என்னவனே

மதிய நேரம் நுங்கம்பாக்கம் அங்கு இருந்த கல்லூரியின் வகுப்பு முடிந்ததும் பெண்கள் வெளியே வந்து கொண்டு இருந்தனர். பஸ் பாஸ் கையில் இருந்தும் ஆட்டோகாரர்களிடம் பேரம் பேசாமல் கேட்ட பணத்தை தருவதாக சொல்லி கிளம்பினார்கள்.

வெயிலுக்கு பயந்து பெண்கள் துப்பட்டாவில் முக்காடு போட்டு கொண்டு தங்களுடைய ஸ்கூட்டிகளை ஒட்ட தயாரானர்கள்.எங்கும் பிங்க் கலர் பறவைகள் போலபெண்கள்அந்த ரோட்டில் வண்டி ஒட்டுபவர்களின் ஒரு கண் இவர்களை பார்த்த படி தான் சென்றது.தீட்ஷாவும் அவள் வகுப்பு தோழிகளுடன் வேளியே வந்தாள்.

"இட்ஸ் டூ ஹாட் கான்ட் வெயிட் ஃபார் ஹியர் ஐ யம் கோயிங் நவ் இப் ஷி கம் டெல் அபோட் தட்" என சொல்லிவிட்டு தீட்ஷாவின் தோழிகள் சிலர் அவர்கள் ஐபோனில் டாக்ஸி புக் செய்து கிளம்பினர். தீட்ஷாவின் ஐபோன் ஒலித்தது.

"ஹேய் ஐயம் ஆன் த வே க்ராஸ்ட் நுங்கம்பாக்கம் ஜங்ஷன் வேர் ஆர் யு கேர்ல்ஸ் ??"

"இன் ப்ரன்ட் ஆப் காலேஜ் என்ட்றன்ஸ் சுஸ்மா.மனிஷா அன்ட் மீ ஆர் ஆல் வைட்டிங் ஃபார் யு" என அவள் பேசி கொண்டு இருந்த போது "****** காலைல இருந்து என்ன ******* இருக்க ********...

****** இன்னும் அரை மணி நேரத்துல பணம் வரலா ***** நடக்கரதே வேற என்னை என்ன ****** நினைச்சயாடா *******..." என தன் வாழ்வில் கேட்ட மொத்த கெட்ட வார்த்தையும் ஒரே நேரத்தில் கேட்டாள் தீட்ஷா.

திரும்பி பார்த்த போது இன்னும் கோபம் தீராமல் யாரையோ தன் மொபைலில் தீட்டி கொண்டு இருந்தான்.

செல்வா சுத்தி இருந்தோரில் அவனை பார்க்காதோர் சிலர் மட்டுமே அவர்களும் ஹேட் போனில் பாட்டு கேட்டு கொண்டுருந்தவர்கள். அதை எதையும் சட்டை செய்து கொள்ளாமல் ப்ரைஷை எடுத்து பெயின்ட் டப்பாவில் முக்கி சுவரில் அடித்து கொண்டு இருந்தான்.

செல்வா...

"ஷிட்..... ஹி ட்ஸ்ஸ வோர்ஸ்ட் பேல்லோ திஸ்ஸிஸ் த ப்ரோபலம் ஆப் ஒஃர் கன்ட்ரி லுக் தட் பேல்லோ இ டிட் நாட் க்னவ் டு பிகேிவியர் இன் பப்லிக்" என தீட்ஷாவின் தோழிகள் சொல்ல "விடு அவனுக்கு என்ன பிரச்சனையோ" என அந்த பேச்சை முடித்து கனிதா தன் காரில் வர அவள் காரில் ஏறி கிளம்பினர்.

தீட்ஷாவும் அவளின் தோழிகளும்.... காலை தன் வீட்டில் இருந்து கிளம்பும் போது தன் தந்தை யாருடனோ ஃபோனில் சத்தமாக பேசி சண்டை போட்டு கொண்டு இருந்தது நினைவுக்கு வந்தது.

உலகத்தில் அவர் அவர் பிரச்சனை அவங்களுக்கு என நினைத்தாள். ஆனால் எதுக்காக இப்படி அவன் கத்தி கொண்டு இருந்தான் என தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தாள். தான் படிக்கும் சைக்காலஜி படிப்புக்கு இது தேவை தானே. ஆனால் அவன் பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வர வேண்டாம் என நினைத்து விட்டு சென்றாள். மாலை விட்டுக்கு சென்றதும் தன் தந்தையிடம் "காலைல எதுக்கு அவ்ளோ சத்தமா சண்டை போட்டுகிட்டு இருந்தைங்க" என கேட்டாள்.

