நலம் நலமறிய ஆவல்

‘’ம்மா ‘

இப்படி நான் உன்னை அழைத்து எத்தனை வருடங்களாயிற்று ?அப்படி நான் என்னதான் தவறு செய்தேன் என்று என்னை வீட்டை விட்டு வெள்யேற்றினாய்?என்று நான் யோசிக்காத நாளே கிடையாது. இப்பொழுதுகூட என்னுடுடைய சுவடுகள் மட்டுமே அழுந்தத் தெரிகின்றன.

உன்னுடையதை காணவே காணோம் பார்த்தாயா? தலைமகன், தவப்புதல்வன் என்றெல்லாம் பாராட்டி சீராட்டி வளர்த்த நீ இன்று வீதியில் வீசியது ஏனம்மா? உனக்கு இது எப்படி சாத்தியமானது?இதை நான் கேட்கவில்லை என்னை நீ கொண்டியதை அறிந்த இந்த உலகம்தான் பேசுகிறது. அம்மா,உன் பிள்ளையாக எனக்கென எந்தவொரு ஆசை ,விருப்பம் இல்லாமல் உன் விருப்பம் ஒன்றே என் விருப்பமாக வாழ்ந்த என்னை ஏனம்மா வெறுத்தாய்/?

உனக்குக் கீழ்படிந்து நீ போட்ட கோட்டை தாண்டாமல்(சீதை கூட லட்சமண் கோட்டை தாண்டியதினால்தான் அவஸ்தையை அனுபவித்தாள். உன் சேலைத்தலைப்பின் முடிச்சுக்குள் சிறைபட்டிருந்தவனை என்ன பாவம் செய்தேன் என்று என்னை வெருத்து விரட்டினாய்?

உன் அன்பு வலைக்குள் என்னை நீ ஒரு அடிமையாகத்தான் வைத்திருந்தாய். பள்ளி படிப்பை முடித்த பிறகு கூட வெளியூர் சென்று படிக்க அனுமதிக்கவில்லை உள்ளூரிலேயே கல்லூரியில் சேர்த்தாய் வெளி உலகம் தெரியக்கூடாது என்பதற்காக ,அதற்கும் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை காரணம் அன்பின் மிகுதியால் என்னை நீ பிரிய விரும்பவில்லையென்றே நினைத்தேன்.

நம் சொத்துக்களைப் பார்த்தால் போதும் என்று சொல்லி என் எதிர்கால வாழ்வையே சூனியமாக்கினாய் அதையும் நான் எதிர்க்கவில்லை. உன் புகுந்த வீட்டாருடன் என்னை அண்டவிடாமல் கவனமாகப்பார்த்துக்கொண்டாய் பெற்ற உன்னை திர்க்க இயலாமையால் உன் விருப்பபடியே எல்லா ஆசைகளையும் துறந்தே நான் வாழ்ந்தேன்.

தந்தையின் சுய நலத்துக்காக தன் வாழிக்கையையே தியாகம் செய்த பீஷ்மர் போலத்தான் நானும் உன் விருபத்திற்காகவே வாழ்ந்தேன். அப்பொழுதுகூட ஊராரின் பேச்சுக்குப் பயந்துதான் நீ எனக்கு திருமணம் செய்ய விழைந்தாய், அப்பொழுதுகூட நீயாக சொன்ன பெண்ணைத்தான் நான் திருமணம் செய்துகொண்டேன் . தாலிதான் கட்டினேனேத்தவிர அவளுடன் சேராமல் நீ கவனமாக இருந்தாய் அவளையும் சம்பளமில்லா வேலைக்காரியாகத்தான் நடத்தினாய் அப்பொழுதுகூட நான் அதைப்பற்றி என்ன ஏதென்று கேட்காததால் என் மனைவி என்னிடம் சண்டை போட்டாள். நான் உன்னையும் எதுவும் கேட்க வில்லை. அவளையும் எதுவும் கேட்வில்லை. அவளுக்குப் பரிந்து கூட நான் பேச வில்லை.

