அருண் பொறியியல் படித்த முடித்த இளைஞன்....படித்து சிறுது காலம் ஐ.டி துறையில் வேலை பார்த்து கொண்டிருந்தான்....அவன் நேரம் காலம் இல்லாமல் வேலை பார்ப்பான்...இரவு வருவதற்கு 12,1 மணி ஆகிவிடும்....அவனுக்கு சிறு வயதில் இருந்தே பேய் என்றாள் பயம்...காரணம் அவன் பாட்டி அருண் சாப்பிட வேண்டும் என்றே சில பேய் கதைகளை சொல்லுவாள்..அவனும் பயந்து சாப்பிடுவன்....இரவில் தனியாக வர பயந்து எப்பவும் நண்பர்கள் கூட தான் வருவான்.....

இப்படி இருக்கையில் அவனது பயத்தை வைத்து நண்பர்கள் அனைவரும் அவனை கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்..இவ்வளவு வயசாஆயிருச்சி இன்னும் பேய் பிசாசுனு தனியா வர பயப்படுறான்....ஹா ஹா என்றும் சிரித்தனர்...அருண்க்கு மிகவும் அசிங்கமாக போய் விட்டது அது மட்டும் இல்லாமல் வலைதளத்திலும் தனது பெண் தோழிகளிடம் கூட சொல்லிவிட்டார்கள்......எல்லாரும் அவனிடம் வந்து கேக்க....அவனுக்கு ரொம்ப ஒரு மாறிய ஆயிருச்சி....

அன்று ஒரு முடிவு எடுத்தான் பேய்க்கு பயப்பட கூடாது என்று..அதனால் நெறையா பேய் படங்கள் பார்ப்பது பேய் இருக்க இல்லையா என்று இணையதளத்தில் தேடுவது என்று அதிலே ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது...பேயா நானா என்று பார்க்க வேண்டும் என்று முடிவு எடுத்தான்...ஓய்வு நேரங்களை அதற்காகவே செலவிட்டான்...இரவு வேளைகளில் தனியாக வர பழகி கொண்டான்.....

அருணுக்கு ரவி தான் நெருங்கிய தோழன்....ரவியும் ஜெனிபர் காதலித்து கொண்டிருந்தனர்...ரவிக்கு அப்பா அம்மா யாரும் இல்லை...ரவி காதலிப்பது அருணுக்கு தெரியும்....

டேய் அருண்... சொல்லு டா மாப்ள....நான் ஒரு அனாதைஎனக்கு யாரும் இல்லை...ஜெனிக்கு பெரிய குடும்பம்....வேற மதம்...அவள நல்ல பணக்கார குடும்பம் பாத்து தான் கல்யாணம் பண்ணுவாங்க.....எங்க கல்யாணத்துக்கு வோத்துக்க மாட்டாங்க அதனால் நீ தான் டா எங்க கல்யாணத்தை பண்ணி வைக்கணும்.....அதுலாம் சூப்பர் அஹ பண்ணலாம் நீ கவலை படாத டா...நான் இருக்கேன் உனக்கு.....

ஒகே மச்சான் வாடா ஜெனி டுடே டீரிட் வைக்கறா..நீ போ ரவி எனக்கு ஒரு வேலை இருக்கு....என்ன பெரிய வேலை பேய் பத்தி ஆராய்ச்சி பண்ணுவ கரெக்ட் அஹ....ஹா ஹா...பல்லைக்காட்டாத..பாரு ஒரு நாள் உன்ன பேய் புடிக்க போது...புடிச்ச என்னடா நான் அத கல்யாணம் பண்ணிக்கிறேன்...நீ ஒரு லூஸ் அயிட்ட மச்சான்....ஓகே மச்சான் U CARRY ON…..நா ஜெனி பாக்க போறேன்....பாய் ரவி.....

பேய்கள் பற்றிய ஆயிரம் கேள்விகள் அவனுக்கு பேய் இருக்கா இல்லையா...இருந்தா பேய் எப்படி இருக்கும்...பாட்டி சொல்வாங்களே வெள்ளையா சேலைகட்டி பூ வச்சி அப்டி இருக்குமோ...இல்ல படத்துல காற்ற மாறி கருப்பா இருக்குமோ...பேய் நாம கிட்டலாம் பேசுமா...பேசுனா எப்படி பேசும்.....கண்டிப்பா ஒரு நாள் பேய் பாக்கணும்....சொல்லிக்கொண்டே தூங்கிட்டான்....

அடுத்த நாள் ரவி கால் பண்றான்....சொல்லு டா...ஜெனிய REGISTER MARRIAGE பண்ணனும் அருண்...ஏன் டா அதுக்குள்ள...இல்ல அவ வீட்ல அவளுக்கு மாப்பிளை பாக்றாங்க....இப்ப நாங்க REGISTER MARRIAGE பண்ணிக்கிறோம்...அப்பறம் கொஞ்சம் நாள் போனதும் அவங்க வீட்ல சொல்லலாம்....அதுக்கான ஏற்பாடுகள் பாக்கணும் டா...எனக்கு கொஞ்சம் பணம் கூடு...ஓகே டா தரேன்...