"இல்லை மா ஒருத்தன் வேலைக்கு ஆள் கூட்டிடு வரதா சொன்னான். கடைசி நேரத்துல கூட்டிட்டு வராமா விட்டுட்டான். வேலை நடக்கலை அதான் பேசிகிட்டு இருந்தேன்...."

"ஹிம் பேசிகிட்டா இருந்தைங்க" என தீட்ஷா கிண்டல் செய்ய சிரித்த விட்டு "போடா போய் சாப்பிடு போ" என தீட்சாவிடம் சொல்லி விட்டு நகர்ந்தார்..

இரவு தன் டைரியில் "இன்னைக்கு ரெண்டு பேர் சண்டை போடுவதை பார்த்தேன் ஒன்னு அப்பா இன்னோன்னு காலேஜ் பக்கத்து சுவர்ல பையின்ட் அடிக்கரவன் அப்பா ஏன் கோபப்பட்டார்னு கேட்டு தெரிஞ்சுகிட்டேன்.

அவன் யாரு எதுக்கு இப்படி கோபபட்டானு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு ஆனா பயமா இருக்கு கேட்கறதுக்கு.. கேட்டா சும்மா இருக்காம பெயர் என்ன?? உன் நம்பர் தா...

உன்ன எனக்கு பிடிச்சு இருக்கு.. என்னை உனக்கு பிடிச்சு இருக்கானு?? அப்படி கிளம்பிட்டா என்ன பண்ணுறது? வேண்டாம் என நினைத்து கொண்டாள்..

அடுத்த நாள் கனிதாவுக்காக அவர்களின் தோழிகளோடு அங்கே காத்திருந்தாள் தீட்ஷா. செல்வா திட்டி கொண்டு இருந்ததை பார்க்காமல் நேற்று முன்பே கிளம்பிய அவள் தோழிகளிடம் செல்வா திட்டி கொண்டு இருந்தை பற்றி சுஸ்மா பேசி கிண்டல் செய்து கொண்டு இருந்தாள். அவளின் பேச்சை நிறுத்த வேண்டும் என தீட்ஷாவுக்கு தோன்றியது காலையில் சுஸ்மா

இவர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் தீட்ஷாவை கிண்டல் செய்ததுக்கு திரும்ப கிண்டல் செய்ய வேண்டும் என நினைத்து கொண்டே இருந்தாள். அவர்கள் நின்று பேசி கொண்டிருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த டீ கடைக்கு செல்வா வந்ததை பார்த்ததும் "ஏய் நீ அவனை பத்தி தான பேசிகிட்டு இருக்க இதோ அங்க தான் இருக்கான் அவன் கிட்ட இதை சொல்லட்டுமா? என்றதும்" சுஸ்மாவின் பேச்சு நின்றது.

எதுவும் பேசாமல் பயந்த முகத்தோடு ஆட்டோவில் ஏறி சென்று விட்டாள்.. தீட்ஷாவும் அவர் தோழிகளும் சிரித்தவாரு இருந்தனர். தீட்ஷா செல்வாவை பார்த்த போது டீ கடைகாரரிடம் சண்டை போட போகிறான் என நினைத்து கொண்டாள்.

ஆனால் அவனோ சிரித்து பேசிய படி இருந்தான். நேற்று பார்த்தது இவன் தானா என்று ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு. சிகரெட்டை பிடித்த படி கண்ணாடி டம்ளரில் இருந்த காபியை குடித்த படி இருந்தான். செல்வா அப்போது அவனிடம் "பசிக்குது பா" என்று கேட்டு வந்த வயதான பெண்ணுக்கு ஒரு பிஸ்கட் பேக்கெட்டை வாங்கி கையில் குடுத்து விட்டு அதற்கும் சேர்த்து காசு கொடுத்து விட்டு நகர்ந்தான்..

தீட்சாவுக்கு ஆச்சர்யம் நேற்று இருந்தவனா இவன் என்று கார் வந்ததும் ஏறி சென்றாலும் கண்ணாடி வழியே அவளையும் அறியாமல் அவனை பார்த்தாள்.... அன்று இரவு தன் டைரியில் அவனை பற்றியும் எழுதினாள்....

