மாற்றும் திறனாளிகள்

கால்களை இழந்திருப்பான் ஆனால் கரையேற துடிப்பான்!! விழிகள் வாழ்நாள் விடுமுறை எடுத்திருக்கும் ஆனால் இவனோ இருட்டிலும் திரட்டுதல் செய்வான்!! "நா" அது நடையை இழந்திருக்கும் ஆனால் இவனோ மூச்சுக்காற்றில் இசையமைப்பான்!! இருந்தும் பலர்... உள்ளத்தில் உறுதி கொள்ளாமல் உடலை வீணாய் வளர்க்கிறார்கள்!! சலாம் மாற்றுத் திறனாளிகளுக்கு!!!

சாலை கற்களுக்கும் விதிமுறை கற்றுக்கொடுப்பான்!! சாவுக்கு அஞ்சமாட்டான்!! சாதிக்கும் வரை!!

"ஆம்" இவன் பிறவியில் குருடன் தான் ஆனால் இவனை விட எவராலும் துல்லியமாக காண முடியாது!! ஆம் இவன் பிறவியில் ஊமைதான் ஆனால் இவனை விட எவராலும் நிசப்த ஒலியை எழுப்ப முடியாது!! ஆம் இவன் காலிழந்தவன் தான் ஆனால் இவனை விட எவராலும் மண்ணுக்கு இவ்வளவு மரியாதை கொடுக்க முடியாது!! கண் கொண்ட நாம் கற்களுக்கு கூட வழிவிட மாட்டோம் ஆனால் அவனை விட கவனாய் சாலை கடப்பவனை காண முடியாது!!

இருப்பதில் புதுமை காண்பவன் திறனாளி!! இல்லாததில் திறமை கொள்பவன் மாற்றுத்திறனாளி!!!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.