அதுதான் உன் கோபத்தினை தூண்டியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவளையும் என்னையும் வீட்டை விட்டு வெளியேற்றினாய் ..அம்மா அந்த கணம் நான் நிலைதடுமாறித்தான் போனேன். நான் கேட்கவில்லை நீயேத்தான் மருமகளைத்தேர்ந்தெடுத்தாய் ஆனால் அவளுடன் வாழக்கூடாது என்று எப்படியம்மா நினைக்கிறாய் ? உனக்கு ஒரு மகள் இருந்து உன் மாப்பிள்ளை இப்படி இருக்க நீ பொறுப்பாயா?சொல் ..

அம்மா இத்தனை செய்தும் நான் உன்னை முன் போலத்தான் நேசிக்கிறேன்.

பிள்ளை மனம் கல் என்பார்கள் இங்கே தாய் மனம் அல்லவா கல்லாக இருக்கிறது .என் பொறுமைக்கு கடவுள் கருணை காட்டினார் .எனக்காக நீ சல்லிக்காசு கொடுக்காவிட்டாலும் யாரோ ஒரு மூன்றாம் மனிதர் என் நேர்மை குணம் தெரிந்து வாடகைக்கு வீடும் அவர் கம்பெனியில் வேலையும் கொடுத்து என் தெய்வமாக விளங்குகிறார். அம்மா வீட்டுக்கு ஒரு மருமகள் வந்ததும் பெற்ற பிள்ளையையே உங்களால் எப்படி வில்லனாக நினைக்க முடிகிறது? உன் நோக்கம்தான் என்ன?

தங்கத்தட்டிலே வைத்துத் தாங்கிய என்னை எனக்காக ஒருத்தி வந்ததும் என்னையே எதிரியாக வில்லனாக எபடித்தான் நினைக்க முடிகிறதோ நானறியேன் / நான் சொல்லிக்காட்டுகிறேன் என்று எண்ணாதே நீ.

உன் புகுந்த வீட்டைவிட்டு அப்பாவை வெளியே அழைத்து வந்ததுமில்லாமல் அவர்கள் வீட்டுக்கே எங்களையும் அப்பாவையும் அனுப்பாமல் இருந்தாலும் உன் புகுந்த வீட்டார் உன்னை மூத்த மருமகள் என்று தலையில் தூக்கி வைத்து இன்னமும் கொண்டாடுகிறார்களே. ஆனால் நீ நீயே பார்த்து வைத்த பெண்ணுடன் ..வாழக்கூடாது என்று நினைப்பது ஏனம்மா? என்னை நம்பி வந்தவளை நான் கைவிடுவது தவறு என்றுதான் பேசாமலே வெளியேறினேன் .என்மனம் நிர்மலமாகத்தான் இருக்கிறது ,என் இய்லாமை காரணமாகத்தான் அப்படி இருந்திருக்கிறேனென்பது உண்மை ,கஷ்டத்தில் கூட நான் இன்னமும் நேர்மையாகத்தான் இருக்கிறேன் ,னான் ஏமாந்தாலும் மற்றவர்களை நான் ஏமாற்றுவதில்லை..இந்த நல்ல செயல்கள்தான் (என்னை நீ கைவிட்டாலும் ) கடவுள் என்னை கை விடவில்லை .ரொம்ப பேசிட்டேன் என்னசெய்வது? உன் நினைவுகள் என்னை விட்டு ப்போகவில்லை மறுபடியும் சொல்கிறேன் இத்தனை செய்தும் நான் என் அம்மாவை வெறுக்கவும் இல்லை வெறுக்கவும் முடியாது. உடம்பை பார்த்துக்கம்மா

ஒரு முக்கியமான வேண்டுகோள் நிறை வேற்றுவாயா?

உனக்கு முன்னாள் என் உயிர் போய்விட்டால் என்னை அப்போதும் கூட வெறுக்காம வந்து பாரம்மா ..

என்றும் உன் அன்பு மகன்

அன்புச்செல்வன்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.