"அவன் எப்படி பட்டவனா இருப்பான். சைக்காலஜி படிக்கற என்னால கூட அவனை புரிஞ்சுக்க முடியல.. பேசி பார்கலாமா? இதை அவன் காதல்னு நினைச்சுட்டு பின்னாடி சுத்த ஆரம்பிச்சுட்டா?

பாவம் அவன் சந்தோஷத்த எதுக்கு கெடுக்கனும். பொண்ணுங்க சும்மா இருந்தாலே பசங்க அவங்க வேலைய பார்த்துட்டு இருப்பாங்க. நாம எதர்ச்சையா பார்த்தாலே எது எதையோ நினைச்சுட்டு பின்னாடி சுத்த ஆரம்பிச்சுடுவாங்க. பேசிட்டோம்னா !!!! ஐயோ அவ்ளோ தான் அப்புறம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் அப்படிங்கற வரைக்கும் கனவு கண்டு அப்புறம் நம்ம தான் அவங்க வாழ்க்கைய கெடுத்துட்டதா சோக பாட்டு கேட்டுட்டு சாபம் விட ஆரம்பிச்சுடுவாங்க. வேணாம் நம்ம உண்டு நம்ம வேலை உண்டு அப்படினு இருப்போம் அதான் கரேக்ட்"..

அடுத்த நாள் அதே இடத்தில் காத்திருந்தனர். தீட்சாவுக்கும் அவள் தோழிகளுக்கும் வாக்குவாதம் யார் தனியே சென்று அத்தனை ஆண்கள் இருக்கும் டீ கடையில் சிகரெட் புகை வாசத்துக்கு நடுவில் அனைவரும் குடிக்கும் கண்ணாடி டம்லரில் டீ குடிக்க வேண்டும் என்று சுஸ்மா நேற்று தன்னை கிண்டல் செய்ததுக்கு பழி வாங்க தீட்ஷாவை இதை செய்து காட்ட சொல்லி பேட் செய்தால் சுஸ்மா ஜெய்த்தால் ஆயிரம் ரூபாய்க்கு சாக்லேட் வாங்கி தருவதாக சொல்ல தீட்ஷா செய்து காட்டுவதாக சொன்னாள். "அண்ணா ஓரு டீ" என சொல்ல அவள் தோழிகள் அவளையே பார்த்தபடி இருந்தனர்....

"யார் யார் குடிச்ச டம்ளரோ இவங்க எல்லாம் சரியா கழுவ கூட மாட்டாங்களே.. வேணாம்னு சொல்லிட்டு போலாமா?? ஐயோ சுஸ்மா இதை காலேஜ் க்ளாஸ் ரூம் வாட்ஸ் அப் குருப் னு கலாச்சு கொன்னுடுவா. ஆனா ஒன்னு இன்னைக்கு வாமிட் கன்பார்ம் அவ வாங்கி தர சாக்லேட் கூட சாப்பிட முடியாது" என நினைத்த படி இருந்தாள்..

அவள் கைக்கு டீ வந்தது.. அவள்அதை வாங்க சூடு தாங்க முடியாமல் அவள் கையை மாத்தி மாத்தி பிடித்தாள்....

"குடுங்க ஆத்தி தரேன்" என டீ கடைகாரர் மாணிக்கம் கேட்டதர்க்கு "பரவாலங்க அண்ணா" என சொல்லிவிட்டு குடிக்க முடியாமல் டீயை குடிப்பது போல நடித்து கொண்டு இருந்தாள். அந்த நேரம் பார்த்து செல்வா டீ கடைக்கு வர தீட்ஷாவின் தோழிகளுக்கு பயம் வந்து விட்டது.. அவர்களும் டீ கடைக்கு வர பயம் அதனால் "வேணாம் வந்துடு" என சைகை காட்டினர் தீட்ஷா அதை கவனிக்கவில்லை..

தன் மொபைல் சத்தம் இட அதை எடுத்து பார்த்தாள் வாட்ஸ்அப் பில் அவர்களிடம் இருந்து "பிலீஸ் கம்" என மெசெஜ் வந்து இருந்தது.

தீட்ஷாவுக்கு பயம் இல்லை. நேற்று நடந்ததை தீட்ஷாவின் தோழிகள் பார்க்க வில்லை.. நேற்று முன்பு நடந்ததை மட்டும் தான் பார்த்து இருந்தார்கள்.