கொஞ்சம் நாள்ல நண்பர்கள் கூடி இருக்க ரவிக்கும் ஜெனிக்கும் கோவில்ல வச்சி தாலி கட்டிட்டு அப்பறம் சர்ச் ல ரிங் போட்டு......போயி REGISTER ஆபீஸ்ல REGISTER பண்ணிகிட்டாங்க....அருண் தான் முன்னாடி இருந்து எல்லாம் பண்ணிவைக்கிறான்....ஜெனி..... அருண் அண்ணா ரொம்ப நன்றி...நீங்க இல்லாட்ட இதலாம் நடந்து இருக்காது....இதுல என்ன இருக்கு மா....நீ கவலைப்படாத சீக்கிரம் உங்க வீட்ல பேசி...நடந்தத சொல்லி மன்னிப்பு கேக்கலாம்....அப்பறம் எல்லாம் சரி ஆயிரும்...

ரவி: ஜெனி நம்ம வெளிய எங்கயாச்சும் போலாமா....

ஜெனி: இல்ல ரவி இப்பதைக்கு எங்கையும் போக வேணாம் கொஞ்சம் நாள் அப்பறம் போலாம்....

ரவி: ஓகே ஜெனி அப்ப அடுத்த வாரம் லீவ் வருது போகலாம்.

ஜெனி: ம்ம்ம் சரி டா.....

ஒரு வாரத்திற்கு பிறகு .....அருணுக்கு கால் பண்றான்..ரவி...ஹலோ சொல்லு ரவி....மச்சான் நாளைக்கு நானும் ஜெனியும் பக்கத்துல ஒரு மலை சோலை மாறி இருக்குமா அங்க போலாம் இருக்கோம் நீயும் எங்க கூட வரியா டா....டேய் நான் எதுக்கு டா...நீங்க போயிட்டு வாங்க...ஓகே மச்சான் ...நா போய்ட்டு உனக்கு கால் பண்றேன்..

ரவியும் ஜெனியும் போறாங்க...........ஹே ஜெனி அங்க பாரு மலை பக்கத்துல பாரு எவ்ளோ சோலை மாறி இருக்கு வா வா அங்க போலாம்...இது வர அங்க யாருமே போனது இல்லை....அங்க போயி செல்பி எடுக்கலாம்.....பாத்து டி என் கைய புடிச்சிக்கோ....இங்க பாரு எவ்ளோ அழகு.....வா ஜெனி செல்பி எடுப்போம்.....போன் எடுக்கறான்......அங்க இருந்து தவறி விழுந்துட்டாங்க...இருவருமே

அருண் என்ன ரவி போயிட்டு போன் பண்றேன் சொன்னான் ஆளையே காணோம்....கொஞ்சம் நேரம் அப்பறம் கால் பண்ணி கேப்போம்...கால் பண்றான்....போன் SWITCHED OFF வருது....தொந்தரவு பன்னுவோம் ஆப் பண்ணிட்டான் போல.....நைட் பண்றான் அப்பவும் போகல.....ஜெனிக்கும் போகல...அவன் ரூம் மெட்ஸ்க்கு கால் பண்ணி கேக்றான்....இன்னும் ரவி வரல சொல்லவும்.....

அடுத்த நாள் போலீஸ் கிட்ட சொல்லிட்டு.....எல்லாரும் போயி பாக்கராங்க.....போலீஸ் தேடுதல் வேட்டை நடத்துனதுல இருவரும் இறந்தது தெரிந்தது.... அருண் ரொம்ப மனசு நொந்து போய்ட்டான்.....ஜெனி வீட்டுக்கு தெரிஞ்சி அவங்களும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.....

அடுத்த நாள் பேப்பர்ல செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து காதலர்கள் மரணம் என்று வந்தது....அந்த சோகத்துல இருந்து வெளிய வர அருணுக்கும் ஜெனி குடும்பத்துக்கும் ரொம்ப நாள் ஆனது....

ஒரு மாசத்திற்கு பிறகு அருண் பேப்பர் படிச்சிட்டு இருக்கும் பொது ஒரு செய்தி......”ஒரு மாதத்திற்கு முன்பு ரவி ஜெனி செல்பி எடுக்கும் போது தவறி விழுந்ததாகவும் இப்ப அங்க போற யாரையும் செல்பி எடுக்க விடாமல் அவர்கள் தடுப்பதாகவும்....அங்கு பேய் நடமாட்டம் இருக்கும் என்றும்....செல்பி எடுக்க போன் எடுத்தால் போன் ஆப் ஆயி விடுவதாகவும் போட்டிருந்தது”...அதனால் அந்த மலையில் யாரும் செல்ல அனுமதி இல்லை எனவும் போட்டிருந்தது....

அருண் அங்கு போவது என்று முடிவு எடுத்தான்....போன்ல நெறைய சார்ஜ் போட்டுகிட்டான்...அங்க மேல ஏறுறான்...பேப்பர் ல போட்டு இருந்த செய்தி உண்மை அஹ இருக்குமா இல்லையா யோசிச்சிட்டே போனான்...உள்ளுக்குள்ள ஒரு பயம் .....அந்த அழகிய சோலை தெரிந்தது அருகில் சென்றான்....


