உழைப்பு முட்டை

ஆயிரமாயிரம் --
கனவுகளையும், ஆசைகளையும்
கரங்களில் திணித்தது
சன்னலில் தெரிந்த
உலகம் !

கனவுகளுக்குச் சிறகு கட்டி
காற்றில் பறக்க முயலச்
சொன்னது - கண்களில்
கரைந்த உலகம்....

கதவைத் திறந்தபின் தான்
புரிந்தது -- உழைப்பு முட்டை
பறவையாகும் வரை
நாளும் அடைகாப்பது அவசியமென்று...!!

-- கவிஞர் செல்லம் ரகு...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.