தீட்ஷாவுக்கு செல்வா மீது இருந்த பயம் நேற்றோடு போய் விட்டது. ஆனால் கையில் இருந்த அந்த டீ யை நினைத்து வருத்தபட்டு கொண்டு இருந்தாள். "மாணிக்கம் அண்ணா ஒரு டீ" என்றதும் "வா செல்வா இந்தா என கேட்காமலே அவன் கைக்கு சிகரெட்டை கொடுத்தார் கடைக்காரர் மாணிக்கம்".

அதை வாங்கி பற்ற வைத்து திரும்பும் போது புகை தீட்ஷாவின் முகத்தில் பட்டது.. டீ யை குடிக்க முடியாமல் குடித்துக் கொண்டு இருந்தவள் முகத்தை சுழிக்க "சாரிமா மன்னிச்சுக்கோ" என சொல்லி விட்டு பிறகு இரண்டு முன்று அடி தள்ளி சென்று சிகரெட்டை பிடித்தான் செல்வா..

சரி சாதாரணமாக குடித்தால் இந்த டீயை குடிக்க முடியாது. அவனை பார்த்த போது சிகரெட்டை இழுத்து விட்டு டீயை குடித்துப்பது என இருந்தான் அதை போல அவன் குடிக்கும்.. போது நாமும் குடித்து விடுவோம்.. அவன் சிகரெட் பிடிக்கும் போதுநம்ம வையிட் பண்ணுவோம் என அதே போல செய்து டீயை குடித்து முடித்து..

எப்படியோ ஜெய்த்து விட்டோம் என நினைத்தாள். தன் ஹன்ட் பேக்கில் இருந்த நூறு ரூபாயை எடுத்து தந்தாள். "சில்லரை இல்லையே மா கொஞ்சம் இரு மாத்திதரேன்" என சொல்ல ஒரமாக நின்று கொண்டு இருந்தாள் செல்வா காசு கொடுக்க வந்தான்.

"செல்வா ரெண்டு ஐம்பது இருக்கா? இருந்தா குடுப்பா வேணும் என மாணிக்கம் கேட்க தன் சட்டை பையில் இருந்து எடுத்து தந்தான். அவன் இரண்டு ஐம்பது ரூபாயை குடுத்து நூறு ரூபாயை வாங்கி கொண்டு திரும்பும் போது யாரோ உண்டியலை நீட்டி பணம் கேட்க இல்லையேன சொல்லி விட்டு நகரும் போது அவர்கள் அணிந்து இருந்த சட்டையை பார்த்து "நீங்க என்ன சங்கம்?" என கேட்டான் செல்வா.

"கம்யூனிஸ்ட் சார். குழந்தைகள் படிப்புகாக"... என்றதும் கடைக்காரர் தந்த நூறு ரூபாயை அப்படியே உண்டியலில் போட்டு விட்டு நகர்ந்தான்.

தீட்ஷா நடந்ததை எல்லாம் பார்த்த படி இருந்தாள்.. மீதி சில்லரையை வாங்கி அவனை போல அந்த உண்டியலில் போட்டாள். ஏனோ செல்வாவிடம் பேச தோணியது அவளுக்கு செல்வா மறுபடியும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து கொண்டிருந்தான்....

"சார் நான் இந்த காலேஜ்ல சைக்காலஜி படிக்கறேன். உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்" என்றாள். "சொல்லுங்க" என்று பதிலளித்தான்.

இதை பார்த்து தீட்ஷாவின் தோழிகள் பயத்தின் உச்சத்தில் இருந்தனர். "நீங்க இவ்ளோ நல்லவரா இருக்கிங்க அப்புறம் ஏன் அன்னைக்கு இந்த இடத்துல அவ்ளோ கெட்ட வார்த்தை பேசிகிட்டு கோபமா இருந்திங்க??" என்று அவள் கேட்டதும் வேட்கம் கலந்த வகையில் சிரித்தபடி, "அது ஒன்னும் இல்லங்க நானும் என்னோட கோஞ்ச பேரும் ஒருதர் கிட்ட வேலை செஞ்சோம் பணம் தராம ஏமாத்திட்டு இருந்தான்.... அதுவும் வேலை செஞ்ச ஒருதரோட மனைவியை பிரசவத்துக்காக ஆஸ்பிட்டல்ல சேர்த்து இருந்தார்..