கீச் கீச்....கிளிகள் இசை அமைக்க......காகாகா என காகங்கள் குலுங்கி சிரிக்க...........குயிலின் பாட்டில்.............பட பட வென சிட்டுக்குருவிகள் சிங்ககாரமிட................வண்ண மயில் வட்டமிட்டு ஆட...............தேன் எடுக்க வந்த தேனீக்கள் மலரை விடுத்து மயிலாடுவதை ரசிக்க..................எங்கும் வண்ண மலர்கள் சூழ்ந்து இருக்க................காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதையாய் காண...............தாவிக்கொண்டிருக்கும் முயல்கள்......உல்லாசமாக உறவாட வந்த மான்கள் கட்டிக்கொண்டு காதல் பரிமாற..........தென்றல் காற்று இதமாய் வீச...........பச்சை பசுமையாய் எங்கும் காட்சியளிக்க.........அந்த பச்சை ஓவியங்களை வண்ணங்களால் மெருகூட்டப்பட்டது போல ஆங்கே ஆங்கே பல வண்ணங்களால் பூத்து குலுங்கும் மலர்கள்......அந்த வண்ண மலர்கள் மீது ஒரு தலை காதலோடு சுற்றி சுற்றி வரும் வண்ணத்துப்பூச்சிகள்......அந்த பட்டாம்பூச்சிகள் காதலை சொல்ல அருகில் வரும் போது சாரல் காற்றால் மறுப்பது போல் அசையும் மலர்கள்.........பல வித பூக்களின் வாசனை காற்றில் எங்கும் இருக்க......அந்த வாசனையால் கவரப்படும் வண்டுகள்........வான்மேகத்தில் பூத்த நட்சத்திரம் போல ஒளிர..........சல சலவென அருவியின் சத்தம்......இது சோலையா இல்லை சொர்க்கமா என்பது போல காட்சி....

என்ன ஒரு அருமை இவ்வளவு அழகிய காட்சியை இது வரை நான் பார்த்ததே இல்லை....ஒரு நிமிடம் அப்படியே மெய் மறந்து நின்றான்...சிறிது நேரம் கழித்து அவனுக்கு வந்த வேலை யாபகம் வர.......போன் எடுக்கறான்...போட்டோ எடுக்கலாம் பாக்குறான்....போன் SWITCH OFF ஆயிருச்சி....அவனுக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சி....பேப்பர்ல போட்டது உண்மை தான் போல......

டேய் ரவி எங்க டா இருக்க....என் முன்னாடி வா டா....என் கூட பேசுடா......கொஞ்சம் நேரம் நிக்கிறான் யாரையும் காணோம்....காற்று மட்டும் பலமா வீச.....அங்க இருந்து கெளம்பிட்டான்....

ரூம்க்கு வந்து அவனால் நார்மல் அஹ இருக்க முடியல.....நெட்ல நெறய சர்ச் பண்றான்....பேய் பத்தி.......போன் ல எப்படி சார்ஜ் போச்சி..... ஒரு வேல ரவி ஜெனி செல்பி எடுக்கும் போது விழுந்த நாலா தான் யாருக்கும் அப்படி ஆக கூடாது பண்றாங்களோ...... தூங்காம யோசிக்கிறான்...........அடுத்த நாள் அங்க போக முடிவு பண்றான்....போன் லேப் எடுத்து போறான்......அந்த இடத்துக்கு போகும் போது கரெக்ட் அஹ சார்ஜ் இல்லாம ஆப் ஆயிருது....லேப்டாப் ஓபன் பண்றான் அதுவும் சார்ஜ் இல்லை.........அதே போல நல்ல காத்து ......அன்னைக்கும் சோலை அழகாய் காட்சி அளித்தது.......

வீட்டுக்கு வந்துட்டான்....அடுத்த நாள் சென்சார் எடுத்து போறான்......அன்றும் அதே போல நடந்தது....சென்சார் வச்சி பார்த்ததுல அங்கு ஒரு எலெக்ட்ரிக் சுழற்ச்சி இருப்பதாக உணர்ந்தான் ....இயற்கையாக அங்கு இருப்பதால் அங்கு எந்த எலெக்ட்ரிக் DEVICE கொண்டு போனாலும் ஆட்டோமாடிக் அஹ அது சார்ஜ் கண்ட்ரோல் ஆகுதுனு கண்டு புடிச்சான்....தன்னுடைய நண்பன் இதற்க்கு காரணம் இல்லை என்பதையும் உணர்ந்தான்....

ஊடகங்களில் தொடர்பு கொண்டு இதை பற்றிய தகவல்களை தெரிவித்தான்....மற்றும் இது போன்று கவனம் இல்லாமல் யாரும் செல்பி எடுக்க வேணாம் என்றும் தெரிவித்தான்.....அந்த அழகிய சோலை பற்றியும் சொன்னான்...

அடுத்த நாள் அனைவரும் அங்கு ஆராய்சிகள் மேற்கொள்ள போனார்கள்...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.