நேற்று ஓர் கனவு

நேற்று ஓர் கனவு

நேற்று ஓர் கனவு அவள் வந்தாள் கடவுள் என்றாள், காரியம் என்னவென்றேன்? கையிலிருந்த ஒன்றை யாரோ களவாடிவிட்டனராம் தொலைத்த 'அழி ரப்பரை' தேடி வந்ததாக உரைத்தாள் என்னிடம் ஏதுமில்லையே எவரெடுத்தார் நானறியேன் கூறுமுன் நெற்றியை தொட்டு ஏறிட்டு பார்த்தாள். கலவரமாகி என்னேன்றேன் விலகி நின்றேன் பிரம்மனின் எழுத்துப்பிழை திருத்த வந்தேன் ஓ! தலையெழுத்தா அது, கொஞ்சம் வாசிக்க கோரினேன். ஒற்றைப் பிழைதான் ஆனால் மொத்தப்பிழை! 'திக்குவாய்' என்பதற்கு 'சிக்குவாய்' என்று பிழையானதாம். அய்யகோ எங்கே ... என்ன... எப்படி... வினவுவதற்க்குள் விலகிவிட்டாள் புன்னகையுடன். அந்த ரப்பர் திருடனை கடிந்துகொள்வதர்க்குள் உலை வைத்து சென்ற அவளை பார்ப்பதற்குள் காட்சியும் கலைந்தது கனவும் தொலைந்தது. நெற்றியில் உதடுகளால் கைவைத்து 'காபி' என்றாள் கனவின் வரம் பலித்தது! ஆம் சிக்கிவிட்டேன்! சொக்கிவிட்டேன்! என் தேவதை எப்போது கடவுளானாள்....

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.