கவர்மேன்ட் ஆஸ்பிட்டல் தான் ஆன குழந்தைய விட்டுக்கு கூட்டிட்டு வரது தொட்டில் வாங்குரது அப்படினு இப்படினு செலவு இருக்கும் இல்லையா? பாவம் அந்த டைம்ல கைல காசு இல்லைனா என்ன பண்ணுவாரு பாவம் அதான் அப்படி பேசி சம்பளத்தை வாங்கி குடுத்தேன்" என சொல்ல திகைத்தபடி அங்கு இருந்து நகர்ந்தாள் தீட்ஷா.

அன்று அவள் டைரி அவன் உடையது ஆனது அந்த நாளில் நடந்தை விட அவனிடம் பேசியதே அவளுக்கு நினைவுக்கு வந்தது..

அடுத்த நாளும் காலேஜ் முடிந்ததும் வழக்கம் போல கனிகாவுக்காக காத்திருந்தனர் செல்வா தன் வேலையை செய்த படி இருந்தான்.

"எப்படியும் நேத்து தான் பேசுனோம் ஞாபகம் வைச்சு இருப்பான்" என தீட்ஷா நினைத்தாள். ஆனால் அவனோ இவள் யார் என்று தெரியாதவன் போல சிகரெட்டை பிடித்த படி இருந்தான்....

அவன் பார்க்கிறானா??? பார்கிறானா??? என்று அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் .. எதனால் என்ற தெரியவில்லை அவளுக்கு.. அவள் தோழிகளின் பேச்சை கேட்பது போல இருந்தாலும் அவளின் எண்ணமும் கண்களும் அவனையே பார்த்த படி தான் இருந்தது.

"இன்று வெள்ளிக்கிழமை இனி இரு நாட்களுக்கு கல்லூரி இல்லை இவனை எப்படி இனி பார்ப்பது? என அவள் மனது யோசித்தது. "இவனை எதுக்கு நான் நினைக்கனும்?"

அவன் யார்? அவனுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? நான் ஏன் அவனை நினைக்கனும் பார்க்கனும்? அவனை நினைக்க கூடாது என தன் மனதுக்கு கட்டளையிட்டாள்.

விளைவு அவனை நினைக்காத நேரமே இல்லை என்பது போல ஆனது அவன் பெயர் மட்டுமே இவளுக்கு தெரியும். எப்படியும் தன் காதலுக்கு தோழிகள் எதிர்ப்பு தெரிவிக்க போகிறார்கள் என நினைத்தாள்.. "என்ன காதலா?" என அவள் மனம் ஆச்சர்யமாக கேட்டது.

"ஆமாம் நல்ல பையன் பொண்ணுங்களுக்கு மரியாதை தரான் அவன் சம்பாரிக்கிற கொஞ்ச காசுலயும் அடுத்தவனுக்கு அவனால முடிஞ்ச உதவி செய்யுறான். இதுக்கு மேல என்ன வேணும் ?? அவனை நான் காதலிக்கறேன் என்ன தப்பு ??" என அவள் மனதின் பேச்சுக்களையும் எதிர்ப்புகளையும் அடக்கினாள். தீட்ஷா செல்வா அங்கு வரும் 1-45 மணிக்கு இவளும் அந்த டீ கடைக்கு சென்று டீ குடித்தாள்.

இப்போதும் அவள் பேசிய பின் தான் அவன் பேசினான்....அவள் முன்னே சிகரெட் பிடிக்காமல் மறைத்தான். நீங்க ஒரு சிகரெட் பிடிச்சுட்டு தான டீ குடிப்பிங்க இப்போ மட்டும் வேறும் டீ மட்டும் குடிக்கறிங்களே ஏன்? என்று கேட்டதற்க்கு “இல்லை பொண்ணுங்க முன்னாடி சிகரெட் பிடிக்க மாட்டேன்.... உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் பார்த்தா உங்களுக்கு தான பிரட்சனை அதான்” என சொன்னான்.

உங்க வீடு எங்க இருக்கு ?

“எக்மோர்”ல

"இங்க தான் வேலை செய்றிங்களா?"

“இங்கயா!! எங்களுக்கு எங்க வேலை இருக்கும்னு எங்களுக்கே வேலை செய்யுற இடத்துக்கு போன பிறகு தான் தெரியும் இப்போ வரைக்கும் இங்க வேலை இருக்கு இனி எங்கயோ யாருக்கு தெரியும் ”

இனி இங்க எவ்ளோ நாள் இருப்பிங்க ??

