நாலு வீடு பாத்திரம் தேய்ச்சு வாணியை படிக்க வைத்து கலெக்டராக்குகிறாள் ராணி. ராணியின் தியாகத்தால் வாணி பெயர்பெற்ற கலெக்டராக விளங்குகிறாள் ..அவளை கலெக்டர் சிவராமன் திருமணம் செய்து கொள்கிறான்.

திருமணம் ஆகியும் வாணிக்கு குழந்தை பிறக்க வில்லை.

வயதான அம்மா வடிவு வாணியிடம் தங்கை ராணிக்கு ஒரு திருமணம் செய்து விட்டால் நல்லது என சொல்கிறாள்.

அதற்காக விவசாயி ராமனுக்கு ராணியை மணமுடிக்கலாம் என சொல்கிறாள்.

‘’அவசரப்படாதே அம்மா ராணி படிக்காதவள்தான் ஆனால் திறமையானவள் அவளுக்கு ஒரு நல்ல கணவனை தெரிவு செய்ய வேண்டாமா? நான் பார்த்து சொல்கிறேன் ‘’என்று அவளை மடக்கினாள்.

வாணி யோசித்தாள் ராணிக்குத் திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டால் தன் நிலை கேவலமாகிவிடும் இதற்கு பேசாமல் தனக்கே சக்களத்தியாக வந்து விட்டால் வீட்டுக்கு வேலைக்காரியும் ஆச்சு அவளுக்கும் குழந்தை இல்லன்னு ஆகிடும். இது துரோகம்தான். ஆனாலும் செய்துதான் ஆகவேண்டும் . என முடிவு செய்தாள்.

அம்மாவிடம் வாணி சொன்னாள் ‘’அம்மா இவருக்கு ராணியை இரண்டாம் தாரமாக செய்து விட்டால் என்வீட்டு சொத்தும் வெளியில் போகாது ராணிக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கும் .இல்லையெனில் என் மாமியார் வேரொரு பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் எனக்கு குழந்தை இல்லையென்று என்ன சொல்றே”

‘’இதுக்கு ராணி ஒத்துக்குனுமே வாணி ‘’

‘’அம்மா அதைப்பற்றி நீ கவலைப்படாதே ராணி என் மேல உயிரையே வச்சிருக்கா என் பேச்சை தட்டமாட்டா அதோட என் வீட்டுக்கரர்மேல பிரியம் உள்ளவள் மாட்டேன்னு சொல்ல மாட்டாள் ‘’என்றாள்.

வாணி தன் நிலையை எடுத்து ராணியிடம் சொல்லி சம்மதம் கேட்டாள் ராணி யோசித்தாள் பின் சொன்னாள்’.

‘’அக்கா நீ சொல்றதெல்லாம் சரிதான் ஆனா ஒண்ணு எனக்கும் குழந்தை பிறக்கலைன்னா உன் அத்தைக்காரி வேரொரு பெண்ணை பார்க்கமாட்டாளுன்னு எப்படி சொல்லமுடியும் ?’’

‘’சேச்சே எனக்கு இல்லன்னா உனக்குப் பிறக்காம போயிடுமா என்ன “

‘’அக்கா குழந்தை பிறக்காம போனதுக்கு காரணமே மாமாதானே நீ ஏன்க்காஇப்படி… உனக்கு நல்லதுதானே நான் செய்திருக்கேன் நீ ஏன்க்கா என்னை மலடியாக்கப்பார்க்கிறே எனக்கு எல்லாம் தெரியும்கா. நீ இப்படி மாறுவேன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலே உன் சுனலத்துக்காக என்னை பலிகடாவாக்கப்பார்க்காதே. நான் அம்மா பார்த்தவரையே கல்யாணம் செய்துக்கிறேன்.

உனக்குப்பிடிக்கலைன்னா நான் கல்யாணமே செய்துக்கலே போக்கா ‘’ சொல்லி விட்டுப்போனாள்.

தன் திட்டத்தை முறியடித்து விட்டாளே என்று விக்கித்து நின்றாள் வாணி.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.