பேசி வாங்கிய விஐபி வெள்ளை நிற பனியனில் சற்றே கூடுதல் கம்பீரமாக அவனும் நானோ சங்ககாலத்தினூடே பயணிக்க சாண்டில்யனின் கதை நாயகியாகி கொண்டிருக்க பிரேபா எனும் ராட்சஸ மீன்வகையாகி மீசைகொண்டே தின்ன ஆரம்பித்திருந்தனன் எனை யாரும் வந்திடமாட்டார்கள் பியுலா வந்து கதவை தட்டமாட்டா ஜிம்மி கட்டிலுக்கடியில் இல்லை கேபிள்காரனோ கந்துவட்டிக்காரனோ வந்து கூவமாட்டான் என்பதோடு ஆலிங்கனத்தின் இறுதி பெருமூச்சில் வாய்த்த பகலின் வெளிச்சமும் ஒளிர்ந்தது சற்றே வானம் சிணுங்க ஆரம்பிக்கவும் தலைவன் என் பாதவிரல்களுக்கு சொடுக்கு எடுக்கலானான் ஒரு வெதுவெது கொத்துமல்லி தேநீர் அவனுக்கும் ஒரு புறங்கை முத்தமும் இந்த பகலை மயக்கும் மாலையாக முடித்து வைத்தது…

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.