உழைத்துக்களைத்து
சலித்து - உருமாறி
குளியலறைக்குள்
நுழைகிறேன்.... அலுவலக
முகம் களைந்து
இல்லத்தரசி ஆக....

ஆடை களைகையில்
உதிர்கின்றன -
உடல் ஒட்டிய பார்வைகள்...
கள்ளத் தீண்டல்கள...
மறைமுகத்தொடுதல்கள்...
அருவெறுப்பான உரசல்கள்..
என நிதமும் மனமறுக்கும்
ஆயிரம் இன்னல்கள்....

எண்ணத்தோன்றும் -
பல சமயங்களில்......
சபரி போல் கல்லாய்
சபித்திருத்தலே -
சாலச் சிறந்ததென்று ......

உடல் கழுவி - மனம் துடைக்கையில் நிதர்சனத்தின்
அருவெறுப்பு எண்ணங்கள் மனதுக்குள் ஒவ்வொன்றாய்
அணிவகுத்தன - சுகந்தமாய்
தனக்கான ஆசைகளின்
நிறம்மாறி....

பார்வைகள், ஆசைகள்
தீண்டல்கள், உரசல்கள்
தொடுதல்கள் அனைத்தும்
தனக்கான இரவுகளின்
சேமிப்பாய்....

சுமையே சுகமானது...
மனமுழுதும் நினைவே
இதமான இறகானது.....

Dr. செல்லம் ரகு...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.