“இன்னும் ரெண்டு நாள் இருப்பேன்” என்றதும் அவள் முகம் வாடிப்போனது வெற்று தனமாக சிரித்து விட்டு நகர்ந்தாள் தீட்ஷா. அவள் சென்ற பின்பு சிகரெட்டை பற்ற வைத்து பிடித்தான் செல்வா.

இவள் ஏன் இப்படி செய்கிறாள்? என்று இவள் தோழிகளும் யோசித்தனர்.

சரி காதலை சொல்லி விடுவதாக முடிவு செய்தாள். ஆனால் பயம் யார் என்று தெரியதைவனை காதலிக்க சொல்லி காதலிக்க மாட்டேன் என்று அவன் சொன்னால் ??

"எந்த பையன் ஒரு பொண்ணு காதலை சொல்லி வேனானு சொல்லுவான்? இப்போ இருக்க பசங்க ஏற்கனவே காதலி இருந்தாலும் கூட சரினு தான் சொல்லுவாங்க.... இது தான் தீட்ஷா மனதில் இருந்தது...

அடுத்த நாள் அதே போல அவனுக்காக காத்திருந்தாள். அவன் இன்று சற்று தாமதமாக தான் வந்தான். அவனிடம் சென்று பேச ஆரம்பித்தாள். இப்போது அவனை பார்த்து பேசிய படி அவனுடன் குடிப்பதால் அதே டீ அவளுக்கு பிடித்து போனது. முகம் சூழிக்க குடித்தவள் குடித்த பிறகு உதட்டின் ஒரத்தில் இருக்கும் சக்கரை சுவையை தன் நுனி நாக்கினால் வருடிய படி ருசித்து குடித்தாள்.

"உங்க கிட்ட கோஞ்சம் பேசனும்" என்றாள்.

"மறுபடியுமா??" என சொல்லி சிரித்து விட்டு, “சொல்லுங்க” என்றான்..

"இல்லங்க உங்கள எனக்கு பிடிச்சு இருக்கு நீங்க செய்யுற நல்லது பொண்ணுங்க கிட்ட பேசுற விதம் இது எல்லாம் எனக்கு பிடிச்சு இருக்கு, உங்களுக்கு என்னை பிடிச்சு இருக்கா?" என கேட்டாள் தீட்ஷா.

அவள் பேசியதை கேட்டதும் கோபமாக முகத்தை வைத்தபடி..

"இங்க பாரு எனக்கு இதுலாம் புடிக்காது நீ எதோ பேசுன அதுக்கு நான் பதில் சொன்னேன். அவ்ளோ தான் இதுக்கு மேல உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை படிக்கர பொண்ணு வீணா வாழ்க்கைய கெடுத்துகாத புரியுதா??" என சொல்லிவிட்டு நகர்ந்தான் செல்வா.

தீட்ஷாவுக்கு செல்வா மீது இருந்த காதலும் மரியாதையும் மேலும் அதிகம் ஆனது. செல்வா தன் முகத்தை கோபமாக வைத்தபடி நடித்தான்..

அவன் வாழ்வில் ஒரு பெண் தேவைதான். ஆனால் அவன் காதலித்த நிர்மலா அவனை ஏமாற்றி சென்ற பிறகு அவனுக்கு காதல் கல்யாணம் இதில் விருப்பம் இல்லை. அவன் எந்த அளவுக்கு நிர்மலாவை காதலித்தானோ அதே அளவுக்கு இப்போது காதல் மீது அவனுக்கு வெறுப்பு உள்ளது..

இன்றோடு இங்கே வேலை முடிய போகிறது.. இனி அந்த பெண்ணை பார்க்க வேண்டாம் என நினைத்து வேலையை செய்து கொண்டிருந்தான்..

"அந்த பொண்ணுக்கு இப்போ தான் காலேஜ் முடிஞ்சு வெளிய வர நேரம் இப்போ அங்கே போக வேண்டாம் அரை மணிநேரம் கழிச்சு போவோம்..."

என தன் மதிய உணவு இடைவேளையிலும் தனியாக வேலை செய்த படி இருந்தான்.

