மீசை முளைக்காத ஆண்

அவளைப் பார்ப்பதும் தங்களுக்குள் கிசுகிசுப்பதுமாக இருந்த சிறிய பட்டாம்பூச்சிக் கூட்டத்தை கண்டு மின்னலென சிரிப்பொன்றை வீசுகிறாள் அப்பெண் நீ கேள் நீ கேளென கிசுகிசுத்த கூட்டம் அருகே நெருங்குகிறது ஒரு பட்டாம்பூச்சி சிறகசைத்து நெருங்கி நீங்கள். .. ? மென் நகையுடன் ஆம் நீங்கள் என் மகனது வகுப்பு தோழர்களா என்கிறாள் ஆமாம் இசைக்கிறது கூட்டம்... ஒரு குரல் மட்டும் கொஞ்சலாக எனக்கு மட்டும் பிறந்த நாளுக்கு அவன் இனிப்பே தரல என்கிறது சிரிப்புடன் அதற்கென்ன நான் தருகிறேன் தன் தோள் பையில் கலர் காகிதங்களால் சுற்றப்பட்ட விதவிதமான இனிப்புகளை அள்ளிக் கொடுக்கிறாள் அத் தாய் சேர்ந்தார் போல் இசைக்கிறது அத்தனை பட்டாம்பூச்சிகளும் ம்ஹூம் எங்களுக்கு அவன்தான் தர வேண்டும். சரி சற்று நேரத்தில் வந்து விடுவான் வாங்கிக் கொள்ளுங்கள் என சாலையை நோக்க ஏய் வரானான்டி வந்துட்டான்களுக்கிடையே இரு சக்கர வாகனத்தில் வந்து பட்டாம்பூச்சி கூட்டத்தை காணாதது போல் திசைமாற்றி பார்வையை ஓட விட்டு வாகனத்தை அவளிடம் தந்து ஓட்டு என பின் அமர்கிறான் பிறந்த நாள் கொண்டாடும் மகன் வாகனத்தை ஓட்ட தயார் செய்து கொண்டே திரும்பாமல் கேட்கிறாள் அவர்கள் உன்னைதான் கேட்டார்கள் இனிப்பு தரவில்லையாயினும் ஒரு சிரிப்பு தந்து விட்டு வரக்கூடாதா என்கிறாள் ம்ம்ம். .என்கிறான் மறுப்போடும் தயக்கத்தோடும் மீசை முளைக்காத ஆண் திரும்பி கை அசைத்திருப்பானோ சிரித்திருப்பானோ திரும்பாமலே இருந்திருப்பானோ பட்டாம்பூச்சிகளிடையே சலசலப்பு மெளனப் புன்னகையுடன் வண்டி நகர்கிறது சாலையில் .........

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.