சுவர் பெயின்ட் அடிக்கும் வேலை முடிந்து இன்று கடைசி நாளாக சுவரின் மேலே உள்ளே கம்பி வேளியில் பெயின்ட் அடிப்பது அவன் வேலை. தீட்ஷா அங்கு இருந்து சென்று விட்டாளா என்று பார்பதற்காக பார்த்த போழுது கால் வலிக்கி கீழே விழுந்தான்.

தரையில் இருந்த கல் அவன் தலையை பதம் பார்த்தது வலியால் தரையில் பிரண்ட போது கண்ணாடி சில் அவன் முதுகை கிழித்தது.. அவன் சட்டை நில நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்துக்கு மாறியது. இதை பார்த்த தீட்ஷா பதறியபடி ஒடி வந்தாள்.

அவள் தோழிகள் அவள் கையை பிடித்த போது தட்டி விட்ட படி ஒடி அவனிடம் சென்றாள். செல்வா விழுந்ததை பார்த்த டீ கடை மாணிக்கமும் ஒடி வர அவனோடு வேலை செய்பவர்கள் உணவு இடைவேளைக்கு சென்றதால் அவனுடன் வேலை செய்பவர்கள் யாரும் அங்கு இல்லை.

மாணிக்கத்துடன் சேர்ந்து அவனை தூக்கிய போது அவனை விட அவன் வலியை இவள் அதிகம் உணர்ந்தாள். தன் மொபைலில் இருந்து ஆம்புலன்ஸ்சுக்கு அழைத்தாள். எப்போதும் போல நுங்கம்பாக்கம் மதிய நேர போக்குவரத்து நெரிசலில் தவித்து கொண்டு இருந்தது. அப்போது வந்த கனிகாவின் காரில் செல்வாவை தூக்கி உள்ளே போட்டாள்.

"யாரு டி இவர் ? என்ன ஆச்சு??" என கேட்ட கனிகாவை தீட்ஷா முறைத்து பார்த்ததில் பதிலை எதிர் பார்க்காமல் வண்டியை ஒட்டினாள்.

அவள் கண்ணில் இருந்து கொட்டிய கண்ணிர் அவளின் காதலின் உண்மையை செல்வாவுக்கு மீண்டும் ஒரு முறை அழுத்தமா சொல்லாமல் சொல்லியது. இருந்தாலும், "என்னை விடு நான் தனியா ஆஸ்பிட்டுலுக்கு போய்கிறேன்" என முனங்கி பின் தீட்ஷா மடியில் மயக்கம் ஆனான் செல்வா.

ஆஸ்பத்திரிக்கு வண்டி விரைந்தது. பெரிய ஆபத்து இல்லை தான். ஆனால் செல்வாவை விட தீட்ஷா அதிகம் பயந்தாள். செல்வாவாவுடன் வேலை செய்தவர்களும் அவன் விட்டாரும் ஆஸ்பத்திரிக்கு வர அங்கிருந்து விலக நினைத்தாள் தீட்ஷா..

ஆனால் அவளால்முடியவில்லை. கண் விழித்த செல்வா "எனக்கு ஒன்றும் இல்லை நான் நல்லா தான் இருக்கேன் எனக்கு ஒன்றும் இல்லை" என சொல்லியே சோர்ந்து போனான்.

"யாரு செல்வா உன்ன இங்க சேர்த்தது?" என்று கேட்ட போது டீ கடைகாரர் மாணிக்கம் இந்த பொண்ணு தான் என அவர் சொல்ல செல்வாவின் அம்மா தீட்ஷாவுக்கு நன்றி சொல்ல, "பரவாலங்க'மா இதுல என்ன இருக்கு" என்றாள்.

"சரிமா நான் கிளம்புறேன்" என சொல்லி விட்டு செல்வாவின் முகத்தை பார்த்து விட்டு அங்கு இருந்து கிளம்பினாள்.

அடுத்த நாள் அவனை பார்க்க அங்கு சென்றாள். வீசிடிங்க ஹவருக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்ததால் வேளியே இருந்த அவன் அம்மாவிடம் பேசி கொண்டு இருந்தாள்.

"ராெம்ப நன்றிமா அவனை கொண்டுவந்து ஆஸ்பிட்டல்ல சேர்த்துனதுக்கு.. நீ யாருமா அவன உனக்கு எப்படி தெரியும்??" என கேட்க, "இல்லைங்க ஆன்டி அவர் நான் படிக்கிற காலேஜ் சுவத்துல தான் பெயின்ட் அடிச்சுட்டு இருந்தார். ரெண்டு மூணு தடவ எதர்ச்சையா பேசி இருக்கேன் அவ்ளோ தான் என சொல்லி சமாளித்தாள் தீட்ஷா".

செல்வாவின் கதையை முழுவதும் அவன் அம்மா சொல்ல தன் காதலை எதற்காக செல்வா வெறுத்தான் என்பது தீட்ஷாவுக்கு புரிந்தது.

"அவன் நல்லா பையன் மா காலேஜிக்கு ஒழுக்கமா போய்ட்டு இருந்தான். பெயில் எல்லாம் ஆக மாட்டான் எதோ கூட படிக்கற பொண்ணை காதலிச்சான், அந்த பொண்ணு இவன காதலிச்சு ஏமாத்திட்டு கூட படிக்கற வேற ஓரு பையன் கூட சுத்திகிட்டு இருந்துச்சு. அதனால இவன் காலேஜ் போறதை வுட்டுட்டு. வேலை செய்யுறான் அவன் வாத்தியார் கூட வீட்டுக்கு வந்து பேசுனார்.

கடைசி ஒரு வருஷம் படிச்சா போதும் அவனுக்கு நல்ல வேலை அவரே வாங்கி கூடுக்கரதா கூட சொன்னார். கடைசி ஒரு வருஷம் போவல கூட படிக்கற பசங்க எல்லாம் காலேஜ் வராட்டி பரவால கடைசி வருஷம் எழுதாம விட்ட பேப்பரையாசும் எழுத சொன்னாங்க.

இவன் கேட்க மாட்டேனுட்டான் ஆமா இவனையும் தப்பு சொல்ல கூடாது. விரும்புன பொண்ணு இவன் முன்னாடி வேற ஒருதன் கூட சுத்துனா யாருனால தான் தாங்கிக்க முடியும் நீயே சொல்லுமா" என கண்ணிர் விட, "விடுங்கமா இவர் கூட வாழ அந்த பொண்ணுக்கு குடுத்து வைக்கல" என சொல்லி செல்வாவின் அம்மாவை சமாதான படுத்தினாள் தீட்ஷா.

வீசிடிங் நேரம் வந்ததும் உள்ளே சென்றனர். செல்வாவின் அம்மா "நீங்க பேசிட்டு இருங்க நான் டீ வாங்கிட்டு வரேன்" என சொல்ல "பரவால ஆன்டி" என சொன்னாள்.

"வந்து எதும் சாப்பிடாமாபோறியேமா இரு நான் டீ வாங்கிட்டு வரேன்" என வேளியே செல்ல தீட்ஷா செல்வாவிடம் பேச ஆரம்பித்தாள்.

"இங்க பாருங்க உங்கள பிடிச்சதுக்காக இதை எல்லாம் நான் செய்யலை. வேற யாரு இப்படி ஆக்ஸிடன்ட் ஆகி இருந்தாலும் இப்படி தான் நான் செய்வேன். இதை செஞ்சதுக்காக ஒன்னும் நீங்க என்னை காதலிக்க வேண்டாம்" என தீட்ஷா சொல்ல புரியாமல் முழித்தான் செல்வா.

உடம்பு சரி ஆகி ஆஸ்பிட்டல இருந்து வெளிய வா உன்னை துரத்தி துரத்தி காதலிச்சு காட்டுறேன். உன் அம்மா இப்போ எனக்கு ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க. அவங்க கிட்ட பேசி கூட உங்களை நான் மாப்பிள்ளை கேட்டுக்கறேன் என சொல்ல வெட்கபட்டு சிரித்தான் செல்வா.

"சரி மொதல்ல படிச்சு முடி" என செல்வா தன் சம்மதத்தை சொல்ல, "ஐயோ சாருக்கு அவ்ளோ அவசரமா?? மொதல்ல நீ வைச்ச அரியரை எல்லாம் க்ளியர் பண்ணு என் அப்பா கிட்ட உன்ன அறிமுகபடுத்திட்டு அடுத்து ஆறு அரியர் வைச்சு இருக்கார்னா சொல்ல முடியும்" என சொல்லி செல்வாவின் நேற்றியில் முத்தம் இட்டாள் தீட்ஷா.

அப்போது நர்ஸ் உள்ளே வர இருவரும் வெட்கபட்டு முகத்தை மறைத்து சிரித்தனர்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.